நூல் சிறப்பு
ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர்
ஆகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காம நூலது
என்பர்
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர்
இன்புலவோர்
சீரணங் காய சிற்றம்பலக் கோவையை
செப்பிடினே
பொருள்: திருக்கோவையாரை சொன்னால் வேதம்
ஓதும் அந்தணர் இந்த நூல் வேதத்தின் பொருள் என்பர், ஆகமத்தை
கடைப்பிடிக்கும் யோகியர் இது ஆகமத்தின் காரணம் என்பர். காமுகரோ இது சிற்றின்ப நூல் என்பர். தர்க்க
சாத்திரத்தில் வல்லவர் இது தர்க்க நூல் என்பர், புலவரோ
இது நற்சொற்களின் தொகுப்பு என்பர்.
அணங்கு- தேவமாது. இங்கு சக்தியைக்
குறிப்பதாகக் கொள்ளலாம். ஆர்+அணங்கு+ஆண் என்று இந்த சொல்லைப்
பிரித்தால், சிவசக்திகளைக் குறிப்பதைப்போல உள்ளது.
சிவபெருமானின் ஆணையின்படி இயற்றப்பட்ட
திருக்கோவையாரின் முக்கிய குறிக்கோள் எவ்வாறு ஜீவன் சிவனை அடைகிறது
என்பதை விளக்குவதே. இந்த நூல்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தோன்றும் என்று குறிப்பிடுவதன் நோக்கம், இலக்கு
ஒன்றானாலும் பாதைகள் பல என்பதைக் காட்டுவதே.
நமது புலன்கள் என்ற கருவிகள் காட்டும்
காட்சியைத்தான் நாம் உலகம் என்று பார்க்கிறோம். ஒருவரது
கருவிகளுக்கேற்ப அவருக்கு உலகம் ஒருவிதமாகக் காட்சியளிக்கிறது. அதேபோல்
இப்பாடல்கள் அந்தணருக்கு வேதமாக, யோகியருக்கு ஆகமமாக, காமுகருக்கு காம நூலாகவும் அவரவரது உணர்வு நிலைக்கேற்ப தோன்றுகிறது.
இந்த நிலையே சிற்றம்பலம் அல்லது சித்தின் வெளிப்பாடு என்று கூறப்படுகிறது. கருவிகளினால்
பெறும் உணர்வு நிலைகளைக் கடந்து பேரின்ப நிலையை அடைந்தவருக்கு இப்பாடல்கள்
சிவமாகவே தில்லைச் சிற்றம்பலமாகவே காட்சியளிக்கும் என்பது திண்ணம்.
Greatness of the
composition
The Vedics would say, see it is the Veda, the yogin would
say
The cause of Agama, the desirous would say it is a book of
physical pleasure
The logicians would say it is a book of logic, the sweet
poets would say it is book of words
When the beautiful Citrambala kovai is uttered.
If one recites the Thirukkovaiyar, Vedic scholars
will say that this text is the essence of the Vedas; Yogis who follow the
Agamas will claim that it is the cause of the Agamas; lovers will consider it a
book of sensual pleasures; logicians will perceive it as a treatise on logic;
and poets will regard it as a collection of refined verses.
The term "Anangu" refers to a divine
maiden, and here, it can be interpreted as Shakti. When the word is
split as "Aar + Anangu + Aan", it appears to refer to the
glorious Shiva Shakti.
Thirukkovaiyar, composed as per the command of Lord Shiva,
primarily aims to explain how the individual soul (Jīva) unites with Shiva.
The reason for stating that this work appears differently to different people
is to highlight that though the goal is one, the paths are many.
The world we perceive is merely a projection of information our
senses present. Just as the world appears differently to each person
based on their sensory perception, these verses too take on different meanings
depending on one’s state of mind. To a Vedic scholar, they resonate as
the Vedas; to a Yogi, as Agamas; to a lover, as a text of romance—each
experiencing the text according to their state of consciousness.
These states of perception are known as Chitrambara (the arena
of consciousness). However, one who transcends sensory-based experiences
and attains the supreme bliss (Perambalam or the great arena) then these
verses may appear as Shiva himself.
No comments:
Post a Comment