Verse 121
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தென்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
Translation:
The true
entity not comprehensible even by the Devas in the heavens,
My Lord of
the South, who remains merged as the image in the eye,
Cutting that
which causes birth in the world and adorning His flower-like feet,
It is true that the Lord remains, lives within
me.
Commentary:
Even
though the eye sees things outside itself, it is not able to see the image that
is present on it. The Lord remains
within us like the image. We are not
able to see the Lord as he is not a separate entity.
Like the image, the Lord is a part of us
but we are not aware of his presence.
The way to recognize the Absolute is to cut asunder all the worldly ties
through discipline, detachment and careful practice and to hold only the Lord’s
sacred feet as our prime goal. Through
this, we can recognize the presence of the Absolute who remains within us not
as a lifeless image but as a living entity.
The term ninra
tenpirān can be split as ninra ten pirān- the Lord of the southern
direction, Dakshinamurthy or as ninratu enpirān who remained so, my
Lord.
The last
line can be interpreted as ‘it is true that the Lord remains within me, lives
within me’ and also as ‘the Lord remains within me, lives within me as the
truth’.
கண்ணைக் கொண்டு நாம் வெளியில் உள்ள பொருட்களைப்
பார்த்தாலும் நம்மால் நமது கண்ணையே பார்க்க முடிவதில்லை. அதில் தோன்றும் காட்சியைப் பார்க்கமுடிவதில்லை. இறைவனும் அவ்வாறே நம்மை விட ஒரு தனியான, வேறுபட்ட வஸ்துவாக இல்லாததால் நம்மால் அவனைப் பார்க்க முடிவதில்லை. அவனைக் காண்பதற்கு ஒரே வழி நாம் நமது உலகத்தளைகளை
அறுத்துக்கொண்டு நம்மை அவனது மலரடியில் சமர்ப்பித்தால் அவன் நம்முள் வாழ்வது
நமக்குப் புரிகிறது. நமது
இருப்பு அவனால்தான் என்பது தெளிவாகிறது.
"நின்ற தென்பிரான்" என்ற சொல்லை "நின்ற தென் பிரான்" என்று
பிரித்தால் தென்திசைக்கு இறைவனான தட்சிணாமூர்த்தியைக் குறிப்பதாகக்
கொள்ளலாம். அல்லது "நின்றது என் பிரான்" என்றால் எனது இறைவன் என்று பொருள் கொள்ளலாம்.
கடைசி வரிக்கு “அண்ணல் என்னுள் இருப்பது உண்மையே” என்றும் “அண்ணல் என்னுள்
இருக்கிறான், உண்மையின் உருவில் இருக்கிறான்” என்றும் பொருள் கூறலாம்.
No comments:
Post a Comment