2.2. பாங்கன் வினாதல்
சிறை வான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் எம் சிந்தையுள்ளும்உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோளுக்கு என் கொலாம் புகுந்து எய்தியதே (20)
பொருள்:
தலைவனே! வானத்தில் உள்ள நீரை (கங்கையைக்) சிறைசெய்த, கொண்ட தில்லை சிற்றம்பலத்துள்ளும் எனது சிந்தையுள்ளும் இருப்பவன் உறையும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த மதுரையில் அறிஞர் ஆராயும் இனிமையான தமிழின் துறைகளுள் நுழைந்தாயோ அல்லது ஏழிசையின் சூழலில் புகுந்தாயோ, எதனால் உனது உயர்ந்த வலிமையான தோள்கள் இந்த நிலையை எய்தின ?
தோழன், தலைவனிடம் அவன் உடல் ஏன் தளர்ந்தது என்று வினவுகிறான். ஆத்மா தத்போதத்திடம் முதலில் பேசுவதில்லை. தத்போதம்தான் ஆத்மாவை நெருங்கிப் பேசத் தொடங்குகிறது.
சிறை வான் புனல்- ஆகாயத்தையும் நீரையும் சிறை செய்தவர் தில்லை ஈசர். அல்லது வான் புனலான ஆகாய கங்கையைத் தனது சடையில் சிறை செய்தவர். கங்கை என்பது ஞானத்தின், கருணையின், சக்தியின் வெளிப்பாடு, அதை தனது சடையில் அடக்கி, சிறை செய்து, ஆத்மாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு, அதனால் ஆத்மாவுக்கு பாதிப்பு ஏற்படாத அளவு வெளிவிடுபவர் சிவன். அந்த கங்கை இருக்கும் பர ஆகாசத்தையும் பாசம், முற்றும் அறியாமை, திரிபு அறிவு ஆகியவற்றைக் கொண்ட ஆத்மாவின் சித்தத்தையும் ஒன்று போல எண்ணி உரைபவர் இறைவன். இது இறைவனின் அனைத்தையும் கடந்த ரூபத்தையும் பிண்டத்தில் அந்தராத்மாவாக இருக்கும் நிலையையும் குறிக்கிறது. இவ்வாறு இறைவன் கட-வுள் ஆக இருக்கிறார்.
அவர் இருக்கும் கூடலில் தமிழின் இரு பிரிவுகளான அகத்தையும் புறத்தையும் ஆய்ந்தாயாயோ, அல்லது ஏழிசை பாடலை, இசையை ஆய்ந்தாயா என்று தோழன் கேட்கிறான். இயல் அல்லது தமிழ் என்பது சொற்கள், வாக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்டது. இசைக்கு மொழியில்லை, சொற்கள் இல்லை. இவை இரண்டும் வாக்கின் கீழ்ப்பட்ட நிலைகள். சித்தத்தால் தொடக்கூடியவை. நாதத்தின் உயர் நிலை கங்கை, ஆத்மாவின் கரணங்களுக்கு அப்பாற்பட்டது.
கூடல் என்பது பொதுவாக, சங்ககால புலவர்கள் கூடிய இடம் என்பதால், மதுரையைக் குறிக்கும். இங்கு கூடல் என்பது நாடிகள் கூடும் இடம், மனமும் உடலும் ஆத்மாவும் கூடும் இடம், ஜீவன் சிவத்துடன் கூடும் இடம். அங்கு பொழிவது இனிமையான அமிழ்து. தமிழ் என்ற சொல்லை திரும்பத் திரும்ப சொன்னால் அமிழ்த்து என்று வரும். இந்த அமிர்தத்தை ஆராய்பவர்கள் முக்தாத்மாக்கள். இதுவே ஒளி பொருந்திய தமிழ்.
மதுரை விராட் புருஷனின் ஸ்தானமான துவாதசாந்தம். அங்கிருந்து அமிர்தம் பொழிகிறது. ஏழுவித ஒலிகள் எழுகின்றன. ஏழிசை- ஏழு சக்கரங்கள் எழுப்பும் ஓசை. கர்நாடக சங்கீதத்தில் உள்ள ஏழு ஸ்வரங்கள் ஏழு சக்கரங்களைச் சேர்ந்தவை. அந்த இசையை வழியாகக் கொண்ட யோகம் நாத யோகம் எனப்படுகிறது.
இசை, மனோலயத்தை ஏற்படுத்துகிறது. மனதை சிதற விடாமல் உள்ளொளியைப் பெருக்கிறது. தத்போதம் ஒளி ஒலியின் செயல்பாடுகளை, நாதம் பிந்து நிலைகளை அறிந்தது. அது அறிந்தவற்றில் உச்சமான போதம், நாத பிந்துக்களைப் பற்றிய ஞானம். ஆனால் புணர்ச்சி நிலை நாத பிந்துக்களைக் கடந்த நிலை, மனதைக் கடந்த நிலை. அதனால் மனதின் மூலம் செயல்படும் தத்போதத்தால் புணர்ச்சி நிலையை அறிய முடியாது. அதனால் தத்போதம் தான் அறிந்தவற்றில் உச்ச நிலைகளை இங்கே கூறுகிறது.
சக்கரங்களிலிருந்து நாதம், உணர்வு நிலைகள் எழுந்தால் உடல் மெலிந்து உள்ளொளி பெருகுகிறது. இசை என்பது காலத்தையும்,நாதத்தையும், கூடல் என்பது இடத்தையும், பிந்துவையும் குறிக்கின்றன.
ஆத்மா சக்கரங்களில் சுழன்று அல்லது உணர்ச்சிகளில் சுழன்று தனது நேரத்தை விரயம் செய்ததா அதனால் உடல் இளைத்ததா, உண்மையறிவு திரிதலாகிய மெலிவு எவ்வாறு விளைந்தது என்று தத்போதம் வினவுகிறது.
தலைவன் இயற்கைப் புணர்ச்சியில் வாக்கின் சக்தி நிலையில் இருந்தான். அதனால் அவனது ஞானம் பூரணமாக இருந்தது. ஆனால் இப்போது அவனது ஞானத்தில் குறைவு, மெலிவு, ஏற்பட்டுள்ளது. அதனால் அவன் பிரிந்திருக்கும் உணர்வு மற்றும் துயரம் ஆகியவற்றை அனுபவிக்கிறான். நீ சக்தி நிலையிலிருந்து ஒலி நிலைக்கோ சொற்கள் என்ற தாழ்ந்த நிலைக்கோ வந்துள்ளாயா அதனால் ஏற்பட்ட மெலிவா என்று தத்போதம் கேட்கிறது. தலைவன் தனது நிலையை சோதித்து அறிய இவ்வாறு தத்போதம் உதவுகிறது.
தத்போதம் ஆத்மாவுக்கு தடை அல்ல. அதன் நோக்கம் ஆத்மாவுக்கு நுண்மையாக உதவுவது, ஆத்மா காணத் தவறுவதை சூசிப்பது. தத்போதம் என்பதும் மலபரிபாகமுற்றது. இது ஆணவம் அல்ல. அது தலைவனின் உயிர் என்பதால் தலைவனின் தன்மைகளையுடையது.
ஐயமும் திரிபும் ஆணவத்தின் குறிகள். இவை மல வாசனையால் எழுகின்றன, ஆத்மா ஆணவ நிலைக்கு வந்துள்ளதா என்று தத்போதம் சோதித்துப்பார்க்க சொல்கிறது.
புகுதல்- தோழன் தலைவனிடம் தமிழினுள்ளும் இசையினுள்ளும் புகுந்தானா என்று வினவுகிறான். புகுதல் என்பது ஒன்றினுள் மூழ்கிவிடுவது. வெளியே நின்று பார்ப்பது அல்ல.
தத்போதம் மனதின் மூலம் ஆத்மாவின் இயல்பை உற்று நோக்கி உண்மை அறிவு திரிபு என்ற மெலிவு எவ்வாறு ஏற்பட்டது என்று வினவுகிறது.
தோள் மெலிவு- செயல்திறனில் குறைபாடு. ஆத்மா தான் செய்யவேண்டியவற்றை செய்யாமல் கவலையால் சோர்ந்து இருக்கிறது. அது தவறான பார்வையைக் கொண்டிருக்கிறதா, செய்ய வேண்டியவற்றை செய்யாமல் காலத்தை விரயம் செய்கிறதா என்று பார்க்கும்படு தத்போதம் நுண்மையாக உணர்த்துகிறது.
2.2 Friends questions
The one who resides in Tillai Citrambalam jailing the Akasha ganga and within my mind
In the assembly with high walls- did you enter the area/ghat of the sweet Tamil,
Or did you enter into the environment of beautiful music (seven sounds)?
Lord! Why did this happen to your shoulders that are like mountains?
Simple meaning:
Lord (hero), why did your shoulders become so weak? Is it because you engaged in examining the prose (Tamil) and poetry (music) in Madurai that has tall walls, the place of the one who resides in my mind and within the Tillai Chitrambalam that captures the waters from the sky.
The friend, Tatbodham or I consciousness asks this question to the soul, the hero. The soul does not communicate with its ego first, the ego approaches the soul.
Capturing the aerial waters- The Lord has contained the space and the water within it. He has tied the celestial river, Akasha Ganga in his matted hair. Ganga represents supreme wisdom, his mercy, manifestation of Shakti. The Lord releases this the water, wisdom, only to the extent the soul can handle it , without getting damaged. These two spaces, the sky and the soul’s chith represents the pure space and the space with the impurities-attachment, erroneous knowledge and ignorance. The Lord considers both these realms fit for his residence. This represent the Lord’s transcendent and immanent states.
The friend asks whether the hero stayed in his place, Koodal and examined Tamil-its two areas of aham (emotions) and puram (external to the soul) and music. Tamil represents prose with letters, words and sentences, music is pure sound. When the word Tamil is repeated it sounds as amizhdhu or nectar. Isai or music is pure sound, nadha. Isai also means harmony. Its supreme state is Ganga, beyond the soul’s instruments of knowledge.
Koodal refers to a meeting point, a merging point. Madurai was called koodal as poets and scholars assembled there during Sangam times. In the body the place where the nadis come together, the place where Jiva and Siva come together, the place where the mind, the body and the soul come together is the koodal.
When the word, Tamizh, is repeated, it sounds amizhdhu or amrit. The souls who examine this nectar are the muktas or liberated souls. Madurai represents the dvadasantha. Amrit and subtle sounds emerge from this locus. The word ‘Ezhisai’ means seven sounds or beautiful sound, music. The seven sounds are the vibrations of the seven states of consciousness. Carnatic music has seven svaras or notes that correspond to the seven chakras. Yoga of music or sound is nadha yoga. Thus, the friend is asking the hero whether he was performing sadhana to bring down the divine nectar, or practices involved in nadha yoga, the primordial sound.
When nadha or sound waves arise from the chakras the body becomes thin and inner light increases. Music represents time or nadha and koodal represents space or bindhu.
Tatbodham is asking whether the soul wasted its time roaming in principles represented by the chakras or emotions and is that why there is thinning of its capacity, its wisdom.
Music brings about mental focus while enhancing the light of consciousness. Tatbodham is aware of the nature of nadha and bindhu. Its extent of awareness stops here. However, the union is a state beyond nadha bindhu, beyond the mind. Tatbodhan which operates through the mind is incapable of knowing this state.
When nadha or sound waves arise from the chakras the body becomes thin and inner light increases. Music represents time or nadha and koodal represents space or bindhu.
Tatbodham is asking whether the soul wasted its time roaming in principles represented by the chakras or emotions and is that why there is thinning of its capacity, its wisdom.
During natural union the soul was in shakti state. His jnana was poorna or fully complete. Now, its jnana has reduced, thinned. Hence, it is experiencing sorrow and the feeling of separation. Tatbodham is asking the soul whether it descended from its shakti state to that of sound.
Tatbodham is not a hinderance to the soul. It helps the soul examine what it lacks. Like the soul the Tatbodham is also free from mala. So it is similar to the soul. Doubt and erroneous perception are signs of anava or egoity. Tatbodham is urging the soul to examine if it has come under anava’s control.
Entering- the friend asks whether the hero ‘entered’ into tamil or music. This refers to submerging oneself, not observing from outside. Tatbodham, through the mind, is looking at soul’s state and examines how a decrease in its bodham has occurred.
Thinning of shoulders- shoulders represent one’s capacity to perform a function, to act. This means the soul is not doing what is necessary but wasting its time worrying and feeling sorrow. Tatbodham is examining why it is so.
No comments:
Post a Comment