Verse
130
காலைமாலை
நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.
Translation:
The
blind, stupid people who bathe submerging in water in the morn and eve,
What
will the toad that remains in the water day and night attain?
Waking
up early in the morning and through one of the three eyes,
If
you contemplate the Origin then liberation will be attained.
Commentary:
The
verse is another example of Civavakkiyar’s satire. In a previous verse, he has riduculed people
who claim that they are pure when they bathe and questioned what purity
is. Here he makes fun of those who
bathe in sacred waters or even generally bathe in the morning and evening
claiming that they are pure and hence deserve liberation. He jokingly asks such people that if they
claim that they will attain liberation by bathing so, what will a toad that
remains in the water all the time attain.
Isn’t it more deserving of liberation if all the qualification required
for liberation is bathing in the morning and evening?
In
this connection one is reminded of one of the verses of Kalin. He says that if bathing in the Ganga ensures
liberation, then the fish that live permanently in Ganges are more appropriate
candidates for liberation than once in a lifetime bathers are.
Civavakkiyar
does not leave us with only the ridicule but with a practical suggestion for
liberation. He says that one should get
up early in the morning and through the eye of discrimination/knowledge, the
third eye, we should contemplate on the Absolute. Only this will grant us liberation.
The
third eye is popular not only in the Eastern traditions but also in several
Western traditions. The third eye, also
known as inner eye, refers to the ajna cakra in the middle of the
eyebrows. It is considered as the gate
that leads one to higher conscious states.
It symbolizes enlightenment, a state of non-dualistic perspective. In the Western traditions the third eye is
localized in the pineal gland. This
point helps in establishing contact with the cerebrospinal nervous system which
gives a person the faculty of perception in the higher worlds. This connection and knowledge are under the
control of the person’s will because it is connected with the voluntary nervous
system.
In
the Christian teachings, the third eye is referred to in the Book of
Revelations, which is seen as a work describing the kundalini and its
progression upwards. Several meditation
schools such as Zen, Chinese martial arts, Taoism and Aikido use the third eye
in their meditation practices. In the
Jewish Kabbalah tradition, the third eye is attributed to Chokmah or
wisdom.
Rising
early has been recommended in both the yoga tradition as well as several health
systems such as ayurveda. The time
between 4 AM and 5.30 AM is called the Brahma muhurta or the time
of Gods. Waking up at this time for sadhana
is highly recommended.
இப்பாடல் சிவவாக்கியரின் கிண்டலுக்கு மற்றொரு
எடுத்துக்காட்டு. முந்தைய பாடலில் அவர்
சதா குளித்துவிட்டுத் தான் தூய்மையானவராக இருக்கிறோம் என்று சொல்லும் மக்களைக்
கேலி செய்தார். இங்கு காலையும் மாலையும்
நீராடி தான் மிக மடியாக இருக்கிறோம் என்று கூறும் மக்களைத் தாக்குகிறார். அவ்வாறு தினமும் இருவேளையும் நீரில் குளித்தால்
மட்டும் ஞானம் வந்துவிடும் என்று ஒருவர் கூறினால் போழுதுமுழுவதும் நீரிலேயே
கிடக்கும் தேரை எத்தகைய உயர்ந்த கதியை அடையும் என்று அவர் கிண்டல் செய்கிறார். இந்த மக்களை விட அந்தத் தேரை மோட்சத்துக்கு அருகதையானது
அல்லவா என்று அவர் கேட்கிறார்.
இந்த இடத்தில் காலின் என்ற புலவரின் வரிகள் நினைவுக்கு
வருகின்றன. அவர் கங்கையில் குளிப்பது
மோட்சத்தை அளிக்கும் என்றால் அந்த கங்கையிலேயே வாழும் மீனே மோட்சம் பெறுவதற்குத்
தகுதி வாய்ந்தது என்று கூறுகிறார்.
சிவவாக்கியர் கிண்டலோடு நிறுத்திவிடவில்லை நாம் என்ன
செய்யவேண்டும் என்றும் கூறுகிறார். ஒருவர்
காலையில் விடியலில் எழுந்து தனது மூன்றாம் கண்ணான விவேகத்தைக் கொண்டு பரம்பொருளை
நினைக்கவேண்டும். இது மட்டுமே ஒருவருக்கு
மோட்சத்தை அளிக்கும் என்கிறார் அவர்.
மூன்றாம் கண் என்பது கீழைய சம்பிரதாயங்களில் மட்டுமல்லாமல்
மேலைநாடுகளிலும் பிரபலமானது. மூன்றாம் கண்
எனப்படும் ஆக்ஞா விழிப்புணர்வின் உயர் நிலைக்கு ஒரு வழி, கதவு எனப்படுகிறது. இது ஞானம் அல்லது இரண்டற்ற நோக்கைத் தருகிறது. மேலை நாடுகளில் மூலையில் உள்ள ஒரு பகுதி
மூன்றாம் கண்ணாகக் கருதப்படுகிறது. இந்த
ஆக்கினையை அடைவது ஒருவரது கட்டுப்பாட்டில் உள்ளது. கிறித்துவ மதத்தில் இந்த
மூன்றாம் கண்ணைப் பற்றி ‘புக் ஆப் ரெவலேஷன்’ என்பதில் காணப்படுகிறது. ஜென், தாவோயிசம், ஐகிடோ போன்றவற்றில் உள்ள
தியானப் பயிற்சிகள் இந்த மூன்றாம் கண்ணை பயன்படுத்துகின்றன. யூத மதத்தில் இந்த மூன்றாம் கண் சோக்மாக்
அல்லது ஞானம் என்று கருதப்படுகிறது.
விடியற்காலை நான்கு முதல் ஐந்தரை மணி வரை பிரம்ம
முகூர்த்தம் எனப்படுகிறது. இந்த நேரம்
ஆன்மீகப் பயிற்சிகளுக்கு ஏற்றது என்று யோக நூல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment