Verse 129
சாவதான
தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்?
மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்?
மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.
Translation:
The mutes
who do casual rituals of philosophy!
Will the
Divine become a stone? What else can I
do but to laugh (at you)?
The
three-eyed one, the primal effulgence that cannot be comprehended by the Triad,
He will
remain merged within you as protection, You will see!
Commentary:
In
the previous verse, Civavākkiyar denigrates those who spin yarn and recite
mantras aimlessly. In this verse, he is
disparaging those who perform rituals casually without understanding their
significance. Such people argue that God
lives only in stone images found in temples and other places of worship. Civavākkiyar is so tickled by their stupidity
that he feels like laughing at them. The
Lord, the fully complete wisdom (represented by his third eye-the eye of
wisdom), the one who is beyond the comprehension of even the triad of Brahma,
Viṣṇu and Rudra, the primal emergence, the shoot from which the entire universe
sprouts, is really in us. The Absolute
is the protection that remains merged within us. Only those with right knowledge will be able
to see this phenomenon. Civavākkiyar urges people to see that the Lord is
within us and not in the stone images we worship.
இப்பாடல் சிவவாக்கியரின் பொய்மையைப் பொராமை என்ற குணத்துக்கு
எடுத்துக்காட்டு. முந்தைய பாடலில் பூணூல்
அணிந்து பொருள்புரியாமல் மந்திரம் சொல்லும் மக்களைச் சாடிய சிவவாக்கியர் இப்பாடலில்
பூஜைகளையும் புனஸ்காரங்களையும் பொருள் புரியாமல் வெறும் சடங்காக செய்பவரைப்
பற்றிக் கூறுகிறார். கல்லாலான
இறையுருவுக்கு அபிஷேகங்கள் செய்து அத்துடன் தமது கடமை முடிந்தது தாம் ஞானம்
பெற்றுவிடுவோம் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
“தேவர் கல் ஆவாரோ? இதைக் கண்டு
சிரிக்காமல் என்ன செய்வது?” என்று சிவவாக்கியர் கேலி செய்கிறார். மூவர் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்திரன்
என்னும் மும்மூர்த்திகளைக் குறிக்கும்.
முக்கண்ணன் என்பது பொதுவாக சிவனைக் குறித்தாலும் அது மூன்றாம் கண்ணான
விவேகத்தை, பரவுணர்வை, ஒருமை நிலையை உணர்ந்த, இதுதான் என்று அறுதியிட்டுக்
கூறமுடியாத குணத்தை உடையவனான, ஜோதியான இறைவனையே குறிக்கும். இந்த இறைவன் அனைத்துக்கும் காவலாக உள்ளான். இதை
மக்கள் கண்டுணர வேண்டும் என்று சிவவாக்கியர் உபதேசிக்கிறார்.
No comments:
Post a Comment