Tuesday, 4 March 2025

1.2 Doubt

                                                             1.2 ஐயம்

 போதோ விசும்போ புனலோ பணிகளது பதியோ

யாதோ அறிகுவது ஏது மரிதி யமன் விடுத்த

தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத் தில்லை

மாதோ மடமயிலோ என நின்றவர் வாழ் பதியே

பொருள்:

(இந்த மாது/குரு இருக்கும் இடம்) தாமரை மலரோ ஆகாயமோ நீரோ நாக லோகமோ, (அவள்) யமன் விட்ட தூதோ, மன்மதனின் துணையோ, தில்லையில் வாழும் பெண்ணோ மடமயிலோ எது

சுருக்கம்:

இங்கு நின்றவரது இடம் தாமரையா ஆகாயமா நீரா, நாகலோகமா, எது என்று அறியேன். இவள் எனது உயிரைக் கவர யமன் விட்ட தூதா, ஆசையத் தூண்டும் மன்மதனின் துணையான ரதியா, இணையற்ற பழமையான தில்லை நகரில் உள்ள பெண்ணோ, அழகான மயிலோ?

இதயத்தாமரையா, சக்கரங்களா (போது), எல்லா வஸ்துக்களும் தோன்றி, இருந்து, மறையும், சப்தங்களின் இருப்பிடமான ஆகாயமா, ஞானப்பெருக்கு, கருணைப்பெருக்கு கங்கையான நீரா, செயல்புரியும் நிலமா, மாயையை விலக்கும் யமனின் தூதா, உருவமற்ற பூரணத்தின் துணையான அருவுருவா உருவா, ஒளின தில்லையின் அளவுக்குட்பட்ட நிலையா, விச்வ மாயையா- எது இங்கு நிற்பவரது இடம்? நான் அறியேன்  

குதிரை வாங்க அரசனால் அனுப்பப்பட்ட மாணிக்கவாசகர் எவ்வித முயற்சியும் இல்லாமல் சிவானுபவம் பெற்றார். முந்தைய பாட்டில் அதைக் குறிப்பிட்ட அவர் இங்கு அந்த அனுபவம் எங்கே ஏற்பட்டது, அதைத் தந்தவர் தன்மை என்ன என்று ஐயுறுகிறார்.

சிற்றின்பநிலை:

கொளு- தெரிய அரியதோர் தெய்வம் என அருவரை நாடன் ஐயுற்றது.  மலை நாட்டைச் சேர்ந்த தலைவன் இவள் புரிந்துகொள்வதற்கு அரிய தெய்வமோ என்று எண்ணியது. மலை-தத்துவங்களின் உச்சி, சக்கரங்கள்.

 மரிதி யமன் விடு தூது- உயிர்களைக் கொல்லும் யமனின் தூதோ, எனது உயிரை எடுத்துச்செல்ல வந்தவளோ அல்லது காமனின் துணையோ எனக்குள் ஆசையை தூண்ட காமன் தனக்குத் துணையாகக் கொண்டவளோநாகர் உலகம்- போக பூமி.  மயில் தன்னைக் கண்டவரது  பித்தை நீக்கும்.  

பேரின்ப நிலை:

கொளு- திருமேனியை வியந்து ஐயமுறுதல்

போது-தாமரை மலர்- சக்கரங்கள் எனப்படும் உணர்வு நிலைகள். இதயத்தாமரையில் இருக்கும் சிவனோ?  போது- பொழுது- காலம்.

விசும்பு- ஆகாயம்- எல்லா வஸ்துக்களும் தோன்றி நின்று மறையும் இடம். எல்லா சப்தங்களும் இருக்கும் இடம், மந்திரங்களையும் உயர் ஞானத்தையும் வைத்திருக்கும் தளம். ஞான ஆகாயம். ஆ-காயம்- விரிந்துகொண்டே இருக்கும் உடல்.

புனல்- கருணைப் பெருக்கு. அமிர்த தாரை. சக்தி நிபாதம் கொண்டுவரும் கங்கை, ஞானப் பெருக்கு. நீர் தாபத்தைத் தீர்க்கிறது, ஞானம், ஆதி ஆத்மீகம் ஆதி பௌதிகம், ஆதி தைவிகம் என்ற மூவித தாபங்களை தீர்க்கிறது .  

பணிகளது பதி- நாகம்- குண்டலினி சக்தி. பணிகள்-செயல்கள், கர்ம பூமி, குருக்ஷேத்ரம் என்று பகவத் கீதையில் குறிப்பிடப்படுவது. ஞானம் செயலாகிறது. செயல் ஞானத் தெளிவைத் தருகிறது.  

யமன் விடு தூது- யமன் உடலையும் உயிரையும் பிரிக்கின்றான்.  குரு உடலும் உயிரும் வேறு என்று கற்றுக்கொடுக்கிறார். யமா-மாயா மாயை விளைவித்தவற்ற விலக்கும் சக்தியே யமன். கடோபனிஷத்தில் நசிகேதனுக்கு உயர் ஞானம் அளித்தது யமன்.

அனங்கன் துணை- உருவமற்ற சிவனின் துணையான உருவுள்ள சிவனோ, அங்கம் பகுதிகள்- அனங்கன்- முழுமையானவன், பூரணன். அவனுக்கு துணை நிற்பது ஞானம், உணர்வு.

தில்லை மாது- தில்லை- ஒளியிடம். மாது- பெண், சக்தி. மா-அளவுக்கு உட்படுத்துவது. ஒன்றை எல்லையிட்டால்தான் அதன் தன்மையை அறிய முடியும், அதை அனுபவிக்க முடியும். உணவை கவளம் என்று எல்லையிட்டுத்தான் உண்ண முடியும்.

மயில்- பித்தத்தை நீக்குவது, மாயை எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் காட்டுவது. மயிலின் கருவில் நிறங்கள் இல்லை. அது மயிலாக உருவம் பெறும்போது நிறங்கள் தோன்றுகின்றன. இவ்வாறே உலகம் தோன்றுகிறது என்பதை மயில் காட்டுகிறது.

நாக லோகம்- ஆனந்தமே வடிவாக இறைவன் இருப்பதால் அவன் வாழ்கின்ற பூமி போக பூமியோ ?

இவ்வாறு பல தன்மைகளைப் பெற்றிருப்பதால் இது எது என்று அறியேன் என்கிறார் மாணிக்கவாசகர்.

உச்ச குரு என்பது இறைவன். அந்த இறைவன் எவ்வாறு காட்சியளிக்கிறார்? அருவமாகவா, அருவுருவாகவா அல்லது உருவமாகவா அல்லது இவையாகவும் இவற்றைக் கடந்துமா என்று மாணிக்கவாசகர் இப்பாடலில் வியக்கிறார். மூலாதாரம் முதலான சக்கரங்கள் நமது சூட்சும உடலில் உள்ளன, அவை கண்ணுக்குப் புலப்படுவதில்லை- அருவம். நிலம் நீர் காற்று வானம் என்ற ஐம்பூதங்கள் இறைவனின் அருவுருவுகள். அவற்றின் உருவு இதுதான் என்று கூறமுடியாது ஆனால் அவற்றின் இருப்பை நாம் அறிந்துள்ளோம். உலகம் தோன்றிய கிரமத்தைக் குறிக்கும்போது சூட்சும உடல் தோன்றி பிறகு பஞ்ச பூதங்களும் அவற்றின் பின் உயிர்கள் தோன்றுகின்றன என்று கூறப்படுகிறது.  இவ்வாறு போது என்பது சிருஷ்டியையும், நிலங்கள் ஸ்திதியையும் குறிக்கின்றன.  யமனின் தூதர்கள் முடிவை, லயத்தைக் குறிக்கின்றனர்.  ரதியின் துணை என்பது உலகம் தோன்றுவதற்கு காரணமான காமத்தைக் குறிக்கிறது. தில்லை மாதோ என்பது உலக வியாபாரத்தை நடத்தும் சக்தியைக் குறிக்கும். மயில் என்பது மாயையைக் குறிக்கிறது. இவ்வாறு இறைவன் அருவமாக, அருவுருவாகவும் உருவமாகவும் இருக்கிறார். 

சிவத்துக்கும் சக்திக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.  சிவம் என்பது அசைவற்ற நிலைபெற்ற அடித்தளமாக இருக்கும் சக்தி.  அதன் அசைவை, செயல்பாட்டையே சக்தி என்று குறிப்பிடுகிறோம்.

 

1.2  Doubt

Lotus, sky, water, land of the snakes

What is it? The incomprehensible that is perceived, I do not know.

Is it a messenger of Yama, an associate of the disembodied? the incomparable, ancient Tillai’s

Woman? Beautiful peacock? The place of the one who stood so.

 

The protagonist wonders about the nature of the place where the heroine gave him the experience—Is it the lotus, the sky, water, or Nāgaloka? Is she a messenger of Yama sent to seize my life? Is she Rati, the companion of Manmatha who incites desire? Or is she the unparalleled woman of the ancient city of Thillai? Or perhaps a beautiful peacock?

Is she the lotus (podhu) of the heart, the chakras (bodham), time (pozhudhu)? the boundless sky where all things appear, exist, and dissolve, the ether, the abode of sounds (visumbu)? The waters (neer) the Ganga that outpour of wisdom and compassion? The land (pani pathi) of work/karma?  The lady of the effulgent Tillai (tillai maadhu, ma- one who limits everything)? the messenger of Yama (the remover of illusions)? The accomplice of the disembodied (ananga- one without a body, one without parts? The vishvamaya (mayil-peacock, representation of maya and manifestation)? I do not the locus where she stands.

Manikkavasakar, who the king sent to procure horses, was blessed with experience of Siva. Here he wonders about the locus and the nature of the experience.

Simple meaning:

Sutra: "A divine being, difficult to perceive, puzzled the mountain-dwelling chieftain."
The chieftain from the mountainous region, unable to comprehend her nature, wonders if she is a divine entity beyond understanding.

Spiritual meaning: "Amazed by the divine form, he is filled with wonder."
Manikkavasagar marvels at the divine form of the Lord, questioning his nature and locus. Mountain- the chakras, the pinnacle of tattva, states of consciousness.

What is her residence? Is it the

  • Lotus: chakras or the lotus of the heart?
  • Sky (Ether): The space where all things emerge, exist, and dissolve. The realm of divine knowledge, the repository of mantras. The ever expanding space.
  • Water: The overflowing stream of wisdom and compassion, the life-giving nectar that quenches thirst. The wisdom that quenches the three types of yearnings, adi deivika, adi bhaudika and adi atmika.  It represents the descent of divine grace, the Ganga.
  • Pani lokha: Pani- snake, work.  Nagalokha, the land of kundalini, it is also the place of bogha or enjoyment. Is it the karma bhumi. Bhagavad Gita refers to this as Kurukshetra.
  • "Messenger of Yama": Yama separates the body from the soul, the Guru teaches the distinction between the two. Yama is the reverse of maya, it is the force that dispels maya’s creations. In the Katopanishad Yama teaches Nachiketas the supreme wisdom.
  • "Companion of the Formless": Is she the manifested form of the formless Supreme? Is she another form of Poorna, the fully complete whose companion is wisdom.   
  • Thillai’s Divine Woman: Is she the luminous energy dwelling in Thillai? Is she the one who measures everything, the ma. Limitation of an entity gives it a form, a character, a quality that can be enjoyed, like food can be consumed only when it is measured as morsels.
  • Peacock: Dispels delusions and signifies how the world manifests. The peacock’s embryo does not have any color.  All the colors emerge when it takes a form. The world manifests so.

Thus, Manikkavasagar marvels at the omnipresent nature of the Lord, wondering whether He exists as the formless, as a formless-form, as a manifest form, or beyond all known states. The chakras are formless, they cannot be perceived. Sky, water and other elements can be perceived but they do not have a specific form, they have formlessform. Peacock has a form. These represent creation and sustenance, Yama represents dissolution, Rati or Kama’s companion represents the primal desire that led to manifestation. Lady of Tillai is Shakti who conducts all these. Peacock is the Vishva maya, the cause for manifestation.

Shiva is the immobile force, the substratum. Shakti is the mobile, active form of that force. 

No comments:

Post a Comment