Saturday, 25 January 2014

89. Prana is the Siva and Sakti

Verse 89
தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்து நின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே!

Translation:
It is only the vital air that bowed and stood worshipping Thillai
Is that which holds monopoly, remaining beyond boundaries,
In the heavenly space that is beyond boundaries,
It remains merged within the body as white and red.

Commentary:
The vayu or vital air that is referred to here is the prāṇa.  At the end of kundalini yoga the praṇa reaches the sahasrara, referred to as thillai, and remains there respectfully.  It then goes beyond this point and reaches the dvadasantha or the place over the sahasrara which is referred to as “going beyond the boundary”.   In the body the prana remains as Siva, the white color, the action-less state and as Sakti, the red color and the active state thus animating it.
 
White and red also represent the qualities, sattva (indicated by white) and rajas (indicated by red). 


இங்கு வாயு என்று குறிப்பிடப்படுவது பிராணனே.  அந்த பிராணன்தான் குண்டலினி யோகத்தின் முடிவில் தில்லை எனப்படும் சஹஸ்ராரத்தை வணங்கி அதன் அருகில் நிற்கிறது. இடை, பிங்கலை எனப்படும் இரு நாடிகளிலும் ஓடும் பிராணன் சுஷும்னா நாடியில் ஏகபோகமாக ஓடுகிறது.  அவ்வாறு சஹஸ்ராரத்தை அடைந்த பிராணன் அதனைக் கடந்து த்வாதசாந்தம் எனப்படும் சஹஸ்ராரத்தின் மேலே இருக்கும் இடத்தை அடைகிறது.  இதையே சிவவாக்கியர் வாயு எல்லையைக் கடந்து போவதாகக் குறிப்பிடுகிறார்.  இந்தப் பிராணனே உடலில் சிவனாக, வெண்மை நிறமாக, சத்துவ குணமாக, செயலற்ற மோன நிலையாகவும் சக்தியாக, சிவப்பு நிறமாக, ரஜோ குணமாக, செயல்புரியும் நிலையாக வும்விளங்குகிறது.  

No comments:

Post a Comment