Monday 2 February 2015

131. Are there two gods?

Verse 131
எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.

Translation:
Are there two Gods, as yours and ours?
Can there be two Gods, here and there?
Isn’t it One God who remains as everywhere/everything?
Those who speak such evil words will die with their mouths putrefying.

Commentary:

People constantly fight about the supremacy of their God as if there are many Gods.  Civavākkiyar ridicules this stupidity by affirming there is only one God who is omnipresent.  Arguing and fighting over whose God is better will only breed hatred and other bad qualities.  People who indulge in such deplorable arguments will ultimately be destroyed.

எனது கடவுள்தான் உயர்ந்தவர் என்று மக்கள் சண்டைபிடிப்பதை சிவவாக்கியர் இப்பாடலில் கண்டிக்கிறார்.  ஒருவனே இறைவன், ஆதி மூர்த்தி என்றால் இங்கு ஒருவன் அங்கு ஒருவன் என்று இருக்க முடியுமா என்று சிவவாக்கியர் கேட்கிறார்.  அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் வாய் புழுத்துச் சாவர் என்று அவர் கூறுகிறார். 

Monday 5 May 2014

130. If bathing in sacred waters morn and evening will grant wisdom then the toad is more fit to receive it!

Verse 130
காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.

Translation:
The blind, stupid people who bathe submerging in water in the morn and eve,
What will the toad that remains in the water day and night attain?
Waking up early in the morning and through one of the three eyes,
If you contemplate the Origin then liberation will be attained.

Commentary:
The verse is another example of Civavakkiyar’s satire.  In a previous verse, he has riduculed people who claim that they are pure when they bathe and questioned what purity is.    Here he makes fun of those who bathe in sacred waters or even generally bathe in the morning and evening claiming that they are pure and hence deserve liberation.  He jokingly asks such people that if they claim that they will attain liberation by bathing so, what will a toad that remains in the water all the time attain.  Isn’t it more deserving of liberation if all the qualification required for liberation is bathing in the morning and evening? 

In this connection one is reminded of one of the verses of Kalin.  He says that if bathing in the Ganga ensures liberation, then the fish that live permanently in Ganges are more appropriate candidates for liberation than once in a lifetime bathers are.

Civavakkiyar does not leave us with only the ridicule but with a practical suggestion for liberation.  He says that one should get up early in the morning and through the eye of discrimination/knowledge, the third eye, we should contemplate on the Absolute.  Only this will grant us liberation.
The third eye is popular not only in the Eastern traditions but also in several Western traditions.  The third eye, also known as inner eye, refers to the ajna cakra in the middle of the eyebrows.  It is considered as the gate that leads one to higher conscious states.  It symbolizes enlightenment, a state of non-dualistic perspective.  In the Western traditions the third eye is localized in the pineal gland.  This point helps in establishing contact with the cerebrospinal nervous system which gives a person the faculty of perception in the higher worlds.  This connection and knowledge are under the control of the person’s will because it is connected with the voluntary nervous system.
In the Christian teachings, the third eye is referred to in the Book of Revelations, which is seen as a work describing the kundalini and its progression upwards.  Several meditation schools such as Zen, Chinese martial arts, Taoism and Aikido use the third eye in their meditation practices.  In the Jewish Kabbalah tradition, the third eye is attributed to Chokmah or wisdom. 

Rising early has been recommended in both the yoga tradition as well as several health systems such as ayurveda.  The time between 4 AM and 5.30 AM is called the Brahma muhurta or the time of Gods.  Waking up at this time for sadhana is highly recommended. 

இப்பாடல் சிவவாக்கியரின் கிண்டலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.  முந்தைய பாடலில் அவர் சதா குளித்துவிட்டுத் தான் தூய்மையானவராக இருக்கிறோம் என்று சொல்லும் மக்களைக் கேலி செய்தார்.  இங்கு காலையும் மாலையும் நீராடி தான் மிக மடியாக இருக்கிறோம் என்று கூறும் மக்களைத் தாக்குகிறார்.  அவ்வாறு தினமும் இருவேளையும் நீரில் குளித்தால் மட்டும் ஞானம் வந்துவிடும் என்று ஒருவர் கூறினால் போழுதுமுழுவதும் நீரிலேயே கிடக்கும் தேரை எத்தகைய உயர்ந்த கதியை அடையும் என்று அவர் கிண்டல் செய்கிறார்.  இந்த மக்களை விட அந்தத் தேரை மோட்சத்துக்கு அருகதையானது அல்லவா என்று அவர் கேட்கிறார்.

இந்த இடத்தில் காலின் என்ற புலவரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.  அவர் கங்கையில் குளிப்பது மோட்சத்தை அளிக்கும் என்றால் அந்த கங்கையிலேயே வாழும் மீனே மோட்சம் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தது என்று கூறுகிறார்.

சிவவாக்கியர் கிண்டலோடு நிறுத்திவிடவில்லை நாம் என்ன செய்யவேண்டும் என்றும் கூறுகிறார்.  ஒருவர் காலையில் விடியலில் எழுந்து தனது மூன்றாம் கண்ணான விவேகத்தைக் கொண்டு பரம்பொருளை நினைக்கவேண்டும்.  இது மட்டுமே ஒருவருக்கு மோட்சத்தை அளிக்கும் என்கிறார் அவர்.

மூன்றாம் கண் என்பது கீழைய சம்பிரதாயங்களில் மட்டுமல்லாமல் மேலைநாடுகளிலும் பிரபலமானது.  மூன்றாம் கண் எனப்படும் ஆக்ஞா விழிப்புணர்வின் உயர் நிலைக்கு ஒரு வழி, கதவு எனப்படுகிறது.  இது ஞானம் அல்லது இரண்டற்ற நோக்கைத் தருகிறது.  மேலை நாடுகளில் மூலையில் உள்ள ஒரு பகுதி மூன்றாம் கண்ணாகக் கருதப்படுகிறது.  இந்த ஆக்கினையை அடைவது ஒருவரது கட்டுப்பாட்டில் உள்ளது. கிறித்துவ மதத்தில் இந்த மூன்றாம் கண்ணைப் பற்றி ‘புக் ஆப் ரெவலேஷன்’ என்பதில் காணப்படுகிறது.  ஜென், தாவோயிசம், ஐகிடோ போன்றவற்றில் உள்ள தியானப் பயிற்சிகள் இந்த மூன்றாம் கண்ணை பயன்படுத்துகின்றன.  யூத மதத்தில் இந்த மூன்றாம் கண் சோக்மாக் அல்லது ஞானம் என்று கருதப்படுகிறது.


விடியற்காலை நான்கு முதல் ஐந்தரை மணி வரை பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது.  இந்த நேரம் ஆன்மீகப் பயிற்சிகளுக்கு ஏற்றது என்று யோக நூல்கள் கூறுகின்றன. 

Monday 28 April 2014

129. Is the Divine a mere stone? I cannot help but laugh!

Verse 129
சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்?
மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.

Translation:
The mutes who do casual rituals of philosophy!
Will the Divine become a stone?  What else can I do but to laugh (at you)?
The three-eyed one, the primal effulgence that cannot be comprehended by the Triad,
He will remain merged within you as protection, You will see!

Commentary:
In the previous verse, Civavākkiyar denigrates those who spin yarn and recite mantras aimlessly.  In this verse, he is disparaging those who perform rituals casually without understanding their significance.  Such people argue that God lives only in stone images found in temples and other places of worship.  Civavākkiyar is so tickled by their stupidity that he feels like laughing at them.  The Lord, the fully complete wisdom (represented by his third eye-the eye of wisdom), the one who is beyond the comprehension of even the triad of Brahma, Viṣṇu and Rudra, the primal emergence, the shoot from which the entire universe sprouts, is really in us.  The Absolute is the protection that remains merged within us.  Only those with right knowledge will be able to see this phenomenon. Civavākkiyar urges people to see that the Lord is within us and not in the stone images we worship.


இப்பாடல் சிவவாக்கியரின் பொய்மையைப் பொராமை என்ற குணத்துக்கு எடுத்துக்காட்டு.  முந்தைய பாடலில் பூணூல் அணிந்து பொருள்புரியாமல் மந்திரம் சொல்லும் மக்களைச் சாடிய சிவவாக்கியர் இப்பாடலில் பூஜைகளையும் புனஸ்காரங்களையும் பொருள் புரியாமல் வெறும் சடங்காக செய்பவரைப் பற்றிக் கூறுகிறார்.  கல்லாலான இறையுருவுக்கு அபிஷேகங்கள் செய்து அத்துடன் தமது கடமை முடிந்தது தாம் ஞானம் பெற்றுவிடுவோம் என்று மக்கள் எண்ணுகின்றனர்.  “தேவர் கல் ஆவாரோ?  இதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது?” என்று சிவவாக்கியர் கேலி செய்கிறார்.  மூவர் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளைக் குறிக்கும்.  முக்கண்ணன் என்பது பொதுவாக சிவனைக் குறித்தாலும் அது மூன்றாம் கண்ணான விவேகத்தை, பரவுணர்வை, ஒருமை நிலையை உணர்ந்த, இதுதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத குணத்தை உடையவனான, ஜோதியான இறைவனையே குறிக்கும்.  இந்த இறைவன் அனைத்துக்கும் காவலாக உள்ளான். இதை மக்கள் கண்டுணர வேண்டும் என்று சிவவாக்கியர் உபதேசிக்கிறார். 

Saturday 26 April 2014

128. Instead of spinning yarn blow the bellow!

Verse 128
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே!
துருத்திநூல் முறுக்கிவிட்டுத் துன்பம்நீங்க வல்லீரேல்
கருத்தில்நூல் கலைப்படும் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயஅஞ்சு எழுத்துமே.

Translation:
Hey, People who spinning the cotton thread and recite wearily!
If you are able to remove misery by twisting the thread of the bellow
You will become aware of knowledge from great works, thread of time will become null
Correcting one and cutting the thread of worries is the five lettered civaya.

Commentary:
The first line may be addressed to those who wear the sacred thread made by spinning cotton.  They pride themselves that they are in a better position to attain liberation as they wear the sacred thread and recite mantras.  Instead of this, if they are able to practice pranayama by controlling air through this body, which is the bellow, all the great ancient knowledge, will become theirs.  They will go beyond the concept of time.  All this is possible through the five-lettered mantra ci-va-ya.  The five lettered ci va ya is actually ci va ya va ci.


இப்பாடலின் முதல் வரி பூணூல் அணியும் முக்குலத்தோரையும் குறித்து உள்ளது.  அவர்கள் தாம் பூணூல் அணிவதால், மந்திரங்களை உச்சரிக்கத் தகுதி பெற்றிருப்பதால் உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணுகின்றனர்.  ஆனால் அவர்கள் தங்கள் உடல் என்னும் துருத்தியில் மூச்சைக் கட்டுப்படுத்திச் செலுத்தும் முறையைக் கற்றுக்கொண்டால்தான் அவர்களுக்கு ஞானம் ஏற்படும். அவர்கள் காலத்தைக் கடந்து போக முடியும்.  இது சிவயவசி என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தால்தான் சாத்தியம் என்று சிவவாக்கியர் கூறுகிறார். 

Tuesday 22 April 2014

127. Sounds heard during Kundalini yoga

Verse 127
வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்துபூசை பண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதிஅந்த மும்கடந்து அரியவீடு அடைவரே

Translation:
In the place where the four Vedas spread remaining as the water element
If the sacred feet are worshipped with devotion as the liṅga,
The trap in the ear will open cutting asunder everything. The wise
Will go beyond the beginning and end, to reach the supreme locus.

Commentary:
In the first two lines of the verse, Civavākkiyar states that the Absolute is present as the four Vedas, the five elements and as the liṅgaLiṅga is the formless form of the Divine.  Civavākkiyar advices that the yogin should worship this form with devotion.  When the meditation of that yogin becomes intense and the concentration is undiluted, then the yogin “hears” various subtle sounds.  Civavākkiyar refers to this by saying the “trap in the ear will open”. 

Tirumular lists ten sounds that the yogin hears in this process (Tirumandiram verses 606, 607).  They are: the sounds of bells, sea, elephants bleating, music of the flute, clapping of the thunderclouds, melody of the bees, call of the conch and the song of the musical instrument yāḻ. These are sounds emanating from the Absolute assuring the seeker that he is progressing in the right direction of contemplation.  At the end of these sounds is the nādāntha or the soundless state.  At this state the yogin experiences the Absolute.  He becomes jñāni, a realized soul.  Such a soul has gone beyond the beginning and the end; it has attained liberation.

             இப்பாடலில் சிவவாக்கியர் இறைவன் நான்கு வேதங்களாய், ஐம்பூதங்களாய் லிங்கமாய் இருக்கின்றான் என்றும் அவனது பாதத்தைப் போற்றித் தொழுதால் காதில் உள்ள கதவு திறக்கும் என்றும் அந்த நிலையை அடைந்த ஞானிகள் பிறப்பிறப்பற்ற அனைத்துக்கும் மூலமான அறிய வீடான பரவுணர்வை அடைவர் என்கிறார்.


            யோகத்தை மேற்கொள்பவர்கள் பல்வேறு ஓசைகளைக் கேட்பார் என்று திருமந்திரம் கூறுகிறது (மந்திரம் 606, 607) அவை: மணியோசை, கடலின் ஓசை, யானையின் பிளிறல், குழலோசை, இடிச்சத்தம், தேனீக்களின் ரீங்காரம், சங்கொலி, மற்றும் யாழின் ஓசை.  இந்த ஓசைகள் குண்டலினி சக்தி சக்கரங்களைக் கடக்கும்போது எழுகின்றன.  இவை அந்த யோகி சரியான பாதையில்தான் போகிறார் என்பதைக் காட்டிக்கொடுக்கின்றன.  இந்த ஓசைகளின் முடிவில் இருப்பது நாதாந்தம் அல்லது ஒலியற்ற நிலை.  இந்த நிலையில் அந்த யோகி இறைமையை உணருகிறார்.  அவர் அனைத்தையும் கடந்த ஞானியாகிறார்.  முதலும் முடிவுமற்ற பரநிலையை அடைகிறார்.

Sunday 20 April 2014

126. The yogi's state of Sat chith ananda

Verse 126
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே?
ஆகலும் அழிதலும் அதன்கண்நேயம் ஆனபின்
சாகலும் பிறத்தலும் இல்லைஇல்லை இல்லையே!

Translation:
When two become one with samarasa,
Where is enjoyment and merging?
When creation and destruction become only love towards That,
There is no birth and death, never at all.

Commentary:
This verse seems to be a continuation of the previous verse that talks about the state of yogi who has attained the state of supreme consciousness.  In this state, the Jivatma and Paramatma are not two entities but one only, the supreme consciousness.  Hence there is no enjoyment of one by the other or merging of one within the other as there is only one entity.  It becomes the state of the self enjoying itself the sat chit ananda state.  All that remains is love, bliss.  Tirumular describes this state when he says ‘anbe sivam’ ‘love is god’.  This is not love for another but the enjoymet of one’s own state, the blissful state of self awarenenss, the citi mentioned in Kashmir Saivism.  This is the state of the Divine.  In this state creation becomes manifestation and destruction becomes dissolution.  The Divine is said to perform creation and dissolution of the universe in this state with chit sakti.  There is only “presence”, no death or birth.

முந்தைய பாடலில் கூறப்பட்ட ஒரு யோகியின் பரவுணர்வு நிலை இப்பாடலிலும் தொடருகிறது. இந்த நிலையில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாக சமரச நிலையில் இருக்கின்றனர்.  அப்போது இரு வஸ்துக்கள் இருப்பதில்லை. ஒரே வஸ்து, பரவுணர்வு மட்டுமே இருக்கிறது.  இதனால் ஒன்றை மற்றொன்று அனுபவிப்பதோ ஒன்றில் மற்றொன்று ஒன்றுவதோ ஏற்படுவதில்லை.  இதுவே சத் சித் ஆனந்த நிலை.  விழிப்புணர்வு தான் விழிப்புணர்வு பெற்றிருப்பதை அறிந்த ஆனந்த நிலை.  இறைமை இந்த நிலையில் படைப்பையும் லயத்தையும் செய்வதாக நூல்கள் கூறுகின்றன.  அனைத்தும் நேயமாக, அன்பாக இருக்கும் நிலையைத்தான் திருமூலர் ‘அன்பே சிவம்’ என்று காட்டினார்.  “ஆக்கலும் அழித்தலும்” இந்த நிலையில் இல்லை, “ஆகலும் அழிதலுமே” உள்ளன.   

பிறப்பும் இறப்பும் இல்லை விழிப்புணர்வுடன் கூடிய அன்பு மட்டுமே இருக்கிறது.  

Saturday 19 April 2014

125. In the impregnable pit, in the legless pillar, in the room of fire....

Verse 125
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே!

Translation:
Can remain, can remain and can remain in this world,
Can remove the seven worlds of Hara, Hari and Brahma,
In the impregnable womb, in the legless pillar
You and I, O! Lord when the room of fire is opened.

Commentary:
The verse describes the state of existence of the Siddhas.  Through kundalini yoga the yogin raises his power through the suṣumna nadi, the pillar with no legs, the unsupported pillar, from the muladhara, the womb that is impregnable. 

When this happens, the path of the fire of kundalini, neruppaṛai opens; the power rises with full force through the nadi thereby arousing the consciousness of the aspirant to the highest level.  At this state, the yogin and the Absolute remain together as one unit.
A seasoned yogin who has perfected this method will remain in the world as a realized soul.  He will be able to travel through the seven worlds of Brahma, Viṣṇu and Śiva at will.  He can remove his manifested state represented by Brahma and Viṣṇu. He is not limited by time and space.                                       


             இந்தப்பாடல் ஒரு சித்தர் எவ்வாறு இந்த உலகில் வாழ்கிறார் என்று கூறுகிறது.  குருக்கொளாத குழி மூலாதாரம், காலில்லாத தூண்- அங்கிருந்து எழும் குண்டலினி அக்னி.  நெருப்பறை- குண்டலினி அக்னி பிழம்பாக ஒளிரும் சுழுமுனை நாடி.  ஒரு குண்டலினி யோகி தனது பயிற்சிகளின் மூலம் குண்டலினி சக்தியை சுழுமுனையில் ஒரு நெருப்புப் பிழம்பாக ஒளிரச் செய்யும்போது அவர் பிரமன், மால் மற்றும் ஹரன் வாழும் ஏழுலகங்களையும் விலக்கிவிடலாம்.  அதாவது, சாதாரண இருப்பை நீக்கிவிடலாம். அந்த யோகி இந்த உலகில் “இருந்தாலும் இருப்பதில்லை.”  காலம், தேசம், காரணம் கொண்ட இவ்வுலகினால் கட்டுபடுத்தப்படுவது இல்லை.