Verse
83
பாடுகின்ற உம்பருக்கு ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கர்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே
நீடுசெம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காலகண்ட நித்தியகல் லியாணனே
Translation:
Contemplating on the dancing feet the otuvars* are
singing,
Our Lord who created the faultless karmic group
Father, who dances in the golden arena,
Blue-throated, destroyer of Yama, the eternally
auspicious One.
*otuvars- they are people employed in Saiva temples
and monastries to recite sacred Tamil hymns.
Commentary:
This verse is in
praise of the Lord Nataraja, the dancing form of Śiva. The concept of Nataraja has been explained by
several great souls. The Dance of the
Divine represents the eternal movement of the universe. In Kashmir Saivism this concept is called spanda. The universe set in motion by the dance
starts the manifestation. The circle of
flames around Śiva represents energy in the purest form. It is also the symbol of aum , the
basic sound of creation. The dwarf under
Siva’s foot represents ignorance. The
drum in his hand represents nāda or the source of the audible universe.
The blue throat of Siva represents change in the
direction of flow of semen which confers realization. This realization confers eternal life. Hence, the Ultimate Reality is called the
destroyer of Yama or Kāla, the limitation of time.
The term
“faultless karmic group’ in the second line indicates both, actions that do not
have an associated fruit or group of great souls whose actions go beyond the
cycle of karma and its fruit. Such actions
are called nishkama karma or actions performed without any attachment to the
action, its benefit or the feeling of doership.
இப்பாடலில் ஆடலரசனான நடராஜர் போற்றப்படுகிறார். நடராஜரின் தாண்டவம் பல இடங்களில்
விளக்கப்பட்டுள்ளது. அவரது நடனம் உலகின்
இருப்பைக் குறிக்கின்றது. காஷ்மீர்
சைவத்தில் இது ஸ்பந்தா எனப்படுகிறது.
சிவனைச் சுற்றியுள்ள நெருப்பு தூய சக்தியைக் குறிக்கிறது. அது ஓம் என்னும் முதலெழுத்தைக்
குறிக்கும். இறைவனது காலடியில் இருக்கும்
அசுரன் அறியாமையைக் குறிக்கிறான். அவரது
கையிலுள்ள மத்தளம் நாதத்தையும் அவரது நீல கண்டம் ஞானத்தைத் தரும் விந்து
மடைமாற்றத்தைக் குறிக்கும். இவ்வாறு
நடராஜர் காலதகனம் செய்வது காட்டப்படுகிறது.
அதனால் அவர் யமனை அழித்தவர் என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டாம்
வரியிலுள்ள “பழுதிலாத கர்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே” என்பது குற்றமற்ற கர்மங்களையும் அத்தகைய கர்மங்களைச் செய்வர்களையும்
குறிக்கும். பொதுவாக எந்த ஒரு கர்மமும்
ஒரு பலனைக் கொடுக்கும். நற்கர்மங்கள் புண்ணியத்தையும் தீய கர்மங்கள் பாவத்தையும்
தரும். ஆனால் நிஷ்காம கர்மம் என்பது பலனுடன் தொடர்பில்லாத கர்மம். அத்தகைய கர்மத்தைச் செய்பவர் தான் கர்மத்தைச்
செய்கிறேன், அதன் பலனை அனுபவிக்கின்றேன், அந்த கர்மம் என்னுடையது என்ற
எண்ணங்களைவிட்டுவிட்டு அக்கர்மத்தைச் செய்வார்.
அத்தகைய கர்மமே பழுதில்லாத கர்மம்.
No comments:
Post a Comment