Wednesday 29 January 2014

91. Sivavakkiyar's explanation of a, u, m

Verse 91
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!
                                               
Translation:
You became the seven worlds by the letter a
You remained with a form by the letter u
The entire world became delusional by the letter m
It is Civāyam that sits as a, u and m.

Commentary:

The letter a is the primary letter from which everything emerged.  Upanishads say that this letter indicates the Ultimate Reality’s jagat kāranatva or the role as the Universal Cause.  Civavākkiyar says that all the seven worlds, bhu,bhuvaha, suvaha, mahaha, tapaha, janaha and satyam emerged from this letter.  Some works say that these seven worlds are present in the body from navel to the crown as seven stages.  Similarly the seven hells are present in the body from navel to the sole of the foot.  These seven worlds also represent the seven states of consciousness that the soul passes through during its ascendence.  While the consciousness is brought to the mundane level through attachment and desire it goes through the seven hells.

The letter u represents the manifested universe.  This letter represents the Jiva and the material universe.  Hence, this letter is said to be the origin of everything that has a form.

The letter m represents maya or the illusory power of the divine.  It is only due to maya that the world appears as it is.  It is only due to maya that we forget our true nature as divine.  Civavākkiyar confirms this view in the third line.

The letters a u and m put together form the primal sound aum .  This is the sound from which the universes emerged.  Civavākkiyar concludes this verse by saying that it is the ‘Civāyam’ that is the aum, the cause of the manifested Universe.  It is the Civāyam that remains as everything.  It is the Ultimate Reality.   

Please refer to the book nandikesakasika that have uploaded at www.scribd.com for further explanation.

அ என்னும் அகாரம் பரபிரம்மத்தைக் குறிக்கும்.  இதிலிருந்தே உலகமனைத்தும் தோன்றின.  இவ்வெழுத்து ஜகத் காரணத்துவத்தைக் குறிக்கும் என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன.  சிவவாக்கியர் இவ்வெழுத்திலிருந்து ஏழு உலகங்களான பூ, புவர், சுவர், மகர், தப லோகம், ஜன லோகம், சத்தியலோகம் என்ற ஏழு உலகங்களும் தோன்றின என்று கூறுகின்றார். சில நூல்கள் அவை தொப்புளிலிருந்து தலையுச்சி வரை ஒவ்வொரு நிலையாக உள்ளன என்று கூறுகின்றன.  அதே போல் ஏழு நரகங்களும் தொப்புளிலிருந்து கால் வரை ஏழு நிலைகளாக உள்ளன. இந்த ஏழு உலகங்களும் ஏழு உணர்வு நிலைகளைக் குறிக்கின்றன என்றொரு விளக்கமும் உள்ளது. ஜீவாத்மா தனது விழிப்புணர்வில் முன்னேறும்போது இவற்றை ஒவ்வொரு நிலையாகக் கடக்கிறது.  அதேபோல் பாச பந்தங்களில் சிக்கி விழிப்புணர்வை கீழ் நோக்கித் திருப்பும்போது இந்த ஏழு நரகங்களையும் அடைகிறது. 

உகாரம் எனப்படும் உ என்னும் எழுத்து பரபிரம்மம் ஒரு உருவை எடுப்பதைக் குறிக்கிறது.  எ அதனால் எ என்பதை சிவன் என்றும் உ என்பதை சக்தி என்றும் குறிக்கும் வழக்கம் உள்ளது.

மகாரம் எனப்படும் ம மாயை அல்லது பரபிரம்மத்தின் படைப்புச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இச்சக்தி பரபிரம்மத்தை விட வேறுபட்டதல்ல.  இதனால் உலகமும் ஜீவன்களும் தோன்றுகின்றன. 
   
இவ்வெழுத்துக்களை நந்திகேஸ்வரர் தனது நந்திகேஸ்வர காசிகா என்னும் நூலில் விளக்கியுள்ளார்.  அவை சிவனின் தாண்டவத்தின் முடிவில் அவரது மத்தளத்திலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றன.  மேலும் விளக்கங்களுக்கு www.scribd.com என்னும் தளத்தில் நான் பதித்துள்ள புத்தகத்தில் காணவும். 

இவ்வாறு அ, உ, ம என்னும் எழுத்துக்களிலிருந்து ஓம் என்னும் பிரணவம் தோன்றியது அது பரபிரம்மதையும் அதன் வெளிப்பாடாக உள்ள இவ்வுலகத்தையும் குறிக்கிறது.

No comments:

Post a Comment