Verse 120
நெட்டெழுத்து
வட்டமோ நிறைந்தவல்லி
யோனியும்,
நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தின் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே
நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்றதொன்றும் கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தின் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே
Translation:
The long
letter, is it the circle, the fecund yoni?
I have not
seen the circle added to the long vowel,
Short vowels
when appropriate symbols are added become long letters (visibly),
Our Lord is
not restricted by a circle of (or) the long letter.
Commentary:
The
short vowels represent Śiva the male principle, the sun. Long vowels represent Śakti, the female
principle, the moon. David Frawley in
this book on Mantra Yoga writes that the short vowels represents the unbound
pure being while the long vowels represent its expansion into space. Thus, the short vowel upon modification with
certain symbols in the front and back become the long vowel whereas there is no
such modification in the long vowel.
Thus, it is Śiva, the short vowel becomes, upon modification, Śakti, the
long vowel. Hence, Civavākiyar says that
the Lord is the origin that is not restricted by the circle, the yoni, a
component of the long vowel. This verse
describes the Lord’s transcendent and immanent aspects.
Kombu
is the symbol preceding the short letter and the kāl is the symbol that
succeeds the short letter. For example: க(ka)
+ Kombu and kāl becomes கோ (kō)
குறில் அல்லது குற்றெழுத்து சிவனை, சூரியனைக் குறிக்கும். நெடில்
சக்தியை, சந்திரனைக் குறிக்கும். குறிலின்
வட்டத்திலிருந்து நெடில் தோன்றியது என்கிறார் சிவவாக்கியர். டேவிட் பிரௌலி என்னும் மேல்நாட்டு அறிஞர் தமது
மந்திர யோகம் என்னும் புத்தகத்தில் குறில் என்பது எல்லையற்ற தூய ஆத்மாவையும்
நெடில் என்பது பரவெளியில் அதன் விரிவையும் குறிக்கும் என்கிறார். இவ்வாறு ஒரு குறில் தன்னில் சில மாறுபாடுகள்
சேர்க்கப்பட்டு நெடிலாகிறது. ஒரு நெடில்
அத்தகைய மாறுபாடுகளை அடைவதில்லை. இவ்வாறு
குறில் பிரகிருதியையும் நெடில் விக்ருதியையும் குறிக்கின்றன. இவ்வாறு குறிலில் கொம்பைச் சேர்த்து நெடிலாக்கலாம்
என்று கூறும் சிவவாக்கியர் இறைவன் குறிலின் வட்டத்தாலோ நெடிலாலோ வரையருக்கபடுபவன்
அல்ல என்று முடிக்கிறார்.
No comments:
Post a Comment