Monday, 20 May 2013

77. Blowing the bellow....



Verse 77
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே

Translation:
With love for the pit of fetus you stand lovelorn,
Poor souls who clutch the male organ, the sinners who are courting,
Through the sacred bellow, the body, realize the reddened five letters
And yourselves who can destroy the form.

Commentary;
Love for physical pleasure will further one’s worldly life.  Hence, Civavākkiyar advises people to learn about the five letters, namacivaya and about themselves.  Through kundalini yoga where the prana is blown like the bellow to kindle the fire of kundalini people have the capacity to destroy their form, that is, eradicate their limitedness.  Civavākkiyar urges people to do so.  During such a pranayama the body becomes red.  Sri Ramakrishna Paramahamsa mentions this when he recounts his religious experiences.  The term ‘urukkazhikkum’ is interesting.  If the word is split as uru+kazhikkum it means ‘that which destroys the form’.  It is the limited soul that destroys its form in a particular ‘mould’ through kundalini yoga and with the help of the Divine.

It is interesting that Civavākkiyar advises people to learn the truth using their bodies instead of urging them to read books or hear from the learned.  Realization is true knowledge, wisdom and not textual knowledge or advice.  Siddhas consider the body as an important instrument to attain realization.  They never demean it or deplore it.  Civavākkiyar uses the word realize twice to indicate that people should realize the greatness of the five lettered mantra and ‘realize’ their true nature.

உலக இன்பத்தில் விருப்பம் ஒருவரை சம்சாரத்தில் அழுத்திவிடும்.  அதனால் சிவவாக்கியர் ஒருவர் தன்னைப் பற்றியும் நமசிவாய என்ற ஐந்தெழுத்தைப் பற்றியும் அறியவேண்டும் என்கிறார்.  குண்டலினி பிரானாமாயத்தில் மூச்சை துருத்தியைப் போல வெளிவிட்டு குண்டலி அக்னியை எழுப்பினால் ஒருவர் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெறலாம் என்றும் அவர் கூறுகிறார்.  இந்த பிராணாயாமப் பயிற்சியின்போது ஒருவரது உடல் சிவக்கும்.  இதை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.  உருக்கழிக்கும் உங்களையும் என்னும் சொற்றொடர் விசேஷமானது.  ஜீவன்தான் தனது எல்லைக்குட்பட்ட உருவை குண்டலினி யோகத்தின் மூலம் குருவின் இறைவனின் உதவியுடன் அழிக்கின்றது.  அதையே சிவவாக்கியர் இங்கு குறிப்பிடுகின்றார்.

புத்தகத்தைப் படித்து உண்மையை அறிவாய் என்று சிவவாக்கியர் கூறவில்லை.  ஞானம் என்பது அனுபவத்தால் பெறுவது புத்தக அறிவிலிருந்து அல்ல.  சித்தர்கள் உடலை இழிவானது துறக்க வேண்டியது என்று எப்பொழுதும் கூறுவதில்லை. உலகப்பற்றை அறுக்க உடலே சிறந்த கருவி என்று கருதுகின்றனர். 

Saturday, 18 May 2013

76. Arena of form and arena of sacredness



Verse 76
இருவர் அரங்க மும் பொருந்தி என்புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகிநின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்தபின்
திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லிரே

Translation:
Fitting in the arena of the both, you have not looked, with your bones melting,
The truth that remains as the arena of form, you have not realized it,
After surpassing the imagination, the womb,
You are capable of remaining with the clarity that It is the sacred arena.

Commentary:
This verse has interesting usage of words.  The word ‘arangam’ means arena, the place of a performance.  Civavākkiyar says that we have not seen the place where ‘iruvar’ the two beings are present.  The two Beings are Śiva and Śakti, the consciousness and the awareness.  It may also mean the arena where the limited soul and universal soul remain together, the human body.  The way to perceive this is through love, where the bones melt in love for the Divine, with the great realization.  It is the Divine that remains as the arena of form, uruvarangu. Remaining limited or staying in the womb is only due to the delusion of limitedness.  If this imagination is surpassed then one remains with clarity that this body is tiruarangu or the sacred arena. 

            The “seeing” mentioned here is not perception in the normal sense. It is seeing with a special kind of eye, the divya cakshu or the eye of discrimination, clarity.

அரங்கம் என்பது ஆட்டம் நடக்கும் இடம்.  இருவர் என்பது சக்தியும் சிவனும் அல்லது ஜீவனும் ஈஸ்வரனும் ஆகும்.  அதனால் அரங்கம் என்பது இவர் இருவரும் இருக்கும் இடம்- மனித உடல்,  ஒரு உருவைக் கொண்ட அரங்கம். இதைப் பார்க்கும் வழி அன்பே. இறைமையைக் குறித்த அன்பு, இந்த ஞானத்தினால் உணர்ச்சி மிகுந்து எலும்பு உருகி கண்ணில் நீர் திரளும் நிலையே நமது எல்லையற்ற தன்மையைக் காட்டும். ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றாக இந்த அழிவையுடைய உடலில் இருக்கும் மேன்மையைக் காட்டும்.
 உடல் என்ற உருவை விட்டு பரவெளியில் ஒன்றாகும்போது பெறுவது திருவரங்கம்.  இதைப் பெறுவதற்கு ஒருவர் தான் ஒரு உடல்தான் உணர்வுகள்தான் என்று எண்ணுவதை விட்டு தான் விழிப்புணர்வு, எல்லையற்றவன் என்று எண்ண வேண்டும்.  இதுவே கற்பனையை விட்ட தெளிவு.