Verse 93
என்னவென்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பண்ணுகின்ற செந்தமிழ்ப் பதம்கடந்த பண்பென
மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே!
Translation:
How can I define that which lacks defining
characteristics/grammar?
As the quality that is beyond the words of this
Tamil composition,
Like the lightning that occurs by itself and
contains with in the clouds,
The Lord and I, in my heart, it is never not there/
there is none other.
Commentary:
Ilakkaṇam means grammar, a defining character.
Civavākkiyar wonders how he can define the Ultimate Reality which is
beyond any defining character. He says
that the only way he can define It is by saying that it is beyond the words
with which this composition Civavākkiyam has been created. Upanishads define the Supreme as anivachaneeyam
that which is beyond verbal expression.
Taittiriya Upanishad says that the words returned along with the mind,
failing to reach the Ultimate Reality-yato vāco nivaratante aprāpya manasā
saha as the Ultimate Reality is beyond description.
Next, he
explains how and where the Ultimate Reality exists. Civavākkiyar takes the
example of a lightning. A lightning is
concealed within two clouds until they collide.
It occurs within the clouds and disappears in a split second. Similarly, the Ultimate Reality is concealed
within the human body. It emerges for a
flash of a second for us to perceive It.
The lightning
is concealed as the potential energy in the clouds. Similarly, the divine is concealed as the
potential energy within the Jiva. When
the lightning emerges, this energy is converted into electrical energy. In the Jiva when the divine emerges after
austerities, the jiva shines forth as the Divine itself. There is never a stage when the lightning
leaves the clouds. It is part of the
cloud, a quality of the cloud. However,
it is a separate entity. Similarly, the
divine never leaves the jiva, it is part of the Jiva, an invisible part of
Jiva.
இப்பாடல்
இறைவனின் நிர்குண நிலையையும் அந்தர்யாமி நிலையையும் விளக்குகிறது. இறைவன் இந்த உருவத்தை மட்டுமே உடையவன் அவனது
குணங்கள் இவைதான் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. இறைவனை அனைத்தையும்
கடந்தவன், இப்பாடல் புனைவதற்கு உதவிய வார்த்தைகள் உட்பட என்று வேண்டுமானால்
கூறலாம் என்கிறார் சிவவாக்கியர். பிரம்மம்
எல்லா விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டது என்று உபநிஷத்துகளும் கூறுகின்றன. அத்தகைய இறைவன் ஒருவருள் அந்தர்யாமியாக
இருக்கிறான். ஞானத்தைத் தேடுபவரின் உள்ளத்தில் அவன் மின்னல் போல பெரும் ஒளியுடன்
தோன்றி மறைகிறான். மின்னல் என்பது இரு
மேகங்கள் மோதுவதனால் ஏற்படுகிறது. இந்த
சக்தி மேகத்தினுள் மறைந்திருக்கிறது.
இறைவனும் அதே போல ஜீவனுள் சக்தியாக மறைந்திருக்கிறான். அவன் வெளிப்படும்போது அந்த ஜீவனும் இறைவனைப்
போல ஒளிர்கிறான். மின்னல் எப்போதும்
மேகத்தை விட்டுப் பிரிவதில்லை, மேகம் இல்லாவிட்டால் ஏற்படுவதில்லை. அவ்வாறே இறைவனும் ஜீவனை விட்டுப் பிரிவதில்லை,
அவனில் ஒரு பகுதியாக, கண்ணால் காணமுடியாத ஒன்றாக உறைகிறான்.
Lucid Explanation.Highly Appreciable..
ReplyDeleteThank you! Siddha's blessings!
ReplyDelete