Verse 87
இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவு நாதம் உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமர்ந்ததே
Translation:
In the beautiful Thillai ambalam adorned by the
Lord,
The next body adorned due to mind, is made up of
the five,
Consuming the nada the fetus sloughs off through
the nine apertures
One as another, within the millions it remained.
Commentary:
This verse talks
about how births occur. This world
tillai ambalam was created by the Lord. The
second line can be interpreted in two ways.
The Lord, through his awareness, vimarsha according to Kashmir Saivism,
takes many forms, that is, becomes the manifested world. This could also mean that the limited souls
take birth in this world due to their mind.
Birth and life experiences occur when one mentally associates with actions
one performs. Karma attaches to the
limited due to its mental associations.
(If the soul performs the action with the clear idea that it is not the
doer and enjoyer of the benefits of the action then it breaks this karmic
attachment and thus future births). The
birth that occurs due to karma involves a body made up of the five
elements. Within this body the limited
soul manifests as a form which occurs through nada or the primordial sound the
first step in manifestation. Having been
born, the soul tires itself by going in and out of the nine apertures of two
eyes, two ears, two nostrils, mouth, and apertures of excretion. In this way the soul remains within millions
of life forms in this world.
இப்பாடல் பிறவி எவ்வாறு ஏற்படுகிறது என்பதை
விளக்குகிறது. இறைவன் இவ்வுலகை, தில்லை
அம்பலத்தைப் படைத்தான். தனது விழிப்புணர்வினால்
அவன் பல்லுயிர்களாகினான். இதனை சிவவாக்கியர் அறிவினால் எடுத்த காயம்
என்கிறார். மேலும், ஜீவன்கள் அனைத்தும்
தனது அறிவினால் உணர்ந்து செய்யும் கர்ம வினைகளினால் பல பிறவிகளை எடுக்கின்றன
என்றும் இதை விளக்கலாம். இந்த ஜீவனின்
சரீரம் பஞ்ச பூதங்களால் ஆனது. நாதமே இந்த
சரீரத்தின் முதல் வெளிப்பாடு. இத்தகைய
சரீரத்தில் புகுந்த ஜீவன் ஒன்பது வாசல்களான கண், காது, மூக்கு, வாய்,
பிறப்புறுப்பு, கழிவுறுப்பு ஆகியவற்றின் மூலம் இந்த சரீரத்தை விட்டு
விலகுகிறது. ஞானம் பெற்ற ஒரு ஜீவன்
மட்டுமே சஹாஸ்ராராதின் மூலம் உடலைவிட்டு வெளியேறுகிறது. இவ்வாறு ஜீவன்கள் பல கோடி பிறவிகளை எடுத்து
சம்சாரத்தில் உழல்கின்றன.
No comments:
Post a Comment