Verse 107
ஒளியதான
காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே
Translation:
In the
brilliant Kāśi, for all those who come and stay there,
Viśvanatha
who has space and effulgence as His body,
Along with
the lady of clarity, His consort, the protective mantra that he utters,
The simple
ambrosial name, Rama.
Commentary:
Among
the several mantras in our scriptures, Rama nama is called the tāraka
mantra. Tāraka means ‘one
that helps to cross’ and also ‘one that protects’. Rama nama helps one
to cross the ocean of samsara. Chanting Rama
nama is worshipping the divine in a specific form. It is similar to
chanting the pranava, aum, in worship of the divine in the
formless form. In yoga, rum is
the seed mantra of the manipuraka cakra. This cakra is responsible for
radiating prana through the body.
By reciting the mantra rum, the manipuraka cakra is
activated and is able to handle the flow of kundalini śakti. Also, Ra is associated with the solar
energy that flows through the right side of the human body; ma is
associated with the lunar energy that flows through the left side of the
body. By chanting rama, these two
energies are brought in balance thus conferring sound physical and mental
health.
The
word tāraka also means ‘star’. Rama
nama is the star that guides us through the worldly life. The story of the sacred place Kāśi mentions
that for those who are living in Kāśi, at the time of their death, Lord
Vishvanatha utters the Rama nama in their ears so that their souls will
cross the ocean of samsara.
The
city of Kāśi, is the most sacred place
for Hindus. It is considered as the
sacred image of the cosmos and the permanent earthly home of Lord Śiva.
According to the legends, it is here that Siva’s fiery liṅga of light
burst forth from the netherworlds, splitting open the earth and stood piercing
the highest of heavens. The city of Kāśi
of a radius of ten miles is itself considered as the liṅga with the
sacred circles or maṇḍala, the very embodiment of Lord Śiva
himself.
This
line can be interpretted in another way also.
The city of Kāśi represents the ajña cakra, the spot between our
eyebrows. Saint Vallalar says that a jyoti
or effulgence is present here. The ajña cakra is the brilliant city of
Kāśi. The ajña cakra is the locus
of the guru.
Viśvanāthan
means Lord of the Universe, the Absolute.
The Absolute, the ultimate guru, teaches the tāraka mantra, to
those who are capable of raising their kundalini śakti to this spot. The Absolute’s consort mentioned here is the
Kundalini śakti herself. She is the Manonmani
who provides mental clarity.
மந்திரங்களில் ராம நாமம்
தாரக மந்திரம் எனப்படுகிறது. தாரகம் என்றால் கடக்க உதவுவது, காப்பது என்று
பொருள். ராம நாமம் சம்சாரம் என்னும்
கடலைக் கடக்க உதவுகிறது. இது இறைவனை ஒரு
உருவில் வழிபடுவது. ஓம், என்று
உச்சரிப்பதைப் போன்றது. யோகத்தில் ரம்
என்பது மணிபூரக சக்கரத்தின் பீஜ மந்திரம்.
இம்மந்திரத்தால் அச்சக்கரம் விழித்தெழுந்து குன்டலினி சக்தியின் ஓட்டத்தைத்
தாங்கும் சக்தியைப் பெறுகிறது. ர என்பது
சூரிய சக்தி உடலின் வலப்புறத்தில் ஓடுவது. ம என்பது சந்திரனின் சக்தி உடலில்
இடப்புறம் ஓடுவது. ராம என்று
உச்சரிக்கும்போது நம் உடலின் இரு புறத்திலும் உள்ள சக்திகள் சமநிலையை அடைகின்றன.
நமக்கு உடல்நலமும் மன நலமும் ஏற்படுகின்றன.
தாரகம் என்னும் சொல்
நட்சத்திரம் என்றும் பொருள்படும். ராம நாமம் நமக்கு இகத்திலும் பரத்திலும் வழிகாட்டும்
துருவ நட்சத்திரமாகும். சிவவாக்கியர், காசியில் மங்கைப்பங்கனான விஸ்வநாதன்
அனைவருக்கும் அளிக்கும் தாரக மந்திரம் ராமநாமம் என்கிறார்.
காசி இந்துக்களுக்கு மிக
முக்கியமான இடம். இங்கு இறக்கும்
ஜீவன்களுக்கு சிவன் அவர்கள் காதில் ராமநாமத்தை ஜெபித்து மோட்சமளிப்பார் என்ற ஒரு
ஐதீகம் உண்டு. காசி நகரில் சிவன் ஜோதி
லிங்கமாக பூமியைப் பிளந்து தோன்றினார் என்றொரு ஐதீகமும் உண்டு.
காசி நகரைச் சுற்றி பத்துமைல் தூரம் ஒரு லிங்கமாக, ஒரு
மண்டலமாக, சிவனின் உருவாகக் கருதப்படுகிறது.
காசி என்பது ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கும். வள்ளலார், அங்கு பரம்பொருள் ஒளிவடிவில்
தோன்றுகிறது என்கிறார். இது குருவின்
ஸ்தானமாகும். இவ்வாறு ஆக்ஞையில் இருக்கும்
குரு ஒரு ஜீவனுக்கு ராம நாமம் என்னும் தாரக மந்திரத்தைக் கற்றுத் தருகிறார். இப்பாடலில் குறிப்பிடப்படும் மங்கை குண்டலினி
சக்தியாவாள். அவள் மனத்தெளிவைத் தரும் மனோன்மணியாவாள்.
No comments:
Post a Comment