Saturday, 2 March 2013

4. நாடியில் ஒடுங்கும் வாயுவை கபாலம் ஏற்றினால்?



பாடல் 4
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே
       
(பத): குண்டலினி யோகத்தில் இடை, பிங்களை, சுழுமுனை என்ற மூன்று நாடிகள் முக்கியமானவை.  நமது மூச்சுக்காற்றான பிராணனை இடை, பிங்களை நாடிகளில் செல்லவிடாமல் பிராணாயாமத்தின்மூலம் சுழுமுனையில் செலுத்தவேண்டும். பின் அதனை தியானத்தினால் மண்டையோட்டிலுள்ள சகஸ்ரார சக்கரம் வரை ஏற்றவேண்டும்.  அவ்வாறு ஏற்றினால் சகஸ்ராரத்திலிருந்து அமுதம் சுரக்கும்.  அந்த அமுதத்தைப் பருகுவோர் என்றும் இளமையுடன் இருப்பர். பருப்பொருளாலான அவரது உடல் ஒளியான திவ்யதேகமாகும். இந்த யோகமுறை பொய்யல்ல உண்மையே என்று சிவவாக்கியர் அறுதியிட்டுக் கூறுகிறார். நாதன் என்னும் சொல் சிவனையும் அம்மை என்னும் சொல் குண்டலினி சக்தியையும் குறிக்கும்.

5 comments:

  1. தங்களது போருள் சரியானது அல்ல. முதல் இரண்டு வரிகளிலேயே குழப்பம் தெரிகிறது.

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனது பதினைந்து வயதில் ஒரு ஆன்மீகவாதி
    எனக்கு சொல்லிகொடுத்தார் .

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்தபாடல்

    ReplyDelete
  4. குண்டலினி என்று சொல்லக்கூடிய சூட்சும சுக்கிலத்தை முதுகுத்தண்டு வழியாக மனதை கட்டி எழுப்பும் பொழுது அவை கபாலத்திற்கு கொண்டு வந்து சுழுமுனையில் அதாவது நெற்றி மத்தியில் வைத்தால் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்தால் கிழவன் கூட பாலர் போல அதாவது இளமையாக மாறுவார்கள் என்பது

    ReplyDelete