Tuesday, 25 February 2014

106. Like a dragonfly that turns into a worm into a dragonfly......

Verse 106
பச்சைமண் பதுப்பிலே புழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்;
பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.

Translation:   
The worm embedded by the hornet in wet soil
Without any effort other than mere thought, becomes what it was intended to be,
The wet soil will break down and the worm will fly away as wasp,
Fools! Realize the way the Lord creates this.

Commentary:
This verse talks about the how the Absolute brings about changes/creation at its will.  A hornet embeds a worm in wet soil wishing it to become a wasp.  Over time the worm metamorphoses into the dragonfly and flies away.  Similarly, the Lord places the soul in the right environment and by his mere will, makes the soul evolve and break itself free from the fetters of the world.  Like the dragonfly that breaks the mud fortress and flies away freely, the soul breaks the body a fortress that restricts it and becomes all pervading.  This is great magic that the Absolute performs. 

This verse is also a description of the anupaya or the shaambhavopaya.  The soul need not do anything except enjoy the status of the dragonfly.  It may realize that it is undergoing transforming but is not doing anything special for it- shambhavopaya.  It is the Divine that brings about the transformation through its will.  Civavākkiyar calls those who think that they are getting the liberation through their own efforts as fools.  They do not realize that even though they attempt complicated austerities and yogic procedures, it is ultimately the Absolute that grants them the liberation. 

This verse is like the verse no. 95 where Civavākkiyar says that like the tortoise that lays its eggs on the shore and makes it hatch by thinking about it while it is still in the ocean, the guru by his mere thinking makes the disciple attain the highest realization. 

            இப்பாடல் இறைவன் எவ்வாறு படைப்பை ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறான் என்று கூறுகிறது.  ஒரு புழுவைக் குளவியாக மாற்றவிரும்பிய குளவி அதைப்  பச்சை மண்ணில் புதைத்து வைத்துவிட்டு பறந்துவிடுகிறது.  நாளடைவில் அந்த புழு ஒரு குளவியாக மாறி கூட்டைவிட்டு வெளியேறுகிறது.  இறைவனும் இவ்வாறே தனது ஒரு அம்சத்தை ஜீவனுள் வைத்துவிட்டு அதை ஒரு சாட்சி நிலையிலிருந்து பார்த்துகொண்டிருக்கிறான்.  நாளடைவில் அந்த ஜீவன் இறைவனாகிறான்.  அந்த குளவி தனது கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறுவதைப் போல அவன் தனது உடல் என்ற கூட்டை உடைத்துக்கொண்டு பரவெளியில் ஒன்றிவிடுகிறான். 

            இப்பாடலும் சாம்பவோபாயத்தைக்  கூறுகிறது.  இவ்வுபாயத்தைக் கடைப்பிடிக்கும் ஜீவன் இறைவனை எண்ணுவதை விட்டு வேறொன்றும் செய்யவேண்டியதில்லை.  தனது முயற்சியால் ஞானம் பெறுவதாக என்னும் மக்களை சிவவாக்கியர் முட்டாள்கள் என்கிறார்.  அவர்கள், தாங்கள் எவ்வளவு முயன்றாலும் இறைவனின் எண்ணம் வேறாக இருந்தால் மோட்சம் பெறமுடியாது என்பதைக் காணத் தவறிவிடுகின்றனர். 


            இப்பாடல் முன் கண்ட ஆமையைப் பற்றிய பாடலைப்போல உள்ளது. அப்பாடலின் தாய் ஆமை முட்டையைக் கரையில் இட்டுவிட்டு தான் கடலில் இருந்துகொண்டே அதை ஆமைக் குஞ்சுகளாக மாற்றுகிறது என்று அங்கு பார்த்தோம்.

Sunday, 23 February 2014

105. With my head melting....

Verse 105
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இலை பராபரா!
கரம்எடுத்து நிற்றலும் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம்எனக்கு நீ அளித்த ஓம்நமசி வாயவே!

Translation:
My responsibility is yours; I have no other fear, Supreme Lord!
Lifting hands, standing and folding them in supplication,
With the head melting, roaring My Lord Śiva!
The strength for me is the aum namacivaya that you granted.

Commentary:
In this verse Civavākkiyar says that he is submitting his responsibility to the Lord and hence he is living free of any fear.  This is the concept of bhara samarpanam.  Some of the other terms for this process are nyāsam, prapatti or śaranāgati.  All these words mean self-surrender.   Surrendering one’s responsibility means offering one’s soul (svarūpa samarpanam), the responsibility of one’s protection (bhara samarpanam) and the fruit of one’s existence (phala samarpanam).  This process involves having the resolution that (1) one will follow the right path and refrain from going astray, (2) one firmly believes that the Divine will grant liberation, recognizing one’s limited capacity to do the needful for liberation and (3) that it is only the Absolute that has the capacity to liberate us.  This is the underlying concept of the ultimate and supreme means for liberation, the śāmbhavopaya of Kashmir Śaivism. 
In the śāmbhavopaya the aspirant does nothing other than offering his responsibility to the Absolute and waits for the divine grace to descend and grant him liberation.  This is the supreme means that is explained well by Utpala Deva and Kṣemaraja in the Śiva Sutras.  Civavākkiyar conforms to this technique and says that he has no fear what so ever- neither about liberation nor about anything else and that the Lord’s words, namacivaya, gives him the strength to remain so.
Civavākkiyar says that the Divine experience will be so wonderful that he will roar in bliss saying “My Lord Śiva!” 


இறைவனுடன் உரையாடலாகக் காணப்படும் இப்பாடலில் சிவவாக்கியர் உயருணர்வு நிலையில் தனக்கு ஏற்படும் அனுபவங்களை விளக்குகிறார்.  அவர் தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்துவிட்டதால் தனக்கு எவ்வித பயமும் இல்லை என்கிறார்.  இத்தகைய சரணாகதி பர சமர்ப்பணம் எனப்படும்.  அதன் பிற பெயர்கள் நியாசம், பிரபத்தி என்பவையாகும். ஒருவர் தன்னையும் தனது எல்லாவித உடைமைகளையும்- மனைவி மக்கள் உறவினர் உட்பட, தனது செயல்களையும் அவற்றின் பலனையும் இறைவனின் பொறுப்பில் விட்டுவிடுவது.  காஷ்மீர் சைவ சம்பிரதாயத்தில் இது சாம்பவோபாயம் எனப்படுகிறது.  இந்த வழியை உத்பல தேவரும் க்ஷேமராஜரும் சிவ சூத்திர உரையில் விளக்கியுள்ளனர்.  இந்த உயருணர்வு நிலையில் தனக்கு வலுவைக் கொடுப்பது நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமே என்கிறார் சிவவாக்கியர்.  அந்த உணர்வு நிலை எவ்வளவு உயர்ச்சியைக் கொடுக்கிறது என்பதை விளக்க தான் “எனது இறைவா சிவனே” என்று கூவுவதாக அவர் குறிப்பிடுகிறார். 

Wednesday, 19 February 2014

104. Explain the secret of the five letter mantra

Verse 104
நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே!
நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

Translation:
The five letters of namacivaya will grant superior states
The ancient maya will fear the five of namacivaya
For the five lettered namacivaya to remain within us
Please explain the truth, namacivaya well, Lord!

Commentary:
The sacred mantra na-ma-ci-va-ya is the supreme panacea for everything.  It grants all higher states of existence and the supreme state of liberation.  The maya that is as eternal as the Lord fears this five lettered namacivaya as it has the capacity to destroy the effects of maya.  Hence, Civavākkiyar requests the Lord to explain the truth about namacivaya well so that it remains firmly within him.  The term ‘namacivaya uṇmaiyai’ also means ‘the truth, which is namacivaya’

The second line añcum purāṇamāna māyaiyum can also be interpreted in another way as the añcum represents the five state of the Absolute namely Śiva, Śakti, Sadasiva, Iśvara and Sadvidya.  These five are followed by maya which is sixth in line of emanation. Civavākkiyar has explained in verse 96 how namacivaya forms the various body parts. 


நமசிவாய என்னும் ஐந்தெழுத்து உயர் விழிப்புணர்வு நிலைகளையும் எல்லா உயர்ந்த பதவிகளையும் அளிக்கும்.  இந்த ஐந்தெழுத்துகளையும் கண்டு பழமையான மாயை பயப்படுகிறது.  அதனால் சிவவாக்கியர் இறைவனிடம் இந்த ஐந்தெழுத்துக்களின் சூட்சுமத்தை விளக்குமாறு வேண்டுகிறார்.  

Sunday, 16 February 2014

103. When will the Lord speak within us?

Verse 103
பேசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறார்
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே!

Translation:
The one who speaks is the Lord; the wisdom about Brahman is within you,
The five (senses) that are desire, they cause wandering,
If the five who are desire are contained within a letter,
If you remain quiet, the Lord will come and speak!

Commentary:

The voice inside us is the voice of the Lord.  The voice of the Lord reveals to us Brahma jṉāṉam or wisdom about the Brahman.  The Brahman, the Lord, and knowledge about him are both within us. The first line may also mean the speaker, the guru, is actually the Lord. He reveals the wisdom about the Brahman that is within us through his words.

The five senses cause desire in us.  They tie us to worldly life making us wander seeking the objects of desire.  If we are able to cut away desire, or focus the desire in the one letter, aum, then worldly desires get transmuted to desire for liberation.  If the aspirant focuses his mind on this single letter, then he hears the words of the Lord who is within us.


நம்முள் கேட்கும் குரல் இறைவனின் குரல், பிரம்ம ஞானமும் நம்முள் இருக்கிறது.  ஆசையான ஐவர் என்பது ஐம்புலன்களைக் குறிக்கின்றது.  இந்த ஐம்புலன்களும் நம்மை ஆசையால் அலைக்கழிக்கின்றனர்.  இவர்களை ஓரெழுத்தான  ஓம்காரத்தில் அடக்கி மௌனத்தை மேற்கொண்டால் இறைவன் நம்முள் வந்து பேசும்.

102. Within the eight, eight and eight remains my Lord

Verse 102
வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
அட்டரக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானை நாம் அறிந்தபின்

Translation:
This space has deluded you as a circle within you,
Containment and absorption within the eight letters,
Can be reached within the cakra that operates as eight, eight and eight,
It dawns after we knew our Lord.

Commentary:
The unlimited space has deluded us that life is a circle, a cycle of repeated births and deaths.  This is not true.  All the manifested and unmanifested are contained within the eight lettered mantra a-u-m-na-ma-ci-va-ya.  The cakra referred to here is the Umapati cakra.  It is drawn with eight horizontal and eight vertical lines with the eight letters contained within it.  This verse is similar to verse 917 of Tirumular’s Tirumandiram that states ‘eṭṭu nilaiyuḷē eṅkōn iruppiḍam’- the residence of my king is within the eight states.  
A cakra is a geometric pattern used by yogins in their spiritual exercise.  It is a power diagram or an energy pattern that represents some personification or an aspect of the divine.  A yantra focusses the psychic forces on a pattern such that the worshipper is able to recreate in him mental image of the Divine and focus on it.

இப்பாடலில் வெளி என்பது பரவெளியை பரம்பொருளைக் குறிக்கும்.  எங்கும் நிறைந்துள்ள அந்த பரவெளி தொடரும் பிறப்பு இறப்பு என்ற வட்டமாக நம்மை மயக்கி வைத்துள்ளது.  எட்டு அக்ஷரங்கள் என்பது அ உ ம நமசிவாய அல்லது ஐம் க்லீம் சௌம் நமசிவாய என்று கொள்ளலாம்.  எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கும் சக்கரம் என்பது உமாபதி சக்கரத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.  அது எட்டு குறுக்குக்கோடுகளையும் எட்டு நெடுக்குக் கோடுகளையும் அதனுள் எட்டு எழுத்துக்களையும் கொண்டது.  அல்லது அது 8+8+8 அதாவது இருபத்து நான்கு தத்துவங்களாக பரம்பொருள் இருப்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.  இப்பாடல் திருமந்திரப் பாடல் 917 லில் “எட்டு நிலையுளே எங்கோன் இருப்பிடம்” என்று  குறிப்பிடப்பட்டுள்ளதை ஒத்து உள்ளது.


யந்திரம் என்பது ஒரு சக்தி வரைபடமாகும்.  அது பரம்பொருளின் ஒரு நிலையை அல்லது ஒரு தன்மையைக் குறிக்கும்.  யந்திரத்தின் உதவியுடன் ஒரு சாதகர் சக்தியைக் குவித்துத் தனது மனதுள் இறைவனின் உருவை நிலை நிறுத்தி தியானிக்கிறார்.

Saturday, 15 February 2014

101. Untangling them you become in one of the six of the six crore

Verse 101
சோருகின்ற பூதம்போல் சுணங்குபோல் கிடந்தநீர்
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லிரேல்
ஆறுகோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே

Translation:
You who remained tired like a ghost, as if fatigued,
You fools who arose from the offal womb desiring it!
If you are capable of cutting asunder the hissing fives
Six million plaits, six among them, in one, you will become.

Commentary:
Before birth, people remain like ghosts, without a body. Action is not possible unless there is a body. So remain inactive as if fatigued.   cuṇaṅgu means emaciated, fatigued and also pollen grain.  A soul’s personal preferences, desires or predispositions, samskara, make it occupy an appropriate body.  Hence, Civavākkiyar says the souls take up a body desiring it.  Once they occupy a body all their thoughts and actions are directed by the five senses.  Civavākkiyar calls them ‘hissing’ as they are always in the excited state, not giving the soul a chance to think and evaluate its action. They are as dangerous as a hissing snake.

The six million plaits are the millions of nādi that traverse the body.  Six are the six cakra. Becoming one is when prana moves exclusively through the one nādi, the suṣumna nādi

The primary requirement for kundalini yoga is cutting away the influence of the five senses.  The term ‘ciṇukkaṛuttal’ is a significant expression.  It means ‘to extricate from entanglement’. The entanglement is that tangle of the soul in the body with the ropes, the ropes of karma.  The way to untangle it is through yoga.  Please refer to the explanation on pakva and apakva bodies in verse 5.

ஒரு பிறவியை எடுப்பதற்கு முன் ஜீவாத்மாக்கள் ஒரு பூதத்தைப் போல உடலில்லாமல் ஆத்மநிலையில் இருக்கின்றன.  இந்த நிலையில் அவர்களுக்கு செயல்புரியும் தன்மை இருப்பதில்லை.  அதனால்தான் உடல் பெற்று இருக்கும் இந்த பூமியைக் கர்ம பூமி என்கின்றனர்.  அவ்வாறு ஒரு ஜீவன் செயலற்று இருப்பதை சிவவாக்கியர் சுணங்கு போல இருப்பதாகக் கூறுகிறார்.  அதன்பின் அந்த ஜீவன் தனது ஆசையினால், கர்மத்தினால், ஒரு உடலை எடுத்து ஐம்புலன்களின் ஆட்சிக்கு உட்படுகிறது.  இந்த ஐம்புலன்களை சிவவாக்கியர் சீறும் பாம்பு என்கிறார்.  எவ்வாறு ஒரு பாம்பு ஒருவரைக் கொட்டிக்கொண்டே இருக்குமோ அதுபோல் புலன்கள் ஒருவரை பல்வேறு விஷயங்களில் ஆசைப்பட வைத்து இன்பதுன்பம் என்று அலைக்கழிக்கின்றன.  அவை பாம்பைப் போல ஆபத்தானவை.

ஆறு கோடி என்பது நம் உடலில் உள்ள நாடிகளைக் குறிக்கின்றது.  ஆறு என்பது ஆறு சக்கரங்களையும் ஒன்று என்பது சுழுமுனை நாடியையும் குறிக்கின்றன.

குண்டலினி யோகத்தின் முதல் தேவை ஐம்புலன்களின் தாக்கத்தை அறுப்பதே.  இதை சிவவாக்கியர் சிணுக்கறுத்தல் என்கிறார்.  ஐம்புலன்கள் ஒரு வலையைப் போல நம்மீது

விரிந்து நம்மைத் தமது கட்டுக்குள் வைத்திருக்கின்றன.  ஐந்தாம் பாடலில் நாம் பக்குவ தேகம், அபக்குவ தேகம் என்பவற்றைப் பற்றி விளக்கியுள்ளதைக் காணவும்.

Friday, 14 February 2014

100. What do the holy triad seek?

Verse 100
மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றும் அஞ்செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே
                                                                                      
Translation:
Three, three, three are all sought by the three devas,
Within that letter that asserts as three and five letters,
Within the realm where ther birth- mother, father and nāda
Function,  there is no one who can reveal this.

Commentary:
The letter referred to in the second line is a, the letter of supreme consciousness or om as a single letter.  It appears as aum, a for Śiva, u for Śakti and m for manifestation represented by nāda. 
The three threes sought by the three devas, Brahma, Viṣṇu and Rudra are
(1)               realms of sun, moon, agni,
(2)               heaven, hell and this world,
(3)               sattva, rajas and tamas the triple qualities the world is made up of.

The letter a appears as the three letters-aum and five- namacivaya or aim kleem saum and namacivaya.    Civavākkiyar closes the verse by saying there is no one in this world who could tell this.


            முதல் வரியில் குறிப்பிடப்படும் மூன்று மூன்று மூன்று என்பவை சந்திர சூரிய அக்னி மண்டலங்களையும் மண்ணுலகம், விண்ணுலகம், நரகம் என்னும் மூன்று உலகங்களையும் சத்துவம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களையும் குறிக்கும்.  இந்த மூன்றையும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர் அறிந்துகொள்ள விழைகின்றனர். இரண்டாம் வரியில் குறிப்பிடப்படும் ஒற்றை எழுத்து பரம்பொருளைக் குறிக்கும் அ அல்லது ஓம் என்னும் ஒற்றை எழுத்தாகும்.  இந்த ஒற்றை எழுத்து அ அல்லது சிவன், உ அல்லது உமா, ம அல்லது மாயை என்ற மூன்றாகவும் நமசிவாய என்ற ஐந்தாகவும் அல்லது ஐம் க்லீம் சௌம் நமசிவாய என்பதாகவும் விரிகின்றது.  கண்ணால் காணும் இவ்வுலகம் சக்தி, சிவன், நாதம் ஆகிய மூன்றின் வெளிப்பாடு, செயல்பாடாகும்.  இந்த தத்துவத்தை விளக்கிக் கூற நானிலத்தில் ஒருவரும் இல்லை என்று சிவவாக்கியர் கூறுகிறார்.

Thursday, 13 February 2014

99. What our mother and father, Siva and Sakti, teach us

Verse 99
மூன்று மண்டலத்திலும் முட்டிநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே
                                                                                                      
Translation:
In the three realms, in the pillar hit upon,
Within the hanging mouth of the snake, the letter that arose,
The mantra that was revealed by the birth-mother and father,
To reveal it within the single letter that occurs, there is no one anywhere!

Commentary:
The three realms are Candra mandala, Surya mandala and Agni mandala.  These are present within our body.  The pillar is the spinal column at which the ida, pingala and sushumna nadis remain.  The kundalini śakti should be woken up with the akshara ‘a’ and ‘u’ and made to travel through the sushumna nadi and travel through the three realms.  The letter a is Śiva our father and u Śakti our mother.  They, the ultimate causes for manifestation, gave birth to us in this form. They are our true guru.  No one else can teach this mantra other than them.


மூன்று மண்டலம் என்பது சந்திர, சூரிய அக்னி மண்டலங்களைக் குறிக்கும்.  அவை நமது உடலினுள் உள்ளன.  முட்டி நின்ற தூண் என்பது இடை, பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகள் சேர்ந்திருக்கும் நாடியைக் குறிக்கும்.  குண்டலினி சக்தி இந்த தூணில் எழும்பு சகஸ்ராரத்தில் முட்டி நிற்கிறது.  ஓம் என்னும் ஓங்காரத்தில் அ என்னும் எழுத்து நமது தந்தையான சிவனைக் குறிக்கும். உ என்னும் எழுத்து உமா அல்லது சக்தியைக் குறிக்கும்.  இவ்விரண்டு எழுத்துக்களை உச்சரிப்பதன் மூலம் குண்டலினி சக்தியை சுழுமுனையின் மூலம் மேலேற்றினால் அது ஓம் என்னும் ஓரெழுத்தாய் நிலவும்.  சிவவாக்கியர் இந்த தத்துவத்தை விளக்க சிவனையும் சக்தியையும் தவிர வேறொருவர் எங்கும் இல்லை என்று கூறுகிறார்.

Wednesday, 12 February 2014

98. How a Jivatma becomes Paramatma- the story of the sea turtle

Verse 98
கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைத்துநல்ல உண்மையானது உண்மையே!

Translation:
Like the turtle from the ocean climbing over the shore and laying eggs,
While roaming in the ocean hatches the eggs through thought,
Our Lord, Arangan, the effulgence who remains within the lotus,
Contemplating him within the body, the good truth realized is the truth indeed!

Commentary:
The ocean turtle has a unique way of makings its offspring.  It comes to the shore during the hatching season and lays eggs in the soil.  The mother turtle goes back into the ocean.  It does not remain in the vicinity of the eggs to nourish them or to help them hatch.  The baby turtles hatch from the eggs and go into the ocean to their mothers.  How the babies find their appropriate mothers is a puzzle till date.  

The Lord works with us in a similar fashion.  A small flame of divinity is placed in our bodies.  The all-pervading Ultimate Reality makes it ripen within us and turns it into a huge flame by its mere will.  The soul ultimately realizes the truth and goes back to the Ultimate Reality.   Civavākkiyar says that the Ultimate Reality, the effulgence, the Lord of the arena should be contemplated on as remaining within the body to realize the truth. This truth will make one the good truth, the Ultimate Reality, the satyam.

There is a conjecture that Tirumazhisai Alwar and Civavakkiyar may be the same person.  This verse adds credence to that as it explains one of the subtle, esoteric principles of visishtadvaita through this verse.  Visishtadvaita says that even though the Jivatma and the Paramatma are identical there are eight differences between them.  That is, they are not identical, there are subtle differences between them. Similarly, while the offspring are also sea turtles they are not the mother turtle, they are different entities.

            கடல் ஆமை குஞ்சு பொரிக்கும் முறையை விளக்கும் இப்பாடலின் மூலம் சிவவாக்கியர் எவ்வாறு ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாகிறது என்ற மிகப்பெரிய கோட்பாட்டை விளக்குகிறார்.  பொதுவாக கடல் ஆமை கரைக்கு வந்து தனது முட்டைகளை இட்டுவிட்டு கடலுக்குத் திரும்பிவிடும். நாளடைவில் அந்த முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் தமது தாயைத் தேடி கடலினுள் செல்லும் வரை அந்த தாய் ஆமையின் எண்ணம் முழுவதும் அந்த முட்டைகளின் மீதே இருக்கும்.  அதேபோல பரமாத்மா தனது கருவை ஜீவாத்மாவிடம் இடுகிறது. இதையே உபநிஷத்துக்கள் இறைவனின் அந்தர்யாமி நிலை என்று கூறுகின்றன.  இவ்வாறு தன்னுள் பரமாத்மாவைப் பெற்ற ஜீவாத்மா நாளடைவில் தன்னுள் இருக்கும் இறைவனை நினைத்து நினைத்து முடிவில் தானே பாரமாத்மாவாகின்றது. இவ்வாறு அது பரமாத்மாவை அடைகிறது.  அந்த ஜீவாத்மா தன்னை அடையும் வரை பரமாத்மாவின் எண்ணங்கள் அனைத்தும் அந்த ஜீவாத்மாவிடமே இருக்கின்றது.     


            திருமழிசை ஆழ்வாரும் சிவவாக்கியரும் ஒருவர் தானோ என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.  விசிஷ்டாத்வைதத்தின் மிக நுண்ணிய ஒரு கோட்பாடை விளக்குவதன் மூலம் இப்பாடல் அந்த கருத்துக்கு வலுவேற்றுகிறது.  எட்டு விஷயங்களில் தவிர மற்ற எல்லாவற்றிலும் ஒரு ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஒரு வேறுபாடும் இல்லை என்று விசிஷ்டாத்வைதம் கூறுகிறது.  இப்பாடலில் குறிப்பிடப்படும் குஞ்சுக்களுக்கும் தாய் ஆமைக்குமிடையே ஆமையாக இருப்பது என்பதில் எவ்வித வேறுபாடும் இல்லை.  ஆனால் குஞ்சும் தாயும் இருவேறு உயிர்களன்றோ!

Tuesday, 4 February 2014

97. Who sits in the Arangam?

Verse 97
இரண்டுமொன்று மூலமாய் இயங்குசக்க ரத்துளே
சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!

Translation:                                                         
With two and one as origin, operating within the cakra,
Curling up in three rings, the fire that remains as if fatigued,
The sound of the conch that rises in the suṣumna nādi,
Remained in the town of Arangan. Civayam.

Commentary:
The two are one in the first cakra means both the male and the female principles remain as one in the muladhara cakra.  Before its arousal, kundalini śakti remains in the mulādhara cakra like a snake coiled three and a half turns, the three turns being a u m and the half turn the bindu or the unmanifested sound.  When the fire of kundalini is aroused, it goes through the suṣumna nādi with the sound of a conch.  It rests ultimately in the vettaveli, the supreme space, the town of the lord of the arena, Arangan.  This is Tiruarangam.
It is interesting that Civavākkiyar uses the name Arangan to refer to the Ultimate Reality.  This name is usually associated with Lord Viṣnu in the town, Srirangam.  Kundalini yoga is usually associated with Śiva.  Arangam also means ‘arena’ or ‘ambalam’.  Thus, Arangan represents both Lord Śiva and Lord Viṣnu, the one who dances in the arangam and the one who is in yoganidra in arangam respectively.  Civavākkiyar may have used this name to indicate that the Ultimate Reality is neither Śiva or Viṣnu in the theological sense but the nondenominational Paramatma.
There is a conjecture that Sivavākkiyar and the Vaiṣnava saint Tirumazhisai Alwar are one and the same.  This verse lends support to that idea.

இரண்டும் ஒன்று என்பது சிவசக்தி ஐக்கியத்தைக் குறிக்கும்.  குண்டலினி சக்தி மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பைப் போல உள்ளது.  அதன் மூன்று சுற்றுக்கள் அ உ ம என்ற பிரணவ எழுத்துக்களையும் அதன் அரைச்சுற்று பிந்து அல்லது ஒலிக்கப்படாத ஒலியையும் குறிக்கும்.  குண்டலினி சக்தி விழித்தெழுந்து சுழுமுனை வழியே பயணிக்கும்போது சங்கின் ஒலியைப் போன்ற சத்தத்தை எழுப்புகிறது.  அது தந்து பயண முடிவில் வெட்டவெளி எனப்படும் சஹஸ்ராரத்தை அடைகிறது.  சிவவாக்கியர் இவ்விடத்தை அரங்கன் பட்டணம் என்று குறிப்பிடுகிறார். 


அரங்கன் என்னும் சொல் பொதுவாக விஷ்ணுவைக் குறிக்கும்.  குண்டலினி யோகத்தைப் பற்றிப் பாடும் சிவவாக்கியர் சிவனைக் குறிப்பிடாமல் விஷ்ணுவைக் குறிக்கிறாரா என்று பார்த்தால் இவ்வார்த்தை சிவன் விஷ்ணு இருவருக்கும் பொருந்தும் என்று தெரிகிறது.  அரங்கம், அம்பலம் என்னும் சொற்கள் ஒரு இடத்தைக் குறிக்கும்.  அங்கே யோகநித்திரையில் இருப்பவர் விஷ்ணு, நடனமாடுபவர் சிவன்.  இவ்வாறு அரங்கன் என்ற சொல்லுக்கு இருவரும் பொருத்தமானவர்கள்.  சிவனும் விஷ்ணுவும் ஒன்று அவர்களைப் பிரித்துப் பேசுபவர்கள் வாய் புழுத்துச் சாவர் என்று பாடிய சிவவாக்கியர் அவர்கள் இருவருக்கும் பொருந்தும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியது அதிசயமில்லையே! இவ்வார்த்தை சிவவாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒரே மனிதரோ என்ற சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது.

Sunday, 2 February 2014

96. Namacivaya in the body

Verse 96
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துளே

Translation:
With na as the two legs, ma as the stomach,
ci as the two shoulders, the superior va as the mouth,
ya as the two eyes, that which remained truthfully so,
As supreme object in the subtle body, everything remained within the five-lettered                                                                                                                                           Civayam.
Commentary:
This verse is a form of the Ultimate Reality with na-ma-ci-va-ya being its body parts.  This verse reflects Tirumular’s Tirumandiram verse 941,
ஆகின்ற பாதமும் அந்தவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் அவ்வியல் பாமே
The letters na are the legs, ma is the stomach, va as the mouth, ci as the shoulders and ya as the two eyes. In the muladhara cakra na represents earth element, ma- the water, ci- the fire, va- the air, and ya the space element.  The body constituted by the mantra ci-va-ya-na-ma is called mandira meni (mantra body) in Siddha literature. 


இப்பாடல் நமசிவாய எவ்வாறு உடலில் பல பகுதிகளில் காணப்படுகிறது என்கிறது.  ந கால்களாகவும் ம வயிறாகவும் வ வாயாகவும் சி தோளாகவும் ய இரு கண்களாகவும் உள்ளன.  ந பூமியாகவும் ம நீராகவும் சி நெருப்பாகவும் வ காற்றாகவும் ய வெளியாகவும் உடலில் காணப்படுகின்றன.  இத்தகைய உடல் மந்திர மேனி எனப்படுகிறது.

Saturday, 1 February 2014

95. How omkara is born

Verse 95
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத்து இருத்தினால்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

Translation:                               
The mantra that occurred from avvu as as a and u.
For the experts of letters who know this, no seven births here,
If the mantra that occurred from cavvu is retained in the suṣumna
It is Civayam that remained as a, u and m.

Commentary:
The three lettered mantra aum represents the Ultimate Reality.  The mantra is split as a that represents the divine, u that represents the limited soul and m that represents maya or the pāsam.  All these three letters merge in the single letter a as they all occurred from the divine.  For those who are experts of letters, for those who are experts of mantra and their significances, if they know this principle there is no more samsara. 

All these mantras represent the nāda or the primordial sound from which the manifested universe took a form.  This nāda emerged from spanda or the active form of the divine.  This capacity to be ‘operative’ or ‘operational’ is represented by the letter ca.  Thus, aum emerged from cavvu .   Cavvu is the letter of Śiva.  Civavākkiyar says that if this mantra, cavvu is contemplated on then the Divine remains within as aum the Ultimate Reality.   



     இந்தப்பாடல் ஓங்காரத்தை விளக்குகிறது.  அவ்வு என்னும் எழுத்து பரம்பொருளைக் குறிக்கும்.  அதிலிருந்து அகாரமும் உகாரமும் பிறக்கின்றன. அ என்பது பரம்பொருளின் செயலற்ற நிலையையும் உகாரம் செயல்புரியும் நிலையையும் குறிக்கின்றன.  இதை உணர்ந்தவருக்கு மறுபிறவி இல்லை என்று சிவவாக்கியர் கூறுகிறார்.  சவ்விலிருந்து பிறப்பது சி.  இது சிவனின் எழுத்து.  இந்த எழுத்து அக்னியைக் குறிக்கும்.  குண்டலினி அக்னியை பரவுணர்வு என்ற தற்பரத்தில் நிறுத்தினால் அதுவே ஓங்காரமாக அ, உ, ம என்னும் எழுத்தாக பரமாத்மா, ஜீவாத்மா மாயை என்ற மூன்றாக உலகம் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கிறது.