Sunday, 23 March 2025

1.17 Admiring the rare good fortune

  1.17. அருமை அறிதல்

புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும் தன் பூங்கழலின்
துணர்போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லைசூழ் பொழில் வாய்
இணர் போது அணி குழல் ஏழை தன் நீர்மையின் நீர்மை என்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே

பொருள்:
பூமியையும் ஆகாயத்தையும் மலைகளையும் படைக்கின்றவன் ஒரு நொடிப்போது தனது திருப்பாதங்களாகிய பூங்கொத்துக்களை எனக்கு ஆபரணமாக்கும் பழமையானவனது நீர்மை, நீர்மை என்றால் தில்லை புலியூரில் உள்ள பொழிலில் பூங்கொத்துக்களை அணிந்த கூந்தலையுடைய தலைவியின் தன்மை இவ்வாறிருக்க நான் இவளுடன் கூடியது கனவோ வேறு எதுவோ, நான் அறியேன்.

தலைவியின் பெருமை, அவளது சூழல் அவளது தோழிகள் ஆகியவற்றைப் பார்த்து அத்தகைய தலைவியா தன்னுடன் புணர்ந்தது, அது உண்மையில் நிகழ்ந்ததா அல்லது கனவா அல்லது வேறு எதுவுமா என்று தலைவன் வியக்கிறான்.

சிவன் சக்தியுடன் கலந்து அந்த ஐக்கியத்தால் உலகைப் படைக்கிறார். அந்த கலப்பு ஒருவராலும் இது என்று அறிய முடியாதது, விளக்க முடியாதது. அதன் விளைவே, ஆனந்தத்தின் வெளிப்பாடே நிலமும், வானும் மலைகளும். ஜீவன் சிவத்துடன் கலப்பதும் அத்தகைய கலப்பே, அதில் வெளிப்பட்ட இன்பம் உலகளவு என்று மாணிக்கவாசகர் குறிப்பால் உணர்த்துகிறார்.

நிலம் கண்ணால் காணக்கூடிய, மாறாத, உருவை உடையது. விசும்பு அல்லது ஆகாயம் நுண்மையானது. உருவமற்றது, ஆனால் அதன் இருப்பை அனைவரும் அறிவர். அதுவும் மாறாதது. மலை வளர்ந்து தேய்வது, மாறும் உருவைப் பெற்றது. இவ்வாறு இந்த மூன்றும் இறைவனின் உருவம், அருவம் அருவுருவத்தைக் குறிக்கின்றன. தலைவனின் இன்பமும் ஒரு உருவமாக, அருவமாக, அருவுருவமாக வெளிப்படக்கூடியது. ஆத்மாவின் ஆனந்தம் கண்ணீராக, அடக்கமாக, உருமாற்றமாக ஒரு உருவில் வெளிப்படலாம், இன்னதென்று பிறருக்கும் தனக்குமே காட்ட முடியாததாக, உள்ளே ஊறும் இரையுணர்வாக உருவமற்றதாக இருக்கலாம் அல்லது நினைக்கும்போதெல்லாம் மேலே எழும் உணர்ச்சி வெளிப்பாடாகவும் பிற சமயங்களில் நதி போல உள்ளே அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் ஆனந்தமாக அருவுருவமாக இருக்கலாம்.

இறைவன் மாற்றமின்மை, மாற்றம் உடைமை என்ற இரு தன்மையவர். இதை கூடஸ்த நித்யத்வம் மற்றும் பிரவாக நித்யத்வம் என்று கூறுவர். இவற்றை சிவ சக்திகள் என்றும் கூறலாம். எப்போதும் மாற்றமுடையது ஆனால் நிரந்தரமாக இருப்பது சக்தி. மாற்றமில்லாமல் எப்போதும் இருப்பது சிவம். இந்த இரண்டும் கூடும்போது பிறப்பது ஆனந்தம். இதையே புராணம் என்ற சொல் குறிக்கிறது. புரா- பழமையானது, நவ- புதியது. ஆத்மா நான் அன்று அங்கு இருந்தேன் என்று கூறுகிறது. அப்போது இருந்த ஆத்மா இப்போது இல்லை என்று அதற்கு பொருளல்ல. அந்த ஆத்மா இப்போதும் உள்ளது. ஆனால் அது இருந்த கால தேசங்கள் வேறு, இதுவே பிரவாக நித்யத்வம். பழமையிலும் இருந்தது ஒரு அனுபவமாக, இப்போதும் இருக்கிறது வேறொரு அனுபவமாக.

நிலம் என்பது பொதுவாக மூலாதாரத்தையும் வானம் என்பது சகஸ்ராரத்தையும் குறிக்கும். மலை என்பது நிலத்திலிருந்து வானத்தை நோக்கி எழுவது, சக்கரங்களின் ஊடே எழும் சக்தி. இவ்வாறு பராபரம் புணர்ந்து பராபரை ஆகி, நிலமும் வானும் போல சிவ சக்திகள் ஆகிறது. அவற்றின் ஊடே ஜீவன் மலையைப் போல பயணிக்கிறது.

நிலமும் வானும் அசைவற்றவை- சிவம். மலை-அசைவுள்ள சக்தி. நிலமும் மலையும் வேறாகத் தோன்றினாலும் நிலத்திலிருந்து எழுந்து தாழ்வது மலை. சிவத்திலிருந்து எழுந்து அடங்குவது சக்தி.
இங்கு தலைவி வான் போல, நிலம்போல மாறாமல் இருக்கிறாள். தலைவன், ஜீவன், சந்தேகம் நம்பிக்கை என்று மாறிக்கொண்டிருக்கிறான், மலை போல. அவனது நம்பிக்கை அவனது இன்பத்தை வளர்க்கிறது, சந்தேகம் அதைத் தேய வைக்கிறது.

புணர்ந்தோன் நிலமும் என்பது இறைவன் அவற்றுள் கலந்து இருக்கிறான் என்பதைக் காட்டுகிறது.
தனது பூங்கழலின் மலர்களை சிவன் ஜீவனுக்கு அணியாக்கியது- மலர்கள் சக்கரங்கள். அவை சிவனின் பாதங்களைக் குறிக்கும். அவை ஜீவனுக்கு அணிகள். அந்த சிவானுபவத்தை தனது குழலில் அணிந்திருப்பவள் தலைவி, சக்தி. அந்த சக்தியே இங்கு தலைவியாகக் காட்டப்படுகிறாள். குழல் என்பது அசைவை, செயல்பாட்டை உடையது. அதுவே சக்தி நிலை.

தனது மலர்போன்ற திருவடிகளை இறைவன் தனது தலையில் வைத்து அருளிய திருவடி தீக்ஷையையும் இது குறிக்கிறது.
உலகையே தனது சங்கல்பத்தால் படைப்பவன் தனது சங்கல்பத்தால் என்னுடன் புணர்ந்தான், நான் செய்த செயலின் பலனாக அல்ல.

இணர்போது ஏழை- ஏழு+ஐ- ஏழு சக்கரங்கள், ஐ என்பது ஐம் பீஜம். வாக்பவ கூடம், தலைப்பகுதியில் குறிக்கப்படுவது. ஏழை- தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாததால் ஏழை.

சக்கரங்களின் மூலம் ஜீவசிவ ஐக்கியத்தை ஏற்படுத்துவது சிவத்தின் நீர்மை. நீர்மை என்பது நீரின் தன்மையான குளுமை, இன்பம் பயப்பது, தாபத்தைத் தணிப்பது. சிவம் இவையனைத்தையும் ஜீவனுக்குத் தருகிறது.

அத்தகைய உயர்ந்த தலைவியுடன் தான் புணர்ந்தது உண்மையில் நிகழ்ந்ததா, கனவா அல்லது தான் அறியமுடியாத ஒன்றா என்று வினவுகிறது. அதன் விளைவை ஜீவனால் காண இயலலாததால் எழுந்த சந்தேகமும் வியப்பும் இது. ஒன்றைத் தீவிரமாக நினைக்கும்போது அது கனவாக வெளிப்படுகிறது. இந்தப் புணர்ச்சியும் தனது தீவிர விருப்பத்தினால் தோன்றிய கனவா, அத்தகைய உயர்ந்த தலைவி தன்னுடன் கலந்தது கனவாக இருக்க முடியாது ஏனெனில் அவள் என் முன் நிற்கிறாள் என்று உயிர் வியக்கிறது.

1.17 Admiring the rare good fortune
The one who merges (with, creates) land, sky and mountain, the one who
Made his flower-like feet my ornament, the ancient one, in the grove in Tillai
The woman with a flower bunch on her hair, it is her supreme grace
Is this union a dream or something else? I do not know.

Simple meaning:
The union with the lady whose hair is adorned with flower bunch, in the Tillai grove of the one who creates the earth, the sky and the mountain (merging with them), the one who offered his flower-like feet as my ornament, the ancient one, is due to her grace. Was the union a dream or something else? I do not know.
Seeing the company the heroine keeps, her position and status the hero wonders whether he really united with her due to her grace or was it all a dream or something else.

Spiritual meaning:
Siva merges with shakti and the bliss from the union manifests as the universe. One cannot describe the union as this. Similarly, the soul’s union with the Divine is also indescribable. The bliss is as magnificent as the world..

The earth has a perceivable form and is unchangeable. The sky is subtle, formless but everyone knows its presence. The mountain has a form that grows and shrinks. Thus, the divine bliss emerged as those with a form, formless and with a formless-form. The soul’s bliss also emerges as these three. Its physical transformation, tears of bliss can be perceived and hence with a form. The bliss that runs constantly within as an undercurrent that cannot be described to others or even to oneself as this, is the formless expression. The upsurge of emotion, tears suddenly and it subsiding later and flowing quietly can be called the formless-form.

The Divine exists as in the two states, being changeless and with change. These are called kootastha nityatvam and pravaaha nityatvam. These can be called Siva and shakti. Shakti is the one that changes constantly but is eternal. Siva is changeless constant eternal. When these two merge, bliss emerges. The word purana refers to this, it is pura-the ancient, unchanging, nava- the ever new but eternal. When a person says I was there then it means he was present at a particular place at a specific time. It does not mean that entity is not present now, it also means the entity that was present in that time and space framework does not exist now. It is different. This is pravaaha nityatvam.

The Divine exists as in the two states, being changeless and with change. These are called kootastha nityatvam and pravaaha nityatvam. These can be called Siva and shakti. Shakti is the one that changes constantly but is eternal. Siva is changeless constant eternal. When these two merge, bliss emerges. The word purana refers to this, it is pura-the ancient, unchanging, nava- the ever new but eternal. When a person says I was there then it means he was present at a particular place at a specific time. It does not mean that entity is not present now, it also means the entity that was present in that time and space framework does not exist now. It is different. This is pravaaha nityatvam.

Earth represents muladhara and sky the sahasrara. The mountain traverses these two. It represents the shakti that ascends through the chakras. The sky and earth are like Siva and Shakti and the jiva travels between these two states like the mountain.
The earth is immobile- Sivam. The mountain grows and shrinks- Shakti. Even though the mountain appears different from earth it is form of earth, it emerges and subsides in earth. Shakti rises and abides in Sivam.

Here, the heroine is changless, like the earth and sky. The hero swings between hope and despair, doubt and conviction. His trust gives him happiness and doubts erodes it.
The chakras are loci of Siva shakti, their paduka. The Divine made them an ornament for the soul. Shakti has adorned these flowers, Siva’s sacred feet, the chakras on her hair. The hair represents movement.

Manikkavasakar talks about his Tiruvadi deeksha or initiation when the Guru places his feet on the disciple’s head. Manikkavasakar wonders that the one creates the universe by his will decided to unite with me, willingly, not as a result of his action.

The heroine is called a pauper, ezhai- the word when split as Ezhu- means seven and ai- the shakti letter. Thus, it indicates the seven chakra the storehouses of shakti. She is a pauper lacking anyone, anything comparable or superior to her.

Jiva Siva aikhya occurs in the chakra due to Sivam’s grace, neermai. Neer- water. Grace is cool, gives happiness and comforts the heat of samsara, like water. The soul doubts whether it really united with the Divine as it is unable to see an effect. When someone thinks about something deeply the object of such a contemplation manifests as a dream. The hero wonders whether what he experienced was such a manifestation. He is also convinced that it is not imagination or dream, that she was an apparition, as the heroine stands before him.

No comments:

Post a Comment