1.16. ஆடிடத்து உய்த்தல்
தெளிவளர் வான் சிலை செங்கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்தஅளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெருந்தேன்
துளி வளர் சாரல் கரந்து உங்கனே வந்து தோன்றுவனே
பொருள்:
பெரிய வில்லை ஒத்த புருவமும் சிவந்த கொவ்வை பழம் போன்ற இதழையும் வெண் முத்து போன்ற பற்களையும் முழு மதி போன்ற முகத்தில் பெற்றுள்ள, கருணை மிக்க பூங்கொடி போன்ற தலைவியே! நீ உன் தோழிகளுடன் உன் இடத்தில் விளையாடுவாயாக. ஒளியுடைய தில்லையில் உள்ள, யாராலும் அளக்க முடியாத ஒருவனது மலையான கயிலையில், சிந்துகின்ற பெரிய தேன் துளிகள் இடைவிடாது பெருக்குகின்ற சாரலில் உள்ள சோலையில் நான் மறைந்திருந்து பின் உன் இடத்தில் வந்து தோன்றுவேன்.
பேரின்பநிலை:
தலைவியை அவளது இடத்துக்குப் போய் ஆடு, நான் கயிலை மலையில் உள்ள சாரலில் ஒளிந்திருந்து பின் நீ இருக்கும் இடத்தில் வந்து தோன்றுவேன் என்கிறான் தலைவன். இப்பாடலில் தலைவியின் இடம் எது என்று கூறப்படவில்லை.
தெளிவார் வான் சிலை- தெளிந்த அழகிய வான் போன்ற புருவம். தெளிவைப் பெற்றவரது விஸ்மயம் அல்லது ஆச்சரியத்தைக் குறிக்கும் வான் நோக்கி உயர்ந்த புருவம். கண்கள் பூரணமாகத் திறந்திருக்கும்போது புருவம் மேலே ஏறுகிறது. இது சிவத்தின் கடாக்ஷம் பூரணமாக ஆத்மாவுக்குக் கிட்டியுள்ளது என்பதைக் குறிக்கிறது. இது மாணிக்க வாசகர் பெற்ற நயன தீக்ஷையைக் குறிக்கிறது.
செங்கனி- தலைவியின் இதழ்கள் நிறத்தாலும் சுவையாலும் கனியை ஒத்திருந்தன. சிவத்தின் வாயிலிருந்து வரும் சொற்கள் ஞானத்தால் கனிந்தவை, இனிமையானவை, உயிர் கொடுப்பவை. இது வாக் தீக்ஷையைக் குறிக்கிறது.
வெண் முத்தம்- வெண்மையான முத்து போன்ற பற்கள். தேவியின் பற்கள் மந்திர அக்ஷரங்களைக் குறிக்கும். தேவியின் ஷோடசி மந்திரம் 16 எழுத்துக்களைக் கொண்டது. பிரகாச விமர்சம் என்று கொண்டால் அவை 32 எழுத்துக்களாகின்றன. மந்திரங்களை உச்சரிக்க பற்கள் அவசியம். இதையே ஆண்டாள் ‘வெண் பல் தவத்தவர்’ என்று திருப்பாவையில் பாடியுள்ளாள்.
திங்கள்- மதி, தலைவியின் முகம். கருணை, இனிமையான சொற்கள், தூய மந்திர ஜபம் ஆகியவை மதியின் அம்சங்கள்.
அளி வளர் வல்லி- வண்டுகள் கண் வளரும், மொய்க்கும் கொடி. வண்டுகள்-உயராத்மாக்கள். அவை சிவத்தை சூழ்ந்து போற்றி ஒலி எழுப்பியபடி மொய்க்கின்றனர். சிவானுபவம் மின்னல் கொடி போல ஒரு நொடி தோன்றி மறைகிறது.
அளவா ஒளி வளர் தில்லை ஒருவன்- அளவுக்குட்படாத, அளக்க முடியாத ஒளி இறைவன். ஆத்மாவின் அறிவு ஒளி, ஞானம் அளக்கக்கூடியது. இறைவனின் ஒளி அளக்க முடியாததுடன் வளர்ந்துகொண்டே இருப்பது. அதனால் அவன் ‘ஒருவன்’, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஏகன். சிவனின் அருவுருவம் இங்கே குறிக்கப்படுகிறது.
கயிலை உகு பெருந்தேன் துளி வளர் சாரல்- லலாடம், கயிலை என்னும் சகஸ்ராரத்தின் அருகில் இருப்பது.
கரந்து- மறைவாக, ஒருவரும் அறியாதவாறு இங்கு தங்கியிருப்பேன். தீக்ஷை பெற்ற ஆத்மா தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு தனது சாதனையை செய்ய வேண்டும். ஆகினையை கடந்த ஆத்மா அதன் பின் இறையருளால் மட்டுமே முன்னேறுகிறது. சும்மா இரு என்னும் நிலை இது. அதுவே சக்தியின் ஆட்டம். பூரணமாக ஆகினை உணர்வு நிலையில் இருப்பவர்கள் பஞ்ச பூதங்களைக் கடந்தவர்கள், தபோ லோகத்தில் இருப்பவர்கள். அவர்கள் தூல உடலால் கட்டுப்படுத்தப்படாதவர்கள். அதனால் அவர்களை மானிடர்களால் காண முடியாது.
கயிலையின் சாரலில் அனுபவ முதிர்ச்சி பெற்று, நீயே நான் என்ற கலவியில் உன்னுடன் கலப்பேன் என்றான் தலைவன். அதனால் நீ தெளிவு பெறுவாய் என்பதற்கு தெளி என்று கூறினான்.மனக்குழப்பம் எதுவும் இல்லாத சிவனிடம் தெளி என்று ஆத்மா கூறுவது, தன்னைத் தேற்றிக் கொள்வது.
தான் ஆன்மாவுக்கு செய்த பெரும் உபகாரத்தை எண்ணி சும்மா இருக்காமல் உனது முன்பு மேற்கொண்ட விளையாட்டை தொடர் என்று வேண்டுகிறான் தலைவன். மாணிக்கவாசகரை ஏற்றுக்கொள்வது என்ற விளையாட்டை திருவருள் முதலிய சக்திகளுடன், தோழிகளுடன், தொடருவாய். அப்போதுதான் நான் உன்னை அடைய முடியும், அதனால் உன்னுடைய ஆட்டத்தை நிறுத்தாதே என்கிறான் தலைவன். பிற சக்திகளின் உதவியுடனே ஆத்மா பரமானந்த நிலையை அடைகிறது.
முந்தைய பிறவியில் சிவன் 999 அடியார்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு மாணிக்கவாசகரை மட்டும் விட்டுவிட்டு சென்று விட்டார். அவ்வாறு நிகழந்தபோது மாணிக்கவாசகர் உலக மக்களின் நிலைக்கு தாழ்ந்துவிடவில்லை. அவரது முந்தைய பிறவியில் ஏற்பட்ட இறையனுபவம் பொதிகையில் நிகழ்ந்தது. அந்த நிலையிலிருந்து இப்போது அது நிரந்தரமாக இருக்க அவர் கயிலை செல்ல வேண்டியுள்ளது.
இயற்கை புணர்ச்சி எனும் இந்த பகுதி அவரது முந்தைய பிறவியில் ஏற்பட்ட அனுபவத்தையும் அதனை அடுத்து இப்பிறவியில் அவர் மேற்கொள்ளப் போவதையும் குறிக்கிறது. அவர் குறிப்பிடும் பிரிவு இப்பிறவி. அதனால்தான் இது உண்மையில் பிரிவு அல்ல, ஏனெனில் இறைவன் தன்னுள் அந்தராத்மாவாக இருக்கிறான் என்று அவர் உணர்ந்தவர்..
ஆனந்தமய கோசத்தில் அமிர்தத்தை சுவைத்த மாணிக்கவாசகர் அந்த அமிர்தத்தை தனது வார்த்தைகளாக, திருவாசகம் திருக்கோவையாகக் கொடுத்துள்ளார்.
1.16 Sending to the place of dance/play
The one like a creeper where bees swarm, with beautiful sky-like bow, ruddy fruit, white pearls
In moon, you go ahead and play/dance. I will hide in
In the slopes of Kailaya, the land of the One, the immeasurable effulgent Tillai
That shower drops of great honey and appear there.
Simple meaning:
The lady who is like a creeper where bees swarm, having a great bow like brows, reddish fruit-like mouth, white pearly teeth, in a face like the moon! You go to your place and play/dance, I will conceal myself in the slopes of the Kailaya, the place of the immeasurable effulgent one, Tillai, that spills great honey drops continuously and appear before you there (where you are playing- the place is not mentioned).
Thelivaar van silai- the great sky-like brows. The brows are raised up to indicate wonder, as seen in Bhairava images. It indicates a form of The brows ride up like a bow when the eyes are opened wide. The soul indicates that it received the full vision of the Divine. This indicates Manikkavasakar’s nayana deeksha.
Reddish fruit- the heroine’s lips are like a red fruit in their hue and taste. Sivam’s words were sweet and matured with jnana. They help in sustaining life like a fruit. This indicates the vak deeksha that Manikkavasakar received.
The creeper with bees- bees rest in Sivam, their humming is the sound of brahmari. Siva anubhava occurs like a lightning, a creeper.
The immeasurable, effulgent one in Tillai- the Divine cannot be measured. A soul’s capacities, in contrast, are measurable, limited. The Divine’s effulgence is not only immeasurable, it keeps growing. Hence, he is unique, the incomparable one. Lord’s form as light is referred to here.
The slope with honey- refers to lalata which is close to Kailaya, the sahasrara.
The hero concealing himself- A practitioner, after receiving deeksha, should isolate himself from everything and perform his sadhana. When a soul’s consciousness reaches the ajna and it remains there permanently then it has gone beyond the control of five elements. Its journey further is only by Divine grace. This is Shakti’s play/dance. Those who are in this state are said to be in tapo lokha. They are beyond the control of gross body and so others cannot see them.
The hero promises the heroine that he will mature in his experience and merge with her on the slopes of Kailaya and that she should be clear, free of confusion. The Divine has no confusion. The soul is telling this to itself and recommending leaving the confusion of what to do. It is also praying to the Divine to continue its game as otherwise the soul cannot reach the ultimate state. Even though Kundalini Shakti guides the soul’s journey towards the ultimate the soul needs the help of other shaktis in this journey.
Siva, in Manikkavasakar’s previous birth, took 999 siva devotees with him, leaving only Manikkavasakar behind. Manikkavasakar did not lower himself to the state of worldly people. He will mature the Divine experience that occurred in Pothigai hill in the current birth, in Kailaya, and merge with the Lord.
This section of Tirukkovaiyar, natural union, describes the events in his previous birth and the goal he will purse in this birth. This is the separation he is talking about knowing fully well that there is no real separation as the Lord is within him as the indweller.
Manikkavasakar who tasted the nectar of Divine experience in the anandhamaya kosha is sharing it with us through his nectar-like words, as Tiruvasakam and Tirukkovaiyar.
No comments:
Post a Comment