1.5. உட்கோள்
அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆய
அவன் தில்லைச் சிந்தா
மணியும் உம்பரார் அறியா மறையோன் அடி
வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழப்
பிறழ மின்னும்
பணியும் புரை மருங்குல் பெருந்தோளி
படைக்கண்களே
பொருள்:
மின்னலும் பாம்பும் போன்ற இடையையும்
பெரும் தோள்களையும் உடைய தலைவியின் கண்கள் எனக்கு ஆபரணமும் அமிர்தமும் ஆவியுமாக இருப்பவனும்
தில்லையில் உள்ள சிந்தாமணி போன்றவனும் தேவர்களாலும் அறிய முடியாத
மறையவனும் தனது திருவடிகளை வணங்காதவர்க்கு நோயாகவும் வாழ்த்துபவர்க்கு அதன்
மருந்தாகவும் மாறி மாறி இருக்கும் அவனைப் போல இருக்கின்றன.
ஆன்மாவைவிட வேறானதாகவும் (ஆபரணமாக) அதனுடனும் (அமிர்தம்) அதுவாகவும்
(ஆவி) இருப்பவர் சிவன். அவரே அனைத்தையும் தரும் சிந்தாமணி. அவர் புலன்கள் காண
முடியாமல் மறைந்திருப்பவர், தன்னை வணங்காதவர்க்கு பிறவிப் பிணியாகவும் வணக்குபவர்க்கு
அதன் மருந்தாகவும் இருப்பவர். தனது அனுபவத்தைத் தனது கடாக்ஷத்தால் (படைக்கண்)
மின்னலைப் போலவோ (ஒரு நொடி ஏற்படுவது) பாம்பைப் போலவோ (மெதுவாக முன்னேறுவது)
இடையில் தருபவர்.
சிற்றின்ப நிலை:
கொளு- இறை திருக்கரத்து மறிமான் நோக்கி
உள்ளக் கருத்து வள்ளல் அறிந்தது. சிவனின்
கையில் உள்ள மானைப் போன்ற பார்வையை உடையவளின் உள்ளக் கருத்தை தலைவன் அறிந்தது.
மின்னலையும் பாம்பையும் போன்ற இடையைக்
கொண்டவளான தலைவி அவற்றை தனது ஆயுதமாகப் பயன்படுத்தாமல் தனது கண்ணை ஆயுதமாகப்
பயன்படுத்தி என்னைக் கவர்ந்து எனது அணியாகவும் அமிர்தமாகவும் எனது ஆவியாகவும்
இருக்கிறாள். அவளை நெருங்காதவர்கள் பிணியை அடைவர்
அவளது அண்மையோ (காதல்) என்ற பிணிக்கு மருந்தாக இருக்கும். எண்ணிப்
பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கும் சிந்தாமணியாக அவள் இருக்கிறாள்.
அவள் தில்லையில் இருப்பவரும் தேவராலும் அறியமுடியாத மறையோனுமான
சிவனின் கண்ணை ஒத்தவள்.
உட்கோள் என்பது தலைவியின்
உள்ளக்கிடக்கையை அறிதல். தலைவி வாயால் பேசவில்லை. அவளது கண்களே அவளது உள்ளத்தைக்
காட்டிவிட்டது. அதைக் காணாதபோது ஐயம் முதலிய பிணிகளைக்
கொடுத்த அவை அவற்றைப் பார்த்தவுடன் தலைவனுக்கு அவளது எண்ணத்தை உணர்த்தி
மருந்தாயின.
பேரின்ப நிலை:
கொளு- தன்னிடத்தில் கருணை உண்டு என்று
அறிதல். இறைவனுக்கு தன்னிடம் கருணை உண்டு என்று தலைவன் அறிந்தான்.
அணி, அமிர்தம், ஆவி- கண்ணால்
காணக்கூடிய ஆபரணம். இறைவனின் உருவ நிலை, அமிர்தம்- அனுபவிக்கக் கூடியது-
அருவுருவம், ஆவி- அருவம். முந்தைய பாடலில் அல்குல், மார்பு, இடை என்று கண்ணால்
காணக்கூடிய இன்பக் காரணிகளை, போக காரணிகளைக் குறிப்பிட்ட மாணிக்கவாசகர் இங்கு
தெளிவாக இது பக்தி இலக்கியம் என்று காட்டுகிறார். அந்த போக காரணிகளே
சிவானுபவத்தைத் தரக்கூடிய ஏனெனில் அவை சிவனின் அங்கங்களே.
இவ்வாறு உலக இன்பமும் மோட்ச ஆனந்தமும் இறைவனிடமிருந்தே வருகின்றன. அனைத்தையும்
தரும் சிந்தாமணி சிவனே. போகங்கள் பிணி என்றால் அவற்றைத் தரும் சிவனின் திருவடியே அதற்கு மருந்தாகவும் இருக்கிறது என்று மாணிக்கவாசகர் குறிப்பால்
உணர்த்துகிறார்.
தேவர்கள் புலன்கள் தரும் அறிவு என்ற
ஒளி, சிவன்-பரவொளி. அறிவிலிருந்து பெறும் ஒளியினால் பர ஒளியைக் காண முடியாது.
அவரது கருணையால் மட்டுமே அவரைக் காண இயலும். சிவன் மறையோன்- புலன்களுக்குப்
புலப்படாமல் மறைந்திருப்பவர்.
சிந்தாமணி- சிந்தையின் சிந்திக்கும்
தன்மையாகவும் அதைக் கடந்த உன்மணியாகவும் இருப்பவர் சிவன்.
சிவனின் திருவடி அதைக் காணாதவர்க்கு
காணவில்லையே என்ற தாபத்தைத் தரும். அந்த தாபத்தைத் தீர்ப்பது வேறொன்றின் காட்சி
அல்ல. அந்தத் திருவடியைக் காண்பதே அந்த தாபத்தைத் தீர்க்கும். உலக இன்பங்கள்
சிவானந்தத்துக்கு மாற்றல்ல,
இடையில் மின்னலும் பாம்பும்- ஆன்மா
சிவத்துடன் ஒன்றாவதற்கு முன் இடையில் பெறும் சிவானுபவத்தை இவை குறிக்கின்றன. அந்த
அனுபவம் மின்னலைப் போல ஒரு நொடி தோன்றி ஆட்கொண்டு மறையலாம் அல்லது பாம்பைப் போல
மெதுவாக முன்னேறலாம்.
இவையனைத்தையும் தருவது இறைவனின்
கடாக்ஷம், நோக்கு, அவரது கண்ணாக இருக்கும் சக்தி, படைக்கண்.
கண் என்பது சக்கரங்கள் என்று கொண்டால் அவையே
ஒரு கூட்டமாக இருப்பதைப் படை என்று கூறலாம். அந்தப் படை ஒரு விதமாக சுழலும்போது
உலக வாழ்க்கையில் மூழ்க வைக்கும். அவற்றின்
சுழற்சி மாறும்போது ஆன்மீக உணர்வு கிடைக்கிறது. இவ்வாறு
அவை ஜீவன்களை ப்ரவ்ருதி நிவ்ருதி என்ற இரு மார்க்கங்களில் மாறி மாறி
செலுத்துகின்றன, பிறவிப் பிணியாகவும் அந்த பிணிக்கு மருந்தாகவும் உள்ளன.
பணி- பாம்பு, குண்டலினி புரை-மின்னல்- குண்டலினி ஒரு க்ஷணத்தில்
சகஸ்ராரத்தை அடைதல். தேவி, மின்னல்
கொடி போன்றவள் என்று கூறுவது அவள் எவ்வளவு விரைவாக சகஸ்ராரத்தை அடைவாள் என்று
காட்டவே. இந்தப் பயணம் ஒருவரை பிறவிப்
பிணியிலிருந்து ஒரு நொடியில் விடுவித்துவிடும். ஆனால்
அந்த பயணத்தின் தாக்கத்தை ஜீவர்களால் தாங்க இயலாது என்று தனது கண்கள் மூலம்,
கடாக்ஷத்தின் மூலம் அவர்களை மெதுவாக போகங்களைத் தந்து திருப்திபடுத்தி பின் மோட்சத்தில் விருப்பத்தை ஏற்படுத்தி
நிதானமாக இந்த பயணத்தில் அழைத்துச் செல்கிறாள்.
அணி, அமிழ்து,
ஆவி- உயிருக்கு அணியாக அது அணிந்துகொள்வதாக இருப்பது உடல்கள்.
அவை தூலம், சூட்சுமம், காரணம்
என்று பலவகைப்படும். இங்கு அணி என்பது தூல உடல் என்று
கொண்டால், அமிர்தம் ஊறுவது சூட்சும உடலில்,
ஆவி இருப்பது காரண உடலில். இவையானைத்தாகவும்
இருப்பது சிந்தாமணியான தில்லையில், அப்பாலுக்கப்பாலில் மறைந்திருக்கும்
மறையோன்.
ஆத்மா இறைவனின் கடாக்ஷத்தைப்
பெறும்முன் ஐயம் முதலியவற்றால் வருந்தியது. கடாக்ஷம்
கிடைத்தவுடன் இறைவனின் திருவடியை அடைந்துவிடலாம் என்று நம்பிக்கை பெற்று
உற்சாகமடைந்தது
1.5 Intention
He, who is my ornament, my nectar, and my very soul,
He, the Chintāmaṇi of Thillai,
The One whose divine feet remain unknown even to celestial beings,
The hidden knower of the Vedas—
For those who do not worship His feet, He is affliction;
For those who revere Him, He is the remedy—
Like flashing eyes that strike like weapons,
Like the serpent and the lightning,
The woman with a slender waist and broad shoulders—
Her gaze alone reveals all that is within
The eyes of one with lightning and snake like waist is like
the Lord in Tillai, the wish-giving stone, who is my ornament, nectar and soul,
who is rare to perceive even for celestials and whose sacred feet are like
affliction for those who do not worship them and as the panacea for those who
revere them.
He remains distinct from the soul (ornament), one with the
soul (nectar) and as the soul itself. He
is the essence of the process of thinking. He is imperceptible through senses
(Devas-light of awareness through senses). His sacred feet stir the longing for
their vision (disease) and their sight is the panacea. He, through his divine
visio,n grants his experience in between (between the state of ignorance and
merging) that may occur in a flash like the lightning or gradually like a
snake’s movement.
Manikkavasakar understands that the Divine intends to grant
him union.
Simple meaning:
The hero discerned the heroine’s intention from her gaze
that resembled that of the deer on Siva’s hand.
The heroine, with her waist like flashing lightning and a
serpent, does not use them as weapons.
Instead, she uses her eyes as a weapon to snare me and remains as my ornament,
my nectar and my soul, says the hero. Lack
of her company afflicts me as a disease and her presence (love) is its remedy.
She is the Chintamani that brings happiness whenever contemplated. She is like
the eyes of Siva, whom even celestials cannot perceive.
Spiritual meaning:
Sutra: Soul realizes that the Divine has love towards it.
Ornament, nectar, soul- they represent the Divine’s states,
with form, formless form and formless. They represent the progress from without
to within. In the previous verse Manikkavasakar mentioned hips, breasts and
waist, the body parts that bring worldly pleasure. By pointing out in this verse that Siva’s
body parts, the waist, feet and eyes grant liberation, he indicates that the
parts mentioned before also confer Siva anubhava, that both, worldly pleasure
and liberation originate from him alone. If worldly pleasures granted by his sacred
feet are an affliction then their remedy is also Siva’s sacred feet.
The ornament, nectar and soul also represent the physical,
subtle and causal bodies of the soul. An ornament is perceptible. Only the
person enjoying it knows the taste of nectar. Soul is the causal body. The one
in Tillai, the concealed one, remains as all these three.
Devas represent the light of knowledge obtained through
senses. Siva is the light of
consciousness which cannot be perceived through limited sensory knowledge. Siva
is the Chintamani, the one who grants everything. He is also the state beyond
the mind, the unmana state. Siva’s sacred feet give the disease, longing for
their vision. The remedy is not seeing something else. The vision of the sacred
feet is the only medicine for it.
Lightning and snake- they represent the divine experience
that occur before total merging. All these are granted by Siva’s eyes or his glance.
If the eyes represent the chakras, perception with progressing subtlety, the
chakras spin in one direction and cause attachment towards the world, the
pravriti marga. When they reverse the direction of their spin they lead the
soul towards liberation, the nivriti marga. Thus, they are both disease-causing
as well as relief from disease of samsara. Devi reaches the sahasrara like a
lightning. However, the soul cannot
handle its impact. Hence, she, by her divine vision, leads the soul slowly, by
granting it worldly pleasures and thus making it seek the supreme pleasure, the
bliss of merging with Her.
The soul was fraught with doubt before it received Divine’s
sacred glance. Now it feels confident
that the Divine intends to accept it.
No comments:
Post a Comment