Tuesday 12 March 2013

57. Keep the fighting animal at bay



Verse 57
உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்திலீர்
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே

Translation:
All the trustworthy books within you, you will sing realizing it repeatedly,
Cutting asunder attachments, you have not attained parāparam,
The fighting animal if held within you cutting away its pride,
The effulgence will live within you always as a relative.

Commentary
One need not look outside for information or knowledge about the Divine. It is an experience that must be felt inside. Hence, one should experience it repeatedly and enjoy expressing it in words.  Parāparam is the Ultimate Reality.  It is param and aparam or limited and unlimited.  Civavākkiyar says that the only way to attain this parāparam is to cut away attachments.  The mind is like an animal constantly straining the tether of control due to its pride. An aspirant should cut away the pride and control it.  Then, the Divine will become an entity that is very close to one.

உண்மையான அறிவைக் கொடுப்பது அனுபவமே.  அத்தகைய அனுபவத்தை ஒருவன் வெளியிலிருந்து பெறமுடியாது. அது உள்ளே நிகழ்வது.  நாம் புலன்களால் ஒன்றை உணர்ந்தாலும் அதனால் ஏற்படும் அனுபவம் நம்முள்ளேதான் ஏற்படுகிறது. அதனால் சிவவாக்கியர் இறைமையைப் பற்றிய அறிவைக்கொடுக்கும் அனைத்தும், புத்தகங்கள் உட்பட, நம்முள் இருக்கின்றன என்று கூறுகிறார். 
 
அத்தகைய அனுபவத்தைப் பெற்ற ஒருவர் இனிப்பைச் சுவைப்பதைப் போல அதை மீண்டும் மீண்டும் அனுபவித்து அவ்வனுபவத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முனைவார்.  அவ்வனுபவத்துக்குத் தடையாய் இருப்பது நம்முள் இருக்கும் மிருக உணர்வுதான்.  மிருகம் என்பது விழிப்புணர்வு குறைந்த நிலையைக் குறிக்கின்றது.  அதுவே அகங்கார மமகாரங்களை தவறான பற்றினால் ஏற்படுத்துவது.  அத்தகைய மிருகத்தைக் கட்டுப்படுத்தினால், செருக்கை அறுத்தால், இறைமை நம்முள் சோதியாக நிலைபெற்று இருக்கும்.

அறிவு பெறுவதற்கு முதல்படி நம்முள் இருக்கும் கசடுகளை விலக்குவது.  இல்லையென்றால் அவை விபரீத ஞானம், குதிருஷ்டி எனப்படும் ஒன்றை மற்றொன்றாக எண்ணுவது, தவறான நோக்கு என்னும் விபரீதத்துக்கு வித்திடும். அதனால்தான் அஷ்டாங்க யோகத்தில் யம, நியமங்களை முதலில் வைத்து தியானம், சமாதியைப் பின்வைத்தனரோ!

No comments:

Post a Comment