Verse 116
இல்லைஇல்லை
என்றுநீர் இயம்புகின்ற
ஏழைகாள்,
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே
Translation:
The paupers
who are saying ‘not there, not there’,
That which
stood as ‘not there’ is it correct to say that it is not there,
That which
remained within both, ‘not there’ and ‘not one’,
Those who
found the frontier of this are not born again.
Commentary:
The
paupers or poor souls are atheists who are poor in knowledge, the ignorant
people. There say that there is no
God. In the second line, Civavākkiyar
says that the Absolute remains as ‘that which has nothing comparable to it or superior to it, it has nothing that
limits it’. He questions whether it is
correct to say that such an Absolute is illai or nonexistent. In the
third line he explains the nature of the Absolute; it is illai alla-
never non-existent. It is also onṛum
alla or ‘not that which can be pointed out as this one’. It is both
immanent and transient. It is not Siva or Sakti but a union of both. It is not inaction or action but contains both. It is present as the Jiva and the Isvara. It is kaḍa vuḷ- one that is beyond
everything and that which is inside everything. Civavākkiyar says that for those who have
recognized this limitless as well as the limited nature of the Absolute will
not be limited within a body any further; they will not have any further
births.
இறைவனை மறுக்கும் நாத்திகர்களை ஏழைகாள் என்று அழைக்கிறார்
சிவவாக்கியர். அவர்கள் இறைவனை இல்லை,
இல்லை என்கின்றனர். இரண்டாம் வரியில்
இல்லை என்ற சொல் இறைவனுக்கு ஒப்பும் உயர்வும் இல்லை, எல்லையில்லை என்று
குறிக்கிறது. இத்தகைய இறைவனை இல்லை
என்னலாகுமோ என்று சிவவாக்கியர் கேட்கிறார்.
மூன்றாவது வரியில் இறைவனின் தன்மையை விளக்குகிறார் அவர். இறைவன் இல்லை என்பது இல்லை. அவனை இதுதான் என்று
ஒரு பொருளாகவும் காட்டமுடியாது. அவன் சிவனுமல்ல, சக்தியுமல்ல, சிவனும் சக்தியும்,
இரண்டும், சேர்ந்த ஒன்று, உள்ளும் புறமும் என்ற இரண்டு இடத்திலும் இருப்பவன்,
செயலின்மை, செயல் புரிவது என்ற இரண்டு நிலைகளையும் கொண்டவன். அவனே ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டாகவும் இருப்பவன். இந்த உண்மையை
அறிந்துகொண்டவர்களுக்கு இனி பிறவி இல்லை என்கிறார் சிவவாக்கியர்.
No comments:
Post a Comment