Verse 76
இருவர் அரங்க மும் பொருந்தி என்புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகிநின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்தபின்
திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லிரே
Translation:
Fitting in the arena of the both, you have not
looked, with your bones melting,
The truth that remains as the arena of form, you
have not realized it,
After surpassing the imagination, the womb,
You are capable of remaining with the clarity that
It is the sacred arena.
Commentary:
This verse has
interesting usage of words. The word ‘arangam’
means arena, the place of a performance.
Civavākkiyar says that we have not seen the place where ‘iruvar’
the two beings are present. The two
Beings are Śiva and Śakti, the consciousness and the awareness. It may also mean the arena where the limited
soul and universal soul remain together, the human body. The way to perceive this is through love, where the bones melt in love for the Divine, with the great realization. It is the Divine that remains as the arena of
form, uruvarangu. Remaining limited or staying in the womb is only due
to the delusion of limitedness. If this
imagination is surpassed then one remains with clarity that this body is tiruarangu
or the sacred arena.
The
“seeing” mentioned here is not perception in the normal sense. It is seeing
with a special kind of eye, the divya cakshu or the eye of
discrimination, clarity.
அரங்கம் என்பது ஆட்டம்
நடக்கும் இடம். இருவர் என்பது சக்தியும்
சிவனும் அல்லது ஜீவனும் ஈஸ்வரனும் ஆகும்.
அதனால் அரங்கம் என்பது இவர் இருவரும் இருக்கும் இடம்- மனித உடல், ஒரு உருவைக் கொண்ட அரங்கம். இதைப் பார்க்கும் வழி அன்பே. இறைமையைக் குறித்த அன்பு, இந்த ஞானத்தினால் உணர்ச்சி மிகுந்து எலும்பு உருகி கண்ணில் நீர் திரளும் நிலையே நமது எல்லையற்ற தன்மையைக் காட்டும். ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றாக இந்த அழிவையுடைய உடலில் இருக்கும் மேன்மையைக் காட்டும்.
உடல் என்ற உருவை விட்டு
பரவெளியில் ஒன்றாகும்போது பெறுவது திருவரங்கம்.
இதைப் பெறுவதற்கு ஒருவர் தான் ஒரு உடல்தான் உணர்வுகள்தான் என்று எண்ணுவதை
விட்டு தான் விழிப்புணர்வு,
எல்லையற்றவன் என்று எண்ண வேண்டும். இதுவே
கற்பனையை விட்ட தெளிவு.
No comments:
Post a Comment