Wednesday 13 March 2013

59. Faultless Yogis please explain!



Verse 59
அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்தில் உவ்வுவந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமன்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே

Translation:
Did avvu occur within the letter a
Did uvvu occur within the letter u
Did a and u remained without ci
Faultless Yogis! Please explain.

Commentary:
Avvu represents Śiva, uvvu represents Śakti.  They are the silent forms of a and u.  ci is the letter that represents Paramasiva.  Civavākkiyar wishes yogins to explain how avvu and uvvu occurred within a and u ; whether a and u remain without ci.  That is, whether Śiva and Śakti can remain without Paramaśiva. 

அவ்வு என்பது சிவனைக் குறிக்கும். உவ்வு என்பது சக்தியைக் குறிக்கும்.  அவையிரண்டும் அ, உ என்பவற்றின் மௌனநிலை. சி என்பது பரமசிவனைக் குறிக்கும்.  படைப்பின்போது சிவனும் சக்தியும் பரமசிவத்தைவிட்டு தனிப்பட்டு நிற்கிறார்களா?  இதை சந்தேகமற விளக்குமாறு யோகிகளை சிவவாக்கியர் கேட்கிறார். புத்தக அறிவைப் பெற்ற ஞானிகளைவிடஅனுபவத்தில் இதை உணர்ந்த யோகிகளே இவற்றை விளக்கத் தகுந்தவர்கள்.

No comments:

Post a Comment