Saturday, 25 January 2014

89. Prana is the Siva and Sakti

Verse 89
தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்து நின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே!

Translation:
It is only the vital air that bowed and stood worshipping Thillai
Is that which holds monopoly, remaining beyond boundaries,
In the heavenly space that is beyond boundaries,
It remains merged within the body as white and red.

Commentary:
The vayu or vital air that is referred to here is the prāṇa.  At the end of kundalini yoga the praṇa reaches the sahasrara, referred to as thillai, and remains there respectfully.  It then goes beyond this point and reaches the dvadasantha or the place over the sahasrara which is referred to as “going beyond the boundary”.   In the body the prana remains as Siva, the white color, the action-less state and as Sakti, the red color and the active state thus animating it.
 
White and red also represent the qualities, sattva (indicated by white) and rajas (indicated by red). 


இங்கு வாயு என்று குறிப்பிடப்படுவது பிராணனே.  அந்த பிராணன்தான் குண்டலினி யோகத்தின் முடிவில் தில்லை எனப்படும் சஹஸ்ராரத்தை வணங்கி அதன் அருகில் நிற்கிறது. இடை, பிங்கலை எனப்படும் இரு நாடிகளிலும் ஓடும் பிராணன் சுஷும்னா நாடியில் ஏகபோகமாக ஓடுகிறது.  அவ்வாறு சஹஸ்ராரத்தை அடைந்த பிராணன் அதனைக் கடந்து த்வாதசாந்தம் எனப்படும் சஹஸ்ராரத்தின் மேலே இருக்கும் இடத்தை அடைகிறது.  இதையே சிவவாக்கியர் வாயு எல்லையைக் கடந்து போவதாகக் குறிப்பிடுகிறார்.  இந்தப் பிராணனே உடலில் சிவனாக, வெண்மை நிறமாக, சத்துவ குணமாக, செயலற்ற மோன நிலையாகவும் சக்தியாக, சிவப்பு நிறமாக, ரஜோ குணமாக, செயல்புரியும் நிலையாக வும்விளங்குகிறது.  

Friday, 24 January 2014

88. Role of prana, why it is a dragon fly

Verse 88
நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லிரேல்
அன்பர்கோயில் காணலாம் அகலும் எண்திசைக்களே
தும்பிஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!

Translation:
The vital air that remain in the heart and flows closely,
If you are capable of holding it close remaining in a state of love,
You can see the beloved’s temple; the eight directions will vanish,
Dragonfly! Running repeatedly, utter the truth O Man!

Commentary:
The two airs or vayu, prana and apana flow in the heart. They are important for realization.  When these two airs are in balance in the body, then the yogin remains in a breath-free state, in the state of samadhi.  Civavākkiyar says that by remaining in that state an aspirant should be capable of holding the airs close to each other such that they intermix.  In that state, the kundalini śakti rises through the suṣumna nadi and reaches the sahasrara when the aspirant experiences the Ultimate Reality.  This is the temple of the Beloved that Civavākkiyar refers to in line three.  In this state, all polarities and manifestations such as night and day, good and bad, north and south will completely disappear. Civavākkiyar indicates this by saying that all the eight directions will disappear.  He addresses this verse to a dragonfly.  The sound that the breath makes during pranayama is like the humming of the bee.  Hence, this verse is actually talking to the prana.  The prana flows in and out (hence the bid to run twice in the verse) with the sound So Ham.  These two letters represent the Ultimate Reality, the Lord.  Thus, the prana is continually uttering the name of the Supreme while breathing.

            இதயத்தில் பிராணன் அபானன் என்று இரு வாயுக்கள் ஓடுகின்றன.  அவை இறையுணர்வைப் பெற முக்கியமானவை.  இந்த இரு வாயுக்களும் சமநிலையில் இருக்கும்போது ஒரு யோகி, மூச்சற்ற சமாதிநிலையை அனுபவிக்கிறார்.  இந்த இரு வாயுக்களையும் அருகருகே இருத்தினால் அவை கலக்கும் அந்த நிலையில் குண்டலினி சக்தி சுஷும்னா நாடியில் ஏறி சஹஸ்ராரத்தை அடைகிறது.  இதையே சிவவாக்கியர் கோயில் என்று குறிப்பிடுகிறார்.  இங்கு இரவு பகல் இல்லை, திசைகள் இல்லை எவ்வித இருமையும் இல்லை. 

தும்பியைக் குறித்துப் பாடப்படுவதாக உள்ள இப்பாடல் உண்மையில் பிராணனைக் குறித்தே பாடப்படுகிறது. பிராணாயாமத்தின்போது வெளியே சென்று உள்ளே வரும் பிராணனின் சத்தம் தும்பியின் ரீங்காரத்தைப் போல உள்ளது.  அது சோஹம் என்ற சத்தத்தை எழுப்புகிறது.  இவ்வாறு பிராணன் தனது உள்ளோட்டம் வெளியோட்டத்தின்போது இறைவனின் நாமத்தை உச்சரிக்கிறது.

87. How the Jiva enters and leaves the body

Verse  87
இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவு நாதம் உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமர்ந்ததே

Translation:
In the beautiful Thillai ambalam adorned by the Lord,
The next body adorned due to mind, is made up of the five,
Consuming the nada the fetus sloughs off through the nine apertures
One as another, within the millions it remained.

Commentary:
This verse talks about how births occur.  This world tillai ambalam was created by the Lord.  The second line can be interpreted in two ways.  The Lord, through his awareness, vimarsha according to Kashmir Saivism, takes many forms, that is, becomes the manifested world.  This could also mean that the limited souls take birth in this world due to their mind.  Birth and life experiences occur when one mentally associates with actions one performs.  Karma attaches to the limited due to its mental associations.  (If the soul performs the action with the clear idea that it is not the doer and enjoyer of the benefits of the action then it breaks this karmic attachment and thus future births).  The birth that occurs due to karma involves a body made up of the five elements.  Within this body the limited soul manifests as a form which occurs through nada or the primordial sound the first step in manifestation.  Having been born, the soul tires itself by going in and out of the nine apertures of two eyes, two ears, two nostrils, mouth, and apertures of excretion.  In this way the soul remains within millions of life forms in this world.


இப்பாடல் பிறவி எவ்வாறு ஏற்படுகிறது என்பதை விளக்குகிறது.  இறைவன் இவ்வுலகை, தில்லை அம்பலத்தைப் படைத்தான்.  தனது விழிப்புணர்வினால் அவன் பல்லுயிர்களாகினான். இதனை சிவவாக்கியர் அறிவினால் எடுத்த காயம் என்கிறார்.  மேலும், ஜீவன்கள் அனைத்தும் தனது அறிவினால் உணர்ந்து செய்யும் கர்ம வினைகளினால் பல பிறவிகளை எடுக்கின்றன என்றும் இதை விளக்கலாம்.  இந்த ஜீவனின் சரீரம் பஞ்ச பூதங்களால் ஆனது.  நாதமே இந்த சரீரத்தின் முதல் வெளிப்பாடு.  இத்தகைய சரீரத்தில் புகுந்த ஜீவன் ஒன்பது வாசல்களான கண், காது, மூக்கு, வாய், பிறப்புறுப்பு, கழிவுறுப்பு ஆகியவற்றின் மூலம் இந்த சரீரத்தை விட்டு விலகுகிறது.  ஞானம் பெற்ற ஒரு ஜீவன் மட்டுமே சஹாஸ்ராராதின் மூலம் உடலைவிட்டு வெளியேறுகிறது.  இவ்வாறு ஜீவன்கள் பல கோடி பிறவிகளை எடுத்து சம்சாரத்தில் உழல்கின்றன.

Thursday, 23 January 2014

86. Remaining under the skies

Verse 86                                                      
சோதிபாதி யாகிநின்று சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா
வீதியாக ஓடிவந்து விண்ணடியில் ஊடுபோய்
ஆதிநாதன் நாதன் என்று அனந்தகாலம் உள்ளதே

Translation:
Remaining with effulgence as half, with purity also occurring, 
The fully complete One reciting the untaught teaching,
Flowing as the path and reaching under the space and pervading it,
It remains as the Primal Lord, Lord since eternity.

Commentary:
The Ultimate Reality remains as one with and without a form.  Hence, Civavākkiyar says that the Lord has effulgence as half.  This part represents the formless form.  The other half is with a form.  The Ultimate Reality is complete purity.  It is the fully complete Guru who teaches the untaught teachings.  The wisdom the Ultimate Reality imparts is not textbook knowledge but practical spiritual experience.  For a yogin, upon breath control, the kundalini śakti flows through the six centers and reaches a spot twelve inches above the head called dvādasa sthānam. This is referred to in the third line.    The path mentioned is the track that the Kundalini śakti takes during its flow.  The space below ‘the sky’ is this dvādasa sthānam above the head.  The Kundalini śakti and the realization that ensues upon it reaching the site are all nothing but the Ultimate Reality.  This is the ‘Ādinathan’, the Lord who is the eternal, unique, primal One.


இறைவன் அருவமாகவும் ஒரு உருவுடனும் இருப்பவன்.  அதனால் சிவவாக்கியர் இறைவனை ஜோதி பாதியாக இருப்பவன் என்று கூறுகிறார்.  இது இறைவனின் அருவ நிலையைக் குறிக்கிறது.  இறைவன் தூய்மையே உருவானவன்.  புத்தியால் அறியும் அறியும் அறிவு கற்றுக்கொடுக்கப்படும் அறிவு. புத்தியால் படித்ததை மனத்தால் உணருவது, அனுபவத்தால் பெறும் அறிவு கற்றுக்கொடுக்கபடாத அறிவு. இறைவன் இந்த அறிவை ஆன்மீகத்தேடலையுடைவனுக்கு அருளுகிறார்.  மூன்றாம் வரி குண்டலினி யோகத்தைக் குறிக்கிறது.  வாசியைப் பயிலும் ஒரு யோகி தனது பிராணனை ஆறு ஆதாரங்களையும் தாண்டச் செய்து சஹாஸ்ராரத்துக்கு பன்னிரண்டு விரற்கடை மேலே இருக்கும் த்வாதச ஸ்தானத்துக்கு ஏற்றுகிறார்.  இதையே சிவவாக்கியர் விண்ணடி என்று குறிப்பிடுகிறார்.  அந்த இடத்தை அடைந்த ஒரு யோகி இறைநிலையை ஆதிநாதனை உணர்ந்தவராக சமாதி நிலையில் பலகாலம் இருக்கிறார்.

Wednesday, 22 January 2014

85. Pinnacle of kundalini yoga

Verse 85

பருகி ஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில்நின்மலம் அதாகுமே
உருகிஓடி எங்குமாய் ஓடும்ஜோதி தன்னுளே
கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே

Translation:
Drinking (ambrosia) running inside, contemplating the supreme space
That came flying inside, it will become flawlessness.
You will contemplate within the effulgence that melts and runs
Everywhere.  It will become the good cause for you.

Commentary:
This verse is a continuation of the previous one which talks about the nectar that flows from sahasrara.  In the above verse Civavākkiyar mentioned that burning one’s sins and raising one’s consciousness to sahasrara will confer downpour of the nectar.  When the aspirant consumes it the supreme space or veṭṭaveḷi comes inside him.  Then the aspirant contemplates on the all-pervading effulgence, the Supreme consciousness.  The Divine is the cause of everyone and everything.  The aspirant will realize this.


முந்தைய பாடலின் தொடர்ச்சியாக அமைந்த இப்பாடலில் சிவவாக்கியர் குண்டலினியின் உச்ச நிலையை விளக்குகிறார்.  குண்டலினி யோகத்தினால் ஒருவர் பிராணனை சகஸ்ராரத்துக்கு ஏற்றும்போது அங்கிருந்து அமிர்ததாரை என்னும் அமுத ஊற்று கீழிறங்குகிறது.  அதை பருகுபவர் இறவாநிலையைப் பெறுவதுடன் ஜ்ஞானம் பெறுகிறார்.  அதன் தொடர்ச்சியாக அவர் இறைவனின் உண்மைநிலையை அறிகிறார்.  வெட்டவெளி எனப்படும் பேரம்பலம் அவருள் புகுந்து தன்னை ஜோதியாக வெளிப்படுத்திக்கொள்கிறது. தனது குற்றமற்ற நிலையைக் காட்டுகிறது. தானே அனைத்துக்கும் காரணம் என்பதையும் அந்த யோகி அதன் காரியம் என்பதையும் காட்டுகிறது.  

Thursday, 4 July 2013

84. Like the oozing of honey....



Verse 84
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானம்உற்ற நெஞ்சகத்தில் வல்லதேதும் இல்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடங்கினால்
தேன் அகத்தின் ஊறல்போல தெளிந்ததே சிவாயமே

Translation:
Like the ash that arose from the burnt-down forest,
There is no evil in the heart that has wisdom,
If consciousness joins the effulgence that is pure,
It is civāyam which clarifies like the spring/oozing from the house of honey.

Commentary:
Realized souls are free from evil qualities like hatred, anger and desire.  Their austerities burn away all these evil qualities.  Civavākkiyar equates this to the ash that remains from a forest fire.  A fire in the forest occurs naturally.  No one tends it or puts it out.  It stops on its own accord.  The area it burns down is enormous.  Similarly, true realization burns down all that is bad in a person.  Its actions occur naturally and the bad qualities removed are countless.  The ash covers the fire which stays underneath for a while.  Similarly, the austerities wait for any evil quality to rise again so that it could also be destroyed. 

A soul that is free from evil qualities joins the Universal Consciousness.  At this stage, ambrosia that confers eternal life pours down from sahasrara cakra.  The sahasrara is referred to as the house of honey.  Honey oozes from the comb when it is full.  Here the state of fullness makes the ambrosia flow down.

     ஞானிகளிடம் பொறாமை, கோபம், ஆசை போன்ற தீய குணங்கள் இருப்பதில்லை.  அவர்களது சாதனை அந்த தீய குணங்களை எரித்துவிடுகிறது. சிவவாக்கியர் இதை காட்டுத்தீக்குப் பிறகு இருக்கும் சாம்பல் என்று கூறுகிறார்.  காட்டுத்தீ தானாக எழும்புகிறது. அதை ஒருவரும் மூட்டுவதில்லை, அணைப்பதில்லை.  அது எரிக்கும் பரப்பளவு மிகப்பெரியது.  அதன் சாம்பல் கீழே கனன்று கொண்டிருக்கும் தீயை மூடிக்கொண்டிருக்கும். அதேபோல் ஞானினியின் அனுஷ்டானங்கள் மீண்டும் எழும் தீயகுணங்களையும் எரித்துவிடும்.

      தீயகுணங்கள் இல்லாமல் இருக்கும் ஒரு ஆத்மா பரவுணர்வு பெற்றிருக்கும். அப்பொழுது சஹாஸ்ராரத்திலிருந்து அமிர்தம் கீழ்நோக்கி ஓடும்.  அந்த பூரணநிலை அமிர்த ஒழுக்கை ஏற்படுத்தும்.

Wednesday, 3 July 2013

83. Neelakanta nitya kalayana



Verse 83
பாடுகின்ற உம்பருக்கு ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கர்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே
நீடுசெம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே
நீலகண்ட காலகண்ட நித்தியகல் லியாணனே

Translation:
Contemplating on the dancing feet the otuvars* are singing,
Our Lord who created the faultless karmic group
Father, who dances in the golden arena,
Blue-throated, destroyer of Yama, the eternally auspicious One.

*otuvars- they are people employed in Saiva temples and monastries to recite sacred Tamil hymns.

Commentary:
This verse is in praise of the Lord Nataraja, the dancing form of Śiva.  The concept of Nataraja has been explained by several great souls.  The Dance of the Divine represents the eternal movement of the universe.  In Kashmir Saivism this concept is called spanda.  The universe set in motion by the dance starts the manifestation.  The circle of flames around Śiva represents energy in the purest form.  It is also the symbol of aum , the basic sound of creation.  The dwarf under Siva’s foot represents ignorance.  The drum in his hand represents nāda or the source of the audible universe. 
The blue throat of Siva represents change in the direction of flow of semen which confers realization.  This realization confers eternal life.  Hence, the Ultimate Reality is called the destroyer of Yama or Kāla, the limitation of time.
            The term “faultless karmic group’ in the second line indicates both, actions that do not have an associated fruit or group of great souls whose actions go beyond the cycle of karma and its fruit.  Such actions are called nishkama karma or actions performed without any attachment to the action, its benefit or the feeling of doership.

            இப்பாடலில் ஆடலரசனான நடராஜர் போற்றப்படுகிறார்.  நடராஜரின் தாண்டவம் பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.  அவரது நடனம் உலகின் இருப்பைக் குறிக்கின்றது.  காஷ்மீர் சைவத்தில் இது ஸ்பந்தா எனப்படுகிறது.  சிவனைச் சுற்றியுள்ள நெருப்பு தூய சக்தியைக் குறிக்கிறது.  அது ஓம் என்னும் முதலெழுத்தைக் குறிக்கும்.  இறைவனது காலடியில் இருக்கும் அசுரன் அறியாமையைக் குறிக்கிறான்.  அவரது கையிலுள்ள மத்தளம் நாதத்தையும் அவரது நீல கண்டம் ஞானத்தைத் தரும் விந்து மடைமாற்றத்தைக் குறிக்கும்.  இவ்வாறு நடராஜர் காலதகனம் செய்வது காட்டப்படுகிறது.  அதனால் அவர் யமனை அழித்தவர் என்று அழைக்கப்படுகிறார்.
     இரண்டாம் வரியிலுள்ள “பழுதிலாத கர்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே” என்பது குற்றமற்ற கர்மங்களையும் அத்தகைய கர்மங்களைச் செய்வர்களையும் குறிக்கும்.  பொதுவாக எந்த ஒரு கர்மமும் ஒரு பலனைக் கொடுக்கும். நற்கர்மங்கள் புண்ணியத்தையும் தீய கர்மங்கள் பாவத்தையும் தரும். ஆனால் நிஷ்காம கர்மம் என்பது பலனுடன் தொடர்பில்லாத கர்மம்.  அத்தகைய கர்மத்தைச் செய்பவர் தான் கர்மத்தைச் செய்கிறேன், அதன் பலனை அனுபவிக்கின்றேன், அந்த கர்மம் என்னுடையது என்ற எண்ணங்களைவிட்டுவிட்டு அக்கர்மத்தைச் செய்வார்.  அத்தகைய கர்மமே பழுதில்லாத கர்மம்.