Thursday, 20 March 2025

1.14 Mentioning the nature of grace

  1.14. அருள் குணம் உரைத்தல்.

தேவரில் பெற்ற நம் செல்வக் கடி வடிவார் திருவே
யாவரில் பெற்றி இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண்
மூவரில் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்வாய்ப்
பூவரில் பெற்ற குழலி ஏன் வாடிப் புலம்புவதே

பொருள்: அழகான வடிவை உடையவளே! நமது செல்வமான இந்தத் திருமணத்தை யாரால் பெற்றாய்? தேவரால். அதை அழிக்கக்கூடிய சக்தி பெற்றவர் யார்? இமைக்காத, மூன்று கண்களை உடைய மூவரைப் பெற்றவரான சிற்றம்பலத்தின் அழகான வண்டுகள் மொய்க்கும் பொழிலின் வாயில் உள்ள பூவில் பிறந்த குழலியே நீ எதற்காக வாடிப் புலம்புகிறாய்?

சிற்றின்ப நிலை:
கூட்டிய தெய்வத்தின் அருள் குணம் வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது. தம்மைச் சேர்த்த இறையருளின் குணத்தைக் கூறி தமது திருமணத்தை பிரிக்கக்கூடிய சக்தியைப் பெற்றவர் ஒருவரும் இல்லை, தலைவி வாட்டமடைய வேண்டாம் என்று தலைவன் கூறுகிறான்.

தலைவியை திரு அல்லது இலக்குமி என்று அழைத்து தாம் பெற்ற சேர்த்தியை செல்வம் என்று தலைவன் கூறுகிறான். யாரால் இதைப் பெற்றாய், யாரால் அழிக்க முடியும் என்று கேட்டு இந்த அனுபவம் எப்போது இயற்கையாக இருப்பது ஒருவராலும் தரப்படுவது இல்லை, அதனால் ஒருவராலும் இதை அழிக்க முடியாது என்று உணர்த்துகிறான். கண்ணை மூடும்போது பொருள்கள் மறைவதும் திறக்கும்போதும் தென்படுவதும் போல இல்லாமல் என்றும் அவளது கண்கள் இமைக்காமல் இருப்பதால் அந்த அனுபவம் தோன்றி மறைவது இல்லை. பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மூவரில் மூன்று கண்களைப் பெற்றவர் சிவன், அதனால் மூவரில் பெற்றவர். உயிர்களைத் தனது செல்வமாகப் பெற்றவர் சிவன். உயிர்கள் எப்போதும் அவரை விட்டு நீங்குவதில்லை.

தேவரால் பெற்ற நம் செல்வக் கடி- நமது இயற்கைப் புணர்ச்சி தெய்வ அருளால் மோட்சத்துக்காக நிகழ்ந்தது. நமது பெற்றோராலோ எதிர்பாராமலோ நிகழ்ந்தது அல்ல. பொதுவாக ஒரு திருமணத்தை நடக்க வைப்பது இந்திரன். அவரோடு பிற தேவர்களும் வந்து திருமணத்தை வாழ்த்துவர். நமது மணம் நடந்தது ஊழினால், செல்வ கடி மணம்- கட்டாயத்தால் ஏற்பட்டது அல்ல.

இறைவனுடன் ஒன்றுவதே உண்மையான செல்வம், வாழ்வின் அர்த்தம். அதுவே ஆத்மாவின் தர்மம், அது பெற விழையும் காமம். இதுவே மோட்சம். இங்கு தேவர் எனப்படுவது வினைத் தெய்வம் அல்லது ஊழ்.
ஜீவனை சிவனிடம் கொண்டு வந்தது பதி புண்ணியம். புண்ணியம் இருவகைப் படும். பசு புண்ணியம் என்பது கால அளவுக்குட்பட்ட புண்ணியம். பசுவுக்கு புல் கொடுப்பது, ஹோமம் பூஜை செய்வது என்பது போன்றவற்றின் புண்ணியம் ஒரு குறிப்பிட்ட காலம்வரை செயல்படும். காலத்தால் கட்டுபடுத்த முடியாத புண்ணியம் பதி புண்ணியம். குருவின் தீக்ஷை பதி புண்ணியம்.

வடிவார் திரு- திரு என்பது ஞானம். ஞானம் உருவமற்றது. அத்தகைய ஞானம் சிவத்தலைவியாக ஒரு உருவத்தை எடுத்துக்கொண்டது. ஸ்ரீ என்பது பஞ்சதசி மந்திரத்தைக் கடந்த ஷோடஸி. அந்த மந்திரம் ஒரு உருக்கொண்டு வந்தது.

யாவரில் பெற்றி- யாரால் பெற்றாய்- குருவின் நேத்திர தீக்ஷையால் ஜீவசிவ தொடர்பு ஏற்பட்டது. வழியில் உள்ள பல தடைகளையும் அந்த தீக்ஷை விலக்கியது.
யார்- சிவனருள் முன் நின்று அதன் செயலை தடுக்கக்கூடியவர் யார்? ஒருவரும் இல்லை.
அக்னி, சூரியன் சந்திரன் ஆகியவர்களிடமிருந்து சிவன் மூன்று கண்களைப் பெற்றார். அதாவது, அவரது மூன்று கண்கள் அக்னி, சூரியன், சந்திரன். அதனால் அவர் ஜீவனுடன் புணர்ந்தபோது இந்த மூவரும் அதை அறிந்திருப்பர். தேவர்கள் அதை அறிந்தவர்தான்.

ஆதியாத்மிகம் ஆதி பெளதிகம் ஆதி தெய்வீகம் என்ற மூன்று தாபத் திரயங்களால் ஆத்மா துன்பப்படுகிறது. ஆதி ஆத்மிகம்-ஆத்மாவின் தன்மையால் வரும் துன்பம். இங்கு இருப்பது பரமாத்மா மற்றும் மலபரிபாகமுற்ற ஆத்மா. அதனால் துன்பம் ஏற்படாது. ஆதி பெளதிகம்- மழை காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளால் துன்பம். இங்கு இயற்கையைக் கட்டுப்படுத்தும் சிவன் இருப்பதால் இயற்கையால் துன்பம் தர முடியாது. யாரால் இதை விலக்க இயலும் என்ற கேள்வி அதைக் குறிக்கிறது. ஆதி தைவிகம்- இந்திரன் முதலிய தெய்வங்களால் ஏற்படுவது. இங்கு சூரிய சந்திரன் அக்னி ஆகிய தெய்வங்கள் சிவனின் கண்களாக, அவரது கடாக்ஷத்தை அளிப்பவர்களாக உள்ளதால் அவர்களாலும் துன்பம் ஏற்படாது. அதனால் தலைவியை துயரப்பட வேண்டாம் என்கிறது ஆத்மா. இங்கு அது உரையாடுவது தனக்குள் இருக்கும் இறைசக்தியுடன்.

பூ அரில் பெற்ற குழலி- பூக்கள் பிணைந்த குழலை உடைய தலைவி. தாமரை மலர்களான சக்கரங்கள் பெற்றெடுத்த சூழுமுனையில் பயணிக்கும் குண்டலினி சக்தி. அவள் அக்னி, சூரிய சந்திர மண்டலங்களை பூக்களாகத் தொடுத்துத் தன் கூந்தலில் அணிந்திருக்கிறாள். அக்னி மண்டலத்தில் தொடங்கி தலையுச்சியில் உள்ள சகஸ்ராரம் வரை குண்டலினி சக்தி பயணிக்கிறாள். இங்கு பூ என்பது நிலம் அல்லது பூமண்டலம் என்பதாகக் கொண்டால் மூலாதாரத்தில் உள்ள குண்டலி சக்தி, தனது தாபம் என்ற அக்னியை ஞானம் என்ற சூரிய மண்டலத் தன்மையாகவும் ஆனந்தம் என்ற சந்திர மண்டலத்தின் தன்மையாகவும் மாற்றவேண்டும் என்று ஆத்மா வேண்டுகிறது.

ஞானத்தைப் பெற இவ்வுலகில் உள்ள மூன்று ஒளி காரணிகள் அக்னி, சூரியன், மற்றும் சந்திரன். இவற்றின் ஒளி சக்தியாக இருப்பவர் சிற்றம்பலவன்.
பூவரில் பெற்ற குழலி- ஆத்மா சக்திக்கு தனது சக்கரங்களை, பூக்களை, அர்ப்பணிக்கிறது.

1.14 Mentioning the nature of grace
Thiru! Our wealth of union brought about by Deva
Who did you get it from, who can destroy it
The Citrambalam who has among/from the three, in the beautiful grove
The lady who has flowers in her hair, why are you complaining in sorrow?

The hero calls the heroine Thiru, a name for Lakshmi, and mentions the experience as wealth thus indicating her as the giver of such a valuable experience. Objects perceived disappear when one closes one’s eyes and they appear when one opens the eyes. The hero refers to the Lord as one whose eyes do not blink, thus indicating the permanent existence of the experience. Among the trinity, Siva is depicted with three eyes. So, he is ‘petravar’ one who possesses it. As Siva has the souls as his eternal possession, ‘petravar’, their association is neither brought about nor broken by time, place, or causation.

This association came about for moksha. It was not accidental or arranged by our parents or due to compusion. It is said that Indra decides a marriage. He, along with other Devas, come to a wedding and bless it. It is ‘selva kadi manam’ one that is cherished, not brought about by force.

True wealth for a soul is merging with the Divine, this is moksha, the purushartha. Kama or desires should be aligned toward this goal. The necessary aids to facilitate this union are the artha. They should be earned and deployed in a dharmic way to reach the target.

Deva here refers to fate which is equated to a God. Jiva is brought to Siva due to punya. Punya is of two types, pathi punya and pasu punya. Pasu punya is limited by time. Giving grass to cows, performing yagna and so on are pasu punya. Their efficacy is limited by time. The punya that is not controlled by time is pathi punya. Guru’s deeksha is pathi punya.

Vadivaar thiru- beautiful form. Thiru is jnana, it is formless. Here, it has taken the form of the lady. Sri is shodashi mantra, beyond panchadashi. That mantra has taken a form here.

Who gave you this?- Guru’s vision or Netra deeksha granted the Jeeva Siva aikhyam. The deeksha removed the obstacles in the way.
Who can block it- who has the capacity to block Siva’s decision.
Siva’s three eyes are agni, surya and Chandra. When he united with the soul all three would have been witnesses. Devas would have known it. So there is no one to prevent it from happening again.

A particular event is blocked by three causes. Adi atmika-due to inherent nature of the soul, adi baudhikam- natural forces such as rain, sun, etc and Adi daivikam-divine forces like Devas. Here all the three were witnesses to the union. So there is no one who will be against it.

The lady with flowers on her hair- poo alaril petra kuzhali- the flower refers to the chakras, kuzhali is kundalini shakti. She has strung the agni, surya and soma mandala like flowers and adorned her hair with them. Kundalini begins its journey from the agni mandala and reaches the sahasrara. If ‘poo’ is said to represent bhu or earth, it means the soul is praying that his longing the fire should be transformed into jnana, the characteristic of surya mandala and into anandha or bliss, the characteristic of the soma mandala. All these three sources of light are only conduits for the Divine, which shines through them. The soul is offering its chakras, the flowers to shakti.

No comments:

Post a Comment