1.12. பிரிவுணர்த்தல்
சிந்தாமணி தெண் கடல் அமிர்தம் தில்லையான் அருளால்
வந்தால் இகழப்படுமே மடமான் விழி மயிலே
அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனே
சிந்தாகுலம் உற்று என்னோ என்னை வாட்டம் இருத்துவனே
பொருள்:
சிந்தாமணியும் குளுமையான கடலிலிருந்து வந்த அமுதமும் எவ்வித முயற்சியும் இல்லாமல் தில்லையான் அருளால் வந்தால் யாராவது இகழ்வார்களா? அழகிய மான் போன்ற விழிகளை உடைய மயிலே, தாமரையின் மீது உள்ள அன்னமே உன்னை விட்டு அகன்றால் நான் பொறுப்பேனோ? எதற்காக நீ மன வருத்தம் கொண்டு என்னை வாட்டத்தில் இருத்துகிறாய்?
கிடைத்தற்கரிய பொருள் உழைப்பின்றி கிடைத்தால் ஒருவர் மகிழ்ச்சி அடைவாரேயன்றி அதை இகழ மாட்டார். உனது அன்பு எனக்கு எளிதாகக் கிடைத்ததற்காக அதை மட்டமாக நினைப்பேனோ?
சிந்தாமணி, தீவிர சங்கல்பம், மணி போல திரண்டு ஒரு துளி போல இருப்பது. இது சிந்தை ஒரு புள்ளியில் இருப்பதைக் காட்டுகிறது. சித்த விருத்தியற்ற நிலை.
மான்- தனது அழகான கண்களால் தலைவனின் கண்களைக் கவர்ந்து தன்னைவிட்டு அகலாமல் வைப்பது. சிவம் ஆத்மாவைத் தனது பார்வையால் தன்னைத் தவிர வேறு பொருள்களைப் பார்க்காமல் செய்வது. இது மாணிக்கவாசகர் பெற்ற நயன தீக்ஷையைக் குறிக்கும். மனமும் கண்களும் சிவனிடமே இருக்கிறது.
மயில்- காண்பவரது பித்தத்தை தெளிவிக்கும், மனச்சிதறல் ஏற்படாமல் வைப்பது. மனம், கண்கள் உள்பட எல்லா புலன்களும் சிவத்திடமே இருப்பது, எவ்வித மன சிதறலுக்கும் இடம் கொடாமல் இருப்பது. இந்த நிலையைத் தருவது சிவமே, தனது குணங்களைக் காட்டி ஆத்மாவை தன்னிடம் பிடித்து வைத்துக்கொள்கிறது.
தாமரையில் இருக்கும் அன்னம், பிராணன் ஒழுங்கற்று ஓடாமல் சக்கரங்களில் தங்கியிருப்பது. பிராண ஓட்டம் சரியாக இல்லாவிட்டால் மனம் சிதறும். அதுவும் இங்கு தடுக்கப்பட்டுள்ளது.
கண்ணை இறைவனிடம் வைத்து, மனத்தை சிதறவிடாமல் செய்து பிராணாயாமம் செய்தால் உன்மன நிலையை அடையலாம். அப்போது மனத்தாமரையில் சிவனை இருத்த வேண்டும். இதுவே யோக நித்திரை, உறங்காமல் உறங்குவது.
சிந்தை மணியாக இருக்கும்போது எதற்கு சிந்தை ஆ குலமாக- பசு தன்மையுடன் இருப்பது- துன்பம் துயரம் அனைத்தும் பசுத்தன்மை. ஆனந்தம் பதி தன்மை.
1.12 Indicating impending separation
Chintamani, nectar from cool ocean- if they come to one, by the One in Tillai’s grace
Will they be insulted. The one with eyes like a bashful deer, the peacock
The swan in the beautiful lotus, will I leave you feel peaceful
Why are you so worried, it makes me sad too.
Simple meaning:
Will anyone insult the wish-granting jewel, Chintamani and the nectar from the southern seas it they are received by the Lord’s grace and without any effort on one’s part? The one with eyes like the deer, beautiful peacock, the one like the swan on the lotus, if I separate from you do you think I will be peaceful? Why do you worry and make me also sad? The hero is saying that just because he got the heroine’s love without any effort he will not think it is cheap, easy to get.
Chintamani- intense sankalpa. The mind focuses like a gemstone and makes any intention fruitful. It is the state free of chittha vritti.
Deer- attracting the soul by beautiful vision and holding him captive. It blocks the soul from seeing anything else. The mind and eyes remain only with Sivam. Peacock removes delusion, scattering of mental focus. Sivam grants these two, holding the soul in its grip. Swan on lotus- prana remaining in the chakra, without running helter-skelter in an erratic fashion. If the flow of prana is not proper then the mind gets scattered.
If one performs pranayama, planting the eyes firmly on the Lord and preventing the mind from scattering then one goes to the unmana state which is beyond the mind. Sivam should be the only entity in the mental screen. This is yoga nidra, sleeping without sleeping.
The soul is saying that when the chinthai is present as mani, there is no need to be chinthai aa-kulam. Aa-kulam- sorrow, the clan of pasu or limited soul. Sorrow, sadness belong to pasu qualities, that of limited soul, Anandha is pathi quality, that of eternal Divine.
No comments:
Post a Comment