Thursday, 13 March 2025

1.9 Before and after being the same

 1.9. இருவயின் ஒப்பு 

உணர்ந்தார்க்‌கு உணர்வு அரியோன் தில்லைச்‌ சிற்றம்‌பலத்து ஒருத்தன் 

குணந்தான்‌ வெளிப்பட்ட கொவ்வைச் செவ்‌வாய் இக்கொடி இடை தோள்‌

 புணர்ந்தால்  புணருந்‌தொறும் பெரும்‌ போகம் பின்‌னும் புதிதாய்‌ 

மணம் தாழ் புரி குழலாள் அல்குல்‌ போல வளர்கின்றதே

பொருள்:

அவனை உணர்ந்தவர்களுக்கு அந்த உணர்வாக இருப்பவன், எளிதில் உணர முடியாத அரியவன். தில்லை சிற்றம்பலத்தில் உள்ள அத்தகைய ஒருவனது குணம் வெளிப்படுவதைப்போல கொவ்வை பழம் போல சிவந்த வாயையும் கொடி போன்ற இடையையும் தோளையும் உடைய இவளோடு ஒவ்வொரு முறை புணரும்போதும் அந்த போகம் புதியதாக  இந்த மணம் கொண்ட சுருண்ட கூந்தலை உடையவளின் அல்குல் போல வளர்கிறதே. 

உணர்வின் உணர்வாகவும் உணரும் சக்தியாகவும் இருப்பவர் இறைவன்.  யாவையுமாய் அல்லயுமாய் இருக்கும் அவர், அறிவதற்கும் அடைவதற்கும் அரியவர். ஒருத்தன்-ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒருவர். அவரது குணம் . வாக்காக, அதன் இடைப்பட்ட நிலைகளாக, செயல்களாகவும் அவர் தரும் சிவானுபவமாக- உடல், மனம், ஆத்மா என்ற மூன்றும் அனுபவிக்கும் போகமாக வெளிப்படுகிறது. ஒவ்வொருமுறை ஒரு சொல்லைக் கூறும்போதும் ஒரு செயலைச் செய்யும்போதும், சுவாசிக்கும்போதும் தன்னை மறந்து இறையுணர்வில் ஒன்றும்போதும் அந்த அனுபவம் புதியதாக மேலும் மேலும் விரிவதாக, உள்ளது.  சொல் விரிந்து வாக்கியங்களாக செயலாக மாறுகிறது, இறையனுபவம் விரிந்து ஆனந்தமாகிறது. இவ்வாறே பரமானந்தத்தின் வெளிப்பாடான உலகம் விரிகிறது.

சிற்றின்ப நிலை:

கொளு-மாறா இன்பத்து அன்பு மீதூற மாறா முலையை மகிழ்ந்து உரைத்தது. 

மாறா இன்பம்- எப்போதும் தன்மை மாறாத, முடிவற்ற இன்பம். அதனால் பிறப்பது அன்பு.  அந்த அன்பு எப்போதும் புதியதாக வளர்வதாக இருந்தது என்று தலைவன் கூறுகிறான்.

பேரின்ப நிலை:

உணர்ந்தார்க்‌கு உணர்வு அரியோன் தில்லைச்‌ சிற்றம்‌பலத்து ஒருத்தன்- அவனை உணர்ந்தவர்களுக்கு அந்த உணர்வாக இருப்பவன். 

கண்ணால் பார்த்தால் அந்த பார்வையாக இருப்பவன் இறைவன். காதால் கேட்டால் அந்த கேள்வி உணர்வாக உள்ளவன் இறைவன். அவனை ஒருவர் உணர்ந்தால் அந்த உணர்வாக இருப்பவன். அவ்வாறு அவனை உணருபவர்கள்  அனைத்தையும் சிவமாக உணருவர்.  இவ்வாறு ஆத்மாவின் அனைத்து செயல்களிலும் அவன் ஊடுருவி இருந்தாலும் அவனை ஒருவரும் உணருவதில்லை.  அதனால் அவன் அரியவன். அத்தகைய சிற்றம்பலவன் ஒருவன். தனியொருவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். கண்ணால் காணும் பிரபஞ்சமும் கண்ணுக்குப் புலப்படாதவையும் காலமும் அவன் ஒருவனே. அவனன்றி எங்கும் வேறு எதுவும் இல்லை.  ஒருவன் என்பதால் அவன் சேதனன். உணர்வற்ற பரமாணு அல்ல.  நமக்கு எல்லா உறவாயும் இருப்பவன் அவனே.  

அவனது குணங்களில் பிரதானமானது ஆனந்தம்.  அது அவனது செவ்வாய், அழகிய இடை தோள் ஆகியவையாக, அதாவதுவாக்கு, அதன் இடைப்பட்ட நிலைகள் மற்றும் செயல்பாடு என்பவையாக வெளிப்பட்டன. அவ்வாறு அவனது வாய், இடை, தோள் என்பவை ஆனந்தத்தின் வெளிப்பாடே. அதுவே வாக்காகவும் செயலாகவும், உலகமாகவும் வெளிப்படுகிறது.  உலகம் என்பது சத்தும் சித்தும் சேரும்போது தோன்றும் ஆனந்தத்தின் வெளிப்பாடு என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. அந்த ஆனந்தம் இரண்டு வகைப்படும். உலகில் உள்ள போகங்களை அனுபவிப்பது விஷயானந்தம்.  ஒரு சித்திரத்தையோ ஒரு கலையையோ பார்க்கும்போது நம்மிடம் அந்த பொருள் இல்லையென்றாலும் அந்த காட்சி மட்டுமே இருந்தாலும், உதாரணமாக ஒரு அழகான தோட்டம், மலை நமக்கு ஆனந்தத்தை அளிக்கின்றது.  இங்கு காண்பவரும் காணப்படும் பொருளும் வெவ்வேறாக உள்ளன.  அந்த நிலை மாறி காண்பவர் காண்பதில் கரையும்போது அங்கு இருப்பது ஆனந்தம் மட்டுமே.  அதுவே பரமானந்தம்.  அந்த பரமானந்தத்திலிருந்து வெளிப்படுவது என்பது ஒரு உயிர் மீண்டும் பிறப்பதைப் போன்றது ஏனெனில் இறப்பு என்பது உயிர்கள் இறைவனிடம் ஒன்றுவது. பிறப்பு என்பது அந்த லயத்திலிருந்து வெளிவருவது. இவ்வாறு இறையனுபவம் என்பது ஒரு புதிய பிறவியை போல ஒவ்வொருமுறை ஏற்படும்போதும் புதியதாக, இன்பம் மிகுவதாக உள்ளது.  ஆனந்தம் என்ற சொல்லில் ஆ என்பது விரிந்துகொண்டே செல்வது என்று பொருள்படுகிறது.  விஷய ஆனந்தங்கள் இவ்வாறு விரிவதில்லை, அவை காலம் தேசம் என்ற அளவுகளுக்கு உட்பட்டவை.  பரமானந்தமே எல்லையற்று விரிவது.  அதையே மாணிக்கவாசகர் விரியும் அல்குல் என்கிறார்.  அல்குல் என்பது ஆனந்தத்தைத் தரும் ஒரு வஸ்து அல்ல, அதுவே ஆனந்தம்.  ஆனந்தம் வெளிப்படும் வாசல்.  

 

1.9 Equivalence of experience- before and after

Realization of the realized, the rare one, the unique one in Tillai Chitrambalam

His qualities revealed through the ruddy mouth, creeper-like waist, shoulder

The supreme pleasure every time united, ever newness

The lady with fragrant hair, it grows like her genitalia.

 

Meaning: The pleasure of union which feels ever new with the lady with ruddy mouth, thin waist, and shoulders, who is the manifestation of the qualities of the one in Tillai Chitrambalam, the rare to comprehend Lord, the one who is the realization of the realized grows like her yoni.

The supreme bliss of union with the Lord, who is the unique and rare to comprehend one, who is the realization of the realized souls, and whose qualities are revealed as words or vak, kundalini shakti and omnipotence feels new every time and grows like the expansion of the portal of manifestation.

 

Spiritual meaning:

The Divine is the ‘seeing’ of the eye, ‘hearing’ of the ears, ‘realization’ of consciousness. He is not easy to reach or comprehend even though he pervades everything and every action. He is the time, space and causation. He is not insentient material but a sentient being. He is the unique, incomparable in Tillai Chitrambalam, the arena of effulgence.

The Divine is experienced as words (ruddy mouth), shakti (kundalini, waist) and actions (shoulder). However, the supreme experience of the Divine is as anandha or bliss. The long vowel, aa, in the word ananda means ‘that which expands’.  Worldly pleasures are limited by time, space, and causation. When we see a flower, a mountain or a river, we feel happy.  However, when the object becomes familiar, or we see it in another context, the feeling it invokes is not the same.  The pleasure of union with the Divine is different.  The process of a soul uniting with the Divine and re-emerging is a new birth.  Hence, the happiness or pleasure the soul feels is new and fresh every time, like that experienced by a newborn.  A woman’s private part is mentioned here as a place holder for the portal of manifestation.  It is  the gate through which the Lord’s bliss emerges and appears as the world

No comments:

Post a Comment