Sunday 17 March 2013

63. Attaining the body of light



Verse 63
கரு இருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குரு இருந்து சொன்ன வார்த்தை குறித்துநோக்க வல்லிரேல்
உரு இலங்கு மேனியாகி உம்பராகி நின்றநீர்
திரு இலங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே

Translation:
Ye dumb people who are troubled by the gateway to the womb!
If you are capable of looking carefully the words of the preceptor,
You who remain as a particular form, as a human/celestial,
Will merge becoming a sacred body.

Commentary: 
The gateway to and from the womb is the entrance of the soul into this world, the place of countless misery.  The only way to escape from this misery is to listen to the words of a guru carefully.  If one does so, then his body with a particular form, the form which is subject to destruction will become the sacred body or tiru elangu meni.  The Siddha opine that one goes through the yoga deha (yogic body), siddha deha (body of special powers), mantra deha (the embodiment of the mantra namacivaya) and then attain the divya deha (supreme form, the body of light).  Sivavakkiyar refers to this ultimate form in this verse.

கருவறையின் வாசலே துன்பமான இவ்வுலகில் அடியெடுத்து வைப்பதற்கு முதல் படி.  அத்தகைய பிறவி வேண்டாம் என்று ஒருவர் விரும்பினால் அவர் குருவின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.  ஒருவர் சாதாரணமாகப் பெற்றிருப்பது உரு இலங்கு மேனி- ஒரு’ உருவத்தையுடைய உடல்.  குருவின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கும்போது பெறுவது திரு இலங்கு மேனி. சித்தர்கள் யோக தேகம். சித்த தேகம், மந்திர தேகம், திவ்ய தேகம் என்று ஒரு சாதகர் பல தேகங்களைப் பெறுவதாகக் கூறுகின்றனர்.  யோக தேகம் ஹடயோகத்தினால் பெறுவது. சித்ததேகம் குண்டலினி யோகத்தால் பெறுவது. மந்திர தேகம் என்பது பிரணவத்தை சுழுமுனையில் செலுத்தி நமச்சிவாய என்ற மந்திர சரீரத்தைப் பெறுவது.  முடிவில் கிட்டும் திவ்ய தேகம் என்பது ஒளியுடல்.  இதுவே திரு இலங்கு மேனி.

No comments:

Post a Comment