Monday, 2 February 2015

131. Are there two gods?

Verse 131
எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.

Translation:
Are there two Gods, as yours and ours?
Can there be two Gods, here and there?
Isn’t it One God who remains as everywhere/everything?
Those who speak such evil words will die with their mouths putrefying.

Commentary:

People constantly fight about the supremacy of their God as if there are many Gods.  Civavākkiyar ridicules this stupidity by affirming there is only one God who is omnipresent.  Arguing and fighting over whose God is better will only breed hatred and other bad qualities.  People who indulge in such deplorable arguments will ultimately be destroyed.

எனது கடவுள்தான் உயர்ந்தவர் என்று மக்கள் சண்டைபிடிப்பதை சிவவாக்கியர் இப்பாடலில் கண்டிக்கிறார்.  ஒருவனே இறைவன், ஆதி மூர்த்தி என்றால் இங்கு ஒருவன் அங்கு ஒருவன் என்று இருக்க முடியுமா என்று சிவவாக்கியர் கேட்கிறார்.  அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் வாய் புழுத்துச் சாவர் என்று அவர் கூறுகிறார். 

No comments:

Post a Comment