1.3 தெளிதல்
பாயும் விடை அரன் தில்லை அன்னாள்
படைக்கண் இமைக்கும்
தோயும் நிலத்தடி தூமலர் வாடும் துயரம்
எய்தி
ஆயும் மனனே அணங்கு அல்லாள் அம் மா முலை
சுமந்து
தேயும் மருங்குல் பெரும் பணைத் தோளி
இச்சிறு நுதலே
பொருள்:
துயரம் கொண்டு ஆராயும் மனமே! பாயும்
காளையை உடைய அரன் வாழும் தில்லையைப் போன்றவளும் வேல் படையைப் போல இமைக்கும் கண்களை
உடையவளும் நிலத்தை தீண்டும் அடியை உடையவளும் வாடும் தூய மலர்களை உடையவளும் அழகிய
பெரிய முலைகளை சுமந்து தேய்வது போன்ற நின்ற இடையையும் பனை போல உயர்ந்த இரு
தோள்களையும் சிறிய நெற்றியையும் உடைய இப்பெண், தேவ
மாது அல்லள்.
அவள் தேவ மங்கையாக இருந்திருந்தால்
அவளது கண்கள் இமைக்காது, கால்கள் நிலத்தைத் தொடாது, அவள் சூடியிருக்கும் மலர்கள் வாடாது. இவையனைத்தும்
இந்த மங்கையிடம் காணப்படுவதால் அவள் மானுட மங்கையே என்று தலைவன் தெளிவுறுகிறான்.
வாடும் துயர் எய்தி வாடும் மனமே இவள் தேவருலக
மங்கை அல்ல, பாயும் விடையை உடைய, எல்லா தடைகளையும் அழிக்கும் ஹரனின் சக்தியான தில்லையே!
படைக் கண்- அவள் கண் திறந்தால் படைப்பு நடக்கிறது, இமைத்து மூடினால் சம்ஹாரம் ஏற்படுகிறது.
படை போன்ற கண்களை உடைய சதாக்ஷி அவள். நிலம் வரை உள்ள தத்துவங்களில் விரவியிருக்கும்
சக்தி, தூய்மையான மலர் குறிக்கும் சக்கரங்கள், உணர்வு நிலைகள், பர அபர ஞானங்களை மனமுவந்து
ஆத்மாவுக்கு, அது உயிர் தரிக்க, வளர தருபவள். அவளது கருணையைத் தாங்க இயலாத இடையை உடையவள். அவள்
இடை- ஆத்ம நிலைக்கும் இறைநிலைக்கும் இடையே இருக்கும் குண்டலினி சக்தி. அவள் சர்வசக்தி
பெற்றவள் (தோள்வலிமை-கிரியா சக்தி), ஒளி பொருந்திய ஞான சக்தி. (நெற்றி).
தான் பெற்ற சிவானுபவத்தால் மாணிக்க வாசகருக்கு
அவரது அனுபவம் பற்றிய தெளிவு வருகிறது.
சிற்றின்ப நிலை:
கொளு- அணங்கு அல என்று அயில் வேலவன்
குணங்களை நோக்கி குறித்து உணர்ந்தது.
இவளது உடல் பகுதிகள் அவள் அழகுக்குப்
படையாக உள்ளன. இவற்றைப் பார்க்காது துயருறும் மனமே
இவள் பெண்தான் தேவதையல்ல. இவள் என் மானுட இனத்தை சேர்ந்தவள்தான்.
பேரின்ப நிலை:
கொளு- பார்வை போலும் வடிவு என்று
அறிந்தது. அவளது பார்வை, அழகு, தோற்றம்
ஆகியவற்றைப் பார்த்தால் கடவுள் என்னை அவர் பக்கம் இழுக்க நினைக்கிறார் என்று
தெளிகிறது. மானைக் காட்டி மானைப் பிடித்தல் என்ற உக்தி இங்கு நடைபெறுகிறது.
அவளது அழகு என்னைப் பிடிக்க நிற்க வைத்த மான் போல இருக்கிறது.
அழகான பெண்ணைக் காட்டி என்னைக் கவர்ந்து அந்த போக போக்கியங்களைத் தந்து
தன்னை நோக்கி என்னைத் திருப்புகிறார். இறைவன்
உலக போக்கியங்களை அளிப்பது அதில் திருப்தியுறாமல் மேலும் முன்னேறி அவரைத் தேடவேண்டும்
என்பதற்கே.
இங்கு தலைவியாக இருப்பது எங்கும்
பரந்திருக்கும் அருவ நிலையை உடைய சிவன் அல்ல. எனக்கு ஞானம் தர ஞான ஆசானாக
உருவெடுத்து வந்த சிவன். இதனால் பேரின்பநிலையை விரும்பும் மனமே கவலைப்படாதே.
அவளது இரு முலைகள் பர அபர ஞானங்களைக்
குறிக்கும். அவரது ஞானத்தின் பாரம் தாளாது அவளது இடை
தவிக்கிறது.
படைக் கண்- படைக்கும் கண்.
அவள் தனது பார்வையாலேயே படைப்பை நிகழ்த்துகிறாள். ஜீவனின் மலங்களை அழிக்கக்கூடிய படைகளை தனது பார்வையால்
உருவாக்குகிறாள். படை போன்ற கர்மாவையும் அவளது பார்வை
விலக்கிவிடும்.
விடை அல்லது நந்தி தர்மத்தைக்
குறிக்கும். அந்த தர்மத்தைத் தனது கட்டுக்குள்
வைத்திருக்கும் அரனின் அருள் சக்தி இவள், தில்லையாக
இருப்பவள். பல்லாயிரக்கணக்கான படை போன்ற கண்களை
உடையவள் அவள், சதாக்ஷி. அந்த
கண்கள் திறக்கும்போது உலகம் தோன்றுகிறது. மூடும்போது உலகம் மறைகின்றது.
தோயும் நிலம் அல்லது மூலாதாரத்தை அடியாகக் கொண்ட குண்டலினி அவள்.
அந்த தூய மலர், ஜீவனுக்கு ஞானத்தை அளிக்க ஒரு
உருவெடுத்து தனது யாரும் காணாத பாதம் நிலத்தில் படுமாறு நடந்து வாடுகிறது.
இக பர சுகங்களைத் தரும் முலைகளையும், இருந்தும் இல்லாததும் போல
தோன்றும் இடையையும், வலிமையான செயல்புரியும் சக்தியைக் காட்டும் தோள்களையும்
சாமுத்ரிகா லட்சணமான சிறிய நெற்றியையும் உடையவள் அவள். இவ்வாறு உருவமற்ற
பரம்பொருள் ஜீவனுக்கு ஞானத்தை அளிக்க ஒரு உருவில் தோன்றுகிறது.
இறைவனுடன் கலந்ததால் மாணிக்கவாசகர் தான்
யாருடன் சேர்ந்தோம் என்ற ஞானத்தைப் பெற்றிருக்கிறார்.
1.3
Clarity
O mind, tormented by confusion and longing for clarity!
She, resembling the Thillai of the Lord with the raging bull.
With spear-like, blinking eyes, with feet touch the ground, the pure flower,
With full, beautiful breasts, a slender waist that seems to wither under their
weight,
Strong, towering shoulders like palm trees, and a delicate forehead
Is not a celestial maiden.
Summary: Her features, blinking eyes, feet touching the ground, and withering
flowers show she is not a celestial maiden. She is a beautiful maiden.
Special meaning: She is not a celestial; she is Shakti herself. She creates by
her mere glance (padai-army-creation) and destroys by closing her eyes. Her
presence spans up to the pritvi tattva. She is the pure flower-the chakras. She
holds para and apara jnana (milk-breast), that she grants voluntarily to
sustain the lifeforms and help them progress spiritually. She is the Divine in
a form (idai- between- between the soul and divine states) hard to perceive.
She is omnipotent (powerful shoulders) kriya shakti. She has an effulgent
forehead, she is jnana shakti as well.Simple meaning:
Sutra:
"She is not a celestial being," realizes the warrior who wields the
spear. Her body parts are like an army of beauty. Mind who is feeling sad, not
seeing them! She is not difficult-to-perceive celestial.
Spiritual
meaning:
Sutra:
Her form reveals the Divine’s intention. Like the trick of capturing a deer by
using another deer as the bait, the Lord is showing this form and attracting me
to him. The Divine grants worldly pleasures to make the soul imagine and
perceive the supreme pleasure, the bliss.
Siva
is not in his formless-form here. He has taken the form of a guru. So the mind
need not worry as he would grant the para and apara jnana and help you realize
the Divine.
Padai
kaN- By opening and closing her eyes Shakti creates and dissolves. She is the effulgence,
the Shakti of Hara, one who destroys all obstacles in the path of merging with
him. His mount, the bull represents dharma. Riding on dharma the Lord directs the
souls towards him through the right path. She has army of eyes- she is
Sathakshi, one with countless eyes. The influence of her Shakti extends up to
the pritvi tattva the last in the line of principles that constitute the
universe. She is the kundalini shakti, who is in between, connects, the soul
and the Divine. She has strong shoulders revealing her omnipotency, that she is
kriya shakti. Her forehead is effulgent showing that she is jnana shakti as
well.
Due
to Siva Anubhava Manikkavasakar realizes who granted him the experience
No comments:
Post a Comment