2.5 கழற்று எதிர் மறுத்தல்
சேணில் பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம்பலத்துமாணிக்கக் கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும்
பூணில் பொலி கொங்கை ஆவியை ஓவியப் பொற்கொழுந்தைக்
காணில் கழறலை கண்டிலை மென் தோள் கரும்பினையே (23)
பொருள்:
நெருங்கினால் பொலிக்கின்ற பொன் மாளிகையை உடைய தில்லை சிற்றம்பல மாணிக்கக் கூத்தனின் வடக்கு வான் கயிலையில் இருக்கும் மயிலை, மின்னும் ஆபரங்களால் பொலிந்த கொங்கையை உடையவளை, எனது ஆவியை, அழகிய பொன் கொழுந்து போன்றவளை, கண்டால் நீ என்னை இவ்வாறு ஏச மாட்டாய். மென்மையான தோள்களை உடைய கரும்பு போல இனிப்பான அவளை நீ காணவில்லை. சேண்-வானம்.
தலைவியைக் காணாததினால்தான் பாங்கன் தன்னை ஏசுகிறான் என்று தலைவன் கூறுகிறான்.
சேணில் பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம்பலத்து- தில்லை- பொன்னம்பலம், இதய ஸ்தானம், ஒளிரும் செம்பொன் மாளிகை. அது சித்தை ஒரு மாளிகையைப்போல பாதுகாக்கிறது, அதை நெருங்கும்போது அதன் ஒளி புலப்படுகிறது.
வட வான் கயிலை- இதயத்தில் இருப்பவனே சகஸ்ராரத்தில், வட கயிலையில் இருப்பவன். தில்லை ஆகாச தத்துவத்தைக் குறிக்கிறது. இங்கு வான் என்பது ஆகாய தத்துவத்தையும் கடந்த வெட்ட வெளி.
மாணிக்கக் கூத்தன்- திருமூலர் மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய் மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றில் ஆடும் திருக்கூத்து என்றும், சேணுற்ற சோதி சிவானந்தக் கூத்தன் ஆணிப் பொன் கூத்தன் என்றும் சிவனைக் குறிப்பிடுகிறார். சக்தியை மரகதப் பாவை என்றும் சிவனை மாணிக்க சோதி, பொன்னார் மேனியன் என்றும் அழைப்பது மரபு. மாணிக்கம் சுயம்பிரகாசம் உடையது. இருட்டிலும் ஒளிர்வது.
பூணில்- அணிந்துகொண்டால், பொலியும் கொங்கை- பொலியும் ஞானம்.
கயிலை மயில், கொங்கை, ஓவியம்- சகள மேனி, உருவம். ஆவி- அரூபம், பொற்கொழுந்து- அருவுருவம்.
மென் தோள், கரும்பு- அவள் தரும் அனுபவம். அனுபவ குணம். உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று நிலைகளில் இருக்கும் சிவம், தனது அனுபவ குணத்தை ஆத்மாக்குத் தர தலைவியின் உருவில் வந்துள்ளது. அதை ஆத்மாவைத் தவிர பிறரால் காண முடியாது. அதனால் உலக மக்கள் அந்த அனுபவம் பெற்றவரை பித்தர் என்றும் பைத்தியம் என்றும் ஏசுகின்றனர். சிவானுபவத்தையும் அதைத் தந்த இறைவனையும், தத்போதத்தைப் போல, கடிந்து பேசுகின்றனர்.
கண்டிலை- தத்போதத்தால் சிவத்தைக் காண முடியாது. அது மனத்தின் மூலமே அனைத்தையும் அறிகிறது. அதனிடம் உள்ளது பசு ஞானம். பதி ஞானம் பெற்றால் மட்டுமே சிவத்தைக் காண முடியும். சிவம் மனதைக் கடந்தது.
மயில், கொங்கை, ஆவி, பொற்கொழுந்து ஓவியம்- பித்தை நீக்கி, பர அபர ஞானங்களை அளித்து, ஆத்மாவின் ஆவியாகி அதனை பொன்னின் சுத்த நிலைக்கு உயரத்துபவள் தலைவி என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது. இந்த மாற்றத்தை சிவம் உறுதியான ஆனால் மென்மையான வழியில் இனிமையாக நிகழ்த்துகிறது. இந்த மாற்றத்தை ஆத்மா ‘கண்டலை’ காண்பதில்லை, அறிவதில்லை. ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம். பொன் என்பது சூரியனையும் சிவ போதத்தையும் தவத்தையும் குறிக்கும். பொற் கொழுந்து- பொன் மாளிகை உச்ச நிலை என்றால் அதன் சிறிய கொழுந்து குண்டலினி. பொற்கொழுந்து- ஆத்மாக்கள் சிவத்தின் உருவுகள், கொழுந்துகள்.
ஜீவனின் பொன் நிலையை மென்மையான வழியில் கரும்பைப்போல இனிக்கும் வழியில் தலைவி நிகழ்த்துகிறாள். அந்த மாற்றத்தின்போது ஆத்மா எந்த வலியையும் துன்பத்தையும் சந்திப்பதில்லை.
2.5 Hero dismisses the reprimand
The Ruby dancer of Tillai who possesses the golden bungalow that glows upon approach
The peacock in his northern aerial Kailai, with breasts that glow
When adorned, the soul, the beautiful painting, the golden flame
The one with soft shoulders and sweet like sugarcane, you have not seen. Then you will not reprimand.
Meaning:
You have not seen the peacock, the one with breasts glowing with ornaments, my soul, the golden flame/leaf, the sweet sugarcane, the one with soft shoulders, who is in the northern, aerial Kailaya of the ruby-like dancer of Thillai Chitrambalam who possesses the golden bungalow that glows when approached. Hence, you are talking ill.
The hero tells his friend that he is reprimanding him because the friend has not met the heroine.
The golden bungalow that glows when approached- Tillai is the golden arena, the Hridaya. It protects the soul, the consciousness, like a bungalow. Its effulgence is visible when one gets close to it.
Northern aerial Kailaya- the one in the heart is the one in sahasrara. Tillai represents the akasha principle. Kailaya is beyond the akasha, it is beyond the beyond.
The ruby-like dancer- Tirumolar refers to Siva’s dance at Tillai as the emerald effulgence dancing within the ruby and Siva as the ‘senutra Jyothi sivanandha koothan aanipon koothan’. Shakti is customarily referred to as the emerald lady and Siva as the ruby effulgence. Ruby is self effulgent, it glows in the dark also.
The glowing breasts when adored- the wisdom that glows when one receives it, adorns it.
The peacock in Kailaya, the breasts, the painting- Divine with a form, soul-formless, golden flame-formless form, soft shoulder, sugarcane- her qualities that can be experienced. The Divine that exists in all three forms came in the form of the lady to confer its experience to the soul. Soft shoulder-firmness yet soft, sugarcane-sweetness. The soul experiences the Divine personally; others cannot share the experience. Hence, the worldly insult such souls as crazy, delusional, and the Divine that confers the experience, like the Tatbodham.
Tatbodham cannot see Sivam as it experiences everything through the mind, pasu jnana. Divine can be experienced only with pathi jnana. Sivam is beyond the mind.
Sivam removes the delusion of the soul (peacock), grants it its para and apara jnana (breasts), makes it the Divine’s soul, and raises it to the golden state. It enacts this process through soft and yet firm steps, and sweetly. The soul does not even see the transformation that the Divine brings about. Gold represents Shakti (Hiranya vanraam harineem), Surya, Sivabodham and tapas. Small flame- The golden bungalow is the supreme state, a small representative of it is the golden flame- kundalini. Souls are limited (small flames) forms of Sivam (the supreme effulgence).