Monday, 25 March 2013

70. How to avoid destruction?



Verse 70
இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்கவேண்டும் என்றலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர்

Translation:
When needed to linger, will it be the act of lingering?
Didn’t they create in this earth only to die?
The five letters uttered by the limitless Lord
You do not worship as panacea before death; you do not lose the state (as Jiva)

Commentary:
Śiva and Śakti, the inactive and active part of the Supreme, created this universe only to have it destroyed in the end. Hence, everything in this world will come to an end, die one day.  Before that day comes, those created so should utter the five letters, namacivaya as the panacea to get relief from the disease of worldly life, the disease of being in the limited state.  Civavākkiyar complains that no one is doing so in spite of the creators remaining in this world to help them. 

சிவனும் சக்தியும் இவ்வுலகை முடிவில் அழிப்பை வைத்தே படைத்துள்ளனர்.  அதனால் இவ்வுலகில் படைக்கப்பட்டவை அனைத்தும் முடிவில் அழியப்போவது உறுதி.  இதை உணராத மக்கள் இம்முடிவுக்கு வழி தேடாமல் மேலும் மேலும் சம்சாரத்தில் உழன்று முடிவில் மரித்துப் போகின்றனர்.  இந்நிலையிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி பிறப்பறுப்பதுதான்.  அதைக் கொடுப்பது நமசிவாய மந்திர ஜபம்.  அதையே சிவவாக்கியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்

Sunday, 24 March 2013

69. Can remain as youth eternally...



Verse 69
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டன்ஆணை அம்மைஆணை உண்மையே

Translation:
The effulgence that emerges and rises in the prime meridian,
After holding it for four measures of time inside, seeking it,
Can live as an eternal youth, can become the Supreme Being
This is true, swear by the one with poison consumed neck and the Mother.

Commentary:
In this verse Civavākkiyar talks about the esoteric practice of raising the kundalini śakti through the suṣumna nādi and retaining there for a particular time period.  This confers youth on the practitioner, raises him to the level of Supreme consciousness.  Civavākkiyar declares that this is true.  He swears by Lord Śiva and Śakti or Kundalini Śakti who is also called “the mother”.

இப்பாடலில் சிவவாக்கியர் குண்டலினி சக்தியை சுழுமுனை வழியாக ஏற்றி அதை ஒரு குறிப்பிட்ட நேரம் சஹாஸ்ராரத்தில் இருத்துவதைப் பாடுகிறார்.  இப்பயிற்சியினால் ஒருவருக்கு இளமையான சரீரம் ஏற்படும். அவரது விழிப்புணர்வு எல்லையற்ற, அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.  இது உண்மை என்று ஆலமுண்ட கண்டனான சிவனின் மீதும் தாயான வாலையின் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறார். ஆலமுண்டது என்பது மடைமாற்றலின் மூலம் விந்துவின் போக்கை மாற்றியதைக் குறிக்கும்.

Saturday, 23 March 2013

68. Open the right door and you will become the truth



Verse 68
உழலும்வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள்
உழலும்வாசலைத் துறந்து உண்மைசேர எண்ணிலீர்
உழலும் வாசலைத் துறந்துஉண்மைநீர் உணர்ந்தபின்
உழலும் வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே

Translation:
You dumb people who are perturbed and hankering for the whirling entrance!
You have not thought of abandoning the whirling entrance and joining the truth,
After you realize the truth upon giving up the whirling entrance
You will become the truth that is within the whirling entrance.

Commentary:
The limited soul goes through multiple births and deaths; it goes through the entrance for the world several times.  It dangles between the states of being in this world and being in the womb for its next birth.  Thus, the soul whirls through the entrance to this world. 

If the limited soul decides to give up this door into the world and realizes the truth, then, it will become the truth, the Ultimate Reality. The Ultimate Reality is the truth that remains in this whirling door.  It is also the truth that remains within the doors of the cakras through which the prana whirls when it ascends through them to reach the sahasrara.  

ஒரு ஜீவன் கருவாசலை விரும்பி பல பிறவிகளை எடுக்கிறது.  இவ்வாறு அது இவ்வுலகுள் புகும் வாசலுள் உழலுகிறது.  இதை விடுத்து அந்த ஜீவன் உண்மையை, தனது எல்லையற்று இருக்கும் நிலையை உணர்ந்தால் அது உண்மையாக விளங்கும். இந்த மெய்மையே பிராணனாக ஆறு ஆதாரங்களில் முன்னேறி சஹஸ்ராரத்தை அடைகிறது.

Friday, 22 March 2013

67. If you can open the fragrant door..



Verse 67
ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவீர்காள்
கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்றவாசலைத் திறந்து நாடிநோக்க வல்லீரேல்
தோன்றுமாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே

Translation:
Desiring the entrance of birth, you will get fatigued
You do not know the reason for the plantain tree blooming
If you are capable of opening the fragrant door and seeking it
The visible illusion will go away and effulgence will occur.

Commentary:
Civavākkiyar points out our sad state of repeatedly being born and dying. People desire the entrance of birth, physical pleasure.  A banana flower represents the cakra.  The cakras are usually depicted as downward facing flower that is closed until the power of kundalini reaches it at which time it turns up and blooms.  Hence, Civavākkiyar says that people do not know the reason, the kundalini sakti that remains in the organ of pleasure that makes the banana fruit, cakra, bloom.

Civavākkiyar advises people to consider the door of pleasure as door for liberation, open it with the power of kundalini and see the Divine.  Then, the power of maya will vanish and the great effulgence will shine forth.

மக்கள் கருவாசலை விரும்பி, சிற்றின்பங்களை விரும்பி, பல பிறவிகளை எடுத்து இறந்து போகின்றனர்.  அவர்கள் குண்டலினி யோகத்தைப் பற்றி அறிய முயலுவதில்லை.  சஹாஸ்ரார சக்கரத்தை வாழை மொட்டாகக் காட்டுவது வழக்கம். கீழ் நோக்கி இருக்கும் சஹாஸ்ரார சக்கரம், குண்டிலினி சக்தி தொடும்போது மேல் நோக்கித் திரும்புகிறது.  அதைத்தான் இரண்டாவது வரி குறிக்கின்றது.  கருவாசலை விட்டு மக்கள் திருவாசலான மணம்பொருந்திய வாசலான சஹஸ்ராரத்தை நாடினால் பிறப்பைக் கொடுக்கும் மாயை விட்டொழிந்து இறைமையான சோதி உட்புகும்.

Thursday, 21 March 2013

66. As the Ancient six as one...




Verse 66
கண்டு நின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமாய்ப் பயந்த வேதசுத்தராய்
அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் ஆவிரே

Translation:
The maya seen around, the elements that remained merged within (everything)
If you are capable of seeing them (clearly) like eating and sleeping
As pure Vedic souls with all the six (philosophical/theological, cakra) as one,
You will become the realized soul, the primordial origin.

Commentary:
Civavākkiyar says that one should become familiar with the nature of maya, the supreme creative power of the Divine and the five elements that occur from maya. The entire manifested world is made of.  One should be familiar with them like eating and sleeping.  The first line can also be interpreted as to mean ‘one should know that the Divine consumes them and remains in yoganidra’, that is, everything dissolves in him. 

Civavakkiyar calls such people as ‘veda cuttar’-the flame of cognition.  The word Veda means the scriptures as well as ‘that which should be known, knowledge’.  Hence, this term may mean a knowledgeable person as well as an expert of scriptures.  

The expression ‘with all the ancient six becoming one’ will refer to all the six centers or chakras, the six schools of philosophy and six schools of theology. The six centers are muladhara, svadhistana, manipuraka, anahata, viśuddhi and ajña cakra.
The six schools of philosophy are Sānkhya, Yoga, Nyaya, Vaiṣeshika, Poorva Mimamsa and Uttara Mimamsa.  The six schools of theology are Śaiva, Vaiṣṇava, Sākta, Gānapathya, Kaumāra and Śaura. Such people will become Divine themselves.  It also means the six letters of aum namacivaya as the single letter aum the state of the Supreme Divine.

மாயை என்பது இறைவனின் படைப்புச் சக்தி.  அதுவே பஞ்ச பூதமாக இவ்வுலகமாக நிற்கிறது.  ஒருவர் அதை உண்டு உறங்குவதைப் போல தெளிவாக உணரவேண்டும். அவ்வாறு அறிந்தவர்களை சிவவாக்கியர் வேதச் சுடர் என்கிறார்.  வேதம் என்பது அறிவது என்று பொருள்படும். உண்டு உறங்குமாறு அறியவேண்டும் என்பது ‘இறைவன் அவற்றைத் தன்னுள் உண்டு யோகநித்திரையில் (பிரளயத்தின்போது) உறங்குவதை அறிந்தால், அதாவது அனைத்தும் இறைவனிடம் லயிக்கின்றன என்பதை அறிந்தால் என்றும் பொருள் கொள்ளலாம்.
அவ்வாறு அறிந்தவர்கள் “ஆறையும் ஒன்றாக” அறிவர். அதாவது ஆறு தரிசனங்கள் எனப்படும் நியாயம், வைசேஷிகம், யோகம், சாங்கியம், பூர்வ மற்றும் உத்தர மீமாம்சம் என்னும் ஆறு பிரிவுகளையும், ஆறு சமயங்களான சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், குமாரம், சௌரம் என்பவற்றையும் ஆறு சக்கரங்களையும், ஒன்றாக- ஒரே இறைமையாக, அறிவர். பண்டை ஆறு என்பது ஓம் நமசிவய என்ற ஆறு எழுத்துக்களும் ஒரு எழுத்தான ஓம் ஆக அதாவதும் பரபிரம்ம நிலையாக அறிவர். அவரே வேத சுத்தர். அவரே இறைமை.