பாடல் 2
ஆன
அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன
அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன
அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன
அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
(பத)
கண்ணால் காணும் இவ்வுலகமும் அதற்கு அப்பாலுள்ள வெளியும் அகாரம்
மகாரம் என்ற அக்ஷரங்களும் நமசிவாயம் என்ற ஐந்தெழுத்தில் அடங்கும்.
ஆதியான பிரம்மா, விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்திகளும்
ஐந்தெழுத்தில் அடங்குவர். ஆதியான மூவர் என்பது மும்மூர்த்திகளை
மட்டுமல்லாமல் இவ்வுலகம் தோன்றுவதற்குக் காரணமான சத்துவம், ரஜஸ்,
தமஸ் என்ற முக்குணங்களையும் குறிக்கும். ரஜஸ் படைப்பையும் அதற்கு அதிபதியான
பிரம்மாவையும் குறிக்கும். அதேபோல் சத்துவம் காத்தலையும் (விஷ்ணுவையும்),
தமஸ் அழித்தலையும் (ருத்திரனையும்) குறிக்கும்.
அகாரம் என்பது சிவனையும் மகாரமென்பது சக்தியையும் குறிக்கும். இவ்விரு எழுத்துக்களும்
நமச்சிவாயம் என்னும் மந்திரத்துள் அடங்கும். அகாரம் என்பது இறைவனையும் மகாரமென்பது
மாயையையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
No comments:
Post a Comment