Monday, 28 April 2014

129. Is the Divine a mere stone? I cannot help but laugh!

Verse 129
சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்?
மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.

Translation:
The mutes who do casual rituals of philosophy!
Will the Divine become a stone?  What else can I do but to laugh (at you)?
The three-eyed one, the primal effulgence that cannot be comprehended by the Triad,
He will remain merged within you as protection, You will see!

Commentary:
In the previous verse, Civavākkiyar denigrates those who spin yarn and recite mantras aimlessly.  In this verse, he is disparaging those who perform rituals casually without understanding their significance.  Such people argue that God lives only in stone images found in temples and other places of worship.  Civavākkiyar is so tickled by their stupidity that he feels like laughing at them.  The Lord, the fully complete wisdom (represented by his third eye-the eye of wisdom), the one who is beyond the comprehension of even the triad of Brahma, Viṣṇu and Rudra, the primal emergence, the shoot from which the entire universe sprouts, is really in us.  The Absolute is the protection that remains merged within us.  Only those with right knowledge will be able to see this phenomenon. Civavākkiyar urges people to see that the Lord is within us and not in the stone images we worship.


இப்பாடல் சிவவாக்கியரின் பொய்மையைப் பொராமை என்ற குணத்துக்கு எடுத்துக்காட்டு.  முந்தைய பாடலில் பூணூல் அணிந்து பொருள்புரியாமல் மந்திரம் சொல்லும் மக்களைச் சாடிய சிவவாக்கியர் இப்பாடலில் பூஜைகளையும் புனஸ்காரங்களையும் பொருள் புரியாமல் வெறும் சடங்காக செய்பவரைப் பற்றிக் கூறுகிறார்.  கல்லாலான இறையுருவுக்கு அபிஷேகங்கள் செய்து அத்துடன் தமது கடமை முடிந்தது தாம் ஞானம் பெற்றுவிடுவோம் என்று மக்கள் எண்ணுகின்றனர்.  “தேவர் கல் ஆவாரோ?  இதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது?” என்று சிவவாக்கியர் கேலி செய்கிறார்.  மூவர் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளைக் குறிக்கும்.  முக்கண்ணன் என்பது பொதுவாக சிவனைக் குறித்தாலும் அது மூன்றாம் கண்ணான விவேகத்தை, பரவுணர்வை, ஒருமை நிலையை உணர்ந்த, இதுதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத குணத்தை உடையவனான, ஜோதியான இறைவனையே குறிக்கும்.  இந்த இறைவன் அனைத்துக்கும் காவலாக உள்ளான். இதை மக்கள் கண்டுணர வேண்டும் என்று சிவவாக்கியர் உபதேசிக்கிறார். 

Saturday, 26 April 2014

128. Instead of spinning yarn blow the bellow!

Verse 128
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே!
துருத்திநூல் முறுக்கிவிட்டுத் துன்பம்நீங்க வல்லீரேல்
கருத்தில்நூல் கலைப்படும் காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயஅஞ்சு எழுத்துமே.

Translation:
Hey, People who spinning the cotton thread and recite wearily!
If you are able to remove misery by twisting the thread of the bellow
You will become aware of knowledge from great works, thread of time will become null
Correcting one and cutting the thread of worries is the five lettered civaya.

Commentary:
The first line may be addressed to those who wear the sacred thread made by spinning cotton.  They pride themselves that they are in a better position to attain liberation as they wear the sacred thread and recite mantras.  Instead of this, if they are able to practice pranayama by controlling air through this body, which is the bellow, all the great ancient knowledge, will become theirs.  They will go beyond the concept of time.  All this is possible through the five-lettered mantra ci-va-ya.  The five lettered ci va ya is actually ci va ya va ci.


இப்பாடலின் முதல் வரி பூணூல் அணியும் முக்குலத்தோரையும் குறித்து உள்ளது.  அவர்கள் தாம் பூணூல் அணிவதால், மந்திரங்களை உச்சரிக்கத் தகுதி பெற்றிருப்பதால் உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணுகின்றனர்.  ஆனால் அவர்கள் தங்கள் உடல் என்னும் துருத்தியில் மூச்சைக் கட்டுப்படுத்திச் செலுத்தும் முறையைக் கற்றுக்கொண்டால்தான் அவர்களுக்கு ஞானம் ஏற்படும். அவர்கள் காலத்தைக் கடந்து போக முடியும்.  இது சிவயவசி என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தால்தான் சாத்தியம் என்று சிவவாக்கியர் கூறுகிறார். 

Tuesday, 22 April 2014

127. Sounds heard during Kundalini yoga

Verse 127
வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்துபூசை பண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதிஅந்த மும்கடந்து அரியவீடு அடைவரே

Translation:
In the place where the four Vedas spread remaining as the water element
If the sacred feet are worshipped with devotion as the liṅga,
The trap in the ear will open cutting asunder everything. The wise
Will go beyond the beginning and end, to reach the supreme locus.

Commentary:
In the first two lines of the verse, Civavākkiyar states that the Absolute is present as the four Vedas, the five elements and as the liṅgaLiṅga is the formless form of the Divine.  Civavākkiyar advices that the yogin should worship this form with devotion.  When the meditation of that yogin becomes intense and the concentration is undiluted, then the yogin “hears” various subtle sounds.  Civavākkiyar refers to this by saying the “trap in the ear will open”. 

Tirumular lists ten sounds that the yogin hears in this process (Tirumandiram verses 606, 607).  They are: the sounds of bells, sea, elephants bleating, music of the flute, clapping of the thunderclouds, melody of the bees, call of the conch and the song of the musical instrument yāḻ. These are sounds emanating from the Absolute assuring the seeker that he is progressing in the right direction of contemplation.  At the end of these sounds is the nādāntha or the soundless state.  At this state the yogin experiences the Absolute.  He becomes jñāni, a realized soul.  Such a soul has gone beyond the beginning and the end; it has attained liberation.

             இப்பாடலில் சிவவாக்கியர் இறைவன் நான்கு வேதங்களாய், ஐம்பூதங்களாய் லிங்கமாய் இருக்கின்றான் என்றும் அவனது பாதத்தைப் போற்றித் தொழுதால் காதில் உள்ள கதவு திறக்கும் என்றும் அந்த நிலையை அடைந்த ஞானிகள் பிறப்பிறப்பற்ற அனைத்துக்கும் மூலமான அறிய வீடான பரவுணர்வை அடைவர் என்கிறார்.


            யோகத்தை மேற்கொள்பவர்கள் பல்வேறு ஓசைகளைக் கேட்பார் என்று திருமந்திரம் கூறுகிறது (மந்திரம் 606, 607) அவை: மணியோசை, கடலின் ஓசை, யானையின் பிளிறல், குழலோசை, இடிச்சத்தம், தேனீக்களின் ரீங்காரம், சங்கொலி, மற்றும் யாழின் ஓசை.  இந்த ஓசைகள் குண்டலினி சக்தி சக்கரங்களைக் கடக்கும்போது எழுகின்றன.  இவை அந்த யோகி சரியான பாதையில்தான் போகிறார் என்பதைக் காட்டிக்கொடுக்கின்றன.  இந்த ஓசைகளின் முடிவில் இருப்பது நாதாந்தம் அல்லது ஒலியற்ற நிலை.  இந்த நிலையில் அந்த யோகி இறைமையை உணருகிறார்.  அவர் அனைத்தையும் கடந்த ஞானியாகிறார்.  முதலும் முடிவுமற்ற பரநிலையை அடைகிறார்.

Sunday, 20 April 2014

126. The yogi's state of Sat chith ananda

Verse 126
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே?
ஆகலும் அழிதலும் அதன்கண்நேயம் ஆனபின்
சாகலும் பிறத்தலும் இல்லைஇல்லை இல்லையே!

Translation:
When two become one with samarasa,
Where is enjoyment and merging?
When creation and destruction become only love towards That,
There is no birth and death, never at all.

Commentary:
This verse seems to be a continuation of the previous verse that talks about the state of yogi who has attained the state of supreme consciousness.  In this state, the Jivatma and Paramatma are not two entities but one only, the supreme consciousness.  Hence there is no enjoyment of one by the other or merging of one within the other as there is only one entity.  It becomes the state of the self enjoying itself the sat chit ananda state.  All that remains is love, bliss.  Tirumular describes this state when he says ‘anbe sivam’ ‘love is god’.  This is not love for another but the enjoymet of one’s own state, the blissful state of self awarenenss, the citi mentioned in Kashmir Saivism.  This is the state of the Divine.  In this state creation becomes manifestation and destruction becomes dissolution.  The Divine is said to perform creation and dissolution of the universe in this state with chit sakti.  There is only “presence”, no death or birth.

முந்தைய பாடலில் கூறப்பட்ட ஒரு யோகியின் பரவுணர்வு நிலை இப்பாடலிலும் தொடருகிறது. இந்த நிலையில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாக சமரச நிலையில் இருக்கின்றனர்.  அப்போது இரு வஸ்துக்கள் இருப்பதில்லை. ஒரே வஸ்து, பரவுணர்வு மட்டுமே இருக்கிறது.  இதனால் ஒன்றை மற்றொன்று அனுபவிப்பதோ ஒன்றில் மற்றொன்று ஒன்றுவதோ ஏற்படுவதில்லை.  இதுவே சத் சித் ஆனந்த நிலை.  விழிப்புணர்வு தான் விழிப்புணர்வு பெற்றிருப்பதை அறிந்த ஆனந்த நிலை.  இறைமை இந்த நிலையில் படைப்பையும் லயத்தையும் செய்வதாக நூல்கள் கூறுகின்றன.  அனைத்தும் நேயமாக, அன்பாக இருக்கும் நிலையைத்தான் திருமூலர் ‘அன்பே சிவம்’ என்று காட்டினார்.  “ஆக்கலும் அழித்தலும்” இந்த நிலையில் இல்லை, “ஆகலும் அழிதலுமே” உள்ளன.   

பிறப்பும் இறப்பும் இல்லை விழிப்புணர்வுடன் கூடிய அன்பு மட்டுமே இருக்கிறது.  

Saturday, 19 April 2014

125. In the impregnable pit, in the legless pillar, in the room of fire....

Verse 125
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே!

Translation:
Can remain, can remain and can remain in this world,
Can remove the seven worlds of Hara, Hari and Brahma,
In the impregnable womb, in the legless pillar
You and I, O! Lord when the room of fire is opened.

Commentary:
The verse describes the state of existence of the Siddhas.  Through kundalini yoga the yogin raises his power through the suṣumna nadi, the pillar with no legs, the unsupported pillar, from the muladhara, the womb that is impregnable. 

When this happens, the path of the fire of kundalini, neruppaṛai opens; the power rises with full force through the nadi thereby arousing the consciousness of the aspirant to the highest level.  At this state, the yogin and the Absolute remain together as one unit.
A seasoned yogin who has perfected this method will remain in the world as a realized soul.  He will be able to travel through the seven worlds of Brahma, Viṣṇu and Śiva at will.  He can remove his manifested state represented by Brahma and Viṣṇu. He is not limited by time and space.                                       


             இந்தப்பாடல் ஒரு சித்தர் எவ்வாறு இந்த உலகில் வாழ்கிறார் என்று கூறுகிறது.  குருக்கொளாத குழி மூலாதாரம், காலில்லாத தூண்- அங்கிருந்து எழும் குண்டலினி அக்னி.  நெருப்பறை- குண்டலினி அக்னி பிழம்பாக ஒளிரும் சுழுமுனை நாடி.  ஒரு குண்டலினி யோகி தனது பயிற்சிகளின் மூலம் குண்டலினி சக்தியை சுழுமுனையில் ஒரு நெருப்புப் பிழம்பாக ஒளிரச் செய்யும்போது அவர் பிரமன், மால் மற்றும் ஹரன் வாழும் ஏழுலகங்களையும் விலக்கிவிடலாம்.  அதாவது, சாதாரண இருப்பை நீக்கிவிடலாம். அந்த யோகி இந்த உலகில் “இருந்தாலும் இருப்பதில்லை.”  காலம், தேசம், காரணம் கொண்ட இவ்வுலகினால் கட்டுபடுத்தப்படுவது இல்லை.

Friday, 18 April 2014

124. What we see is only "ourselves"- how?


Verse 124
மின்எழுந்து மின்பரந்து மின்ஒடுங்கு மாறுபோல்
என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுள்ளே அடங்குமே,
கண்ணுள்நின்ற கண்ணில்நேர் மைகண்அறி விலாமையால்
என்னுள்நின்ற வென்னையன்றி யான்அறிந்ததில்லையே! 

Translation:
Like the lightning that arises, spreads and abides,
The Lord who is in me reveals himself and remains within me,
Like the eye that does not know the image that falls on it,
I do not know anything other than myself who remains within me.

Commentary:
This verse explains how knowledge occurs.  However, before explaining the process let us look at the term caitanya.  There is no equivalent term in English for caitanya.  Consciousness comes close but it does not convey the exact meaning of this term.  Caitanya means ‘the Self as well as its nature of being awareness’.  Caitanya is a non-relational term that stands for both the Being and the Awareness. During the process of acquiring knowledge, the consciousness emerges, embraces the object of its cognition, realizes it and then goes back to its original state.  This whole process occurs within a flash of a second like the lightning.  Anything that has an existence is so only because it is ‘touched’ by the consciousness. 

 Consciousness with its complete awareness is the Absolute.   Civavākkiyar calls this caitanya as īśa who is within us.  Depending on the level of spiritual maturation of an aspirant, he is able to recognize, realize the presence and the glory of this consciousness.   However, while this process goes on continuously within us we are not aware of it.  It is like the eye that “sees” objects that fall on it but is not aware of it unless the brain and the mind process the image and give it a quality a nature.  Thus, all we see are the projections of our mind that carries with it our previous conditioning, our qualities and our likes-dislikes.  Hence, Civavākkiyar says that we are seeing nothing other than ‘ourselves’ , our consciousness with our mental modifications.

இந்தப் பாடல் ஞானம் எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறுகிறது.   இதைப் பற்றி அறிவதற்கு முன் சைதன்யம் என்றால் என்று பார்ப்போம்.  சைதன்யம் என்பதற்கு சரியான வேறு வார்த்தை இல்லை.  அதை விழிப்புணர்வும் இருப்பும் என்று வேண்டுமானால் கூறலாம். ஒன்றைப் பற்றிய அறிவு தோன்றும்போது நடைபெறும் படிகள் என்னவென்றால், சைதன்யம் அப்பொருளை அடைந்து அதைத் தழுவி அதைப் பற்றிய விழிப்புணர்வை நம்முள் ஏற்படுத்தி விட்டு  உடனே மறைந்துவிடுகிறது.  இந்த சைதன்யத்தால் தொடப்படாத எதுவும் இருப்பைப் பெறுவதில்லை. 
சிவவாக்கியர் இந்த சைதன்யத்தை ஈசன் என்கிறார்.  ஒருவர் எவ்வளவு ஆன்மீகத்தில் முன்னேறியிருக்கிறார் என்பதைப் பொருத்து இந்த சைதன்யத்தின் இருப்பை உணருகிறார்.  ஒரு பொருளைக் காணும்போது கண்ணின் காணும் தன்மை அந்தப் பொருளை அடைந்து அதைத் தொட்டுவிட்டு மீண்டும் கண்ணுக்குத் திரும்புகிறது.  ஆனால் நமது மூளை அப்பொருளைக் காட்சிப்படுத்தாவிட்டால் நம்மால் அப்பொருளைப் பார்க்க முடிவதில்லை.  இவ்வாறு நாம் “காணும்” யாவையும் நமது மூளை அதை எவ்வாறு நமக்குத் தோன்றச்செய்கிறது என்பதைப் பொறுத்தது.  அதனால் நாம் காணும் யாவையும் “நாமே” நமது சம்ஸ்காரங்களினால் ஏற்படும் தோற்றங்களே என்கிறார். 

Wednesday, 16 April 2014

123. Power of pranayama

Verse123
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளுநாளு முன்னிலொரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே!
             
Translation:
Merging the breath with the prana with awareness,
If this is established as the primary desire, daily
One can live eternally as a youth, can become Parabrahmam
This is true, I swear by the one who drank poison and the Mother!

Commentary:
Prānayama or breath control is an important tāntric practice.  Prana which is popularly thought as breath is really the life force that animates the body.  Breath is the air that comes in and goes out of the body.  From breath the essence, prana, is collected during respiration. Civavākkiyar says that the breath must be merged with the life force, prana.  Breath control should be practiced daily with this as the goal.  When this is achieved one lives eternally with youthfulness.  He will become the Supreme Being.  Civavākkiyar proclaims this as true by swearing on Śiva and Śakti.

One’s lifespan is not decided by how many years one lives in this world.  It is decided by how many breaths he is allowed to take in this world.  By practicing pranayama one is extending the length of breathing, reducing the number of breaths and thus lives long.  This can be explained scientifically also.  The oxygen we breathe in forms free radicals that break the DNA thereby reducing the functioning capacity.  When this breakage is reduced when the breath is held in during kumbaka, the destruction of the DNA is prevented or at least reduced.  This increases our lifespan.  The knowledge our ancient Siddhas possessed is truly amazing.

மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் என்பது தந்திரத்தில் மிக முக்கியமான சாதனையாகும்.  பிராணன் என்பது உண்மையில் மூச்சுக்காற்று மட்டுமல்ல அது மூச்சின் மூலம் உள்ளே வரும் பிராண சக்தியாகும்.  இந்த பிராணாயாமம் தினமும் மேற்கொள்ள வேண்டிய மூச்சுப்பயிற்சியாகும்.  பிராமணர்கள் செய்யும் சந்தியாவந்தனத்தில் பிராணாயாமம் ஒரு முக்கிய அங்கமாகும்.  இந்த மூச்சுப் பயிற்சியினால் ஒருவன் என்றும் இளமையுடன் வாழலாம்.  பரவுணர்வான பிரம்மமாகலாம் என்று சிவவாக்கியர் அறுதியிட்டுக் கூறுகிறார்.


ஒருவரது ஆயுட்காலம் என்பது அவர் எத்தனை வருடங்கள் வாழ்கிறார் என்பதைப் பொறுத்தது அல்ல அவருக்கு எத்தனை முறைகள் சுவாசிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது.  பிராணாயாமத்தினால் ஒருவரது சுவாசம் நீட்டிக்கிறது, அவரது ஆயுளும் அதிகரிக்கிறது.  அறிவியல் பூர்வமாகக் கூறவேண்டுமானால்  பிராணவாயு அல்லது ஆக்சிஜன் நமது DNA வை உடைக்கக் கூடியது.  இவ்வாறு நம்முள் ஜீன்கள் செயலிழக்கின்றன.  கும்பகப் பிராணாயாமத்தை மேற்கொள்ளும்போது இந்த உடைப்பு தடுக்கப்படுகிறது.  இவ்வாறு ஒருவரது ஜீன்கள் அதிக காலம் செயல் புரிகின்றன.  அதாவது அவரது ஆயுள் அதிகரிக்கிறது.

Monday, 14 April 2014

122. Being one with the Lord who merged with the eight measures/thoughts..

Verse 122
விண்கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்து புக்கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே!

Translation:
When the effulgence that is beyond the space, seeing it by opening the door on the top,
And remains merged within-for the eyes’ relish,
Forgetting the magic of birth of/in the world and maya/delusion
Remaining in harmony with the Lord who merged with the eight measures is true.

Commentary:
When aspirant prefects his yogic practices, the Divine grace enters his body through the sahasrara.  This is not a quiet, unconscious event.  The individual soul enjoys this occurrence with full consciousness.  At this stage, all forms and individualizations disappear.  The world ceases to exist in its current form and a new vision dawns; illusions and delusions disappear.  The aspirant is never born again.  He remains in harmony with the Absolute who entered his ‘eight measure’- body and merged within him. eṇ means both number as well as thoughts or eṇṇam.

ஒரு யோகி தனது சாதனைகளில் தேர்ச்சியுரும்போது இறையுணர்வு அவரது உடலினுள் சஹாஸ்ரார சக்கரத்தின் மூலம் நுழைகிறது.  அது சத்தமில்லாமல் ஒருவர் அறியாமல் ஏற்படும் உணர்வல்ல.  ஒரு ஜீவாத்மா இந்த உணர்வை முழு விழிப்புணர்வுடன் அனுபவிக்கிறது.  இந்த நிலையில் எல்லாவித இருமைகளும் மறைந்துவிடுகின்றன.  உலகம் முன்பு இருந்த நிலை மறைந்து புதிய காட்சிகள் புலப்படுகின்றன, மயக்கங்கள், கானல் நீர் போன்ற மாயத் தோற்றங்கள் மறைந்துவிடுகின்றன.  அந்த யோகி மீண்டும் பிறப்பதில்லை.  அவர் தனது எண்சாண் உடலினுள் புகுந்த இறைவனுடன் ஒன்றான நிலையில் இருக்கிறார்.   

எண் என்பது எட்டு என்றும் எண்ணம் என்றும் பொருள்படும்.  இறைவன் ஒருவரது எண்சாண் உடலினுள் புகுந்து அவரது எண்ணமாகிறான்.

Sunday, 13 April 2014

121. We cannot see the Lord within us because...

Verse 121
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தென்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே

Translation:
The true entity not comprehensible even by the Devas in the heavens,
My Lord of the South, who remains merged as the image in the eye,
Cutting that which causes birth in the world and adorning His flower-like feet,
 It is true that the Lord remains, lives within me.

Commentary:
Even though the eye sees things outside itself, it is not able to see the image that is present on it.  The Lord remains within us like the image.   We are not able to see the Lord as he is not a separate entity. 
Like the image, the Lord is a part of us but we are not aware of his presence.  The way to recognize the Absolute is to cut asunder all the worldly ties through discipline, detachment and careful practice and to hold only the Lord’s sacred feet as our prime goal.  Through this, we can recognize the presence of the Absolute who remains within us not as a lifeless image but as a living entity.

The term ninra tenpirān can be split as ninra ten pirān- the Lord of the southern direction, Dakshinamurthy or as ninratu enpirān who remained so, my Lord. 
The last line can be interpreted as ‘it is true that the Lord remains within me, lives within me’ and also as ‘the Lord remains within me, lives within me as the truth’.

கண்ணைக் கொண்டு நாம் வெளியில் உள்ள பொருட்களைப் பார்த்தாலும் நம்மால் நமது கண்ணையே பார்க்க முடிவதில்லை.  அதில் தோன்றும் காட்சியைப் பார்க்கமுடிவதில்லை.  இறைவனும் அவ்வாறே நம்மை விட ஒரு  தனியான, வேறுபட்ட வஸ்துவாக இல்லாததால் நம்மால் அவனைப் பார்க்க முடிவதில்லை.  அவனைக் காண்பதற்கு ஒரே வழி நாம் நமது உலகத்தளைகளை அறுத்துக்கொண்டு நம்மை அவனது மலரடியில் சமர்ப்பித்தால் அவன் நம்முள் வாழ்வது நமக்குப் புரிகிறது.  நமது இருப்பு அவனால்தான் என்பது தெளிவாகிறது.


"நின்ற தென்பிரான்" என்ற சொல்லை "நின்ற தென் பிரான்" என்று பிரித்தால் தென்திசைக்கு இறைவனான தட்சிணாமூர்த்தியைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.  அல்லது "நின்றது என் பிரான்" என்றால் எனது இறைவன் என்று பொருள் கொள்ளலாம்.  கடைசி வரிக்கு “அண்ணல் என்னுள் இருப்பது உண்மையே” என்றும் “அண்ணல் என்னுள் இருக்கிறான், உண்மையின் உருவில் இருக்கிறான்” என்றும் பொருள் கூறலாம்.  

Thursday, 10 April 2014

120. Short vowels are Siva and long vowels are Sakti

Verse 120
நெட்டெழுத்து வட்டமோ நிறைந்தவல்லி யோனியும்,
நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தின் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே

Translation:
The long letter, is it the circle, the fecund yoni?
I have not seen the circle added to the long vowel,
Short vowels when appropriate symbols are added become long letters (visibly),
Our Lord is not restricted by a circle of (or) the long letter.

Commentary:
The short vowels represent Śiva the male principle, the sun.  Long vowels represent Śakti, the female principle, the moon.  David Frawley in this book on Mantra Yoga writes that the short vowels represents the unbound pure being while the long vowels represent its expansion into space.  Thus, the short vowel upon modification with certain symbols in the front and back become the long vowel whereas there is no such modification in the long vowel.  Thus, it is Śiva, the short vowel becomes, upon modification, Śakti, the long vowel.  Hence, Civavākiyar says that the Lord is the origin that is not restricted by the circle, the yoni, a component of the long vowel.  This verse describes the Lord’s transcendent and immanent aspects.

Kombu is the symbol preceding the short letter and the kāl is the symbol that succeeds the short letter. For example:  (ka) + Kombu and kāl becomes கோ (kō)


குறில் அல்லது குற்றெழுத்து சிவனை, சூரியனைக் குறிக்கும். நெடில் சக்தியை, சந்திரனைக் குறிக்கும்.  குறிலின் வட்டத்திலிருந்து நெடில் தோன்றியது என்கிறார் சிவவாக்கியர்.  டேவிட் பிரௌலி என்னும் மேல்நாட்டு அறிஞர் தமது மந்திர யோகம் என்னும் புத்தகத்தில் குறில் என்பது எல்லையற்ற தூய ஆத்மாவையும் நெடில் என்பது பரவெளியில் அதன் விரிவையும் குறிக்கும் என்கிறார்.  இவ்வாறு ஒரு குறில் தன்னில் சில மாறுபாடுகள் சேர்க்கப்பட்டு நெடிலாகிறது.  ஒரு நெடில் அத்தகைய மாறுபாடுகளை அடைவதில்லை.  இவ்வாறு குறில் பிரகிருதியையும் நெடில் விக்ருதியையும் குறிக்கின்றன.  இவ்வாறு குறிலில் கொம்பைச் சேர்த்து நெடிலாக்கலாம் என்று கூறும் சிவவாக்கியர் இறைவன் குறிலின் வட்டத்தாலோ நெடிலாலோ வரையருக்கபடுபவன் அல்ல என்று முடிக்கிறார்.  

Wednesday, 9 April 2014

119. It will reach Siva and kill each other, it will reach Sakti and eat each other...

Verse 119
உயிருநன்மை யால்உடல் எடுத்துவந்து இருந்திடும்!
உயிர்உடம்பு ஒழிந்தபோது ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் மாயைஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்
உயிரும்சத்தி மாயைஆகி ஒன்றைஒன்று தின்னுமே

Translation:
Atma will take a body due to good karma and remain here,
When the body is destroyed, that which had a form will become formless,
Atma will become the maya of Śiva and kill each other
Atma will become Śakti’s maya and eat each other.

Commentary:
An unrealized atma will take a body that commensurates with its karma, good or bad, and come into this world.  Civavākkiyar says that being born in this world is good and not bad.  It is only because of good karma that we are born in this world as otherwise we will not get a chance to work out his karma.  This world is called karmabhumi or the playfield of actions. Some of the ancient works say that the Devas and Gandarvas are jealous of the mortals in the world as the Devas and Gandarvas can only enjoy the benefits of their karma, they cannot work out their karma unless they are born into this world again.
 When the body falls, the soul which had a form until then will become formless. The soul will then become the creative power of Śiva and kill its the previous existence, as limited form and become existence in another plane, the unlimited formless form.  The soul will become the creative power of Śakti, the active part of the Lord. It will kill/eat its previous active form and take up an inactive form.

தனது புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒரு ஆத்மா ஒரு உடலை எடுத்துக்கொண்டு இந்த உலகினுள் வருகின்றது.  இவ்வுலகில் பிறப்பது தீமையில்லை நன்மையே என்கிறார் சிவவாக்கியர் ஏனெனில் இவ்வுலகில் ஒரு பிறவியை எடுத்தால் தான் ஒருவரல்ல தனது கர்மத்தைத் தொலைக்க முடியும்,  அதனால்தான் இவ்வுலகம் கர்ம பூமி எனப்படுகிறது.  பல நூல்கள் தேவர்களும், கந்தர்வர்களும் இவ்வுலகில் உள்ளவர்களைக் கண்டு பொறாமைப் படுகின்றனர் ஏனென்றால் தமது புண்ணியத்தால் தேவ பதவியையும் கந்தர்வர்களாகவும் பிறவி எடுத்தவர்களால் தமது கர்மத்தின் பலனைத் தான் அனுபவிக்க முடியும் தமது கர்மத்தைக் கழிக்க முடியாது. 
இவ்வாறு தான் எடுத்த உடலைவிட்டு உயிர் நீங்கினால் அந்த உயிர் உருவ நிலையிலிருந்து அருவ நிலையை அடைகிறது.  அப்போது அது சிவனின் மாயையை, படைப்புச் சக்தியை அடைந்து தனது பழைய இருப்பை அழித்து புதிய இருப்பைப் பெறுகிறது.  அது சக்தியின் மாயையை அடைந்து தனது பழைய செயல்பாட்டுடன் கூடிய உருவைத் தின்று செயலற்ற அருவ உருவத்தைப் பெறுகிறது

Tuesday, 8 April 2014

118. Seek Rama nama as the ultimate locus is different from this world

Verse 118
நீடுபாரி லேபிறந்து நேமான காயந்தான்
வீடுவேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
நாடுராம ராமராம ராமமென்னும் நாமமே!

Translation:
The body that was born in the wide world
Will it seek physical pleasure when it is said that the destination is somewhere else?
Did the four Vedas teach this and spread all over the world?
Seek the name Rama, Rama, Rama, Rama.

Commentary:
The final destination of the soul is the Supreme Reality.  If this is made known to the limited soul that has grown fond of the body, will it seek physical pleasures through the body any further?  The four Vedas that have spread everywhere teach only this truth.  Hence, Civavākkiyar urges us to seek the divine name Rama.
As we mentioned before the mantra Rama removes the worldly attachments and grants liberation and eternal life.  Thus, Rama is the right mantra for a soul yearning for the truth.


இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனின் உண்மையான வீடு இந்த உலகமல்ல வேறொரு இடம் என்று அதற்குச் சொன்னால் அது இந்த உலகில் உள்ள இன்பங்களை நிலையானவை என்று தேடுமோ?  உலகில் பாடப்படும் நான்கு வேதங்களும் இதைத்தான் கூறுகின்றன. அதனால் உலகப் பற்றை விலக்கக் கூடிய ராம நாமத்தை தான் உயிர்கள் தேட வேண்டும் என்று சிவவாக்கியர் கூறுகிறார். 

Monday, 7 April 2014

117. Greatness of Rama nama

Verse 117
காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தஶ்ரீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.

Translation:
The akāra, ukāra, makāra, omkāra, the guardian since time immemorial
The blessed One who wars against ānavam, karma, maya and mental modifications,
For them to die, the auspicious one who pierced the seven trees with an arrow
It is the name, Rama.

Commentary:
This is a tricky verse to interpret.  Kāra is the added as suffix to creates words like akāra when added to a.  Civavākkiyar may have mentioned it four times to mean that the Lord is the akāra, ukāra, makāra and omkāra.   Kāra when transposed becomes rāka or rāgaRāga means desires.  The Lord stands as a watchful guardian and protects us from insignificant worldly desires and pursuits.  He, with his bow and arrow, fights a great battle with our faults. This battle is demonstrated in the episode of ‘Vāli vadam’ or decimation of Vāli in Ramayanam

Lord Rama, to prove to Sugriva, the monkey king that he can kill Vāli, pierced seven trees with a single arrow as a show of his might.  This episode may indicate kundalini śakti piercing the six cakras and the delusion of the soul of its limited nature and thus liberating it.

Sage Valmiki who was a hunter before, was advised by Sage Narada to chant the word Rama.  As Valmiki was an ignorant person, Narada asked him to tell the Sanskrit word for tree, which is marā.  Narada told Valmiki to repeat this word incessantly.  Even the mere chanting of marā instead of rāma granted Valmiki realization.
Civavākkiyar, a siddha mystic has used the term ‘rāma’ four times to express this experience of bliss.

Commentators say that Lord's name is more beneficial than even his presence.  Rama's presence did not save Sita from Ravana's clutches but Rama nama made the monkeys cross the mighty ocean.  

இப்பாடல் பொருள் கூறுவதற்குச் சற்று கடினமானது.  கார என்ற தொடரை வார்த்தைகளின் முன் சேர்த்து சிவவாக்கியர் அகார, உகார என்ற சொற்களைப் பற்றிப் பேசுகிறார்.  முதல் வரியில் அவர் நான்கு முறைகள் கார என்று கூறுயுள்ளார்.  அவை அகார, உகார, மகார, ஓங்காரங்களைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.  கார என்பதைத் திருப்பிப் போட்டால் ராக என்று வருகிறது.  ராகம் என்றால் ஆசை, விருப்பம்.  இறைவன் நம்மை உலக வாழ்க்கையில் ஏற்படும் ராக துவேஷங்களிலிருந்து காவல் காக்கிறான்.  தனது வில்லையும் அம்பையும் கொண்டு நமது தீய குணங்களுடன் போராடுகிறான்.  இதுவே ராமாயணத்தில் வாலி வதமாகக் காட்டப்படுகிறது.

குரங்குகளின் அரசனான சுக்கிரீவனுக்கு, தன்னால் வாலியைக் கொல்ல முடியும் என்று காட்ட விரும்பிய ராமர் தனது அம்பினால் ஏழு மரங்களைத் துளைத்தார்.  இந்த ஏழு மரங்கள் ஏழு சக்கரங்களைக் குறிக்கும்.  அவற்றைத் துளைப்பது என்பது குண்டலினி சக்தி அவற்றை ஊடுருவிப் பாய்வதைக் குறிக்கும். இது ஜீவனின் மிருகக் குணங்களைக் கொன்று அவனுள் இருக்கும் வாலியைக் கொன்று, அவனை இறையருளைப் பெறுவதற்குத் தகுதியானவனாக, சுக்ரீவனாக, மாற்றுகிறது.


ஒரு வேடனாக இருந்த வால்மீகிக்கு நாரதர் ராம நாமத்தின் மகிமையைக் கூறி அதை ஜபம் செய்யுமாறு பரிந்துரைத்தார்.  ஆனால் வால்மீகியால் அதைக் கூற முடியவில்லை என்றபோது அவரை மரம் என்று பொருள் படும் மார என்று கூறுமாறு சொன்னார். இந்த ஜபத்தினால் வால்மீகிக்கு ஞானம் கிட்டியது.  இந்த ராம நாமத்தின் இன்பத்தை, மகிமையை சிவவாக்கியர் நான்கு முறை ராம என்று கூறுவதன் மூலம் நமக்குக் காட்டுகிறார். ராம நாமத்தில் ரா என்பது அக்னி பீஜம், அது நமது பாபங்களை எரிக்கிறது.  ம என்பது அமிர்த பீஜம். அது நமக்கு எல்லா நன்மைகளையும் அருளுகிறது.  இவ்வாறு ராம நாம ஜபம் நமது பாவங்களை சுட்டெரித்து நமக்கு எல்லா நன்மைகளையும் அருளுகிறது. 

உபந்யாசகர்கள் ராமனின் இருப்பைவிட அவனது பெயர் சக்தி வாய்ந்தது என்று கூறுவார்.  இராமனின் இருப்பு சீதையை ராவணனிடமிருந்து காக்கவில்லை.  ஆனால் ராம நாமம் குரங்குகளை மிகப் பெரிய சமுத்திரத்தைக் கடக்கச் செய்தது!

Sunday, 6 April 2014

116. 'not there' is not there!

Verse 116
இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்,
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே

Translation:
The paupers who are saying ‘not there, not there’,
That which stood as ‘not there’ is it correct to say that it is not there,
That which remained within both, ‘not there’ and ‘not one’,
Those who found the frontier of this are not born again.

Commentary:
The paupers or poor souls are atheists who are poor in knowledge, the ignorant people.  There say that there is no God.  In the second line, Civavākkiyar says that the Absolute remains as ‘that which has nothing comparable to it or superior to it, it has   nothing that limits it’.  He questions whether it is correct to say that such an Absolute is illai or nonexistent. In the third line he explains the nature of the Absolute; it is illai alla- never non-existent.  It is also onṛum alla or ‘not that which can be pointed out as this one’. It is both immanent and transient. It is not Siva or Sakti but a union of both.  It is not inaction or action but contains both.  It is present as the Jiva and the Isvara.  It is kaḍa vuḷ- one that is beyond everything and that which is inside everything.   Civavākkiyar says that for those who have recognized this limitless as well as the limited nature of the Absolute will not be limited within a body any further; they will not have any further births.


     இறைவனை மறுக்கும் நாத்திகர்களை ஏழைகாள் என்று அழைக்கிறார் சிவவாக்கியர்.  அவர்கள் இறைவனை இல்லை, இல்லை என்கின்றனர்.  இரண்டாம் வரியில் இல்லை என்ற சொல் இறைவனுக்கு ஒப்பும் உயர்வும் இல்லை, எல்லையில்லை என்று குறிக்கிறது.  இத்தகைய இறைவனை இல்லை என்னலாகுமோ என்று சிவவாக்கியர் கேட்கிறார்.  மூன்றாவது வரியில் இறைவனின் தன்மையை விளக்குகிறார் அவர்.  இறைவன் இல்லை என்பது இல்லை. அவனை இதுதான் என்று ஒரு பொருளாகவும் காட்டமுடியாது. அவன் சிவனுமல்ல, சக்தியுமல்ல, சிவனும் சக்தியும், இரண்டும், சேர்ந்த ஒன்று, உள்ளும் புறமும் என்ற இரண்டு இடத்திலும் இருப்பவன், செயலின்மை, செயல் புரிவது என்ற இரண்டு நிலைகளையும் கொண்டவன். அவனே ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டாகவும் இருப்பவன்.  இந்த உண்மையை அறிந்துகொண்டவர்களுக்கு இனி பிறவி இல்லை என்கிறார் சிவவாக்கியர். 

Thursday, 3 April 2014

115. The Great magic

Verse 115
நாவில்நூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார்.

Translation:
With speech getting destroyed, physical identities getting destroyed,
With questioning mind getting destroyed, discrimination decreasing,
Oh sinners! What is this magic? With entrance into realm,
When the spirit abides, all the five will also abide.

Commentary:
This verse describes the phenomenon that occurs when a yogin raises his prana to sahasrara.  All the senses leave him.  Sivavaakkiyar refers to this as all the works (words) on the tongue are destroyed.  One’s identity as belonging to this clan or this family is destroyed, that is, one’s bodily identities are lost.  The questioning mind is destroyed.  All the five pranas merge within each other and reach the “northern country”, the zone above the sahasrara.  The day when the spirit dies down the ‘fives’ will also abide.  That is, the five senses of knowledge, the five senses of action, the five elements,their five subtle qualities, the five vital breaths and the five sheaths, all abide when the soul leaves the body thus. Sivavaakkiyar calls this as the great magic.


ஒரு யோகி, குண்டலினி யோகத்தின் மூலம் தனது பிராணனை வடநாடான சஹஸ்ராரத்துக்கு ஏற்றும்போது எல்லாவித அடையாளங்களும் அழிந்து அவர் சிவலோகம் புகுகிறார்.  அதையே சிவவாக்கியர் இப்பாடலில் விளக்குகிறார்.  முதலில் அவரது புலன்கள் அடங்குகின்றன.  சிவவாக்கியர் அதை நாவில் நூல்கள் அழிந்தன என்கிறார்.  அதன் பின் ஒருவரது உடல் சார்ந்த அடையாளங்களான குலம் கோத்திரம் போன்றவை அழிகின்றன.  அதனை அடுத்து கேள்வி கேட்கும் மனமும் அடங்குகிறது.  இவ்வாறு பிராணன் வாம நாடான, வடநாடான சஹஸ்ராரத்தை அடையும்போது, ஆவியார் உடலை விட்டுப் பிரிகிறார்.  ஐவரான புலன்கள், பொறிகள், பூதங்கள்,அவற்றின் தன்மாத்திரங்கள், ஐவகைக் கோசங்கள், பஞ்சபிராணன்கள் ஆகிய அனைவரும் அப்போது அடங்குகின்றனர்.  இதை மிகப்பெரிய மாயம் என்று சிவவாக்கியர் வியக்கிறார்.