Monday, 11 March 2013

56. When the mind becomes clear and the locus of knowledge opens..



Verse 56
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தன் ஆடல் கண்டபின் அடங்கல் ஆடல் காணுமே

Translation:
For any direction and life form our Lord is the father-
The flame of austerity that emerges from the seed, the Śakti.
After the opening of the temple of knowledge when the mind becomes clear,
After seeing the dance of the father, composure will dance.

Commentary:
            The Lord is not only the director, commander of everything; he is also the loving father of all lives.  It is the effulgence that emerges from the seed, the śakti or power.  When the mind becomes clear and all that should be learned are learned, the dance of the Lord, the play of the supreme consciousness is seen.  When this is experienced then there are no fluctuations, no perturbances; only calmness and composure.

இறைவன் என்பவன் நம்மை வழிநடத்துபவன் மட்டுமல்ல. நமது தந்தையுமாவான்.  தாய்க்கும் தந்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?  தாய் என்பவள் அன்பை மட்டுமே பொழிபவள்.  தந்தையோ அன்புடன் சரியான வழியையும் காட்டுபவர்.  சில சமயம் அவரது முறைகள் கடுமையாகத் தோன்றும்.  ஆனால் அது அன்பினாலான வழியே.  சக்தி என்பவள் விதை. அவ்விதைக்கு உயிரோட்டம் கொடுத்து அதிலிருந்து செடியை முளைக்கச் செய்வது சிவமே. சிவவாக்கியர் வேதக் கோயில் என்று இப்பாடலில் கூறுகிறார். சித்தர்கள் வேதத்திற்குப் புறம்பானவர்கள் என்று ஒரு எண்ணம் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு.  வேதம் சாத்திரம் ஆகியவற்றை நன்கு, சரியான முறையில் கற்று அவற்றின் உட்பொருளை அறிந்தவர்களே சித்தர்கள்.  வேதம் என்ற சொல் அறியப்படவேண்டியது என்று பொருள்படும். கோயில் என்பது கோ வின் இல், இறைவனின் இருப்பிடம். இறைவனின் இருப்பிடம் சரியான புரிதலே, தெளிவான அறிவே.  அதைத்தான் சிவவாக்கியர் இங்கு குறிப்பிடுகிறார்.  அத்தகைய இறைவனின் இருப்பிடம் திறந்தபின், அறிவுக்கண் திறந்தபின் உலகமே இறைவனின் செயல்பாட்டின் விளைவு, அவனது ஆட்டத்தின் வெளிப்பாடு என்பது புரியும்.  அப்பொழுது அகங்காரம், மமகாரங்கள் அடங்கும், செயல்கள் அடங்கும். “சும்மா இருக்கும் நிலை” ஏற்படும். அதுதான் அடங்கலின் ஆடல்.

No comments:

Post a Comment