Thursday, 30 January 2014

92. What are mantras?

Verse 92
மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்றுகாண்
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!

Translation:
Ye humans who are delusional by reciting mantra! 
Mantras are not secretions from a tree,
Stirring up the vital air is the mantra,
For those who have consumed this mantra, there is no death!

Commentary:
Mantras are said to confer various benefits to the people.  Hence, people seek them with great interest.  They recite them with so much fervor and get delusional as if they have consumed toddy.  They become delusional reciting them and by thinking about their benefits.  Civavākkiyar censures this wrongful understanding about mantras.

The true mantra is raising the prana through the sushumna nadi.  This is the only mantra effective to obtain any benefit.  Those who perfect this mantra will acquire both minor powers to get worldly benefits and ultimately to have realization dawn on them.  Hence, this is the only mantra that people should recite.  We see in the puranas that several engaged themselves in severe penances by uttering mantra to win deathlessness.  Sivavakkiyar dispels that belief saying that the only way to achieve deathlessness is by raising the prana through yoga.


மந்திரங்கள் பல்வேறு பலன்களை அளிக்கும் என்று நம்பி மக்கள் பல சடங்குகளைச் செய்கின்றனர்.  வாழ்க்கையின் பெரும் பகுதியை மந்திர உச்சாடனத்திலும் எளிய பலன்களைப் பெறுவதிலும் செலவழிக்கின்றனர்.  தமக்கு மந்திர உச்சாடனம் தெரியும் என்றும் தான் மிகவும் விசேஷமானவன், தன்னால் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்ற மயக்கத்திலும் கள் குடித்தவனைப் போல தம்மை இழந்துவிடுகின்றனர்.  மக்களின் இந்த மயக்கத்தைப் போக்க நினைக்கும் சிவவாக்கியர் மந்திரம் என்பது மரத்தில் ஊறும் கள் அல்ல, அது ஒருவருக்குள் இருக்கும் பிராணனை யோகத்தின் மூலம் மேலெழுப்புவதே என்று கூறுகிறார்.  இந்த ஒரு மந்திரம்தான் ஒருவருக்கு இறப்பின்மையைத் தரும் என்று கூறுகிறார்.  பலர் சாகாவரம் வேண்டி மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கடும் தவம் புரிந்தனர் என்று நாம் புராணங்களில் பார்க்கிறோம்.  இவையனைத்தும் தவறான வழிகள் என்று நமக்கு சிவவாக்கியர் விளக்குகிறார். 

No comments:

Post a Comment