Wednesday, 5 June 2013

78. Forgetting the eye that sees---



Verse 78
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண்மறைந்த வாறுபோல்
எண்ணில்கோடி தேவரும் இதின்கணார் இழப்பதே

Translation:
To be born in this world and to say all those that are not the norm,
With infinite number of religious people claiming, “Mine, yours”
Like the pupil that is invisible to the eye which sees through it,
Infinite numbers of religious men do not see this and lose out.  

Commentary:
The usual routine for humans is to be born in this world and say all those words, concepts and ideas that are not generally accepted.  People belong to different religions and fight with each other saying that their faith is the only correct one.  Civavakkiyar quotes an interesting example to explain why this is wrong.  When one sees things through the eyes one does not realize the presence of the eye which makes them see so.  One focuses only on the external objects seen.  Similarly, when one sees God as different entities in the external world one does not realize that they are seeing so only due to the will of God, the indweller within them who makes them see so. One forgets the presence of this indweller.  Millions of people do not realize this and lose out in the end. 

இவ்வுலகில் எண்ணிலா மக்கள் பிறக்கின்றனர், தமது வாழ்க்கையைத் தவறான பேச்சிலும் “இது எனது மதம், அது உனது மதம், நான் சொல்வது தான் சரி” என்று சண்டையிடுவதிலும் விரயமாக்குகின்றனர்.  ஒருவர் ஒரு பொருளைக் கண்ணால் பார்க்கும்போது கண் இருப்பதையும் அதுவே அவரை அவ்வாறு பார்க்கச் செய்கிறது என்பதையும் மறந்துவிடுகிறார்.  அதே போல ஒருவருள் இருக்கும் இறைவனே ஒருவரை அவ்வாறு வித்தியாசங்களைப் பார்க்கச் செய்கிறார்.  அவை அனைத்தும் இறைவனின் லீலை என்பதை ஒருவர் உணருவதில்லை, தனது அறிவுக்கண்ணைத் திறந்து அதைப் பார்ப்பதில்லை.  அதனால் முடிவில் அவர் உண்மையையும் நிம்மதியையும் மோட்சத்தையும் இழந்தவராகிறார்.

No comments:

Post a Comment