Saturday 2 March 2013

5. தான் விரும்பிய பெண்ணை வேறொருவன் விரும்பினால்..



பாடல் 5

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிக்கைக் கொடுப்பரே

(பத):
ஒரு பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி அவளைத் தன்னவளாக்கிக் கொண்ட ஒருவன், அவளை மற்றொரு ஆண்மகன் அடைய விரும்பினால் அவனை வெட்டவேண்டும் என்று கோபம் கொள்வான்.  ஆனால் அதே ஆண்மகன் அப்பெண் இறக்கும்போது நாற்றம் கொண்ட அவளது அழகான உடலை சுடுகாட்டிற்கு உடனடியாக எடுத்துச் சென்று எரிக்கச் செய்வான்.

புற அழகைக் கண்டு ஒருவர் மயங்கக் கூடாது, சிற்றின்பத்தில் ஒருவர் ஆசை கொள்ளக்கூடாது என்று இப்பாடல் காட்டுகின்றது. இதனால் சித்தர்கள் மனித உடல் இழிந்தது என்று கூறுகின்றனர் என்று கருதக்கூடாது.  திருமூலர் தமது திருமந்திரத்தில்ஊனுடல் ஆலயம்என்று கூறியுள்ளார்.  சித்தர்கள் பொதுவாக மனித உடல்கள்பக்குவம்அல்லதுஅப்பக்குவம்என்ற இருவிதமாக உள்ளன என்று கூறுகின்றனர்.  பக்குவமான தேகம் குண்டலினி யோகத்தின் மூலம் பதப்படுத்தப்பட்ட தேகமாகும். அப்பக்குவ தேகமே வளர்ச்சியும் முதுமையுமடைந்து முடிவில் அழிவது. இடைக்காட்டுச் சித்தர் தனது பாடலில் தான் நன்றாக உடலை புடமிட்டதாகக் கூறுகின்றார்.

No comments:

Post a Comment