Saturday, 1 March 2025

1. Natural Union

                                                 1.இயற்கைப் புணர்ச்சி 

இயற்கைப் புணர்ச்சித் துறை ஈரொன்பதும்

சத்தி நிபாதம் ஒத்திடும் காலத்து

உத்தம சற்குரு தரிசனமாகும்.

பொருள்:

இயற்கைப் புணர்ச்சி நடைபெறுவது பதினெட்டு வழிகளில். சக்தி நிபாதம் இருவினை ஒப்பு நடந்திடும் காலம். இதைத் தருவதும் இதனால் பெறும் பயனும் உத்தம சற்குருவின் தரிசனமாகும்.

(புணர்ச்சி- சேர்தல், ஈரொன்பது-பதினெட்டு)

சிற்றின்ப நிலையில் இறையருளால் தலைவனும் தலைவியும் ஒரு பொழிலில் எதிர்ப்பட்டு மாட்டின் இரு கொம்புகள் போல தம்முள் ஒத்த அன்பினராய் தம்முள் கூடுவது இயற்கைப் புணர்ச்சி எனப்படுகிறது. அதுவே பேரின்ப நிலையில் ஜீவன் சிவத்துடன் இயற்கையாக சேர்வது. சிவமாக இருப்பதே ஜீவனின் இயற்கை.

இயற்கைப் புணர்ச்சி பதினெட்டு படிகளில் நிகழ்கிறது.  அந்த பயணத்தைத் தொடங்கி வைப்பது சக்தி நிபாதம். ஆன்மாவை தனது நிலையை உணராது மறைத்திருப்பது திரோதான சக்தி. ஆணவம், கன்மம், மாயை என்ற மலங்கள் நீங்கும்போது திரோதான சக்தி அருள் சக்தியாக மாறுகிறது. அதற்கு புண்ணியம் பாபம் என்ற இருவினைகளை, அவற்றின் பலனை,  நன்மை தீமை என்று இல்லாமல் ஒரே விதமாகப் பார்க்கும் மனப்பான்மை தேவை. 

சக்தி நிபாதம் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்று நான்கு படிகளில் நடைபெறுகிறது.  சக்தி நிபாதம் பெற்ற ஒரு ஆத்மா, உத்தமமான குருவை தரிசிக்கிறது. ஒரு குருவை அடைவது ஆன்மீகப் பயணத்தின் முடிவு அல்ல, அது ஒரு தொடக்கம். குரு என்பவர் ஜங்கம லிங்கம் அல்லது நடமாடும் லிங்கம் எனப்படுகிறார். அவர் சிவபெருமானின் திருவுரு. அவர் சிவத்தன்மையில் மூழ்கியிருப்பவராதலால் அவர் சிவத்தைப் பற்றிய உண்மைகளை, சிவத்தன்மையைப் பற்றிப் பேசுகிறார். இவருடன் தொடர்பில் இருக்கும் ஒரு சீடன் சிவத்துடன் தொடரப்பில் இருக்கிறார். அவ்வாறு அந்த சீடனின் அறியாமை என்ற இருள் அகற்றப்படுகிறது. 

ஞானம் மூன்று நிலைகளில் ஏற்படுகிறது. அதனால்தான் குருபரம்பரையில் மூன்று குருக்கள் போற்றப்படுகின்றனர். பரகுரு என்பவர் சிவன், சதாசிவன், ஈஸ்வரன். பரகுரு சீடனுக்கு ஞானம் அளிக்க விரும்பும்போது சக்தி நிபாதம் நடைபெறுகிறது. பராபர குரு என்பவர்கள் ரிஷி முனிவர்கள். அவர்கள் தமது ஞானத்தை வாக்கினால் உலகுக்கு அளிக்கின்றனர். அபர குரு என்பவர் மானுட குருக்கள். அவர்கள் சோதக குரு அல்லது சீடர்களை ஊக்குவிப்பவர்கள், போதக குரு அல்லது சாத்திர அறிவைத் தருபவர்கள், மோக்ஷத குரு அல்லது சிவனின் பாதையில் செல்ல தீக்ஷை அளிப்பவர்கள் என்று மூன்று வகைப்படுவர். சோதக குருக்கள் உங்கள் நண்பர்களாகவோ, பெற்றோராகவோ குழந்தைகளாகவோகூட இருக்கலாம்.  

இங்கு குறிப்பிடப்படும் உத்தம குரு பரகுரு. அவரது அருளினால் மலபரிபாகம் அல்லது மல விலக்கல் பெற்ற ஆன்மா சக்தி நிபாதம் பெறுகிறது. 

உத்தம குரு தரிசனம் என்று இங்கு குறிப்பிடப்படுவது குரு சீடனைபார்ப்பதாகக்கொண்டால் சிவன் மாணிக்கவாசகரை முதலில்பார்த்ததைக்குறிக்கிறது.  அது நயன தீக்ஷை எனப்படும்.

குரு என்பதற்கு இருட்டை விலக்குவது என்று பொருள், ஒளி வந்தால் இருட்டு தானாக விலகும்.  அந்த ஒளி, வெளியொளி, உள்ளொளி என்று இருவகைப்படும். நூல்கள், ஆசாரியாரின் பாடங்கள், தானாக கண்டு உணர்வது என்பவற்றை வெளியொளி என்று கொண்டால், இவற்றால் ஒருவர் தன்னுள் உணர்வது உள்ளொளியாகும். தரிசனம் என்பது தானாக உணர்வது. இது கற்றறிவினுக்கு அடுத்த நிலை.  அதனால்தான் ராமானுஜ தரிசனம், சங்கர தரிசனம் என்று ஒவ்வொரு மெய்யாளர் தந்த வழிமுறையையும் தரிசனம் என்று கூறுகிறோம். இங்கு குறிப்பிடும் தரிசனம் உள்ளொளியையும் வெளியொளியையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.   

சக்தி நிபாதம் என்பது திடீரென நிகழ்வது. அது முடிவு நிலை அல்ல.  அதை உணர்ந்த ஆத்மா அதன்பின், ஒரு குருவை அணுகி கிரமமாக அதை தனது நிரந்தர நிலையாக மாற்றவேண்டும்.  இவ்வாறு இங்கு கூறப்படும் உத்தம குருவை சந்தித்தல் என்பது ஒரு குருவை அண்டி தீக்ஷை பெறுவதற்கு தொடக்கமாக உத்தமமான குருவை, சிவனை, உணருவதாகக் கொள்ளலாம். 

இப்பாடல் குறிப்பிடும் இயற்கை புணர்ச்சி அல்லது ஆன்மீக அனுபவம் பதினெட்டு படிகளில் நடைபெறுகிறது. இந்த படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

(1)    காட்சி (தலைவன் தலைவியைப் பார்த்தால், அவளுடன் கூடியிருத்தல்), (2) ஐயம் (தான் பெற்ற அனுபவம் உண்மையா, எங்கே, எதனால், எதற்காக, எவ்வாறு நிகழ்ந்தது), (3) தெளிதல் (சந்தேகங்கள் தீர்த்தல்), (4) நயப்பு (அனுபவத்தை விரும்புதல்/ அது தனக்கு நன்மை என்று அறிதல்), (5) உட்கோள் (தலைவியின் நோக்கம் உள்ளக்கிடக்கை அறிதல்), (6) தெய்வத்தை மகிழ்தல் (அனுபவம் தந்ததை), (7) புணர்ச்சி துணிதல் (அனுபவத்தை மீண்டும் பெற முடிவு செய்தல்), (8) கலவி உரைத்தல் (பெற்ற இன்பத்தை உரைத்தல்),(9) இருவயினொத்தல் (பெற்ற இன்பம் ஒவ்வொருமுறையும் புதியதாக தோன்றுவது), (10) கிளவி வேட்டல் (தலைவியின் பேச்சைக் கேட்க விரும்புதல்), (11) நலம் புனைந்துரைத்தல் (தலைவியின் புன்முறுவல் கண்டு அவளுக்கு தன்னிடம் அன்பு என்று உணர்தல்), (12) பிரிவுணர்த்தல் (தலைவியை விட்டுப் பிரியப்போகிறோம் என்று உணர்த்துவது), (13) பருவரலறிதல் (பிரியாமல் இருக்கலாமே என்று எண்ணுதல்),  (14) அருட்குணம் உரைத்தல் (தலைவியின்/ அருளின் தன்மையை அறிதல்), (15) இடம் அணித்துக்கூறி வற்புறுத்தல் (தலைவியின் இடம் தனது இடத்துக்கு அருகில் உள்ளது என்று கூறுவது- பேரின்ப நிலையில் சாலோக்யம்), (16) ஆடிடத்து உய்த்தல்  (தலைவியை அவளது விளையாடும் இடத்துக்கு அனுப்புதல்) (17) அருமை அறிதல் (தனது தலைவியின் பெருமையை அறிந்து அவளா தன்னுடன் சேர்ந்தது என்று வியத்தல்), (18) பாங்கியை அறிதல் (தலைவியின் தோழியைக் கண்டு இவள் வாயிலாக தான் தலைவியை அடையலாம் என்று அறிதல்).

இறையனுபவம் இவ்வாறு பதினெட்டு அம்சங்களைக் கொண்டது. எவ்வாறு மாணிக்கவாசகர் பெற்ற சிவானுபவத்தில் பொருந்துகின்றன என்பதை இப்பகுதியில் உள்ள பாடல்களின் விளக்கத்திற்குப் பிறகு பார்க்கலாம்.

 

1.       Natural Union (1)

The process of natural union occurs in eighteen ways.

Shakti nipadham when two karmas are equal

Divine vision of the exalted Satguru.

Explanation:
In worldly context, natural union occurs when a hero and heroine meet accidentally in a grove, develop equal love like the two horns of a bull, and come together. In the spiritual context, this is the natural merging of the soul with Siva.   

This process is brought about by Śakti Nipādam or descent of grace. The soul is veiled by Tirodhāna Śakti, which keeps it unaware of its true nature. When the three impurities—āṇava (ego), karma (actions and consequences), and māyā (illusion)—are removed, Tirodhāna Śakti transforms into Arul Śakti (Grace). The soul must develop an equanimous mindset of seeing any experience as the same, without distinguishing it as good or bad for the grace to descend which occurs in four stages: manda taram (mild), mandam (moderate), tīvīram (Intense) and tīvīrataram (Most Intense)

A soul that experiences descent of grace encounters an exalted Guru. However, meeting a Guru is not the end of the spiritual journey; it is merely the beginning. The Guru is called Jangama Liṅga, the moving representation of Śiva. Being immersed in Śiva’s divine nature, the Guru reveals the truth of Śiva and His divine qualities. By associating with such a Guru, a disciple remains in communion with Śiva, and through this, the darkness of ignorance is dispelled.

The Three Levels of Spiritual Knowledge and the Three Types of Gurus

Spiritual wisdom manifests in three stages, which is why three types of Gurus are revered in the Guru lineage:

  1. Paraguru – Refers to Śiva, Sadāśiva, the supreme divine Guru. When the Paraguru desires to bestow knowledge upon a disciple, Śakti nipādam takes place.
  2. Parāpara Guru – Refers to Rishis and Sages, who share wisdom with the world through their teachings.
  3. Apara Guru – Refers to human Gurus, categorized into three types:
    • Sōdhaka Guru – One who tests and encourages the disciple (such a Guru can be a friend, parent, or even a child).
    • Bōdhaka Guru – One who imparts scriptural knowledge.
    • Mōkṣada Guru – One who grants dīkṣā (initiation) and guides the disciple toward liberation.

In this context, the exalted Guru (Uttama Guru) refers to the Paraguru (Śiva Himself). By His grace, the soul undergoes mala-paripākam (maturation and removal of impurities) and attains Śakti Nipādam.

The phrase "Vision of the Exalted Guru" can be understood as the moment when the Guru sees the disciple. This is similar to how Śiva first saw Māṇikkavāsakar—an act that signifies the beginning of his spiritual transformation. This is called Nayana Dīkṣā (Initiation through Sight).

The word "Guru" means "one who removes darkness." Light naturally dispels darkness. This light can be of two types:

  • External Light – Scriptures, teachings of enlightened beings, and self-inquiry.
  • Inner Light – The realization that arises from these external influences.

A true darśana (divine vision) is an inner realization that follows external learning. That is why we speak of Rāmānuja Darśanam, Śaṅkara Darśanam, etc., referring to the visions that these great masters experienced. Here, darśana refers to both external and internal light.

Śakti Nipādam occurs suddenly—it is not a final state but the beginning of transformation. The soul must then approach a Guru, receive guidance, and gradually establish this realization as its permanent state. Hence, meeting the exalted Guru signifies the beginning of deeper spiritual initiation and the realization of Śiva.

The Eighteen Stages of Natural union

The natural union (spiritual experience) unfolds in eighteen stages, as follows:

  1. Kāṭci (Vision) – The soul ( the lover) first ‘sees’ (encounters) the divine presence (the beloved) and merges with it.
  2. Aiyam (Doubt) – The seeker questions whether the experience was real: "Where? Why? How?"
  3. Teḷital (Clarity) – doubts are resolved.
  4. Nayappu (wondering) – Desiring the experience again, realizing its benefits.
  5. Utkoḷ (Understanding the Intention) – Realizing the intent of the beloved.
  6. Teyvattaimakiḻtal (Rejoicing in the Divine) – Admiring the power that brought about this experience.
  7. Puṇarcci tuṇital (Commitment to Union) – Deciding to attain the experience again.
  8. Kalavi uraittal (Sharing the Joy of Union) – Expressing the bliss attained.
  9. Iruvayinottal (Seeing the Joy as Ever-New) – Each experience feels fresh every time.
  10. Kiḷavi vēṭṭal (Longing for Divine Words) – Yearning to hear the voice of the beloved (Divine).
  11. Nalam punainturaittal (Recognizing Divine Love) – Seeing grace in divine gestures.
  12. Pirivu uṇarttal (Awareness of Separation) – Indicating impeding separation.
  13. Paruvaral aṟital (Wishing to Stay United) – Hoping to never separate.
  14. Aruṭkuṇam uraittal (Understanding Divine Grace) – Realizing the nature of the beloved.
  15. Iṭam aṇittuk kūṟi varpuṟuttal (Affirming Divine Nearness) – affirming their proximity.
  16. Āṭiṭattu uytal (Sending the Beloved to Her Place of Play) – bidding fairwell to the beloved who goes to her place of play.
  17. Aṟumai aṟital (Recognizing the Greatness of the Beloved) – Marveling the almost impossible event.
  18. Pāṅkiyai aṟital (Understanding the Role of the Messenger) – Recognizing the intermediary who will help in the union.

We will see how these steps fit in with Māṇikkavāsakar’s divine experience (Śiva-Anubhava) after the explanations of the verses in this section. 

No comments:

Post a Comment