பாடல் 3
சரியை விளக்கல்
ஓடிஓடி ஓடிஓடி
உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி
நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி
மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி
கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
(பத) சோதிவடிவான குண்டலினி சக்தி நம்முட்கலந்துள்ளது.
அதுவே இறையுணர்வாகும். அதையறியாத கோடிக்கணக்கான
மக்கள் பல்வேறு வழிகளில் இறையுணர்வை நாடி அதை வெளியில் காணாது உடலும் மனமும் வாடி இறந்து போகின்றனர்.
முதல் வரியில் உள்ள
“ஓடி” என்ற சொல் குண்டலினி சக்தி ஆறு சக்கரங்களினுள்
ஓடுவதைக் குறிக்கின்றது. நாடி என்னும் சொல் சரியா கிரியா யோகம்
ஞானம் என்ற இறையுணர்வைக் காண முயலும் நான்குவழிகளைக் குறிக்கின்றது. வாடி என்ற சொல் நான்கு முறைகள் காணப்படுகின்றது. அது உடல், மனம்,
வாக்கு, ஆவி என்ற நான்கு கரணங்களும் வாடி முடிவில்
இறப்பை அடைகின்றன என்பதை உணர்த்துகிறது.
No comments:
Post a Comment