Friday 21 March 2014

112. Civavakkiyar wonders, "What maya is this?"

Verse 112
மலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந்து அடுத்ததும் விடுத்ததும்
புலன்கள்ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்றமாயம் என்னமாயம் ஈசனே

Translation:
The world blooming with the fully blossomed pollen/seed as the origin,
The bloomed world, getting delusional going to the next state, and leaving it,
Senses and sense organs losing their form and falling on the earth,
The magic of everything losing its identity, Oh Lord! What sort of a magic is this!

Commentary:
This verse can be interpreted in two ways- the Vedantic way and the yogic way.  If we consider the ideas of Vedanta, the Absolute is the root cause of the universe, the dhātu or the seed.  The manifested universe emerges from that origin.  The world is clouded by maya and other forms of ignorance.  Hence, it gets delusional about the truth.  It goes through the four yugas and finally dissolves into the Absolute (laya). The senses are said to have independent existence within this material world.  When a person leaves his material body and assumes the divya śarira, the senses remain in this world, waiting to be assigned to another Jiva.  During laya, as the senses are also of material origin they collapse into the world and dissolve along with it.

This verse can be interpreted in the yogic parlance as follows: For a yogin during the initial stages of his sādhana, the world remains as it is.  Upon ascending to other levels of consciousness, the world collapses and the yogin experiences the ‘beyond the beyond’.  Now, he does not need the material senses as he has divya cakshu or the divine senses.  The senses of material origin also collapse with the material world and lose their role, function as they are not needed anymore. This is the great magic that the Absolute enacts for a yogin who ascends to higher levels of consciousness.

The term dhatu means the seed as well as ‘that which enters into the formation of the body’.  Thus, the dhatu in the first line may mean the seven components plasma (rasa- tissue fluid consisting of lymph, blood plasma, breast milk and the menstrual fluid), blood (raktha), muscles (mamsa), fat (meda), bone (asthi), bone marrow (majja) and reproductive fluid (shukra).  All these together constitute a human body the microcosm.  The microcosm reflects the macrocosm or the universe.  The human form that came about so gets delusional due to maya.  Leaving the knowledge about its true nature it thinks it is perishable.  The five senses lose their function, become one with the world, with their organs losing their identity.  Civavakkiyar asks the Divine what sort of a maya is this which happens so.

இப்பாடலை வேதாந்தத்தின் அடிப்படையிலும் சித்த மார்க்க அடிப்படையிலும் விளக்கலாம்.  வேதாந்தத்தின் கருத்தாவது, பரமாத்மாவே இவ்வுலகிற்கு மூல வித்து, தாது.  அதிலிருந்துதான் இவ்வுலகம் தோன்றியது.  ஆனால் இந்த உலகம் தனது தோற்றத்தின் தன்மையை உணராது மாயையினால் சூழப்படுகிறது.  அது நான்கு யுகங்களைக் கடந்து முடிவில் பரம்பொருளுடன் ஒன்றுகிறது.  புலன்கள் ஒரு உயிரைவிட தனியான இருப்பைப் பெற்றிருப்பதாக வேதாந்தம் கூறுகிறது.  அதனால் உடல் அழியும்போது புலன்கள் பிரபஞ்சத்திற்குத் திருப்பி அளிக்கப்படுகின்றன.  மற்றொரு ஜீவன் தோன்றும்போது அதன் கருமத்துக்கு ஏற்ப இந்த புலன்கள் அந்த ஜீவனை அடைந்து அங்கு செயல்படுகின்றன.  பிரளயத்தின்போது அனைத்தும் பரம்பொருளுடன் ஒன்றும்போது இந்த புலன்களும் பரம்பொருளுடன் ஒன்றிவிடுகின்றன.

சித்தர்களின் மார்க்கத்தில் ஒரு யோகி தனது சாதனையைத் தொடங்கும்போது இந்த உலகம் நாம் காண்பதைப் போல அவருக்கும் தோற்றமளிக்கிறது.  அந்த யோகியின் விழிப்புணர்வு உயர்நிளைகளை அடையும்போது அவருக்கு புலன்கள் தேவைப்படுவதில்லை. அவர் திவ்ய க்ஷக்ஷு  எனப்படும்உடல்கடந்த புலன்களைப் பெறுகிறார்.  அப்போது அவரிடமிருந்த புலன்கள் தனது வேலையை இழந்து உலகுக்குக் திரும்பிவிடுகின்றன.  சிவவாக்கியர் இந்த அதிசய நிகழ்வை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.


தாது என்னும் சொல் “உடலை எடுக்க சேரும் பொருட்கள்’ என்றும் பொருள் படும்.  இவ்வுடல் தோன்ற ஏழு தாதுகள் தேவைப்படுகின்றன என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.  அவை ரசம், ரக்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்லம்.  இந்த ஏழும் சேர்ந்தே ஒரு உருவை எடுக்கிறது.  மூலாதாரத்தின்  மிருகமான ஐராவதம் ஏழு துதிக்கைகளைக் கொண்டதாகக் காட்டப்படுகிறது.  இந்த ஏழு துதிக்கைகள் ஏழு தாதுக்களைக் குறிக்கும். மூலாதாரத்தில் சேர்த்துவைக்கப்பட்ட கர்மங்கள் ஒருவரது உலகமாக விரிகிறது.  அவ்வாறு விரிந்த உலகில் ஜீவன், மாயையினால் மயக்கமுற்று, பல பிறவிகளை எடுத்தும் விடுத்தும் சுழல்கிறது. இவ்வாறு அதன் விழிப்புணர்வு கீழ்நிலைச் சக்கரங்களில் சுழலும்போது அதற்கு புலன்கள் தேவைப்படுகின்றன.  குண்டலினி யோகத்தினால் அந்த ஜீவன் தனது விழிப்புணர்வை மூலாதாரத்தை விட்டு மேலேற்றி உயர் விழிப்புணர்வு நிலையை அடைந்து தனக்கு இனி தேவைப்படாத புலன்களை விட்டுவிடுகிறது.  அப்போது அவரது புலன்கள் பூமியில் அதாவது மூலாதார சக்கரத்துக்குத் திரும்பிவிடுகின்றன.  இந்த மாயையை சிவவாக்கியர் இப்பாடலில்  வியக்கிறார்.

2 comments:

  1. What a Maya...The Dhatu Concept...Simple...yet Complex....

    Shivay Nama Aum...

    ReplyDelete