Monday, 31 March 2025

2.3 Hero recounts his experience

  2.3 உற்றது உரைத்தல்

கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படம் கிழித்து ஆங்கப் பணை முலைக்கே
தோம்பல் துடி இடை மான் மட நோக்கி தில்லை சிவன் தாள்
ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே (21)

பொருள்:
பச்சோந்திக்கு ஒதுங்கி மேயாமல் ஒளியும் மயில், யானைக்கே துன்பம் (கோள்) இழைக்கும் பாம்பைப் பிடித்து அதன் படத்தைக் கிழிப்பதைப் போல, பெரிய மார்பையும் நுண்ணிய இடையையும் மான் போன்ற கண்ணையும் உடைய, சிவனின் பொன்னடிகள் என்ற மலரைத் தனது கூந்தலில் சூடும் தலைவி என் ஆற்றலை அகற்றினாள்.

தலைவன் தோழனுக்கு இந்த பதிலைத் தருகிறான். பச்சோந்தி தனது சூழ்நிலைக்கேற்ப தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும். அதைப் போல நிலையற்று இருப்பவர்களை சிவம் தவிர்த்துவிடும். இது அவர்களைப் பார்த்து பயந்து அல்ல.

சாதனை என்பது பச்சோந்தியைப் போல நிறம் மாறக்கூடியது. அது ஆத்மாவை தனது நிலையை உணர்ந்து இறைவனிடம் சரணடைய வைக்கும் அல்லது தான் பெரியவன் என்ற அகங்கார உணர்வைத் தூண்டிவிடும். இந்த அகங்காரம் பாம்பைப் போல பயங்கரமானது. சாதனையில் முன்னேறும் ஒருவர் பல சித்திகளைப் பெறுகிறார். இவை அவரை மேலும் முன்னேற உதவும் அல்லது கீழ் நோக்கி தள்ளிவிடும், வழிதவறிப் போக வைத்துவிடும். சிவனின் திருப்பாதங்களைத் தலையில் தயங்குவது என்ற நற்செயல்கூட சரியான மனப் பாங்கில் செய்யப்படாவிட்டால் அகங்காரத்தை தூண்டிவிடும். அதை சக்தி தான் அளிக்கும் ஞானத்தாலும் கடாக்ஷத்தாலும் தனது நுண்மையான உருவினால் தடுத்துவிட்டாள், அதனால் தனது உள்ளொளி பெருகி உடல் மெலிந்தது என்று ஆத்மா கூறுகிறது.

இங்கு பாம்பு என்பது தனது புலனுக்கு உணவு தேடும் ஆத்மாவை குறிக்கிறது. அதன் உறுப்பாகவும் தற்காப்புக் கருவியாகவும் இருப்பது படம். அதைக் கிழித்தது என்பது எனது பசு பாச ஞானங்களை விலக்கி, எனது யோகம் மற்றும் கிரியா ஆற்றல்களை நீக்கி, என்னை சகல தியானத்திலிருந்து நிஷ்கள தியானத்திற்கு சிவம் அழைத்துச் சென்றது என்று ஆத்மா கூறுகிறது.

2.3 Hero recounts his experience
Like a peacock that does not stir for food, avoiding the chameleon, ripping apart
The hood of a snake that can harm an elephant, this one with a big bosom
The complaining, drum like thin waist, eyes like the antelope removed my prowess
To adorn the golden flower, the sacred feet of Tillai Siva.

Simple meaning:
The hero tells his friend that the heroine took away his power to adorn Siva’s sacred feet on his head, his capacity to act on his own accord. He compares her to a peacock that avoids grazing in the presence of a chameleon but rips a snake apart even though the snake is powerful enough to harm an elephant.

Spiritual meaning:
The soul tells its “I” consciousness that Sivam has removed its sense of independent functioning, dissolving any notion of self-sufficiency. This is not a forced taking, but a natural consequence of union with the Divine. Sivam hides from chameleon-like individuals who speak and act without sincerity. This avoidance is not rooted in fear—after all, Sivam possesses the power to rip apart a venomous snake—but rather in the understanding that deceit cannot coexist with authentic pursuit of Truth.

The peacock is a symbol for the removal of delusion. The thought that one can attain Sivam through one’s effort is as poisonous as a snake.

Sadhana, or personal effort in spirituality, is a double-edged sword: while it can bring one into union with the Divine, it can just as easily give birth to an inflated sense of ego. The same power that elevates can also mislead, as demonstrated by the chameleon-like nature of siddhis—spiritual attainments that can be harnessed to deepen one’s devotion or, conversely, to bolster pride and attachment. Even the sacred act of adorning Shiva’s feet, when done without the right inner disposition, can fuel one’s vanity rather than humility.

Shakti, with her jnana (knowledge), her divine vision (the eyes), and her subtle yet formidable power (the waist), cuts through these self-delusions. Her presence strips away the illusions of grandiosity and keeps the seeker rooted in true awareness. In this same context, the snake represents the soul that seeks gratification through its senses, symbolized by its hood, which both shields it and reflects its sense of identity. Ripping the hood signifies the dissolution of pasu jnana (limited knowledge) and pasa (attachments), a necessary step toward transitioning from sakala dhyana (form-based meditation) to nishkala dhyana (formless meditation). In this release from ego and external supports, the “hero’s body becomes thin,” pointing to the inner lightness and freedom that arise when one is no longer weighed down by the baggage of worldly identifications.

Sunday, 30 March 2025

2.2 Friend questions

  2.2. பாங்கன் வினாதல்

சிறை வான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் எம் சிந்தையுள்ளும்
உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோளுக்கு என் கொலாம் புகுந்து எய்தியதே (20)

பொருள்:
தலைவனே! வானத்தில் உள்ள நீரை (கங்கையைக்) சிறைசெய்த, கொண்ட தில்லை சிற்றம்பலத்துள்ளும் எனது சிந்தையுள்ளும் இருப்பவன் உறையும் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த மதுரையில் அறிஞர் ஆராயும் இனிமையான தமிழின் துறைகளுள் நுழைந்தாயோ அல்லது ஏழிசையின் சூழலில் புகுந்தாயோ, எதனால் உனது உயர்ந்த வலிமையான தோள்கள் இந்த நிலையை எய்தின ?

தோழன், தலைவனிடம் அவன் உடல் ஏன் தளர்ந்தது என்று வினவுகிறான். ஆத்மா தத்போதத்திடம் முதலில் பேசுவதில்லை. தத்போதம்தான் ஆத்மாவை நெருங்கிப் பேசத் தொடங்குகிறது.

சிறை வான் புனல்- ஆகாயத்தையும் நீரையும் சிறை செய்தவர் தில்லை ஈசர். அல்லது வான் புனலான ஆகாய கங்கையைத் தனது சடையில் சிறை செய்தவர். கங்கை என்பது ஞானத்தின், கருணையின், சக்தியின் வெளிப்பாடு, அதை தனது சடையில் அடக்கி, சிறை செய்து, ஆத்மாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு, அதனால் ஆத்மாவுக்கு பாதிப்பு ஏற்படாத அளவு வெளிவிடுபவர் சிவன். அந்த கங்கை இருக்கும் பர ஆகாசத்தையும் பாசம், முற்றும் அறியாமை, திரிபு அறிவு ஆகியவற்றைக் கொண்ட ஆத்மாவின் சித்தத்தையும் ஒன்று போல எண்ணி உரைபவர் இறைவன். இது இறைவனின் அனைத்தையும் கடந்த ரூபத்தையும் பிண்டத்தில் அந்தராத்மாவாக இருக்கும் நிலையையும் குறிக்கிறது. இவ்வாறு இறைவன் கட-வுள் ஆக இருக்கிறார்.

அவர் இருக்கும் கூடலில் தமிழின் இரு பிரிவுகளான அகத்தையும் புறத்தையும் ஆய்ந்தாயாயோ, அல்லது ஏழிசை பாடலை, இசையை ஆய்ந்தாயா என்று தோழன் கேட்கிறான். இயல் அல்லது தமிழ் என்பது சொற்கள், வாக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்டது. இசைக்கு மொழியில்லை, சொற்கள் இல்லை. இவை இரண்டும் வாக்கின் கீழ்ப்பட்ட நிலைகள். சித்தத்தால் தொடக்கூடியவை. நாதத்தின் உயர் நிலை கங்கை, ஆத்மாவின் கரணங்களுக்கு அப்பாற்பட்டது.

கூடல் என்பது பொதுவாக, சங்ககால புலவர்கள் கூடிய இடம் என்பதால், மதுரையைக் குறிக்கும். இங்கு கூடல் என்பது நாடிகள் கூடும் இடம், மனமும் உடலும் ஆத்மாவும் கூடும் இடம், ஜீவன் சிவத்துடன் கூடும் இடம். அங்கு பொழிவது இனிமையான அமிழ்து. தமிழ் என்ற சொல்லை திரும்பத் திரும்ப சொன்னால் அமிழ்த்து என்று வரும். இந்த அமிர்தத்தை ஆராய்பவர்கள் முக்தாத்மாக்கள். இதுவே ஒளி பொருந்திய தமிழ்.

மதுரை விராட் புருஷனின் ஸ்தானமான துவாதசாந்தம். அங்கிருந்து அமிர்தம் பொழிகிறது. ஏழுவித ஒலிகள் எழுகின்றன. ஏழிசை- ஏழு சக்கரங்கள் எழுப்பும் ஓசை. கர்நாடக சங்கீதத்தில் உள்ள ஏழு ஸ்வரங்கள் ஏழு சக்கரங்களைச் சேர்ந்தவை. அந்த இசையை வழியாகக் கொண்ட யோகம் நாத யோகம் எனப்படுகிறது.

இசை, மனோலயத்தை ஏற்படுத்துகிறது. மனதை சிதற விடாமல் உள்ளொளியைப் பெருக்கிறது. தத்போதம் ஒளி ஒலியின் செயல்பாடுகளை, நாதம் பிந்து நிலைகளை அறிந்தது. அது அறிந்தவற்றில் உச்சமான போதம், நாத பிந்துக்களைப் பற்றிய ஞானம். ஆனால் புணர்ச்சி நிலை நாத பிந்துக்களைக் கடந்த நிலை, மனதைக் கடந்த நிலை. அதனால் மனதின் மூலம் செயல்படும் தத்போதத்தால் புணர்ச்சி நிலையை அறிய முடியாது. அதனால் தத்போதம் தான் அறிந்தவற்றில் உச்ச நிலைகளை இங்கே கூறுகிறது.

சக்கரங்களிலிருந்து நாதம், உணர்வு நிலைகள் எழுந்தால் உடல் மெலிந்து உள்ளொளி பெருகுகிறது. இசை என்பது காலத்தையும்,நாதத்தையும், கூடல் என்பது இடத்தையும், பிந்துவையும் குறிக்கின்றன.
ஆத்மா சக்கரங்களில் சுழன்று அல்லது உணர்ச்சிகளில் சுழன்று தனது நேரத்தை விரயம் செய்ததா அதனால் உடல் இளைத்ததா, உண்மையறிவு திரிதலாகிய மெலிவு எவ்வாறு விளைந்தது என்று தத்போதம் வினவுகிறது.

தலைவன் இயற்கைப் புணர்ச்சியில் வாக்கின் சக்தி நிலையில் இருந்தான். அதனால் அவனது ஞானம் பூரணமாக இருந்தது. ஆனால் இப்போது அவனது ஞானத்தில் குறைவு, மெலிவு, ஏற்பட்டுள்ளது. அதனால் அவன் பிரிந்திருக்கும் உணர்வு மற்றும் துயரம் ஆகியவற்றை அனுபவிக்கிறான். நீ சக்தி நிலையிலிருந்து ஒலி நிலைக்கோ சொற்கள் என்ற தாழ்ந்த நிலைக்கோ வந்துள்ளாயா அதனால் ஏற்பட்ட மெலிவா என்று தத்போதம் கேட்கிறது. தலைவன் தனது நிலையை சோதித்து அறிய இவ்வாறு தத்போதம் உதவுகிறது.

தத்போதம் ஆத்மாவுக்கு தடை அல்ல. அதன் நோக்கம் ஆத்மாவுக்கு நுண்மையாக உதவுவது, ஆத்மா காணத் தவறுவதை சூசிப்பது. தத்போதம் என்பதும் மலபரிபாகமுற்றது. இது ஆணவம் அல்ல. அது தலைவனின் உயிர் என்பதால் தலைவனின் தன்மைகளையுடையது.
ஐயமும் திரிபும் ஆணவத்தின் குறிகள். இவை மல வாசனையால் எழுகின்றன, ஆத்மா ஆணவ நிலைக்கு வந்துள்ளதா என்று தத்போதம் சோதித்துப்பார்க்க சொல்கிறது.

புகுதல்- தோழன் தலைவனிடம் தமிழினுள்ளும் இசையினுள்ளும் புகுந்தானா என்று வினவுகிறான். புகுதல் என்பது ஒன்றினுள் மூழ்கிவிடுவது. வெளியே நின்று பார்ப்பது அல்ல.

தத்போதம் மனதின் மூலம் ஆத்மாவின் இயல்பை உற்று நோக்கி உண்மை அறிவு திரிபு என்ற மெலிவு எவ்வாறு ஏற்பட்டது என்று வினவுகிறது.

தோள் மெலிவு- செயல்திறனில் குறைபாடு. ஆத்மா தான் செய்யவேண்டியவற்றை செய்யாமல் கவலையால் சோர்ந்து இருக்கிறது. அது தவறான பார்வையைக் கொண்டிருக்கிறதா, செய்ய வேண்டியவற்றை செய்யாமல் காலத்தை விரயம் செய்கிறதா என்று பார்க்கும்படு தத்போதம் நுண்மையாக உணர்த்துகிறது.

2.2 Friends questions
The one who resides in Tillai Citrambalam jailing the Akasha ganga and within my mind
In the assembly with high walls- did you enter the area/ghat of the sweet Tamil,
Or did you enter into the environment of beautiful music (seven sounds)?
Lord! Why did this happen to your shoulders that are like mountains?

Simple meaning:
Lord (hero), why did your shoulders become so weak? Is it because you engaged in examining the prose (Tamil) and poetry (music) in Madurai that has tall walls, the place of the one who resides in my mind and within the Tillai Chitrambalam that captures the waters from the sky.

The friend, Tatbodham or I consciousness asks this question to the soul, the hero. The soul does not communicate with its ego first, the ego approaches the soul.

Capturing the aerial waters- The Lord has contained the space and the water within it. He has tied the celestial river, Akasha Ganga in his matted hair. Ganga represents supreme wisdom, his mercy, manifestation of Shakti. The Lord releases this the water, wisdom, only to the extent the soul can handle it , without getting damaged. These two spaces, the sky and the soul’s chith represents the pure space and the space with the impurities-attachment, erroneous knowledge and ignorance. The Lord considers both these realms fit for his residence. This represent the Lord’s transcendent and immanent states.

The friend asks whether the hero stayed in his place, Koodal and examined Tamil-its two areas of aham (emotions) and puram (external to the soul) and music. Tamil represents prose with letters, words and sentences, music is pure sound. When the word Tamil is repeated it sounds as amizhdhu or nectar. Isai or music is pure sound, nadha. Isai also means harmony. Its supreme state is Ganga, beyond the soul’s instruments of knowledge.

Koodal refers to a meeting point, a merging point. Madurai was called koodal as poets and scholars assembled there during Sangam times. In the body the place where the nadis come together, the place where Jiva and Siva come together, the place where the mind, the body and the soul come together is the koodal.

When the word, Tamizh, is repeated, it sounds amizhdhu or amrit. The souls who examine this nectar are the muktas or liberated souls. Madurai represents the dvadasantha. Amrit and subtle sounds emerge from this locus. The word ‘Ezhisai’ means seven sounds or beautiful sound, music. The seven sounds are the vibrations of the seven states of consciousness. Carnatic music has seven svaras or notes that correspond to the seven chakras. Yoga of music or sound is nadha yoga. Thus, the friend is asking the hero whether he was performing sadhana to bring down the divine nectar, or practices involved in nadha yoga, the primordial sound.

When nadha or sound waves arise from the chakras the body becomes thin and inner light increases. Music represents time or nadha and koodal represents space or bindhu.
Tatbodham is asking whether the soul wasted its time roaming in principles represented by the chakras or emotions and is that why there is thinning of its capacity, its wisdom.

Music brings about mental focus while enhancing the light of consciousness. Tatbodham is aware of the nature of nadha and bindhu. Its extent of awareness stops here. However, the union is a state beyond nadha bindhu, beyond the mind. Tatbodhan which operates through the mind is incapable of knowing this state.
When nadha or sound waves arise from the chakras the body becomes thin and inner light increases. Music represents time or nadha and koodal represents space or bindhu.

Tatbodham is asking whether the soul wasted its time roaming in principles represented by the chakras or emotions and is that why there is thinning of its capacity, its wisdom.

During natural union the soul was in shakti state. His jnana was poorna or fully complete. Now, its jnana has reduced, thinned. Hence, it is experiencing sorrow and the feeling of separation. Tatbodham is asking the soul whether it descended from its shakti state to that of sound.

Tatbodham is not a hinderance to the soul. It helps the soul examine what it lacks. Like the soul the Tatbodham is also free from mala. So it is similar to the soul. Doubt and erroneous perception are signs of anava or egoity. Tatbodham is urging the soul to examine if it has come under anava’s control.

Entering- the friend asks whether the hero ‘entered’ into tamil or music. This refers to submerging oneself, not observing from outside. Tatbodham, through the mind, is looking at soul’s state and examines how a decrease in its bodham has occurred.

Thinning of shoulders- shoulders represent one’s capacity to perform a function, to act. This means the soul is not doing what is necessary but wasting its time worrying and feeling sorrow. Tatbodham is examining why it is so.

Friday, 28 March 2025

2.1 Thinking about the friend

 2.1  பாங்கனை நினைதல் 

பூங் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள் 

 ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடித் தாமரைக்கே 

பாங்கனையான்  அன்ன பண்பனைக் கண்டு இப்பரிசு உரைத்தால் 

ஈங்கு எனை யார் தடுப்பார் மடப் பாவையை எய்துதற்கே  (19)

பொருள்:

பூக்களையும் சத்தமிடும் புழலையும் கொண்ட புலியூரான சிற்றம்பலத்துள் இருக்கும், என்னை ஆளும், நடனமாடும் பிரானின் திருவடித் தாமரைக்கு பாங்காய் உள்ளவனும் என்னைப்போன்ற இயல்புகளை உடையவனுமான என் தோழனிடம் இங்கு நடந்தவற்றை சொன்னால் நான் அந்த சிவத்தலைவியை அடைவதை யாரால் தடுக்க முடியும் என்று தலைவன் கூறுகிறான். 

இங்கு பேசுவது தலைவனின் அகங்காரம். தான் தனது முயற்சியால் சிவனை அடைந்துவிடலாம் என்ற ஆன்மாவின் அகங்கார சொற்கள் இவை. 

தலைவியும் தோழியும் ஓருயிர் ஓர் உளம் என்று இருப்பதைப் போல தலைவனும் அவனது தோழனும் ஒரே இயல்பினர். இருவரும் சிவனின் அன்பர்கள். அதனால் இது மாயா மலமும் கர்ம மலமும் விலகிய ஆனால் ஆணவ மலத்தைக் கொண்ட ஆத்மா என்பது தெரிகிறது. 

அம்பலத்துள் என்னை ஆண்டுகொண்டு- சிதாகாசத்தில் என்னை தனதாக்கிக் கொண்ட சிவன்.  மடம்- இளமை. சக்தி என்றும் இளமையானவள். 

தனது அனுபவத்தை தனது பாங்கனுடன் பகிர்ந்துகொண்டால் யாராலும் தனது முயற்சியை தடுக்க முடியாது என்று தலைவன் கூறுகிறான். இவ்வாறு அவன் தன்னைத் தடுக்கப்போவது தத்போதம் என்று சூட்சுமமாக உணர்த்துகிறான். தத்போதம் ஆத்மாவின் தன்மையைப் பெற்றிருந்தால் அதுவும் தலைவியுடன் சேருவதையே ஊக்குவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் ஆத்மாவின் தன்மையை தத்போதம் பூரணமாகப் பெற்றிருக்கவில்லை என்பது தெரிகிறது.

சிவஞானபோதம் ஆத்மாவும் அதன் அகங்காரமும் எவ்வாறு இருக்கின்றன என்பதை ஒரு அரசன் தனது மந்திரிகளுடம் மிக நெருக்கமாக நிற்பதைப் போல என்று விளக்குகிறது. தூரத்திலிருந்து பார்க்கும் அந்நாட்டு மக்கள் மந்திரிகளை அரசன் என்று தவறாக புரிந்துகொள்வதைப் போல, அவை ஒத்திருப்பதால், அகங்காரம், ஆத்மா என்று தவறாக எண்ணப்படுகிறது.

                                          

2. Thinking about the  Friend

In the ambalam of Puliyur, with reverberating waterfalls replete with flowers

The Lord who dances, ruling over me, the one with devotion to his lotus-like feet

If I meet my friend with such qualities and recount this

Who will block me from attaining the beautiful lady?

 

Simple meaning:

When I recount this event to my friend with qualities like those who are associated with the lotus-like feet of the Lord who rules me and dances in Puliyur where the waterfalls reverberate and replete with flowers, who can block me from attaining the maiden?

The hero is indicating that the main opposition will come from the friend. The hero’s ahamkara or egoity is speaking here with the arrogance that no one can block him from attaining the heroine.

Similar to the heroine and her friend sharing a single soul and intention the hero and his friend are of the similar nature, devotees of Siva. So, the soul that is speaking here is free of maya and karma but has  anava still. Anava mala is the most difficult one to transform as it means the soul loses its identity and becomes one with the Divine.

Spiritual meaning:

The soul refers to the Lord as one who ruled in the Ambalam, in the Chidakasham. The heroine is referred to as young (mada) maiden (Paavai).  Shakti is always youthful, kumari.

If the Tatbodham reflected the soul perfectly, then it would have encouraged the soul in its journey towards Sivam.  As it is blocking this process, it is clear that there is some misfit between them.

Siva jnana bodham explains the nature of the four parts of the mind through imagery. If a king stands with his ministers in close proximity, the citizens may mistake the ministers for the king.  The soul remains with its I-consciousness similar to the king. 

2. Hero's friend (I-consciousness) comes in

 2. பாங்கர் கூட்டம்

தான் பெற்ற இறையுணர்வு உண்மைதான், அதை நிரந்தரமானதாக மாற்ற அருளின் உதவியுடன் முயற்சி செய்யவேண்டும் என்று ஆத்மா உணர்கிறது. அந்த முடிவுக்கு முதல் எதிரியாக வருவது ஆத்மாவின் தத்போதம் அல்லதுதான்என்னும் உணர்வு. தத்போதத்தை ஆத்மாவின் பாங்கன் என்று மாணிக்கவாசகர் அழைக்கிறார். ஆத்மாவின் தன்மையே தத்போதத்தின் தன்மையாகவும் இருக்கிறது. 

 தத்போதம், தலைவன் தலைவியுடன் சேருவதைப் பல விதங்களில் தடுக்கப் பார்க்கிறது ஏனெனில் தலைவன் தலைவியுடன் சேர்ந்தால் தன்னுடன் சேரமாட்டான் என்பது அதற்கு தெரியும்.  

 சிவானுபவத்தை தனது அறிவால், தத்போதத்தால்காணலாம் என்று ஆத்மா முதலில் எண்ணுகிறது. முடிவில் அது இயலாத செயல் என்பதை உணர்ந்து திருவருள் ஒன்றே தனக்கு உதவ முடியும் என்று முடிவு செய்கிறது. அப்போது அதன் தத்போதம் அகல்கிறது. 

 

2. Discussion with Friend

The soul understands that its previous divine experience was real and to make it permanent it should seek Grace’s help and go forward with its efforts. The primary obstacle it encounters in its path is its Tatbodham or I-consciousness. Manikkavasakar personifies it as the hero’s friend. His nature reflects the hero’s nature.

Tatbodham tries to prevent the soul from merging with the Divine as it knows that when that happens the soul will not associate with it.

The soul thinks that it can attain Siva Anubhavam through its effort, through Tatbodham or limited consciousness. In the end it realizes the futility of the effort and concludes that only Divine Grace can help.  At that point Tatbodham leaves it.

This section describes the conversation between the hero and his friend and how the friend who was against the hero meeting the heroine becomes a friend after realizing the hero’s resolution. 

Monday, 24 March 2025

Summary of section 1. Natural union

  சுருக்கம்

1. அனுபவம்: அரசனின் பணிக்காக சென்றுகொண்டிருந்த மாணிக்கவாசகர் முதலில் சிவனின் காட்சியைப் பெறுகிறார், உயருணர்வு நிலையைப் பெறுகிறார். அது அவரது முயற்சி இல்லாமல் இயற்கையாக நடைபெறுகிறது.

2. சந்தேகம்: சிறிது காலமே பெற்ற அந்த அனுபவம் அவருள் பல சந்தேகங்களை எழுப்புகிறது. தான் எங்கே அந்த அனுபவத்தைப் பெற்றோம்? காரண சரீரமான வானத்திலா, சக்கரங்கள் கொண்ட ஸூக்ஷ்ம உடலிலா, புனல் அல்லது உணர்ச்சிகள் நிறைந்த மன தளத்திலா, உடலைக் கடந்தா, அதை அளித்தது யார், அது மரண அனுபவமா, காமத்தினால் ஏற்பட்டதா,அதை அளித்தது தேவருலக மங்கையா என்பது போன்ற கேள்விகள் அவருள் எழுகின்றன.

3. அப்போது தனது நிலை: அந்த அனுபவம் தன்னுள் தனது விழிப்பு நிலையில் எழுந்தது. தனது கால் நிலத்தில் படுவதால் தான் இறக்கவில்லை, உலகைவிட்டு வேறு உலகுக்குப் போகவில்லை, தான் இன்னும் மனிதத் தன்மையுடன், மனித உருவில்தான் இருக்கிறோம் என்று உணருகிறார்.

4. யார் அளித்தது இதை: இவ்வாறு நிகழ்ந்த அனுபவம் தனது மும்மலங்களை விலக்கி தனது ஆணவத்தைக் குறைத்த இறைவனால் என்று அவருக்குப் புரிய, அதைத் தந்த குண்டலினி சக்தியை வியக்கிறார்.

5.எதற்காக அளித்தது: எதற்காக குண்டலினி சக்தி அந்த அனுபவத்தைத் தனக்குக் கொடுத்தது என்று யோசிக்கும் அவர், தனது பிறப்பு என்னும் பிணிக்கும் அதன் விலகல் என்ற மருந்துக்கும் காரணம் அந்த சக்தியே என்று உணருகிறார். அதை இறைவன் தனது கடாக்ஷத்தால் நிகழ்த்துகிறார் என்று தெளிகிறார்.

6. அந்த அனுபவத்தின் சாத்தியக்கூறு: அந்த செயல் எவ்வளவு கடினமானது என்பது அவருக்குப் புரிகிறது. கீழ் திசையில் இருக்கும் ஒரு கடலில் இட்ட ஒரு குச்சியை அது தொலைந்து போகாமல் மேல் கடலை அடைவித்து, அதை சரியான விதத்தில் இட்டு அந்த கடலில் இருக்கும் ஒரு நுகத்தடியில் உள்ள ஒரு துளையினுள் செலுத்தவது எவ்வளவு கடினமோ அதைப் போல கடினமானது என்பதும் அந்த செயலைச் செய்தது சக்தியே என்றும் அவருக்குப் புரிகிறது.

7. அது எவ்வாறு சாத்தியமாயிற்று: ஏழு உணர்வு நிலைகளையும் எட்டு செயல்பாடுகளையும் கொண்ட இறைவன், ஆன்மாவை வெளியுலகை நோக்கி இழுக்கும் தனது சக்திகளை விலக்கிக்கொண்டு குண்டலினி சக்தியை மட்டும் செயல்படுத்தி தனது சங்கல்பத்தை நிகழ்த்தினார் என்று அவர் உணருகிறார்.

8. அந்த அனுபவம்: அந்த அனுபவம் எவ்வாறு ஏற்பட்டது என்று புரிந்தபின் அந்த அனுபவத்தை அவர் எண்ணிப் பார்க்கிறார். பாலும் அதன் சுவையும் போல தான் இறைவனின் ஒரு பகுதியாக இருந்தது, தமது ஸாமரஸ்யமும், அந்த நிகழ்வு ஒருவரும் அறியாத வண்ணம் நிகழ்ந்தது என்பதும் அவருக்குத் தெரிகிறது.

9. அதன் தன்மை: கண்ணின் காணும் தன்மை காதின் கேட்கும் தன்மை போல இப்போது தான் உணரும் இந்த உணர்வும் இறைவனே என்று தெரிந்த அவர், அந்த அனுபவம் நினைக்கும்தோறும் புதியதாக, ஒவ்வொருமுறை அதை எண்ணும்போதும் அதிகரிக்கும் இன்பமாக அறிகிறார்.

10. உறுதிப்பாடு: தான் நினைப்பவை சரிதான் என்பதற்கு இறைவன் வாய் திறந்து உறுதியளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

11. குருவிடம் வினவுதல்: இறைவனின் வாக்கைக் கேட்க இயலாததால் தனது அனுபவத்தைப் பற்றி அறிந்துகொள்ள, தான் நினைத்தது சரி என்று உறுதிபடுத்திக்கொள்ள, அந்த அனுபவத்தைப் பெற்ற பிற ஆத்மாக்களிடம், குருக்கள் சாத்திரங்கள் ஆகியவற்றிடம் வினவுகிறார்.

12. முடிவெடுத்தல்: தனக்கு ஏற்பட்ட அனுபவம் தனது முயற்சி இல்லாமல் எளிதில் கிட்டியதால் தான் அதை மட்டமாக எண்ண மாட்டேன், எளிது என்று நினைக்க மாட்டேன் என்று முடிவு செய்யும் அவர், தான் தனது அனுபவத்தைப் பற்றி வெறுமே எண்ணிக் கொண்டிருக்காமல் அதை மீண்டும் பெற முயற்சிக்க வேண்டும், இனி நிகழுமா, என்று தான் வாட்டம் கொள்ளக்கூடாது என்று முடிவு செய்கிறார்.

13. வாட்டத்தின் காரணம்: எதற்காக தனக்கு வாட்டம் ஏற்பட்டது என்று எண்ணும் அவர், அந்த அனுபவத்தை மீண்டும் பெற வெகு நாட்கள், பல பிறவிகள் எடுக்க வேண்டி வருமோ, தான் அந்த நிலையில் இருந்தால் உலகோர் தன்னைப் பித்தன் என்று பழிப்பார்களோ, எப்போதும் இறையுணர்வில் மூழ்கியிருப்பது என்பது சாத்தியமில்லையோ, அது பழியைக் கொண்டு வருமோ என்ற தனது எண்ணமே என்று அறிகிறார். தனது பிரிவும் கால தாமதமும் மும்மலங்களால் ஏற்படும். இறைவன் அந்த மலங்களை எரிக்கக்கூடியவர் என்பதால் முதல் சந்தேகம் தேவையற்றது. தான் அல்லது ஆத்மா என்பது சிவசக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடு, அந்த ஐக்கியம் எப்போதும் இருப்பது, சிவசக்திகள் ஒரே உருவில் எப்போதும் சேர்ந்திருப்பவர்கள். அதனால் அந்த நிலை பழியை ஏற்படுத்தாது, அந்த நிலை தனக்கு உரியதுதான் என்று உணர்கிறார்.

14. யாராலும் அதைத் தடுக்க முடியாது என்று தனக்கு உறுதி கூறிக்கொள்தல்: இவ்வாறு இறைவனின் சங்கல்பத்தால் ஏற்பட்ட அனுபவத்தை பிரிக்கக்கூடிய சக்தியை யார் பெற்றிருக்க முடியும் என்று தைரியமாகக் கேட்டு தாபத்ரயம் எனப்படும் தனது இயல்பு, இயற்கை சக்திகள், தேவ சக்திகள் என்ற எதாலும் அந்த அனுபவத்தைத் தடுக்க முடியாது என்று உறுதியாக அறிந்து கொள்கிறார்.

15. தனது நிலை: இந்த அனுபவம் பெற்ற தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்று சோதிக்கும் அவர், தான் இறைவனுக்கு வெகு அருகில், அந்த அனுபவம் தரும் நிலைக்கு வெகு அண்மையில்தான் இருக்கிறோம் என்று அறிந்துகொள்கிறார். அதனால் அந்த அனுபவம் கடினமானதாக இருந்தாலும் எட்ட முடியாததல்ல என்று அறிந்துகொள்கிறார்.

16. பிரிவு: தான் பெற்ற அந்த அனுபவத்தை நிரந்தரமான ஒன்றாக மாற்ற வேண்டுமானால் அதையே எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்காமல் அதிலிருந்து வெளிவந்து, தன்னை அனைவரிடமுமிருந்து மறைத்துக்கொண்டு தனது சாதனையைச் செய்து ஒரு நாள் அதை அடைய வேண்டும் என்று உணர்கிறார்.

17. அந்த அனுபவத்தின் நிலம்: தான் பெற விரும்பும் அனுபவம், குண்டலினி சக்தியின் தளம் எவ்வளவு உயர்ந்தது, அருமை வாய்ந்தது, தான் முன்பு பெற்ற அனுபவம் அந்த சக்தியின் நீர்மையினால் ஏற்பட்டது. தனது சக்தியால், முயற்சியால் அல்ல, அதனால்தான் அதை கனவோ, தன்னால் புரிந்து கொள்ள முடியாது ஏதோ ஒன்றோ என்று தான் எண்ணினோம் என்று உணர்கிறார்.

18. அடுத்த படிகள்: இவ்வாறு தனது அனுபவத்தைப் புரிந்துகொண்ட பின் அதைத் தக்க வைத்துக்கொள்ளும் தனது முயற்சிக்கு உதவக்கூடியது யார் என்று பார்த்தபோது அது இறைவனின் அருள் என்று தெரிந்துகொள்கிறார். இறைவனுடன், குண்டலினி சக்தியுடன், எப்போதும் பிரியாமல் இருப்பது, அதன் உயிர்த்தோழி அதன் அருள், அந்த அருளே தன்னை அந்த உயர்ந்த நிலையில் சேர்க்கும் என்று உணர்ந்துகொள்கிறார்.

Summary
1. Experience
While traveling on the king’s errand, Manikkavasakar first beholds a vision of Lord Shiva and attains a higher state of awareness. This happens naturally, without any deliberate effort on his part.

2. Doubt
After having that experience for a brief while, many questions arise in him: “Where did I receive this experience? Was it in the causal (kāraṇa) body, in the subtle body with its chakras, in the mind that is likened to water and full of emotions, or beyond the body altogether? Who gave me this experience? Was it a death-like state, triggered by lust, or by a celestial maiden?”

3. His State at That Moment
He realizes that the experience arose in his normal, wakeful state. Since he is still standing on earth, he has not died nor departed to some other realm. He feels his human nature and bodily form remain intact.

4. Who Bestowed This?
Recognizing that this new and lofty experience removed his triple impurities (mummalam) and subdued his ego, he understands it was conferred by God. He marvels at the Kundalini Shakti that bestowed it.

5. Why It Was Given
Pondering why Kundalini Shakti granted him such an experience, he realizes that the same power is the “medicine” that can free him from the bondage called birth. He understands that God performed this feat through His gracious glance (kataaksha).

6. How Difficult That Experience Is
He grasps how extraordinarily difficult this feat must be. It is likened to dropping a small stick into an ocean below, not letting it drift away, then managing to bring it to an upper ocean and place it precisely into the hole of a tiny yoke there—impossibly difficult. Yet the Shakti accomplished exactly that.

7. How It Became Possible
God, who encompasses seven levels of awareness and eight functions, withdrew the forces that usually draw the soul outward toward the external world. He activated only the Kundalini Shakti, thereby fulfilling His will. That made this remarkable experience possible.

8. Reflecting on the Experience
Once he understands how that experience occurred, he contemplates it. He compares it to milk and its taste—completely integrated. He also realizes it took place in such a way that no one else was aware of it.

9. Its Nature
Just as seeing is intrinsic to the eye and hearing to the ear, the consciousness he experiences now is itself the Lord. The more he thinks of this experience, the newer it seems each time; every recollection brings an ever-deepening bliss.

10. Affirmation
He longs for the Lord to “open His mouth” (speak) and confirm that what he thinks is indeed correct.

11. Consulting a Guru
Since he cannot literally hear God’s voice, he seeks to know more about his experience and confirm its authenticity by consulting others who have had the same experience, as well as gurus and scriptures.

12. Making a Decision
Although he received this experience very easily, without any conscious effort, he decides not to regard it as something trivial or merely “simple.” He resolves that he should not merely keep ruminating about the experience; he must strive once more to attain it. He also decides that he should not let himself be tormented by wondering whether it will ever happen again.

13. The Reason for His Torment
He thinks about why he feels distressed. It is because he fears it may take many days—or even many lifetimes—to regain that experience. He worries that if he remains in that state, the world might mock him as a madman, or that it may be impossible to be perpetually immersed in God-consciousness. These thoughts themselves cause his mental anguish.
He realizes that such separation and delay come from the triple impurities (mummalam). Since God has the power to burn away these impurities, his first doubt is unnecessary. He further understands that the Self (ātma) is the expression of the union of Shiva and Shakti, who always abide as one single form. Hence, abiding in that state does not bring blame; it is indeed his true birthright.

14. Conviction That No One Can Obstruct It
With renewed courage, he wonders, “Who could possibly have the power to break an experience granted by God’s own will?” He confidently concludes that neither the threefold natural afflictions (tāpatrayam), nor other natural forces, nor even divine powers can prevent that experience.

15. His Current State
Reflecting on his position now, he sees he is very close to God and to the state bestowed by that experience. Therefore, although it is difficult, it is not beyond reach.

16. Separation
If he wants to make that experience permanent, he must do more than merely keep recalling it. He must come out of the memory, hide himself away from everyone, and practice spiritual discipline. One day, through this sustained effort, he can fully attain it.

17. The Realm of That Experience
The plane of the Kundalini Shakti, which he now longs to experience again, is exalted and beyond value. The earlier glimpse he had was due to that Shakti’s grace, not his own strength or endeavor. That is why it felt like a dream or some mysterious phenomenon that he could not fully comprehend.

18. Next Steps
Having thus understood the nature of his experience, he looks for the means to sustain it—and sees that the only recourse he has is seeking the help of God’s grace, the inseparable companion of the Divine.

Divine's eyes and glance

  1.18 part 2

அக்ஷ என்ற சொல் கண்கள், என்று பொருள்படும். இதை பெண் தெய்வமாகக் குறிக்கும்போது அக்ஷி என்கிறோம். இந்த பார்வையில் அக்னியை, ர அல்லது ரம் என்ற எழுத்தை சேர்க்கும் அது அக்ஷரம் ஆகிறது. இவ்வாறு சமஸ்கிருதத்தில் உள்ள அ முதல் க்ஷ வரை உள்ள எழுத்துக்கள் அக்ஷரங்கள் எனப்படுகின்றன. க்ஷவுக்கு முந்தைய ஹ என்ற எழுத்து அ வுடன் சேர்ந்து அஹம் அல்லது ஆத்மாவாக வெளிப்படுவதைப் போல, அக்ஷம் என்ற பார்வை, அக்ஷரமாக வெளிப்படுகிறது.

நாம் ஒவ்வொரு எழுத்தையும் சொல்லையும் வாக்கியத்தையும் உச்சரிக்கும்போது நமது சக்தியை அதனுடன் சேர்த்து வெளிப்படுத்துகிறோம், செலவழிக்கிறோம். இவ்வாறு வெளிப்படும் சொல்லே செயலாகிறது. அக்ஷரம் என்றால் அழிவற்றது என்று பொருள். நமது சொல்லும் செயலும் எண்ணமும் (எண்ணமும் ஒரு மொழியிலேயே ஏற்படுகிறது) அழிவதில்லை பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் சேமிக்கப்படுகிறது. அதனால்தான் மௌனம் பரிந்துரைக்கப்படுகிறது. மௌனத்தினால் நமது சக்தி சேமிக்கப்பட்டு தேவைப்படும் விதத்தில் செலவழிக்க நமக்குக் கிடைக்கிறது. அந்த சக்தி தேவையற்ற உருவில் நிரந்தரமாக இந்த உலகில் தங்குவதிலிருந்து தடைசெய்யப்படுகிறது.

தேவியின் கண்கள் இவ்வாறு எழுத்துக்கள் என்ற தளமாகவும் அவற்றில் ஓடும் சக்தியாகவும் இருக்கின்றன. அதனால் அவை சூரியன் சந்திரன், அக்னி என்று குறிக்கப்படும் அறிவைக் கொடுக்கும் சக்திகளாகக் காட்டப்படுகின்றன. அதனால் இந்த பாடலில் சிவம் அல்லது தலைவி தனது கண்களால் தலைவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவைக் கொடுக்கிறாள்.

The word “akṣa” means “eyes.” When referring to it as a feminine deity, it is called “akṣi.” From this perspective, when one adds the letter “ra” (or “ram,” relating to fire) to “akṣa,” it becomes “akṣaram.” Likewise, in Sanskrit, the letters from “a” to “kṣa” are called akshara-s. Just as the letter “ha,” which comes before “kṣa,” combines with “a” and appears as “ahaṁ” (or ātman)—so too does “akṣam,” becoming “akṣaram.”

Whenever we utter any letter, word, or sentence, we merge our own energy with it and express or expend it. The word that emerges in this way becomes action. The term “akṣaram” means “indestructible.” Neither our words, deeds, nor thoughts (thought itself arises in some language) ever truly vanish; they remain stored somewhere in the universe. That is why silence (maunam) is recommended. By observing silence, we preserve our energy so we can expend it when and where it is necessary. It also prevents the energy from being permanently locked into unnecessary forms in this world.

The goddess’s eyes function as the basis of letters (akshara-s) and as the power that flows through them. Hence, they are represented as the Sun, the Moon, and Agni (Fire), which bestow knowledge. Therefore, in this verse/song, Śiva (or the heroine) uses her eyes to impart knowledge to the hero—guiding him on what must be done.

1.18 Recognizing the friend

  1. 18. பாங்கியை அறிதல்

உயிர் ஒன்றும் உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவளுக்கு என்னோடு என்ன
பயில்கின்ற சென்று செவியுற நீள் படைக் கண்கள் விண் வாய்ச்
செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச் சிற்றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தன் அருள் எனலாகும் பணி மொழிக்கே.

பொருள்:
வானத்தில் முப்புரங்களை அழித்தவன் தில்லை சிற்றம்பலத்தில் தொடர்ந்து நடனமாடும் கூத்தனின் அருள் என்ற இவளுக்கும் காதுவரை நீண்ட கண்களையும் இனிமையான சொற்களையும் உடைய எனக்கும் ஒரே உயிர், ஒரே மனம், ஒரே பெருமை.

தலைவி தனது தோழிக்கூட்டத்தில் ஒரு தோழியை அடிக்கடி பார்க்கிறாள். அவளே தனது உயிர்த்தோழி என்றும் அவள் மூலம் தன்னை அடையலாம் என்றும் அவள் கண்ணால் காட்டுகிறாள் என்று தலைவன் உணர்கிறான். அந்த தோழி அன்று ஒருநாள் முப்புரம் எரித்தவனது, தில்லை சிற்றம்பலத்தில் இருக்கும் கூத்தனின் அருள்.

சிவபெருமான் முப்புரங்களை எரித்தபோது அந்த அசுரர்களுக்கு நன்மையே செய்தான். அவர்களை தனது வாயில் காப்போராக நியமித்தான். அதைப் போல அருள் சக்தி தலைவனின் மும்மலங்களை அழித்து தூய்மைப்படுத்தி சிவ போகத்தை அருள்வாள் என்று தலைவி குறிப்பால் உணர்த்துகிறாள்.

தோழியின் உயிரும் உளமும், அதாவது இருப்பும் எண்ணமும் தலைவியின் உயிரும் உளமும் ஒன்றாக இருக்கின்றன. இருவரது இலக்கும் தலைவனை, ஆத்மாவை, தலைவியுடன், சிவத்துடன் சேர்ப்பது. அதனால் அவளது உதவியால் தன்னை நிரந்தரமாக அடையலாம் என்று தலைவி, சிவம், உணர்த்துகிறாள்.

இந்த உபதேசத்தைத் தருவது இறைவனின் கண்கள், நயன தீக்ஷை. உயிரின் தாபத்தை, சந்தேகத்தை, பயத்தை சிவன் முப்புரங்களை செற்றதைப் பல தலைவியின் கண்கள் போரிட்டு வெல்வதால் அவை படைக்கண்கள். அவளது பார்வை அல்லது கடாக்ஷம் மந்திரங்களாக அவளது வாக்காக உயிர்கள் கேட்கின்றன என்பதைக் காட்ட அவளது கண்கள் காது வரை நீண்டு உள்ளன.

அவளது வாய்மொழி பணி மொழி, அனைவரையும் பணியச் செய்யும் மொழி, பிறரை செயலில் ஈடுபடுத்தும் வாக்கு. அதனால் தலைவனுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று அவள் வழி காட்டுகிறாள்.

இறையுணர்வு எவ்வித முயற்சியுமின்றி கிடைத்தாலும் அதை நிரந்தமானதாக மாற்ற இறையருளின் துணையுடன் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று இப்பாடல் உணர்த்துகிறது. தில்லை சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமானின் திருவுருவம் அவரது அருளைக் காட்டி இதை எவ்வாறு நிகழ்த்துவது என்ற வழிமுறையைத் தருகிறது.

செயிர்- கோட்டை. கூத்தன்- அவனது நடனங்கள் அல்லது செயல்பாடுகள் அவனது அருளே.
இத்துடன் இயற்கைப் புணர்ச்சி முடிகிறது.

1.18 Recognizing the friend

Our soul is but one, our mind is also one, our glory is also one for her and me”
Points the lady with long eyes extending up to her ears, in the Tillai Citrambalam
Of the dancer who destroyed the three fortresses in the sky.
Showing his grace, the one with a sweet voice.

Simple meaning:
The heroine points to her friend, the Lord’s grace or Arul, as her closest companion. She indicates that she and Grace are so close that they share a single life, intention, and glory. She thus suggests that the hero can approach Grace for help.

Spiritual meaning:
When Siva destroyed the three cities or Tripura, he did not harm the Asuras who had constructed them. In fact, he employed them as his gatekeepers. Similarly, Grace or Arul Shakti will transform the soul’s three mala, Anava, Karma and Maya into guards that watch the soul’s merging with the Divine. Scriptures insist that the three innate impurities should be destroyed to merge with the Lord. Here, Manikkavasakar shows that they should be transformed into guards that protect the soul.

The friend’s life and intention are the same as the heroine’s. That is, their goal is to have the hero, soul, merge with the heroine, Divine. Sivam is indicating that the soul can, with Arul shakti’s help, merge with him permanently. This upadesa is given by her eyes, nayana deeksha, that the soul hears within himself. Hence, it is said that her eyes extend up to her ears. Her
eyes are like an army, they fight the soul's innate impurities, the three cities and transform them. The heroine’s words are ‘pani mozhi’ pani means sweet, one that bids other to do something, one that makes others surrender. Sivam’s instructions have all these three qualities. Hence, it is making the soul surrender to its instructions and proceed with the necessary action.

Even if Divine experience occurs by accident a soul has work, with the help of grace, to make it a permanent experience. The Lord’s form as the eternal dance, Koothan, gives the pathway, the instruction, to achieve it.

The section, natural union, concludes with this verse.

Sunday, 23 March 2025

1.17 Admiring the rare good fortune

  1.17. அருமை அறிதல்

புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும் தன் பூங்கழலின்
துணர்போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லைசூழ் பொழில் வாய்
இணர் போது அணி குழல் ஏழை தன் நீர்மையின் நீர்மை என்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே

பொருள்:
பூமியையும் ஆகாயத்தையும் மலைகளையும் படைக்கின்றவன் ஒரு நொடிப்போது தனது திருப்பாதங்களாகிய பூங்கொத்துக்களை எனக்கு ஆபரணமாக்கும் பழமையானவனது நீர்மை, நீர்மை என்றால் தில்லை புலியூரில் உள்ள பொழிலில் பூங்கொத்துக்களை அணிந்த கூந்தலையுடைய தலைவியின் தன்மை இவ்வாறிருக்க நான் இவளுடன் கூடியது கனவோ வேறு எதுவோ, நான் அறியேன்.

தலைவியின் பெருமை, அவளது சூழல் அவளது தோழிகள் ஆகியவற்றைப் பார்த்து அத்தகைய தலைவியா தன்னுடன் புணர்ந்தது, அது உண்மையில் நிகழ்ந்ததா அல்லது கனவா அல்லது வேறு எதுவுமா என்று தலைவன் வியக்கிறான்.

சிவன் சக்தியுடன் கலந்து அந்த ஐக்கியத்தால் உலகைப் படைக்கிறார். அந்த கலப்பு ஒருவராலும் இது என்று அறிய முடியாதது, விளக்க முடியாதது. அதன் விளைவே, ஆனந்தத்தின் வெளிப்பாடே நிலமும், வானும் மலைகளும். ஜீவன் சிவத்துடன் கலப்பதும் அத்தகைய கலப்பே, அதில் வெளிப்பட்ட இன்பம் உலகளவு என்று மாணிக்கவாசகர் குறிப்பால் உணர்த்துகிறார்.

நிலம் கண்ணால் காணக்கூடிய, மாறாத, உருவை உடையது. விசும்பு அல்லது ஆகாயம் நுண்மையானது. உருவமற்றது, ஆனால் அதன் இருப்பை அனைவரும் அறிவர். அதுவும் மாறாதது. மலை வளர்ந்து தேய்வது, மாறும் உருவைப் பெற்றது. இவ்வாறு இந்த மூன்றும் இறைவனின் உருவம், அருவம் அருவுருவத்தைக் குறிக்கின்றன. தலைவனின் இன்பமும் ஒரு உருவமாக, அருவமாக, அருவுருவமாக வெளிப்படக்கூடியது. ஆத்மாவின் ஆனந்தம் கண்ணீராக, அடக்கமாக, உருமாற்றமாக ஒரு உருவில் வெளிப்படலாம், இன்னதென்று பிறருக்கும் தனக்குமே காட்ட முடியாததாக, உள்ளே ஊறும் இரையுணர்வாக உருவமற்றதாக இருக்கலாம் அல்லது நினைக்கும்போதெல்லாம் மேலே எழும் உணர்ச்சி வெளிப்பாடாகவும் பிற சமயங்களில் நதி போல உள்ளே அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஆனந்தமாக அருவுருவமாக இருக்கலாம்.

இறைவன் மாற்றமின்மை, மாற்றம் உடைமை என்ற இரு தன்மையவர். இதை கூடஸ்த நித்யத்வம் மற்றும் பிரவாக நித்யத்வம் என்று கூறுவர். இவற்றை சிவ சக்திகள் என்றும் கூறலாம். எப்போதும் மாற்றமுடையது ஆனால் நிரந்தரமாக இருப்பது சக்தி. மாற்றமில்லாமல் எப்போதும் இருப்பது சிவம். இந்த இரண்டும் கூடும்போது பிறப்பது ஆனந்தம். இதையே புராணம் என்ற சொல் குறிக்கிறது. புரா- பழமையானது, நவ- புதியது. ஆத்மா நான் அன்று அங்கு இருந்தேன் என்று கூறுகிறது. அப்போது இருந்த ஆத்மா இப்போது இல்லை என்று அதற்கு பொருளல்ல. அந்த ஆத்மா இப்போதும் உள்ளது. ஆனால் அது இருந்த கால தேசங்கள் வேறு, இதுவே பிரவாக நித்யத்வம். பழமையிலும் இருந்தது ஒரு அனுபவமாக, இப்போதும் இருக்கிறது வேறொரு அனுபவமாக.

நிலம் என்பது பொதுவாக மூலாதாரத்தையும் வானம் என்பது சகஸ்ராரத்தையும் குறிக்கும். மலை என்பது நிலத்திலிருந்து வானத்தை நோக்கி எழுவது, சக்கரங்களின் ஊடே எழும் சக்தி. இவ்வாறு பராபரம் புணர்ந்து பராபரை ஆகி, நிலமும் வானும் போல சிவ சக்திகள் ஆகிறது. அவற்றின் ஊடே ஜீவன் மலையைப் போல பயணிக்கிறது.

நிலமும் வானும் அசைவற்றவை- சிவம். மலை-அசைவுள்ள சக்தி. நிலமும் மலையும் வேறாகத் தோன்றினாலும் நிலத்திலிருந்து எழுந்து தாழ்வது மலை. சிவத்திலிருந்து எழுந்து அடங்குவது சக்தி.
இங்கு தலைவி வான் போல, நிலம்போல மாறாமல் இருக்கிறாள். தலைவன், ஜீவன், சந்தேகம் நம்பிக்கை என்று மாறிக்கொண்டிருக்கிறான், மலை போல. அவனது நம்பிக்கை அவனது இன்பத்தை வளர்க்கிறது, சந்தேகம் அதைத் தேய வைக்கிறது.

புணர்ந்தோன் நிலமும் என்பது இறைவன் அவற்றுள் கலந்து இருக்கிறான் என்பதைக் காட்டுகிறது.
தனது பூங்கழலின் மலர்களை சிவன் ஜீவனுக்கு அணியாக்கியது- மலர்கள் சக்கரங்கள். அவை சிவனின் பாதங்களைக் குறிக்கும். அவை ஜீவனுக்கு அணிகள். அந்த சிவானுபவத்தை தனது குழலில் அணிந்திருப்பவள் தலைவி, சக்தி. அந்த சக்தியே இங்கு தலைவியாகக் காட்டப்படுகிறாள். குழல் என்பது அசைவை, செயல்பாட்டை உடையது. அதுவே சக்தி நிலை.

தனது மலர்போன்ற திருவடிகளை இறைவன் தனது தலையில் வைத்து அருளிய திருவடி தீக்ஷையையும் இது குறிக்கிறது.
உலகையே தனது சங்கல்பத்தால் படைப்பவன் தனது சங்கல்பத்தால் என்னுடன் புணர்ந்தான், நான் செய்த செயலின் பலனாக அல்ல.

இணர்போது ஏழை- ஏழு+ஐ- ஏழு சக்கரங்கள், ஐ என்பது ஐம் பீஜம். வாக்பவ கூடம், தலைப்பகுதியில் குறிக்கப்படுவது. ஏழை- தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாததால் ஏழை.

சக்கரங்களின் மூலம் ஜீவசிவ ஐக்கியத்தை ஏற்படுத்துவது சிவத்தின் நீர்மை. நீர்மை என்பது நீரின் தன்மையான குளுமை, இன்பம் பயப்பது, தாபத்தைத் தணிப்பது. சிவம் இவையனைத்தையும் ஜீவனுக்குத் தருகிறது.

அத்தகைய உயர்ந்த தலைவியுடன் தான் புணர்ந்தது உண்மையில் நிகழ்ந்ததா, கனவா அல்லது தான் அறியமுடியாத ஒன்றா என்று வினவுகிறது. அதன் விளைவை ஜீவனால் காண இயலலாததால் எழுந்த சந்தேகமும் வியப்பும் இது. ஒன்றைத் தீவிரமாக நினைக்கும்போது அது கனவாக வெளிப்படுகிறது. இந்தப் புணர்ச்சியும் தனது தீவிர விருப்பத்தினால் தோன்றிய கனவா, அத்தகைய உயர்ந்த தலைவி தன்னுடன் கலந்தது கனவாக இருக்க முடியாது ஏனெனில் அவள் என் முன் நிற்கிறாள் என்று உயிர் வியக்கிறது.

1.17 Admiring the rare good fortune
The one who merges (with, creates) land, sky and mountain, the one who
Made his flower-like feet my ornament, the ancient one, in the grove in Tillai
The woman with a flower bunch on her hair, it is her supreme grace
Is this union a dream or something else? I do not know.

Simple meaning:
The union with the lady whose hair is adorned with flower bunch, in the Tillai grove of the one who creates the earth, the sky and the mountain (merging with them), the one who offered his flower-like feet as my ornament, the ancient one, is due to her grace. Was the union a dream or something else? I do not know.
Seeing the company the heroine keeps, her position and status the hero wonders whether he really united with her due to her grace or was it all a dream or something else.

Spiritual meaning:
Siva merges with shakti and the bliss from the union manifests as the universe. One cannot describe the union as this. Similarly, the soul’s union with the Divine is also indescribable. The bliss is as magnificent as the world..

The earth has a perceivable form and is unchangeable. The sky is subtle, formless but everyone knows its presence. The mountain has a form that grows and shrinks. Thus, the divine bliss emerged as those with a form, formless and with a formless-form. The soul’s bliss also emerges as these three. Its physical transformation, tears of bliss can be perceived and hence with a form. The bliss that runs constantly within as an undercurrent that cannot be described to others or even to oneself as this, is the formless expression. The upsurge of emotion, tears suddenly and it subsiding later and flowing quietly can be called the formless-form.

The Divine exists as in the two states, being changeless and with change. These are called kootastha nityatvam and pravaaha nityatvam. These can be called Siva and shakti. Shakti is the one that changes constantly but is eternal. Siva is changeless constant eternal. When these two merge, bliss emerges. The word purana refers to this, it is pura-the ancient, unchanging, nava- the ever new but eternal. When a person says I was there then it means he was present at a particular place at a specific time. It does not mean that entity is not present now, it also means the entity that was present in that time and space framework does not exist now. It is different. This is pravaaha nityatvam.

The Divine exists as in the two states, being changeless and with change. These are called kootastha nityatvam and pravaaha nityatvam. These can be called Siva and shakti. Shakti is the one that changes constantly but is eternal. Siva is changeless constant eternal. When these two merge, bliss emerges. The word purana refers to this, it is pura-the ancient, unchanging, nava- the ever new but eternal. When a person says I was there then it means he was present at a particular place at a specific time. It does not mean that entity is not present now, it also means the entity that was present in that time and space framework does not exist now. It is different. This is pravaaha nityatvam.

Earth represents muladhara and sky the sahasrara. The mountain traverses these two. It represents the shakti that ascends through the chakras. The sky and earth are like Siva and Shakti and the jiva travels between these two states like the mountain.
The earth is immobile- Sivam. The mountain grows and shrinks- Shakti. Even though the mountain appears different from earth it is form of earth, it emerges and subsides in earth. Shakti rises and abides in Sivam.

Here, the heroine is changless, like the earth and sky. The hero swings between hope and despair, doubt and conviction. His trust gives him happiness and doubts erodes it.
The chakras are loci of Siva shakti, their paduka. The Divine made them an ornament for the soul. Shakti has adorned these flowers, Siva’s sacred feet, the chakras on her hair. The hair represents movement.

Manikkavasakar talks about his Tiruvadi deeksha or initiation when the Guru places his feet on the disciple’s head. Manikkavasakar wonders that the one creates the universe by his will decided to unite with me, willingly, not as a result of his action.

The heroine is called a pauper, ezhai- the word when split as Ezhu- means seven and ai- the shakti letter. Thus, it indicates the seven chakra the storehouses of shakti. She is a pauper lacking anyone, anything comparable or superior to her.

Jiva Siva aikhya occurs in the chakra due to Sivam’s grace, neermai. Neer- water. Grace is cool, gives happiness and comforts the heat of samsara, like water. The soul doubts whether it really united with the Divine as it is unable to see an effect. When someone thinks about something deeply the object of such a contemplation manifests as a dream. The hero wonders whether what he experienced was such a manifestation. He is also convinced that it is not imagination or dream, that she was an apparition, as the heroine stands before him.

Saturday, 22 March 2025

1.16 Sending to the place of dance/play

 1.16. ஆடிடத்து உய்த்தல்

தெளிவளர் வான் சிலை செங்கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்த
அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெருந்தேன்
துளி வளர் சாரல் கரந்து உங்கனே வந்து தோன்றுவனே

பொருள்:
பெரிய வில்லை ஒத்த புருவமும் சிவந்த கொவ்வை பழம் போன்ற இதழையும் வெண் முத்து போன்ற பற்களையும் முழு மதி போன்ற முகத்தில் பெற்றுள்ள, கருணை மிக்க பூங்கொடி போன்ற தலைவியே! நீ உன் தோழிகளுடன் உன் இடத்தில் விளையாடுவாயாக. ஒளியுடைய தில்லையில் உள்ள, யாராலும் அளக்க முடியாத ஒருவனது மலையான கயிலையில், சிந்துகின்ற பெரிய தேன் துளிகள் இடைவிடாது பெருக்குகின்ற சாரலில் உள்ள சோலையில் நான் மறைந்திருந்து பின் உன் இடத்தில் வந்து தோன்றுவேன்.

பேரின்பநிலை:
தலைவியை அவளது இடத்துக்குப் போய் ஆடு, நான் கயிலை மலையில் உள்ள சாரலில் ஒளிந்திருந்து பின் நீ இருக்கும் இடத்தில் வந்து தோன்றுவேன் என்கிறான் தலைவன். இப்பாடலில் தலைவியின் இடம் எது என்று கூறப்படவில்லை.

தெளிவார் வான் சிலை- தெளிந்த அழகிய வான் போன்ற புருவம். தெளிவைப் பெற்றவரது விஸ்மயம் அல்லது ஆச்சரியத்தைக் குறிக்கும் வான் நோக்கி உயர்ந்த புருவம். கண்கள் பூரணமாகத் திறந்திருக்கும்போது புருவம் மேலே ஏறுகிறது. இது சிவத்தின் கடாக்ஷம் பூரணமாக ஆத்மாவுக்குக் கிட்டியுள்ளது என்பதைக் குறிக்கிறது. இது மாணிக்க வாசகர் பெற்ற நயன தீக்ஷையைக் குறிக்கிறது.

செங்கனி- தலைவியின் இதழ்கள் நிறத்தாலும் சுவையாலும் கனியை ஒத்திருந்தன. சிவத்தின் வாயிலிருந்து வரும் சொற்கள் ஞானத்தால் கனிந்தவை, இனிமையானவை, உயிர் கொடுப்பவை. இது வாக் தீக்ஷையைக் குறிக்கிறது.

வெண் முத்தம்- வெண்மையான முத்து போன்ற பற்கள். தேவியின் பற்கள் மந்திர அக்ஷரங்களைக் குறிக்கும். தேவியின் ஷோடசி மந்திரம் 16 எழுத்துக்களைக் கொண்டது. பிரகாச விமர்சம் என்று கொண்டால் அவை 32 எழுத்துக்களாகின்றன. மந்திரங்களை உச்சரிக்க பற்கள் அவசியம். இதையே ஆண்டாள் ‘வெண் பல் தவத்தவர்’ என்று திருப்பாவையில் பாடியுள்ளாள்.

திங்கள்- மதி, தலைவியின் முகம். கருணை, இனிமையான சொற்கள், தூய மந்திர ஜபம் ஆகியவை மதியின் அம்சங்கள்.

அளி வளர் வல்லி- வண்டுகள் கண் வளரும், மொய்க்கும் கொடி. வண்டுகள்-உயராத்மாக்கள். அவை சிவத்தை சூழ்ந்து போற்றி ஒலி எழுப்பியபடி மொய்க்கின்றனர். சிவானுபவம் மின்னல் கொடி போல ஒரு நொடி தோன்றி மறைகிறது.

அளவா ஒளி வளர் தில்லை ஒருவன்- அளவுக்குட்படாத, அளக்க முடியாத ஒளி இறைவன். ஆத்மாவின் அறிவு ஒளி, ஞானம் அளக்கக்கூடியது. இறைவனின் ஒளி அளக்க முடியாததுடன் வளர்ந்துகொண்டே இருப்பது. அதனால் அவன் ‘ஒருவன்’, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஏகன். சிவனின் அருவுருவம் இங்கே குறிக்கப்படுகிறது.

கயிலை உகு பெருந்தேன் துளி வளர் சாரல்- லலாடம், கயிலை என்னும் சகஸ்ராரத்தின் அருகில் இருப்பது.
கரந்து- மறைவாக, ஒருவரும் அறியாதவாறு இங்கு தங்கியிருப்பேன். தீக்ஷை பெற்ற ஆத்மா தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு தனது சாதனையை செய்ய வேண்டும். ஆகினையை கடந்த ஆத்மா அதன் பின் இறையருளால் மட்டுமே முன்னேறுகிறது. சும்மா இரு என்னும் நிலை இது. அதுவே சக்தியின் ஆட்டம். பூரணமாக ஆகினை உணர்வு நிலையில் இருப்பவர்கள் பஞ்ச பூதங்களைக் கடந்தவர்கள், தபோ லோகத்தில் இருப்பவர்கள். அவர்கள் தூல உடலால் கட்டுப்படுத்தப்படாதவர்கள். அதனால் அவர்களை மானிடர்களால் காண முடியாது.

கயிலையின் சாரலில் அனுபவ முதிர்ச்சி பெற்று, நீயே நான் என்ற கலவியில் உன்னுடன் கலப்பேன் என்றான் தலைவன். அதனால் நீ தெளிவு பெறுவாய் என்பதற்கு தெளி என்று கூறினான்.மனக்குழப்பம் எதுவும் இல்லாத சிவனிடம் தெளி என்று ஆத்மா கூறுவது, தன்னைத் தேற்றிக் கொள்வது.

தான் ஆன்மாவுக்கு செய்த பெரும் உபகாரத்தை எண்ணி சும்மா இருக்காமல் உனது முன்பு மேற்கொண்ட விளையாட்டை தொடர் என்று வேண்டுகிறான் தலைவன். மாணிக்கவாசகரை ஏற்றுக்கொள்வது என்ற விளையாட்டை திருவருள் முதலிய சக்திகளுடன், தோழிகளுடன், தொடருவாய். அப்போதுதான் நான் உன்னை அடைய முடியும், அதனால் உன்னுடைய ஆட்டத்தை நிறுத்தாதே என்கிறான் தலைவன். பிற சக்திகளின் உதவியுடனே ஆத்மா பரமானந்த நிலையை அடைகிறது.
முந்தைய பிறவியில் சிவன் 999 அடியார்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு மாணிக்கவாசகரை மட்டும் விட்டுவிட்டு சென்று விட்டார். அவ்வாறு நிகழந்தபோது மாணிக்கவாசகர் உலக மக்களின் நிலைக்கு தாழ்ந்துவிடவில்லை. அவரது முந்தைய பிறவியில் ஏற்பட்ட இறையனுபவம் பொதிகையில் நிகழ்ந்தது. அந்த நிலையிலிருந்து இப்போது அது நிரந்தரமாக இருக்க அவர் கயிலை செல்ல வேண்டியுள்ளது.

இயற்கை புணர்ச்சி எனும் இந்த பகுதி அவரது முந்தைய பிறவியில் ஏற்பட்ட அனுபவத்தையும் அதனை அடுத்து இப்பிறவியில் அவர் மேற்கொள்ளப் போவதையும் குறிக்கிறது. அவர் குறிப்பிடும் பிரிவு இப்பிறவி. அதனால்தான் இது உண்மையில் பிரிவு அல்ல, ஏனெனில் இறைவன் தன்னுள் அந்தராத்மாவாக இருக்கிறான் என்று அவர் உணர்ந்தவர்..

ஆனந்தமய கோசத்தில் அமிர்தத்தை சுவைத்த மாணிக்கவாசகர் அந்த அமிர்தத்தை தனது வார்த்தைகளாக, திருவாசகம் திருக்கோவையாகக் கொடுத்துள்ளார்.

1.16 Sending to the place of dance/play
The one like a creeper where bees swarm, with beautiful sky-like bow, ruddy fruit, white pearls
In moon, you go ahead and play/dance. I will hide in
In the slopes of Kailaya, the land of the One, the immeasurable effulgent Tillai
That shower drops of great honey and appear there.

Simple meaning:
The lady who is like a creeper where bees swarm, having a great bow like brows, reddish fruit-like mouth, white pearly teeth, in a face like the moon! You go to your place and play/dance, I will conceal myself in the slopes of the Kailaya, the place of the immeasurable effulgent one, Tillai, that spills great honey drops continuously and appear before you there (where you are playing- the place is not mentioned).

Thelivaar van silai- the great sky-like brows. The brows are raised up to indicate wonder, as seen in Bhairava images. It indicates a form of The brows ride up like a bow when the eyes are opened wide. The soul indicates that it received the full vision of the Divine. This indicates Manikkavasakar’s nayana deeksha.

Reddish fruit- the heroine’s lips are like a red fruit in their hue and taste. Sivam’s words were sweet and matured with jnana. They help in sustaining life like a fruit. This indicates the vak deeksha that Manikkavasakar received.

The creeper with bees- bees rest in Sivam, their humming is the sound of brahmari. Siva anubhava occurs like a lightning, a creeper.
The immeasurable, effulgent one in Tillai- the Divine cannot be measured. A soul’s capacities, in contrast, are measurable, limited. The Divine’s effulgence is not only immeasurable, it keeps growing. Hence, he is unique, the incomparable one. Lord’s form as light is referred to here.

The slope with honey- refers to lalata which is close to Kailaya, the sahasrara.
The hero concealing himself- A practitioner, after receiving deeksha, should isolate himself from everything and perform his sadhana. When a soul’s consciousness reaches the ajna and it remains there permanently then it has gone beyond the control of five elements. Its journey further is only by Divine grace. This is Shakti’s play/dance. Those who are in this state are said to be in tapo lokha. They are beyond the control of gross body and so others cannot see them.

The hero promises the heroine that he will mature in his experience and merge with her on the slopes of Kailaya and that she should be clear, free of confusion. The Divine has no confusion. The soul is telling this to itself and recommending leaving the confusion of what to do. It is also praying to the Divine to continue its game as otherwise the soul cannot reach the ultimate state. Even though Kundalini Shakti guides the soul’s journey towards the ultimate the soul needs the help of other shaktis in this journey.

Siva, in Manikkavasakar’s previous birth, took 999 siva devotees with him, leaving only Manikkavasakar behind. Manikkavasakar did not lower himself to the state of worldly people. He will mature the Divine experience that occurred in Pothigai hill in the current birth, in Kailaya, and merge with the Lord.

This section of Tirukkovaiyar, natural union, describes the events in his previous birth and the goal he will purse in this birth. This is the separation he is talking about knowing fully well that there is no real separation as the Lord is within him as the indweller.

Manikkavasakar who tasted the nectar of Divine experience in the anandhamaya kosha is sharing it with us through his nectar-like words, as Tiruvasakam and Tirukkovaiyar.

Friday, 21 March 2025

1.15 Pacifying, explaining the proximity

  1.15. இடம் அணித்து (என்று) கூறி வற்புறுத்துதல்

வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து
இருங்குன்றவாணர் இளங்கொடியே இடர் எய்தல் எம் ஊர்
பருங்குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங் குழையே

பொருள்:
ரிஷிகள் யாகத்தில் தன்னை நோக்கி வந்த குன்றம் போன்ற யானையின் தோலை உரித்த தில்லையம்பலவனின் மலையில் இருக்கும் குறவர் குலத்து இளம் கொடியே, கனத்த காதணியை உடையவளே! எதற்காக வருந்துகிறாய்? எனது ஊரில் உள்ள பெரிய குன்றம் போன்ற மாளிகையின் நுண்மையான சாந்தின் ஒளி உனது ஊரில் உள்ள கருமையான குன்றின் மீது வெள்ளையான சட்டையைப் போல விழுகின்றது.

தனது இருப்பிடம் தலைவியின் இருப்பிடத்துக்கு அருகில்தான் இருக்கிறது என்று கூறி தனக்கும் அவளுக்கும் இடையே பெரிய இடைவெளி இல்லை என்று தலைவன் அவளை ஆற்றுப்படுத்துகிறான்.

மலைபோல வரும் யானையை தோலுரித்த தில்லை அம்பலவன்- கஜ சம்ஹார மூர்த்தி.

கஞ்சுகம்- மேலாடை, அளவுக்குட்படுத்துவது. தன்னுள் இருக்கும் இறைவனை காண முடியாத வண்ணம் ஆத்மா மூடியுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத இறைவன் கருமையான குன்றம் போல் ஆத்மாவினுள் இருக்கிறார். ஆத்மாவின் அறிவு என்னும் ஒளி அதனுள் இருக்கும் இறைவனை ஆத்மாவிற்குக் காட்டுகிறது. இறைவனின் இருப்பை உணர வைக்கிறது. கருப்பு எல்லையின்மையைக் குறிக்கிறது.

அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய மற்றும் ஆனந்தமய கோசம் என்ற பஞ்ச கோசங்களால் ஜீவன் மூடப்பட்டு அளவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஜீவன் என்பது பஞ்ச கோசங்களால் மூடப்பட்ட சிவனே. இந்த கோசங்களை விலக்குவதே சாதனை, அவ்வாறே எல்லையற்ற நிலை சிவானுபவம் கிட்டுகிறது. மலப்பரிபாகம் அல்லது விலக்கம் பெற்ற ஒரு ஆத்மா ஆனந்தமய கோசத்தின் முடிவுக்கு வெகு அருகில் உள்ளது. இறைவன் கருங்குன்றம், அறிவதற்கு அரியவன். அந்த பரனின் அனுபவத்தை, பரமானந்தத்தின் சுவையை ஒரு துளி தருவது ஆனந்தமய கோசம். ஆனால் ஆத்மா அதையும் கடந்து போக வேண்டும்.

இங்கு ஆத்மாவின் ஒளி கோசத்திலிருந்து வருகிறது, பிரகிருதி கலந்தது. அதனால்தான் இறைவன் இன்னும் இருட்டாகத் தெரிகிறார். அந்த ஒளி விலகி ஞான ஒளி கிட்டினால் இறைவன் தென்படுவார்.


தேவி மகாத்மியத்தில் வெண்ணிறமான கௌசிகி சக்தி, காளியை மூடி இருக்கிறாள் கௌசிகீயின் அழகைக் கண்ட சும்ப நிசும்பர்கள் என்ற அசுரர்கள் அவளை மனைவியாக அடைய விரும்புகின்றனர். கௌசிகீ வெளிப்படையான ஆனந்தத்தைக் குறிக்கிறாள். அந்த ஆனந்தத்தை மனிதர்கள் தேடலாம் ஆனால் பரமானந்தம் என்பது காளி, இன்னதென்று கணிக்க முடியாத கருமை. அதனால் கௌசிகீயைத் தேடி வரும் அசுரர்கள் சந்திப்பது கருமையான காளியை. அந்த இன்பம் என்ன என்று தெரியாததால் பயத்தை அளிப்பதாக, காளியின் பயங்கர உருவமாக அவர்களுக்குத் தெரிகிறது. தெரியாததைக் கண்டு பயப்படுவது ஆத்மாவின் இயல்பு, அதனால்தான் ஆத்மாக்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகின்றனர்.

சிவனை குன்றத்தை உரித்தவர் என்று கூறுவது கஜ சம்ஹார மூர்த்தி என்று குறிப்பதற்கு என்று கொண்டாலும் அவர் குன்றுகள் போல வலிமை மிக்க கோசங்களைஉரிக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

வரும் குன்றம்- நம்மை நோக்கி நமது கர்மத்தால் வரும் கோசங்கள்.

இரும் குன்ற வாணர் இளம் கொடியே- இறைவன் கொடிபோல ஆத்மாவினுள் அதனைப் பற்றி பரவுகிறார்.

தில்லை அம்பலர்- வீரட்டானத்தில் ஒரு உருவுடன் இருப்பவர் தில்லையில் ஞான வடிவாய், மந்திர வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். அம்பலம்- வெளி.

இடர்- தலைவி அனுபவிக்கும் துன்பம் பிரிவால் வரும் இடர் இல்லை, கருணையால் விளைந்த இரக்கம். தனது அறியாமையால் ஆத்மா தனது ஒளி இறைவனின் மீது விழுகிறது என்று கூறுகிறது. உண்மையாக, அதன் ஒளி இறைவனிடமிருந்துதான் வருகிறது என்பது அதற்குத் தெரியவில்லை, தான் இறைவனை ஒளியூட்டுவதாக நினைக்கிறது. தான் படித்த படிப்பால், பெற்ற ஞானத்தால் இறைவன் புலப்படுகிறார் என்று நினைக்கிறது ஆத்மா. இறைவன் தனது அருளால் தன்னை ஆத்மாவுக்குக் காட்டுகிறார் என்பது அதற்குத் தெரியவில்லை.

1.15 Pacifying, explaining proximity of presence
The young creeper of the gypsy clan in the mountain of the one who stripped
A hill that came towards (him), the Tillai Ambalavan, the one with heavy ear ornament!
Do not worry, the light from the subtle paint of my town’s palace falls on your town’s
Dark hill, covering it like a white blouse.

The hero explains that his residence is close to hers and pacifies the heroine. The episode described here refers to Siva’s form as Gaja samhara murthy, when he stipped an elephant that emerged from a fire ritual performed by rishis against him.

Kanchukam, blouse- covering that limits. The soul surrounds the Divine like a blouse thus concealing its presence even to itself. When the light of knowledge occurs, it illuminates the Lord within. Blackness refers to the unknown.

Soul is covered by the pancha kosha or five sheaths of annamaya, pranamaya, manomaya, vijnanamaya and anandhamaya kosha. They limit the soul. Sadhana is the process of stipping oneself off of these coverings. Gaja samhara murthy stripping the elephant indicates that the Lord strips these coverings over the Jiva that are as strong as an elephant.

A soul that is free of innate impurities is at the frontier of anandhamaya kosha or sheath of bliss which gives a little taste of paramanandha or supreme bliss. However, the soul has to go even beyond the anandhamaya kosha to merge with the Supreme. The soul’s light mentioned here is from the anandhamaya kosha. Hence, the Lord appears dark still. When that light is replaced of the light of bodham or supreme awareness then the Lord will become perceivable.

Devi Mahatmyam explains this beautifully. Devi is present as the white Kaushiki. Her beauty attracts the Asuras, Shumba and Nishumba who encounter the dark, incomprehensible and hence fearsome, Kali when they approach her seeking her hand in marriage. The mind feels fear when it faces something that it cannot comprehend. This is indicated as the dark fearsome form of Kali. People’s fear of death is also due to this unknown nature of death.

The approaching hill- the koshas that come towards us due to our karma.

The young creeper- The Lord surrounds the soul like creeper, holds it and spreads around it.

The Lord, who is present in the eight Veera sthana is present as wisdom, in the mantric form in Tillai.
The sorrow that the heroine faces is not due to despair but due to the Lord’s mercy towards the soul.

The soul, due to its ignorance it telling Siva that its light is falling on Siva without realizing the true source of its light is Siva. It thinks that it can perceive the Divine by the light of knowledge it has gained from texts and practices without realizing that the Lord shows himself, by his will, to the soul due to his grace.

Thursday, 20 March 2025

1.14 Mentioning the nature of grace

  1.14. அருள் குணம் உரைத்தல்.

தேவரில் பெற்ற நம் செல்வக் கடி வடிவார் திருவே
யாவரில் பெற்றி இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண்
மூவரில் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்வாய்ப்
பூவரில் பெற்ற குழலி ஏன் வாடிப் புலம்புவதே

பொருள்: அழகான வடிவை உடையவளே! நமது செல்வமான இந்தத் திருமணத்தை யாரால் பெற்றாய்? தேவரால். அதை அழிக்கக்கூடிய சக்தி பெற்றவர் யார்? இமைக்காத, மூன்று கண்களை உடைய மூவரைப் பெற்றவரான சிற்றம்பலத்தின் அழகான வண்டுகள் மொய்க்கும் பொழிலின் வாயில் உள்ள பூவில் பிறந்த குழலியே நீ எதற்காக வாடிப் புலம்புகிறாய்?

சிற்றின்ப நிலை:
கூட்டிய தெய்வத்தின் அருள் குணம் வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது. தம்மைச் சேர்த்த இறையருளின் குணத்தைக் கூறி தமது திருமணத்தை பிரிக்கக்கூடிய சக்தியைப் பெற்றவர் ஒருவரும் இல்லை, தலைவி வாட்டமடைய வேண்டாம் என்று தலைவன் கூறுகிறான்.

தலைவியை திரு அல்லது இலக்குமி என்று அழைத்து தாம் பெற்ற சேர்த்தியை செல்வம் என்று தலைவன் கூறுகிறான். யாரால் இதைப் பெற்றாய், யாரால் அழிக்க முடியும் என்று கேட்டு இந்த அனுபவம் எப்போது இயற்கையாக இருப்பது ஒருவராலும் தரப்படுவது இல்லை, அதனால் ஒருவராலும் இதை அழிக்க முடியாது என்று உணர்த்துகிறான். கண்ணை மூடும்போது பொருள்கள் மறைவதும் திறக்கும்போதும் தென்படுவதும் போல இல்லாமல் என்றும் அவளது கண்கள் இமைக்காமல் இருப்பதால் அந்த அனுபவம் தோன்றி மறைவது இல்லை. பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மூவரில் மூன்று கண்களைப் பெற்றவர் சிவன், அதனால் மூவரில் பெற்றவர். உயிர்களைத் தனது செல்வமாகப் பெற்றவர் சிவன். உயிர்கள் எப்போதும் அவரை விட்டு நீங்குவதில்லை.

தேவரால் பெற்ற நம் செல்வக் கடி- நமது இயற்கைப் புணர்ச்சி தெய்வ அருளால் மோட்சத்துக்காக நிகழ்ந்தது. நமது பெற்றோராலோ எதிர்பாராமலோ நிகழ்ந்தது அல்ல. பொதுவாக ஒரு திருமணத்தை நடக்க வைப்பது இந்திரன். அவரோடு பிற தேவர்களும் வந்து திருமணத்தை வாழ்த்துவர். நமது மணம் நடந்தது ஊழினால், செல்வ கடி மணம்- கட்டாயத்தால் ஏற்பட்டது அல்ல.

இறைவனுடன் ஒன்றுவதே உண்மையான செல்வம், வாழ்வின் அர்த்தம். அதுவே ஆத்மாவின் தர்மம், அது பெற விழையும் காமம். இதுவே மோட்சம். இங்கு தேவர் எனப்படுவது வினைத் தெய்வம் அல்லது ஊழ்.
ஜீவனை சிவனிடம் கொண்டு வந்தது பதி புண்ணியம். புண்ணியம் இருவகைப் படும். பசு புண்ணியம் என்பது கால அளவுக்குட்பட்ட புண்ணியம். பசுவுக்கு புல் கொடுப்பது, ஹோமம் பூஜை செய்வது என்பது போன்றவற்றின் புண்ணியம் ஒரு குறிப்பிட்ட காலம்வரை செயல்படும். காலத்தால் கட்டுபடுத்த முடியாத புண்ணியம் பதி புண்ணியம். குருவின் தீக்ஷை பதி புண்ணியம்.

வடிவார் திரு- திரு என்பது ஞானம். ஞானம் உருவமற்றது. அத்தகைய ஞானம் சிவத்தலைவியாக ஒரு உருவத்தை எடுத்துக்கொண்டது. ஸ்ரீ என்பது பஞ்சதசி மந்திரத்தைக் கடந்த ஷோடஸி. அந்த மந்திரம் ஒரு உருக்கொண்டு வந்தது.

யாவரில் பெற்றி- யாரால் பெற்றாய்- குருவின் நேத்திர தீக்ஷையால் ஜீவசிவ தொடர்பு ஏற்பட்டது. வழியில் உள்ள பல தடைகளையும் அந்த தீக்ஷை விலக்கியது.
யார்- சிவனருள் முன் நின்று அதன் செயலை தடுக்கக்கூடியவர் யார்? ஒருவரும் இல்லை.
அக்னி, சூரியன் சந்திரன் ஆகியவர்களிடமிருந்து சிவன் மூன்று கண்களைப் பெற்றார். அதாவது, அவரது மூன்று கண்கள் அக்னி, சூரியன், சந்திரன். அதனால் அவர் ஜீவனுடன் புணர்ந்தபோது இந்த மூவரும் அதை அறிந்திருப்பர். தேவர்கள் அதை அறிந்தவர்தான்.

ஆதியாத்மிகம் ஆதி பெளதிகம் ஆதி தெய்வீகம் என்ற மூன்று தாபத் திரயங்களால் ஆத்மா துன்பப்படுகிறது. ஆதி ஆத்மிகம்-ஆத்மாவின் தன்மையால் வரும் துன்பம். இங்கு இருப்பது பரமாத்மா மற்றும் மலபரிபாகமுற்ற ஆத்மா. அதனால் துன்பம் ஏற்படாது. ஆதி பெளதிகம்- மழை காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளால் துன்பம். இங்கு இயற்கையைக் கட்டுப்படுத்தும் சிவன் இருப்பதால் இயற்கையால் துன்பம் தர முடியாது. யாரால் இதை விலக்க இயலும் என்ற கேள்வி அதைக் குறிக்கிறது. ஆதி தைவிகம்- இந்திரன் முதலிய தெய்வங்களால் ஏற்படுவது. இங்கு சூரிய சந்திரன் அக்னி ஆகிய தெய்வங்கள் சிவனின் கண்களாக, அவரது கடாக்ஷத்தை அளிப்பவர்களாக உள்ளதால் அவர்களாலும் துன்பம் ஏற்படாது. அதனால் தலைவியை துயரப்பட வேண்டாம் என்கிறது ஆத்மா. இங்கு அது உரையாடுவது தனக்குள் இருக்கும் இறைசக்தியுடன்.

பூ அரில் பெற்ற குழலி- பூக்கள் பிணைந்த குழலை உடைய தலைவி. தாமரை மலர்களான சக்கரங்கள் பெற்றெடுத்த சூழுமுனையில் பயணிக்கும் குண்டலினி சக்தி. அவள் அக்னி, சூரிய சந்திர மண்டலங்களை பூக்களாகத் தொடுத்துத் தன் கூந்தலில் அணிந்திருக்கிறாள். அக்னி மண்டலத்தில் தொடங்கி தலையுச்சியில் உள்ள சகஸ்ராரம் வரை குண்டலினி சக்தி பயணிக்கிறாள். இங்கு பூ என்பது நிலம் அல்லது பூமண்டலம் என்பதாகக் கொண்டால் மூலாதாரத்தில் உள்ள குண்டலி சக்தி, தனது தாபம் என்ற அக்னியை ஞானம் என்ற சூரிய மண்டலத் தன்மையாகவும் ஆனந்தம் என்ற சந்திர மண்டலத்தின் தன்மையாகவும் மாற்றவேண்டும் என்று ஆத்மா வேண்டுகிறது.

ஞானத்தைப் பெற இவ்வுலகில் உள்ள மூன்று ஒளி காரணிகள் அக்னி, சூரியன், மற்றும் சந்திரன். இவற்றின் ஒளி சக்தியாக இருப்பவர் சிற்றம்பலவன்.
பூவரில் பெற்ற குழலி- ஆத்மா சக்திக்கு தனது சக்கரங்களை, பூக்களை, அர்ப்பணிக்கிறது.

1.14 Mentioning the nature of grace
Thiru! Our wealth of union brought about by Deva
Who did you get it from, who can destroy it
The Citrambalam who has among/from the three, in the beautiful grove
The lady who has flowers in her hair, why are you complaining in sorrow?

The hero calls the heroine Thiru, a name for Lakshmi, and mentions the experience as wealth thus indicating her as the giver of such a valuable experience. Objects perceived disappear when one closes one’s eyes and they appear when one opens the eyes. The hero refers to the Lord as one whose eyes do not blink, thus indicating the permanent existence of the experience. Among the trinity, Siva is depicted with three eyes. So, he is ‘petravar’ one who possesses it. As Siva has the souls as his eternal possession, ‘petravar’, their association is neither brought about nor broken by time, place, or causation.

This association came about for moksha. It was not accidental or arranged by our parents or due to compusion. It is said that Indra decides a marriage. He, along with other Devas, come to a wedding and bless it. It is ‘selva kadi manam’ one that is cherished, not brought about by force.

True wealth for a soul is merging with the Divine, this is moksha, the purushartha. Kama or desires should be aligned toward this goal. The necessary aids to facilitate this union are the artha. They should be earned and deployed in a dharmic way to reach the target.

Deva here refers to fate which is equated to a God. Jiva is brought to Siva due to punya. Punya is of two types, pathi punya and pasu punya. Pasu punya is limited by time. Giving grass to cows, performing yagna and so on are pasu punya. Their efficacy is limited by time. The punya that is not controlled by time is pathi punya. Guru’s deeksha is pathi punya.

Vadivaar thiru- beautiful form. Thiru is jnana, it is formless. Here, it has taken the form of the lady. Sri is shodashi mantra, beyond panchadashi. That mantra has taken a form here.

Who gave you this?- Guru’s vision or Netra deeksha granted the Jeeva Siva aikhyam. The deeksha removed the obstacles in the way.
Who can block it- who has the capacity to block Siva’s decision.
Siva’s three eyes are agni, surya and Chandra. When he united with the soul all three would have been witnesses. Devas would have known it. So there is no one to prevent it from happening again.

A particular event is blocked by three causes. Adi atmika-due to inherent nature of the soul, adi baudhikam- natural forces such as rain, sun, etc and Adi daivikam-divine forces like Devas. Here all the three were witnesses to the union. So there is no one who will be against it.

The lady with flowers on her hair- poo alaril petra kuzhali- the flower refers to the chakras, kuzhali is kundalini shakti. She has strung the agni, surya and soma mandala like flowers and adorned her hair with them. Kundalini begins its journey from the agni mandala and reaches the sahasrara. If ‘poo’ is said to represent bhu or earth, it means the soul is praying that his longing the fire should be transformed into jnana, the characteristic of surya mandala and into anandha or bliss, the characteristic of the soma mandala. All these three sources of light are only conduits for the Divine, which shines through them. The soul is offering its chakras, the flowers to shakti.

Wednesday, 19 March 2025

1.13 Reason for sorrow

 1. 13. பருவரல் அறிதல்

கோங்கில் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குருகலர் ஊர்
தீங்கில் புகச் செற்று கொற்றவன் சிற்றம்பல மனையாள்
நீங்கில் புணர்வு அரிது ஒன்றோ நெடிந்து இங்கனே இருந்தால்
ஆங்கிற் பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே

பொருள்:

கொளு: பிரிவு உணர்ந்த பெண் கொடி தன் பருவரலின் பரிசு நினைந்தது. தன் பிரிவை அறிந்து கொடி போன்ற பெண்ணுடைய துன்பத்தின் இயல்பாய் விசாரித்தது.
கோங்கு மலர் அரும்பு போல மார்பை உடைய மங்கையைத் தனது பாகமாக உள்ளவனும் தன்னை அணுகாதவர் ஊரை தீயில் புக வைத்து போரிட்ட அரசனுமான சிற்றம்பலவனின் மனையாள் எதற்காக சோர்வுறுகிறாள்? நாம் விலக்கினால் புணர்வது அரிது என்று எண்ணியா அல்லது இதே போல் சேர்ந்திருந்தால் அதனால் பழி வரும் என்றா? நான் அறியேன்.

தலைவியின் சோர்வைக் கண்டு தலைவன் தனக்குள் அதற்கான காரணங்களாக இரண்டை ஊகிக்கிறான்.
பேரின்ப நிலை: திருவுளத் திறம் கண்டது. தன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று சிவத்தை உணர்ந்த சித்தாகிய ஆத்மா பாராட்ட அதனால் நாணம் கொண்ட சிவம் பின்னும் பெரிதும் வருந்தியவாறு இருந்ததைக் கண்டு ஆத்மா அந்த வருத்தத்துக்கு இரண்டு காரணங்களைக் கற்பித்தது.

சந்தேகமும் கேள்விகளும் ஆத்மாவுக்கே வருகின்றன, தலைவியான சிவத்துக்கு அல்ல. தலைவியின் மார்பை இங்கே குறிப்பிட்டது பர ஞானமும் அபர ஞானமும் அவளிடமிருந்தே பிறக்கின்றன, அங்கே சந்தேகத்துக்கு இடமே இல்லை என்று காட்ட. பிரிந்தால் சேர்வது அரிதாக இருக்குமோ என்ற தலைவனின் சந்தேகத்தைத் தீர்க்க முப்புரமும் எரித்தவர் சிவன் என்று குறிப்பிடப்படுகிறது. முப்புரம் என்பது ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்கள். சிவனை அடைவதைத் தடுப்பவை இந்த மலங்கள். இதை எரிப்பவர் சிவன். மலங்களின் செயல் இல்லாமல் போகும்போது சிவத்துடன் சேருவது தடைப்படாது. உமா தேவியாரைத் தனது பாகமாக உடையவர் சிவன், சக்தியுடன் நிரந்தரமாக சேர்ந்திருப்பவர் சிவன் என்று குறிப்பிடுவது அவ்வாறு சேர்ந்திருப்பது பழிக்கத்தக்க நிலையல்ல, அதனால் பழி வராது, அந்த சந்தேகமும் தேவையற்றது என்று காட்ட. அர்த்தநாரி உருவத்தைக் குறிப்பிடுவதற்கு மற்றொரு காரணம், ஜீவன் என்பது சிவசக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடு, அந்த ஆனந்தத்தின் உருவம், அங்கே பிரிவு என்பதே உண்மையில் இல்லை. ஜீவனின் மல வாசனைதான் பிரிவு என்ற ஒன்றை கற்பனை செய்துகொள்கிறது என்பதைக் காட்ட.

பிரிவைப் பேசுவதால் இது பாலை நிலப்பாடல் என்று குறிக்க பாலை நில மலரான கோங்கு இங்கு இடம்பெற்றுள்ளது. பாலை என்று தனியான ஒரு நிலம் இல்லை. உயிர்களுக்கு உண்மையில் சிவத்திடமிருந்து பிரிந்து இருப்பது என்ற நிலை இல்லை. ஆனால் வாசனா மலத்தால் உயிர் சிவத்திலிருந்து தனக்கு பிரிவு ஏற்படும் என்று எண்ணுகிறது. அதனால் நீங்கில் என்று சந்தேகக் குறியீடு உள்ளது. நீங்கினால் தான் அந்த உயிரை மீண்டும் தடுத்தாட்கொள்ள வேண்டியிருக்குமோ என்று சிவம் வருந்துகிறது என்று ஆத்மா நினைக்கிறது. அனைத்தும் சிவன் ஆணையால் நடைபெறுகின்றன என்பதை அது மறந்துவிட்டது. சிவத்துடன் ஒன்றிய உயிர்கள் உலகோருக்கு பித்தர்கள் போல பிசாசுகள் போல தோன்றுகின்றன. அந்த உயிர்களை சிவம் உலகோரின் பழியிலிருந்து, இகழ்விலிருந்து காத்து தன் அடிக்கீழ் வைத்திருக்கிறது.

1.13 Reason for sorrow
The consort of the one with breast like the bud of kongu, the one who fought and set fire
To the towns of those who did not approach, the consort of the King of Citrambalam
Is it because (she worries) that if separated union will be difficult or if remained in union so
It will bring disgrace, that she is fatigued? I do not know.

The hero is wondering why the heroine is looking beaten down and imagines two reasons for it. He wonders if it is because she is worried that it will be hard to unite again if they separate now or whether she worries if being in union will bring disgrace.
Doubts and questions arise only to the soul, not to Sivam who directs everything. Mentioning that the breasts are like buds is to indicate that the soul’s jnana has not matured yet, it is in a budding stage, and hence the doubt. The episode of Siva burning the Tripura, the three towns made of iron, silver and gold is to show that Siva burns the three innate impurities, anava, maya and karma. These three cause any obstacles in a soul’s life. Siva removes them.

Saying that Siva is eternally united with Uma, the Shakti is to indicate that they are already in permanent union and that it is only earning praise and not dishonor. Hence, the soul uniting with Sivam, similarly, will only be praised, not insulted.
The Ardhanari form is mentioned to indicate that the soul is a manifestation of union of Siva and Shakti. The soul’s innate impurities make it feel separate from Sivam and that there is really no separation.

This verse belongs to the Paalai land. Hence, the Konga flower, its signature flower is mentioned here. Just as how there is no separate land as Paalai there is no real separation between the soul and the Divine. Hence, the separation is mentioned only as a possibility. The souls that remain merged with Sivam appear crazy to the world. Sivam protects such souls from disgrace and troubles by the worldly.