Tuesday, 11 March 2025

1.8 Describing the Union

                                         1.8. கலவி உரைத்தல்

சொற்பால் அமுது இவள் யான் சுவை என்னத்‌ துணிந்து இங்ஙனே 

நற்பால்‌ வினைத் தெய்வம் தந்து இன்று நான் இவளாம் பகுதிப்‌ 

பொற்பார் அறிவார்‌ புலியூர்ப்‌ புனிதன்‌ பொதியில்

வெற்பில்‌ கல் பாவிய வரை வாய்க் கடி தோட்ட களவகத்தே.

பொருள்:

பாலில் உள்ள அமுதமும் அதன் சுவையும் போல, சொல்லும் அதன் சுவையும் போல அவளும் நானும் என்று துணிந்த நல்வினை என்ற தெய்வம் இந்த அனுபவத்தைத் தந்தது. இவ்வாறு நான் இவளாக புலியூர் புனிதன், சிவனின் மலையில் கல் பாவிய அழகிய தோட்டத்தில் உள்ள களவகத்தில் இருந்ததை யார் அறிவார்?

 

பாலையும் சுவையையும் பிரிக்க இயலாததைப் போல ஜீவனும் சிவமும் கலந்தன, ஜீவன் சிவத்தின் அம்சமாகியது. அந்த நிகழ்ச்சி யாரும் அறியாமல் நடந்தது, அதற்குக் காரணம் நல்வினை என்ற தெய்வம். இது பொதிகை மலையில் நடந்தது.

சிற்றின்ப நிலை:

விதி நமக்கு நன்மையையே செய்யும்.  அது நமக்கு ஒன்றைக் கற்றுக்கொடுக்கவே வருவதால், நம்மை உயர்த்த வருவதால் அது தெய்வம்.  

கடி தோட்டம்- கடியப்பட்ட தோட்டம். திருத்தப்பட்ட தோட்டம். கடி தொட்டம் களவகம்- நாளை மணமாக முடியப்போகும் களவு. 

கல் பாவிய வெற்பு- கல் பரந்த மலை. அந்த கல்பரவிய தோட்டத்தில் நாம் கலந்தோம்.  இதை தலைவியிடம் கூறுகிறான் தலைவன்.  அதைக் கேட்டு அவளுக்கும் அந்த நினைவு வரும், தலைவன் மீது காதல் அதிகரிக்கும். 

களவகம்- ஒத்த தலைவனும் தலைவியும் யாரும் அறியாமல் மரம் சூழ்ந்த இடத்தில் சந்திப்பது, அதனால் அவர்கள் அன்பு அதிகரிப்பது என்பது களவியல்.  அவர்கள் மணம் புரிந்துகொண்டால் அது கற்பியலாகிறது. இப்பாடலில் களவியல் மட்டுமே உள்ளது. 

தில்லை என்பது இதய ஸ்தானம். அந்த இதயத்தில் இருப்பது தலைவி. 

பேரின்ப நிலை: 

கொளு- பெற்ற இன்பத்தை வியந்தது.

ஆன்மா சிவதலைவியிடம் காதல் கொண்டுள்ளது.  அவள் புலியூர் போல பெருமை கொண்டவள்.  அவள்/சிவம் புனிதன். அவளை ஊழ், நியதி போன்ற எதுவும் கட்டுப்படுத்துவதில்லை.  ஆன்மாவைதான் அவை கட்டுப்படுத்தும்.  அதனால் ஆன்மாவிடம் சிவத்தலைவியை கொண்டுவந்தது ஊழ்வினை என்கிறது ஆத்மா.  

பரமாத்மா சொல்லமுதம், ஆத்மா அதன் சுவை. அமுதத்தையும் சுவையையும் பிரிக்க முடியாது.  

தேவி சொல் நான் பொருள். அவள் வாக் சக்தி, நான் அதன் வெளிப்பாடு என்று புரியவைத்தது வினை தெய்வம். செயலே போதத்தைத் தரும், கர்மம் ஞானம் தரும் அதனால் அது தெய்வம். அதை உணர்ந்தவர் நானும் அவனும் ஒன்று என்று அறிவர். அவர் பொன் மேனி பெற்றவர், புலியூர் புனிதர். அந்த உணர்வை தந்தவர் பொதிகை மலை என்னும் சுவாதிஷ்டானத்தை தொட்ட இறைவன், அவர் கல் என்னும் மூலாதாரத்தை எவ்வாறு தொட்டு இந்த உணர்வை தந்தார் என்பது ஒருவரும் அறியாதது. ஸ்வ-அதிஷ்டானம்- தனது நிலையை, தான் சிவத்தின் அம்சம் என்று உணர்தல்.

 

யாரும் அறியாத களவகம்- ஆத்மா இறைவனுடன் சேர்வது அன்பினால். அந்த நிகழ்ச்சியை வேறு ஒருவர் அறிய முடியாது.  அது நிகழ்ந்த பிறகு ஆத்மா அதை வெளியிட்டால்தான் பிறர் அறிவர். கடி தொட்ட- காவல் நீக்கிய, ஆத்மாவை சிவத்துடன் சேர விடாமல் காவல் காப்பது மலங்கள், ஊழ்வினை, நியதி முதலியவை.  அந்த காவலை நீக்கியதும் அவற்றை அங்கே இட்ட விதி என்ற தெய்வமே. எல்லா குணங்களையும் நீக்கி அன்பை மட்டுமே அங்கே விட்டு இந்த கலப்பை நிகழ்த்தியது விதி.

ஆத்மா சிவத்துடன் சேர்வது என்பது அது தனது ஆன்மநிலையைத் தொலைப்பது. அகம் பிரஹ்மா அஸ்மி என்ற மகா வாக்கியம் குறிப்பிடுவது இந்த நிலையைதான். அது தரும் இன்பமே பேரானந்தம். சத் எனப்படும் நிலையையும் அதை உணரக்கூடிய சித்தும் ஒன்றாவது ஆனந்த நிலை.  

யோக நிலை:

இப்பாடலில் தலைவனும் தலைவியும் கலந்திருப்பது நிர்விகல்ப சமாதி நிலை.  அதில் எவ்வித தனிப்பட்ட அடையாளங்களும் இருப்பதில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கல் மலை என்பது ஆக்ஞா சக்கரத்தை குறிக்கும். அதை சித்தர்கள் கற்குகை என்பர். பஞ்ச தத்துவங்களால் அளவுக்குட்படுத்தப்பட்ட ஆத்மா அவற்றைக் கடந்தபோது  நிலைத்திருப்பது  ஆக்ஞை சக்கரத்தில். இங்கு யாரும் எளிதில் வர முடியாது என்பதற்கு இது களவகம், காட்டில், மலையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.  இதை களவு என்று குறிப்பிடுவது அதை ஒருவரும் அறியார் என்பதால். 

களவினால் பெற்ற பொருளை அவ்வாறே பயன்படுத்த முடியாது.  திருடர்கள் அதை உருமாற்றி பயன்படுத்துவர்.  இறைவனும் ஆன்மாவை உருமாற்றி ஏற்றுக் கொள்கிறார்.  அதனால் களவு. அந்த மடைமாற்றம் நிகழும் இடம் களவகம். ஆக்ஞாவில் ஆத்மா பஞ்சபூதங்கள் மனம் ஆகியவற்றைக் கடந்த, உடல்கடந்த நிலையில் இருக்கிறது.  தன்னுணர்வு இழந்து பரவுணர்வில் மூழ்கி இருக்கிறது. அந்த நிலையை மனதால் உணர முடியாது, அதனால் அது மறைவகம். இதையே கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பர். 

வாக்கு சிவம் அதன் பொருள் ஜீவன். ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருக்கலாம்.  சொல் மாறுவதில்லை அதன் பொருள் மட்டுமே காலம், இடம், நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுகிறது. அவ்வாறே இறைவன் ஒருவனே, அவனது பொருள் அல்லது விளக்கம் பல ஜீவன்கள்.  

நான் அவள் ஆகும் பகுதி- தான் இறைவனின் பகுதி என்ற அறிவு ஜீவனுக்குத்தான் ஒரு நாள் ஏற்படுகிறது. அதுவரை இதை அறியாமல் இருப்பது ஜீவனின் மல சம்பந்தத்தினால். இறைவனுக்கு அந்த தொல்லை இல்லை. அவன் நிர்மலன். பொருள்கள் சொல்லுடன் சேரும்போது பலவாக இருந்த நிலை மாறி ஒருமை நிலை ஏற்படுகிறது. அந்த சொல்லுக்கு ஒவ்வொரு பொருளைக் கொடுக்கும்போது, ஜீவன் புதிதாக, வெவ்வேறு உருவங்களில், தோன்றுகிறது.  

கடி தோட்டம்- இதை கடிது ஓட்டம் என்று பிரிதால் மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்துக்கு உணர்வின் ஓட்டம் மிகக் கடினமானது என்ற பொருளைத் தருகிறது. ஆகினா வரை ஆன்மா தனது முயற்சியால் பயணிக்கிறது. அதன் பிறகு இறையருள் அதை அழைத்துச் செல்கிறது. 

1.8 Describing the union

She, like the word, the nectar in milk and I, like its taste- braving so

Providence, the Divine, granted this today-that of me becoming a part of her.

Those who know it will comprehend, in Pure one of Puliyur’s hill

In the hidden room, in the hill strewn/paved with stones.

Meaning:

The good action, the divinity granted this union in a secret chamber in the hill paved with stones where she and I are like milk and its taste, word and its meaning/taste.  Those who know this will comprehend it.

Just as how milk and its taste are inseparable, she and I became one in this secretive house, an even brought about by good action, the divinity.  One word may have several meanings.  The shakti is one, its manifestations, souls, are many.  In the state of union the word and its meaning merge and there remains only paravak or pure energy. Fate or providence is called divine as its only purpose is to teach us what we miss, to help us progress in spirituality.

Providence controls only the soul, not the Divine.  Hence, the hero says that fate brought the heroine to him.

Shakti is the word and the soul is its manifestation. This knowledge was imparted by ‘nal vinai’ or good action. Action or karma confers wisdom or jnana.  Hence, the hero calls it as Divine. The Sivam gave Siva anubhavam by touching the svadhishtana. Hero calls the place as paved with stone. This refers to muladhara. The soul realizes that it is an aspect of the Divine, its sva adhishtanam or state.  This realization is personal, not for others to know. The soul merges with the Divine through love. Unless the soul recounts the experience others cannot comprehend it.

Kadi thotta- where the guards are removed. Innate impurities or mala keep the soul from merging with the Divine. Providence removed these blocks and left only love behind. Thus, it enabled this union. When this word is split as kadidhu otam it means a difficult run. The journey from muladhara to ajna is a difficult one. It requires soul’s effort. Beyond ajna Divine grace takes over completely.  

When the soul merges with the Divine it loses its individuality. The statement aham brahma asmi refers to this. This realization confers the state of bliss. It is the state that results from the union of sat-existence and chith-realization.

The union of hero and heroine is the nirvikalpa state where all senses of individuality are erased. The stone paved place may also referred to ajna. Siddhas call this chakra as stony cave. When the soul is in nirvikalpa samadhi it is beyond all the tattva. This is a hard-to-attain state. Hence, it is said to be a secret chamber in the forest, unknown to others.

When a thief steals something, he cannot use it as is. He has to change it somehow so that others do not recognize it. Such a transformation occurs in the secret chamber of ajna. The soul is in unmana state at the ajna which is beyond mind’s comprehension. Hence, Manikkavasakar calls it a secret chamber.

A word has different meaning based on the context, time and place. Similarly, the Divine is one, its artha or manifestation are many Jivas. When one goes beyond the stage of word and its meaning, to the stage of pure energy, there is only singularity.

No comments:

Post a Comment