2. பாங்கர் கூட்டம்
தான் பெற்ற இறையுணர்வு உண்மைதான்,
அதை நிரந்தரமானதாக மாற்ற அருளின் உதவியுடன் முயற்சி செய்யவேண்டும்
என்று ஆத்மா உணர்கிறது. அந்த முடிவுக்கு முதல் எதிரியாக வருவது ஆத்மாவின் தத்போதம்
அல்லது “தான்” என்னும் உணர்வு.
தத்போதத்தை ஆத்மாவின் பாங்கன் என்று மாணிக்கவாசகர் அழைக்கிறார். ஆத்மாவின் தன்மையே
தத்போதத்தின் தன்மையாகவும் இருக்கிறது.
தத்போதம், தலைவன்
தலைவியுடன் சேருவதைப் பல விதங்களில் தடுக்கப் பார்க்கிறது ஏனெனில் தலைவன்
தலைவியுடன் சேர்ந்தால் தன்னுடன் சேரமாட்டான் என்பது அதற்கு தெரியும்.
சிவானுபவத்தை தனது அறிவால், தத்போதத்தால், காணலாம் என்று ஆத்மா முதலில்
எண்ணுகிறது. முடிவில் அது இயலாத செயல் என்பதை உணர்ந்து திருவருள் ஒன்றே தனக்கு உதவ
முடியும் என்று முடிவு செய்கிறது. அப்போது அதன் தத்போதம் அகல்கிறது.
2. Discussion with Friend
The soul understands that its previous divine experience was
real and to make it permanent it should seek Grace’s help and go forward with its
efforts. The primary obstacle it encounters in its path is its Tatbodham or I-consciousness.
Manikkavasakar personifies it as the hero’s friend. His nature reflects the
hero’s nature.
Tatbodham tries to prevent the soul from merging with the
Divine as it knows that when that happens the soul will not associate with it.
The soul thinks that it can attain Siva Anubhavam through its
effort, through Tatbodham or limited consciousness. In the end it realizes the
futility of the effort and concludes that only Divine Grace can help. At that point Tatbodham leaves it.
This section describes the conversation between the hero and
his friend and how the friend who was against the hero meeting the heroine
becomes a friend after realizing the hero’s resolution.
No comments:
Post a Comment