Wednesday, 19 March 2025

1.13 Reason for sorrow

 1. 13. பருவரல் அறிதல்

கோங்கில் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குருகலர் ஊர்
தீங்கில் புகச் செற்று கொற்றவன் சிற்றம்பல மனையாள்
நீங்கில் புணர்வு அரிது ஒன்றோ நெடிந்து இங்கனே இருந்தால்
ஆங்கிற் பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே

பொருள்:

கொளு: பிரிவு உணர்ந்த பெண் கொடி தன் பருவரலின் பரிசு நினைந்தது. தன் பிரிவை அறிந்து கொடி போன்ற பெண்ணுடைய துன்பத்தின் இயல்பாய் விசாரித்தது.
கோங்கு மலர் அரும்பு போல மார்பை உடைய மங்கையைத் தனது பாகமாக உள்ளவனும் தன்னை அணுகாதவர் ஊரை தீயில் புக வைத்து போரிட்ட அரசனுமான சிற்றம்பலவனின் மனையாள் எதற்காக சோர்வுறுகிறாள்? நாம் விலக்கினால் புணர்வது அரிது என்று எண்ணியா அல்லது இதே போல் சேர்ந்திருந்தால் அதனால் பழி வரும் என்றா? நான் அறியேன்.

தலைவியின் சோர்வைக் கண்டு தலைவன் தனக்குள் அதற்கான காரணங்களாக இரண்டை ஊகிக்கிறான்.
பேரின்ப நிலை: திருவுளத் திறம் கண்டது. தன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று சிவத்தை உணர்ந்த சித்தாகிய ஆத்மா பாராட்ட அதனால் நாணம் கொண்ட சிவம் பின்னும் பெரிதும் வருந்தியவாறு இருந்ததைக் கண்டு ஆத்மா அந்த வருத்தத்துக்கு இரண்டு காரணங்களைக் கற்பித்தது.

சந்தேகமும் கேள்விகளும் ஆத்மாவுக்கே வருகின்றன, தலைவியான சிவத்துக்கு அல்ல. தலைவியின் மார்பை இங்கே குறிப்பிட்டது பர ஞானமும் அபர ஞானமும் அவளிடமிருந்தே பிறக்கின்றன, அங்கே சந்தேகத்துக்கு இடமே இல்லை என்று காட்ட. பிரிந்தால் சேர்வது அரிதாக இருக்குமோ என்ற தலைவனின் சந்தேகத்தைத் தீர்க்க முப்புரமும் எரித்தவர் சிவன் என்று குறிப்பிடப்படுகிறது. முப்புரம் என்பது ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்கள். சிவனை அடைவதைத் தடுப்பவை இந்த மலங்கள். இதை எரிப்பவர் சிவன். மலங்களின் செயல் இல்லாமல் போகும்போது சிவத்துடன் சேருவது தடைப்படாது. உமா தேவியாரைத் தனது பாகமாக உடையவர் சிவன், சக்தியுடன் நிரந்தரமாக சேர்ந்திருப்பவர் சிவன் என்று குறிப்பிடுவது அவ்வாறு சேர்ந்திருப்பது பழிக்கத்தக்க நிலையல்ல, அதனால் பழி வராது, அந்த சந்தேகமும் தேவையற்றது என்று காட்ட. அர்த்தநாரி உருவத்தைக் குறிப்பிடுவதற்கு மற்றொரு காரணம், ஜீவன் என்பது சிவசக்தி ஐக்கியத்தின் வெளிப்பாடு, அந்த ஆனந்தத்தின் உருவம், அங்கே பிரிவு என்பதே உண்மையில் இல்லை. ஜீவனின் மல வாசனைதான் பிரிவு என்ற ஒன்றை கற்பனை செய்துகொள்கிறது என்பதைக் காட்ட.

பிரிவைப் பேசுவதால் இது பாலை நிலப்பாடல் என்று குறிக்க பாலை நில மலரான கோங்கு இங்கு இடம்பெற்றுள்ளது. பாலை என்று தனியான ஒரு நிலம் இல்லை. உயிர்களுக்கு உண்மையில் சிவத்திடமிருந்து பிரிந்து இருப்பது என்ற நிலை இல்லை. ஆனால் வாசனா மலத்தால் உயிர் சிவத்திலிருந்து தனக்கு பிரிவு ஏற்படும் என்று எண்ணுகிறது. அதனால் நீங்கில் என்று சந்தேகக் குறியீடு உள்ளது. நீங்கினால் தான் அந்த உயிரை மீண்டும் தடுத்தாட்கொள்ள வேண்டியிருக்குமோ என்று சிவம் வருந்துகிறது என்று ஆத்மா நினைக்கிறது. அனைத்தும் சிவன் ஆணையால் நடைபெறுகின்றன என்பதை அது மறந்துவிட்டது. சிவத்துடன் ஒன்றிய உயிர்கள் உலகோருக்கு பித்தர்கள் போல பிசாசுகள் போல தோன்றுகின்றன. அந்த உயிர்களை சிவம் உலகோரின் பழியிலிருந்து, இகழ்விலிருந்து காத்து தன் அடிக்கீழ் வைத்திருக்கிறது.

1.13 Reason for sorrow
The consort of the one with breast like the bud of kongu, the one who fought and set fire
To the towns of those who did not approach, the consort of the King of Citrambalam
Is it because (she worries) that if separated union will be difficult or if remained in union so
It will bring disgrace, that she is fatigued? I do not know.

The hero is wondering why the heroine is looking beaten down and imagines two reasons for it. He wonders if it is because she is worried that it will be hard to unite again if they separate now or whether she worries if being in union will bring disgrace.
Doubts and questions arise only to the soul, not to Sivam who directs everything. Mentioning that the breasts are like buds is to indicate that the soul’s jnana has not matured yet, it is in a budding stage, and hence the doubt. The episode of Siva burning the Tripura, the three towns made of iron, silver and gold is to show that Siva burns the three innate impurities, anava, maya and karma. These three cause any obstacles in a soul’s life. Siva removes them.

Saying that Siva is eternally united with Uma, the Shakti is to indicate that they are already in permanent union and that it is only earning praise and not dishonor. Hence, the soul uniting with Sivam, similarly, will only be praised, not insulted.
The Ardhanari form is mentioned to indicate that the soul is a manifestation of union of Siva and Shakti. The soul’s innate impurities make it feel separate from Sivam and that there is really no separation.

This verse belongs to the Paalai land. Hence, the Konga flower, its signature flower is mentioned here. Just as how there is no separate land as Paalai there is no real separation between the soul and the Divine. Hence, the separation is mentioned only as a possibility. The souls that remain merged with Sivam appear crazy to the world. Sivam protects such souls from disgrace and troubles by the worldly.

No comments:

Post a Comment