பாடல்கள் 31-60 தொகுப்பு
·
பாடல்–31 எவ்வித பாடுமற்ற, கர்மமற்ற, பரமனது
மந்திர உச்சாடனம் தணிந்த குரலில் இருக்கவேண்டும்.
·
பாடல்-32 தேங்காயில் இளநீர்
புகுந்ததைப்போல இறைவன் என்னுள் புகுந்தபின் நான் உலகில் மக்களின்முன் வாய்திறப்பது
இல்லை.
·
பாடல்-33 வண்டின் எச்சிலை உடைந்த
கல்லின்மீது ஊற்றுகின்ற மக்களே! இறைவன் தன்னைப் பற்றி நான் சந்தேகமற அறிய குருவின்
பாதத்தில் என்னை இட்டானோ?
·
பாடல்-34 கோயிலும் குலமும் மனத்துள்
இருக்கின்றன. அவை தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை.
·
பாடல்-35 இறைவன் உலோகத்திலும் மற்ற
பொருட்களிலும் இல்லை. மனத்தினுள் இருக்கின்றான்.
அதை உணர்ந்தால் அவன் நமது மனவெளியில் ஆடுவான்.
·
பாடல்-36 பூஜை என்று காலத்தை
வீணடிப்போரே! யார் பூஜையை ஏற்றுக்கொண்டது? ஆதியா அனாதியா? எது?
·
பாடல்-37 விபூதி தரித்து மந்திரங்களை
ஓதும் மக்களே! இறையன்பினால் மனத்தை உருக்கி நம்முள் கலந்த ஜோதியின் உண்மை நிலையை
அறிந்தால் இடைவிடாது அச்சோதியுடன் இருக்கலாம்.
·
பாடல்-38 பாத்திரத்தில் வைத்த நீர், தீ
மூட்டியபோது எங்கே மறைகிறது? ஐம்பூதங்கள் என்பவை என்ன? மனத்தின் மாயத்தோற்றம்தான்.
பொருட்களை உருவாக்குவதும் அழிவுறச்செய்வதும் மனம்தான்.
·
பாடல்-39 ஜாதிக் குறிகள் எலும்பிலுள்ளனவா
தோலில் உள்ளதா? பறைச்சியின் போகமும் பணத்தின் போகமும் வெவ்வேறா? பகுந்து பாருங்கள்
·
பாடல்-40 வாயில் குடித்த நீர் எச்சில்
என்றால் வாயால் கூறும் வேதமும் எச்சிலல்லவா? எவ்வாறு நீரைக் குடித்து நீரைப்
போக்குவது?
·
பாடல்-41 வேதம், மந்திரங்கள், அறிவுகள்,
உலகங்கள் நாதம் பிந்து, மதி அனைத்தும் எச்சில்தான் எதில்தான் இறைவனின் எச்சில்
இல்லை?
·
பாடல்-42 பிறப்பதற்கும் முன்பும்
இறந்தபின்னும் நாம் இருக்கும் நிலை என்ன?
சரியாகக் கூறாவிடில் காதைப் பஞ்சாட்சர மந்திரத்தால் அறுப்பேன்
·
பாடல்-43 குச்சியினால் அம்பலத்தை
ஆட்டுவிக்க முடியாது, கடலைக் கலக்க முடியாது.
புலனின்பமற்று இருக்கும் யோகியை ஒருநாளும் மாயை என்ற இருள் சூழ முடியாது.
·
பாடல்-44,45 சித்தம், சிந்தை, சிவன்,
சக்திசம்பு, முக்தி, மந்திரங்கள் என்பவை எவை? இவையனைத்தையும் ஈன்ற வித்தே இறைவன்
·
பாடல்-46 உயிர்கள் என்பது அசைவுள்ள
நீர்தானே. காதணிகள் பலவானாலும் அவற்றின் மூலப்பொருள் பொன் ஒன்றுதானே.
·
பாடல்-47 பால் கறந்த பின் முலையினுள்
புகாது, வெண்ணெய் மோரினுள்ளும்,சங்கின் ஓசை அதனுள்ளும்,உதிர்ந்த காய்
மரத்துள்ளும், விரிந்த பூ மொட்டு நிலைக்கும் திரும்ப மாட்டா. ஞானம் போற்ற யோகி மீண்டும் சம்சாரத்தில்
பிறப்பது இல்லையே.
·
பாடல்-48 தூமை- தீட்டு, கருவறையில்
கிடந்தபோதும், பிறந்தபோதும் தீட்டு என்றால் எவ்வாறு இறைவனுடன் சேருவது?
·
பாடல்-49,50 தூமையான வாலை இருக்க உள்ளே
தீட்டு எவ்வாறு வரும்? தூமையே திரண்டு குருக்களாயிற்று.
·
பாடல்-51 புரட்டும் பித்தலாட்டமும்
இறைவனைக் காட்டாது. பொய் இல்லாத சிந்தையால்தான் உள்ளிருக்கும் இறைவனை உணர முடியும்
·
பாடல்-52 ஆட்டைக் காட்டி வேங்கையைப்
பிடிப்பதைப் போல என்னை செல்வத்தைக் காட்டி உலகில் கட்ட வேண்டாம். வீடுபேற்றைக் காட்டி என்னை வெளிப்படுத்து
யானைத் தோலை அணிந்த இறைவா!
·
பாடல்-53 சந்திரகலையும் சூரிய கலையும்
கண்ணில் கையில் சங்கு சக்கரம் சூலம், மழு நீண்ட முடி ஆடிய பாதம் இவ்வாறு உடலினுள்
இறைவன் கலந்துளான்.
·
பாடல்-54 உப்பும் நீரும் கலந்தால் இரண்டும்
சேர்ந்த உப்புநீராகும், தனியாக இருப்பதில்லை. ஈசனும் மாலும் ப[பரம்பொருளில்
கலந்துள்ளனர். வித்தியாசம் பேசுவோர் வாய் புழுத்து மடிவர்.
·
பாடல்-55 சிற்றம்பலத்தில் ஆடுபவனும்
மனவரங்கத்தில் ஆடுபவனும் ஒருவனே. அவனே உலகமும் முக்தியும்.
·
பாடல்-56 எல்லா உயிர்க்கு தந்தையான் இறைவன்
வித்திலே முளைக்கும் ஜோதி. அவனைப் பற்றிய
தெளிவு ஏற்பட்டபின் எல்லாம் அடங்கிவிடும்.
·
பாடல்-57 அறிவு தரும் நூல்கள்
நம்முளேபற்றை அறுத்து நம்முள் இருக்கும் மிருகத்தைக் கட்டுப்படுத்தினால் இறைவன்
நம்முள் நமது சொந்தமாக வாழ்வான்.
·
பாடல்-58 ஓம் நமச்சிவாய என்பதே எல்லாம்.
ராம நாமத்தைச் ஜெபிப்பீர்.
·
பாடல்-59 உலகம் தோன்றக் காரணமான
அகாரமும் உகாரம் படிப்பின்போது ஒற்றை எழுத்தை விட்டு நின்றதா?
·
பாடல்-60 அனைத்துமாக இருக்கும் இறைவா!
நான் நின் கழலை மறந்தாலும் நீ என்னுள் குடிகொள்.
No comments:
Post a Comment