Tuesday, 18 March 2014

111. Sivavakkiyar explains Siddha advaita, pantheism, evolution and the nature of a liberated soul

Verse 111
ஆதியானது ஒன்றுமே அநேகஅநேக ரூபமாய்
சாதிபேத மாய்எழுந்து சர்வசீவன் ஆனபின்
ஆதியோடு இருந்துமீண்டு எழுந்துசென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே

Translation:   
It is the primordial one that appears as many forms.
After becoming all the life-forms belonging to different categories
After returning from being with the primordial one and taking a birth
Will remain as pure, effulgent and wise.

Commentary:
This very interesting verse encapsulates several important philosophical concepts within it.  The primordial Absolute becomes different life-forms and remains as them in this world.  Through this statement, Civavākkiyar explains the concept of advaita and pantheism where everything is none other than the divine.  However, he does not subscribe to the maya vada, which says that this world is mitya or fallacy while only the Divine is true.  He says that the primordial exists as this world and hence, this world, which emerged from the ultimate truth, the Absolute, is as real as the Absolute.  This doctrine may be termed as Siddha-advaita, the advaita philosophy of the Siddhas as distinct from Śankaras advaita.  This is similar to the tenets of Kashmir Śaivism, which states that this world is as real as the Absolute.

In the second line, Civavakkiyar states that he evolved through various life forms.  This supports the modern theory of evolution where lives go from lower forms to higher during their evolution. The soul gains wisdom during this process that propels it towards higher births.

In the third line, Civavākkiyar seems to be putting out another interesting concept.  Here he says that he remaining with the Absolute, came out of such an association and took up a birth.  He does not say that he was the Divine who was born as various life-forms.  He does not say that he remained the ādi. This line leads to the conclusion that the limited soul is subtly different from the Universal soul.  It remains with the universal soul during the time intermediate between births and returns to the world as and when its karma directs it so.  Saints describe this intermediate gap as the resting time that the Lord, out of his mercy, is granting to the Jiva that has suffered immensely due to the birth it just completed.

The last line describes a realized soul.  Such a soul gets the divya deha or the body of light.  Here Civavākkiyar says that he will become the effulgent wise.  He also says that he will be purity.  He becomes so as he is free from any association with karma. It is karma that makes a soul have blemishes such as false knowledge, wrong attitude etc.

இப்பாடல் பல முக்கியமான கருத்துக்களைக் கூறுகிறது.  அனைத்துக்கும் ஆதியான பரம்பொருள் இவ்வுலகமாக இருக்கிறது. இதுவே அத்வைதம் இதுவே இயற்கை யாவும் இறையுருவே என்னும் கோட்பாடு.  உலகமே பொய் என்னும் மாயாவாதத்தை இவ்வரி பெய்ப்பிக்கிறது.  இறைவன் உண்மை என்பதால் அவனிலிருந்து தோன்றும் உலகமும் உண்மையே.  இதுவே சித்த அத்வைதம் எனப்படும்.  இது சங்கரரின் அத்வைதத்தைவிட வேறானது. 

            இரண்டாம் வரியில் சிவவாக்கியர் தான் பல்வேறு உயிர்களாகப் பிறந்து இப்பொழுது மனிதப் பிறவியை எடுத்ததாகக் கூறுகிறார்.  இது அறிவியல் தத்துவமான பரிணாமக் கோட்பாட்டைக் குறிக்கிறது.  இந்த பயணத்தின் மூலம் ஆத்மா மேலும் அறிவு பெற்று உயர் பிறவிகளை எடுக்கிறது.

            மூன்றாம் வரியில் சிவவாக்கியர் மற்றொரு முக்கிய கருத்தைக் கூறுகிறார். தான் பரம்பொருளுடன் இருந்ததாகவும் அத்தொடர்பு முடிந்து தான் இப்பிறவியை எடுத்ததாகவும் கூறுகிறார்.  அவர், தானே பரம்பொருளாக இருந்ததாக, பல்லுயிராகப் பிறந்ததாகக் கூறவில்லை! இது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு சூட்சுமமான வித்தியாசம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.  இருபிறவிகளுக்கு இடைப்பட்ட பொழுதில்  ஜீவாத்மா பரமாத்மாவுடன் இருக்கிறது.  அதன் பிறகு அதன் கர்மத்துக்கு ஏற்றபடி மறுபிறவியைப் பெறுகிறது.  ஆன்றோர் இந்த இடைப்பட்ட பொழுதை ஜீவன் கொடுமையான பிறவியை எடுத்து அனுபவித்த துன்பத்திலிருந்து ஒய்வு பெறுவதற்கான நேரமாக இறைவன் தனது கருணையால் அருளுகிறான் என்று கூறுகின்றனர். 


இப்பாடலின் கடைசி வரியில் சிவவாக்கியர் முக்தாத்மாவை விளக்குகிறார்.  அத்தகைய ஒரு ஆத்மா திவ்ய தேகத்தை, ஒளி தேகத்தைப் பெறுகிறது.  சிவவாக்கியர் தானும் அத்தகைய ஞானம் பெற்ற ஆத்மாவாவேன், தூய்மையாவேன் என்று கூறுகிறார். அப்போது அவருக்கு கர்மத்துடன் எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை.  கர்மம் இல்லாததால் தவறான நோக்கு, தவறான அறிவு போன்ற குற்றங்களும் இல்லை.   

No comments:

Post a Comment