1.1 காட்சி
திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள்
ஈசர் தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்கு
பைங்காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ
மருவளர் மாலை ஓர் வல்லியின் ஒல்கி
அனநடை வாய்ந் (து)
உருவளர் காமன் தன் வென்றிக் கொடி
போன்று ஒளிர்கின்றதே
பொருள்-திருவளரும் தாமரையையும் சீர்
வளரும் நீலோத்பலமும் ஈசர் வாழும் தில்லையில் வளரும் குருத்தன்மையைப் போன்ற
குமிழ் மலரும், கோங்க மலரும் செம்மையான காந்தள் மலரும்
கொண்டு கட்டப்பட்ட தெய்வீக மாலை, ஒரு கொடி, அன்ன
நடை நடந்து, அழகிய உருவம் கொண்ட காமனின்
வெற்றிக்கொடி போல ஒளிர்கின்றதே. வளர்-வளரும்,
வளர்க்கும்.
சுருக்கம்: தலைவன் ஐந்து மலர்களை உவமைகளாக்கி
தலைவியின் முகம், கண், மூக்கு, மார்பு, கைவிரல்கள் ஆகியவற்றை வியக்கிறான். தலைவி, அவற்றால்
கட்டப்பட்ட மாலையைப் போல, அன்ன நடை நடந்து, காமனின் கொடி போல ஒளிர்கிறாள். ஐவித மலர்கள்
ஐவித நிலங்கள், தன்மைகள். ஒரு சாதகன் தாமரையைப் போல உலகப் பற்றுக்கள் தன்னைத் தீண்டாமல்
காத்து காவி குறிக்கும் பற்றற்ற நிலையில் இருந்து
உள்ளொளியை வளர்த்து பர அபர ஞானங்களால் வழிநடத்தப்படும் செயல்களைச் செய்தால் அவை அனைத்தும்
ஒரு மாலையைப் போல ஒன்றாக நின்று உணர்வை நுண்மையாக்கி அஜபா எனப்படும் வாக்கு இறந்த நிலையைத்
தனது ஒளி பெற வைக்கின்றன.
சாதனை, யோகம், பக்தி என்பது போன்ற எவ்வித
தகுதியையும் எதிர்பாராமல் மாணிக்கவாசகருக்கு சிவானுபவம் கிடைத்தது. அந்த அனுபவம் அன்பால் விளைந்தது. பூக்கள் போன்ற
புலன்கள், கொடிபோல எண்ணங்கள் கிளைக்கும் மனம், கவனிக்காதபோதும் நடக்கும் பிராணன், ஒளி பொருந்திய ஆன்மா, ஆகியவை சிவனுடன் கலந்து ஒளிர்ந்ததை இப்பாடல் காட்சியைக்
குறிக்கிறது.
இப்பாடல் திருக்கோவையாரின் சாரம் போல உள்ளது.
விளக்கம்:
அகத்திணைப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியவர்களின்
பெயர்கள் குறிப்பிடப்படுவது இல்லை. இங்கு தலைவி யார் என்று குறிப்பிடாமல் தலைவன் அவளது
அங்கங்களை உவமை மூலம் வியக்கிறான். தலைவியின் முகம்
தாமரை போலவும், அவளது கண்கள் நீலோத்பல மலர்கள் (இரண்டு
என்பதால் பன்மை) போலவும் அவளது மூக்கு முல்லை
மலர் போலவும் அவளது மார்பு கோங்கு மலர் மொட்டு போலவும் அவளது கை விரல்கள், செங்காந்தள்
மலர் போலவும் இருக்கின்றன. இந்த மலர்களைக் கொண்டு கட்டப்பட்ட மாலை போல உள்ள அவள், ஒரு கொடி அசைவது போல அன்ன நடை நடப்பவளாக, காமனின்
வெற்றிக் கொடி அசைவதைப் போல ஒளிர்கிறாள் என்கிறான் தலைவன்.
ஒவ்வொரு பாடலுக்கும் பேராசிரியரின் விளக்கவுரை
சூத்திரம் போல ஒரு வரியை கொளு என்று தருகிறது. இப்பாடலின் கொளு: மதி வாள் நுதல்
வளர் வஞ்சியை கதிர் வேலவன் கண்ணுற்றது
மதிபோல குளுமையான வாள் போல கூர்மையான
நெற்றியை உடைய பெண்ணை ஒளி வீசும் வேலைக் கொண்ட தலைவன் பார்த்தால்.
வேலவன்- முருகன் அல்ல, வேலைக் கையில் கொண்ட
தலைவன்.
சிற்றின்ப நிலை:
காட்சி என்பது ஒத்த அன்பர் தெய்வ
அருள்கூட தம்முள் தாமே கூடுதல். சிற்றின்ப இயலின்படி ஊழ்வினையால் தலைவன் தலைவியை
சந்திக்கின்றான். பேரின்ப இயலின்படி சக்தி நிபாதம்
நடைபெற அதனால் தலைவன் எனும் ஆன்மா சத்குருவை
சந்திக்கிறது.
திரு வளர் தாமரை- அழகிய எல்லோராலும் விரும்பப்படும்
தாமரை, லட்சுமி அமர்ந்திருக்கும் தாமரை அல்ல ஏனெனில் இங்கு பெருமைப்படுத்தப்படுவது
தாமரை, லட்சுமி அல்ல. லட்சுமி அமர்ந்தது என்றால் லட்சுமி உயர்ந்த வஸ்து தாமரை
தாழ்ந்த வஸ்து என்றாகிவிடும். அதனால் இங்கு திரு என்பது அழகிய என்ற பொருளில்
வருகிறது.
இப்பாடலில் ஐந்து நிலங்களுக்கு உரிய மலர்கள்
இடம் பெறுகின்றன. தாமரை மருத நிலத்தையும்,
நீலோத்பலம் நெய்தல் நிலத்தையும் குமிழ் அல்லது முல்லை முல்லை நிலத்தையும் கோங்கு பாலை நிலத்தையும் காந்தள் குறிஞ்சி நிலத்தையும் குறிக்கின்றன.
இப்பாடல் தலைவனின் பிரிவைப் பாடுவதால்
நெய்தல் நிலத்தை, பிரிதலும் பிரிவாற்றாமையையும்
குறிக்கும்போது எதற்கு பிற நிலங்கள் பாட்டில் இடம்பெற்றுள்ளன? ஒரு திருமணத்தில் மணமகள் மட்டுமல்லாமல் எல்லா பெண்களும் நகைகள்
அணிந்து வருவதைப்போல பிற நிலங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
கோங்கு மலருக்கு எவ்வித அடைமொழியும்
தரப்படவில்லை ஏன்? கோங்கு மார்பை குறிக்கிறது.
பிற அவயவங்களைப் போல மார்புக்கு இணையாகக் கூறக் கூடிய வேறு வஸ்து
இல்லை. அது மிக ஒப்பற்றது. கோங்கு பாலை
நிலத்தைக் குறிக்கும். பாலை என்று ஒரு நிலமில்லை. பிற நிலங்கள் தமது தன்மையை இழக்கும்போது பாலை நிலமாகின்றன. இதைக்
குறிக்கவும் கோங்குக்கு ஒரு அடைமொழி கொடுக்கப்படவில்லை. காந்தள் கடைசியில்
குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறிஞ்சி நிலத்துக்கான மலர்.
இது அகத்திணைப் பாடல் தொகுப்பு என்பதால் இதன் அடிப்படைத்
திணை குறிஞ்சி- புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகும். அதைக் குறிக்கும்
விதத்தில் குறிஞ்சிக்கான மலர் கடைசியில் கூறப்பட்டுள்ளது.
பேரின்ப நிலை
கொளு- குருவின் திருமேனி காண்டல்.
இப்பாடல் அகத்திணைப் பாடலாக
இருந்தாலும் பக்தி இலக்கியம் என்று காட்ட மாணிக்கவாசகர் தில்லையைக் குறிப்பிடுகிறார்.
ஐந்து நிலத்தில் உள்ளவர்களும் காமனால் வெல்லப்படுவதைப்போல ஐந்து
நிலத்தவரும் தில்லையில் உள்ள ஈசனை வணங்க வருவர் என்பது குறிப்பால்
உணர்த்தப்படுகிறது.
மல வாசனை அகன்று சக்தி நிபாதம் பெற்ற
ஆத்மா பெறுவது சத்குரு தரிசனம். இதுவே இயற்கையாக
நடைபெறும் புணர்ச்சி அல்லது சேர்தல். குரு என்பவர் ஆன்மாவை மீண்டும் மலத்தில்
சிக்கிக்கொள்ளாமல் இறைவனை நோக்கி நடக்க உதவுகிறார். இவ்வாறு
ஆன்மாவுக்கு உதவுவது திரோதான சக்தி. அதனால் இங்கு குரு என்று குறிப்பிடப்படுவது
திரோதான சக்தி.
சக்தி நிபாதம்- நி என்றால் மறைதல்,
அழிதல் என்று பொருள். ஒரு பெரிய கூட்டத்துள் ஒரு கல்
எறியப்பட்டால் எவ்வாறு அந்த கூட்டம் சிதறிக் கலையுமோ அது போல சக்தி நிபாதம்
ஏற்பட்டவுடன் ஆன்மாவைப் பிடித்திருக்கும் பந்த பாசங்களும் மலங்களும் விலகி ஓடி விடுகின்றன. இருவினை
ஒப்பு-மல பரிபாகம்- சக்தி நிபாதம் என்ற இந்த படிகள் நடைபெறும்போது ஆன்மா அடுத்து
மேலே எவ்வாறு செல்வது என்று ஐயுறும். அதற்கு வழிகாட்டுபவர் ஞானகுரு. அவரது திருவடியை அடைவது இயற்கைப்
புணர்ச்சி.
ஆன்மாவுக்கு குருவின் தரிசனம்
கிட்டுவது நோக்கு தீட்சை எனப்படும். எவ்வாறு மீன் தனது குட்டிக்கு தனது பார்வையால்
நீந்த கற்றுக் கொடுக்குமோ அது போல குரு தனது சீடனுக்கு தனது பார்வையால் ஞானம்
தருகிறார்.
இப்பாடல் கைக்கிளையை சார்ந்தது.
தலைவன் மட்டுமே தலைவியைப் பார்த்து விரும்புகிறான். தலைவி அவனைப்
பார்க்கவில்லை. குரு சீடனைப் பார்க்கவில்லை. அதனால்
இது ஒருதலைக் காதல்.
திருவளர் தாமரை- சிவஞானம் மேலும்
மேலும் வளரும் அழகிய தாமரை. திரு என்பது ஞானம். தாமரையிலிருந்து
தேன் வடிவது போல சத்குருவின் முகத்திலிருந்து ஞானத்
துளிகள் வெளிப்படுகின்றன. நீல மலர்கள்- கருணை கொண்ட கண்கள், அவை
சீடனை தன்னை நோக்கி வசீகரிக்கின்றன. மூக்கு- கூர்மையான அறிவு, கூர்மையான ஞானம், பிராணாயாமத்தால் கூர்மையாக உள்ளது,
கொங்கை-அகன்ற பரந்த ஞானத்தை உள்ளடக்கியது, பர
அபர ஞானங்களைக் கொண்டது. ஒரு தாய் நினைத்த மாத்திரத்தில் சிசுவுக்கு உயிர் கொடுக்கும்
பாலை அது திருப்தியுறும் வகையில் பசியாறும் வரை தருவதைப் போல குரு ஞானம் என்ற பாலை
சீடனுக்குத் தருகிறார். தாமரை குறிக்கும் குறிஞ்சி நிலம் ஆகாயத்தையும், முல்லை பூமியையும்
குமிழ் நிலம் குறிக்கும் மருத நிலம் காற்றையும், நீலோத்பலம் குறிக்கும் நெய்தல் நீர்
தத்துவத்தையும் கோங்கு குறிக்கும் பாலை நிலம் அக்னி தத்துவத்தையும் குறிக்கின்றன.
இந்த மலர்களைக் கொண்டு கட்டப்பட்ட மாலை
தெய்வமணம் கமழ்வது.
கொடி- நுண்ணியதாக இருப்பது, நமது கண்ணுக்குப் புலப்படாதது. குருவின்
ஞானம் நுண்ணியது, அந்த அறிவுச் சுடரை கண்ணால் பார்க்க
முடியாது, அறிய முடியாது.
அன்ன நடை- ஹம்ச கதி. அஜபா நடனம்.
இந்த காட்சி நடைபெறுவது ஈசன் தில்லை
சிற்றம்பலத்தில். இது ஞான பூமி, அப்பாலுக்கப்பால் எனப்படும் உலகைக்
கடந்த இடம்.
காமனின் வெற்றிக் கொடி- இங்கு காமனின்
உருவம் வளர்வதாகக் கூறுவது, சிவனால் மன்மதன் சுட்டெறிக்கப்பட்ட
நிலைக்கு முற்பட்டது என்று காட்டுகிறது. காமம்
என்பது தீராதது, வளர்ந்துகொண்டே இருப்பது. தலைவி காமனின் கொடியைப் போல இருக்கிறாள்
என்பது இறைவனுடன் கூட வேண்டும் என்ற ஆசையை அவரே தோற்றுவிக்கிறார், தொடர்ந்து வளரச்
செய்கிறார் என்பதைக் குறிக்கிறது.
இப்பாடலில் குறிப்பிடப்பட்ட ஐந்து
மலர்கள் காமனின் மலர்க்கணைகள். சிற்றின்ப
நிலையில் காமத்தைத் தூண்டும் அவை, பேரின்ப நிலையில் அவை சுத்த ஜாகிரத தரிசனம்,
ஸ்வப்பனத்தின் போதாதி தரிசனம், அருளாதிக்க
தானேயான சுஷுப்திக்கான தரிசனம், உருவ அபேத சுத்த துரிய ஸ்தான தரிசனம் மற்றும் பரம சிவ இன்பமாகிய
சுத்த அதீத தரிசனம் என்ற ஐவித தரிசனங்களைக் குறிக்கின்றன. இந்த ஐந்து வித காட்சிகளையும் அளிக்கக்கூடியவர் சத்குரு.
இவ்வாறு பல மலர்களை இணைக்கும்போது இறைத்தன்மை தோன்றுகிறது.
இந்த ஐந்து நிலைகளையும் கடந்து இறைநிலை அடையப்படுகிறது.
இங்கு பாதையைக் காட்டுபவரும் அந்த
பாதையினால் அடையப்படுபவரும் சிவமே.
திரு- ஸ்ரீ, திருவளர்
தாமரை என்பது தேவியைப் பற்றிய அறிவு, ஸ்ரீவித்யா, வளரும் சக்கரங்கள். காமன் அல்லது
மன்மதன் ஸ்ரீவித்யாவின் பன்னிரண்டு குருக்களில் ஒருவர். இதனால் அகத்திணைப் பாடலான இது உண்மையில் இறைவனுடன் கலப்பதைப் பற்றியது
என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது. காவி-
ஸந்யாஸ நிலையைக் குறிக்கிறது. குரு என்பது இருட்டை விலக்கும் உச்ச ஞானம், ஒளி. சிற்றம்பலம்- அப்பாலுக்கு
அப்பால் என்று சித்தர்கள் குறிப்பிடும் நிலை. கோங்கு
மலர் நான்காவதாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு இது தனியாக இல்லாத, அனைத்து உணர்வு
நிலைகளையும் ஊடுவியிருக்கும் துரிய நிலையைக் குறிக்கிறது. துரியத்தை இன்னது என்று ஒரு உவமையால் விளக்க முடியாது.
மாலை- குலம் அல்லது சக்கரங்களை ஒன்றாக சேர்ப்பது. ஐந்து மலர்கள்- பஞ்ச பூதங்கள், தன்மாத்திரைகள்
இந்திரியங்கள் என்று ஐந்தாக உள்ள தத்துவங்கள். அவற்றை ஒன்றிணைக்கும் பாதையே மாலை. அதுவே
குலம் எனப்படுகிறது. குலார்ணவ தந்திரம்-இங்கு குலம் என்பது இதையே குறிக்கிறது. அன்ன நடை- ஹம்ச மந்திரமும் பிராணாயாமமும். இவ்வாறு
இப்பாடல் பிராணாயாமம், மனக்கட்டுப்பாடு, தத்துவங்களை இணைத்தல், மந்திர
வித்யாவான காதி வித்யா, மற்றும் உச்ச நிலையை அடைய வைக்கும்
உணர்வின் நடை என்று இறையுணர்வைப் பெற ஆத்மா மேற்கொள்ளும் படிகளை நேரிடையாகவும் இவற்றின்
பலன் இறையருள் என்று குறிப்பாலும் காட்டுகிறது.
ஒரு பாடல் தொகுப்பை மங்கல சொற்களால்
தொடங்குவது வழக்கம். அதைப் பின்பற்றி முதல் சொல் திரு
அல்லது ஸ்ரீ என்று உள்ளது.
இப்பாடல் மாணிக்கவாசகர் பெற்ற சிவ தரிசனத்தை
உத்தம குருவின் தரிசனத்தைக் குறிக்கிறது. இது ஆத்மாவின் உண்மையான நிலையையும் குறிப்பால்
உணர்த்துகிறது.
1.1 Vision
The beautiful lotus, the glorious blue lily, the mullai
In the effulgent Isa’s Tillai, Kongu and the ruddy Kanthal
The divine beautiful garland, a creeper, moves gracefully,
like a swan
And glows like the victory flag of ever-growing Kama.
Simple meaning: The divine garland, adorned with beautiful lotus
flowers, the revered blue water lily, and the auspicious, blooming buds of
kurutham, kongu blossoms, and the radiant kaanthal flowers, shines
resplendently. It sways like a tender creeper as it moves gracefully,
resembling the victory banner of Manmatha (the god of love), glowing in its
brilliance.
The hero equates the heroine’s face, eyes, nose, breasts and
fingers to five flowers and admires her beauty.
Spiritual meaning: When a practitioner holds himself aloof
from worldly attachments, like a lotus, develops detachment (saffron-kaavi),
practices breath control, and performs his actions (hands) guided by the para
and apara jnana (breasts) he will become subtle like a creeper, remain in a
state beyond words, attain success over desires (victory over ever growing
desire) and glow enlightened.
Manikkavasakar experienced Shiva (Śivānubhavam) without any
pre-requisite such as spiritual practice, yoga, or devotion. That experience
arose out of pure love. This poem illustrates the union—how flower-like senses,
a mind where thoughts sprout like a creeper, a breath that moves even when unnoticed,
and the soul, the light—all merged with Shiva and glowed.
This verse seems like a summary of Thirukkovaiyar.
Meaning:
In Akatthinai (love
poetry) the name of the hero and heroine are typically not mentioned
explicitly. Perasiriyar in his commentary of Tirukkovaiyar gives a one line
summary of the meaning of the verse calling it koLu.
A hero who carries a spear sees a beautiful creeper
(woman) whose forehead glows like a cool (moon-like) sword
Spear represents discrimination and forehead that glows like
a cool sword represents supreme wisdom.
The hero and heroine’s meeting due to fate, it is unplanned.
Lotus is given a adjective Tiruvalar. Tiru represents beautiful, not Lakshmi as
the lotus is honored here and as otherwise it will be a praise of Lakshmi.
Symbolism of
Flowers and Landscapes:
This verse, though set in the Neythal (seashore) landscape, incorporates
flowers from the five landscapes described in Tamil literature. Just as a bride
is adorned with various ornaments in a wedding, the presence of flowers from
different landscapes signifies a collective representation of all emotions and
states of love and that people from all the lands worship Shiva.
- Lotus
(Thamarai) – Marutham (Agricultural land)
- Blue
Water Lily (Neelothpalam) – Neythal (Seashore)
- Mullai
– Mullai (Forest land)
- Kongu
– Paalai (Wasteland)
- Kaanthal
– Kurinji (Mountainous terrain)
The Kongu flower does not have a descriptive phrase
attached to it. This is because it symbolizes the heroine’s chest, which is
unparalleled and incomparable. The Kaanthal flower, which represents Kurinji
(union and yearning for union), is mentioned last to emphasize the core theme
of this poem—love and union.
Spiritual
Interpretation
Sutra: Vision of Guru’s sacred form.
Though this poem belongs to the Akam (internal love)
genre, Manikkavasar mentions Tillai Chitrambalam to indicate that its essence
is spiritual.
A soul freed from mala Vasana receives shakti nipaatham or
divine grace and Sadguru darsanam or vision of the Supreme Teacher. This is the
natural state of divine union. The Guru
here represents Thirodhana Shakti (the power that dispels ignorance), that
guides the soul toward liberation.
Shakti Nipaatham:
Ni- represents concealment and destruction.. When divine grace descends upon
the soul, all impurities and attachments dissolve, just as a stone thrown into
a gathering scattering the crowd. This process involves the stages of Iruvinai
Oppu (neutralization of dual karma), Mala Paripakam (removal of
innate impurities of the soul), and finally Shakti Nipaatham. At this
juncture, the soul hesitates, uncertain about its next step. The Guru then
provides guidance, making his feet the ultimate refuge.
The Guru’s Dharshanam (vision) is Noku Dheekshai—a
transmission of wisdom through a mere glance, akin to how a fish teaches its
young to swim through its gaze.
Symbolism in the Imagery
This poem belongs to the Kaikkilai category, where
only one person (the hero) is in love. The heroine does not reciprocate his
gaze, just as the Guru does not actively seek the disciple; it is the disciple
who longs for the Guru’s presence.
- Thiruvalar
Thamarai (Flourishing Lotus) – Thiru is the ever-expanding divine
wisdom (Shiva Jnana). Like the drops of honey emerging from the
lotus, Guru’s face emits drops of divine wisdom.
- Blue
Water Lily (Neelothpalam) – The compassionate eyes of the Guru, which
draw the disciple towards him.
- Nose
(kumizh/Mullai) – Represents sharp intellect, refined through breath
control (Pranayama).
- Chest
(Kongu) – The vast, expansive wisdom containing both, Para
(transcendental) and Apara (worldly) knowledge. Just by mere
thought a mother provides the nourishment, the life sustaining milk for the
infant to its satisfaction. My mere will, Guru gives the wisdom, the milk.
- Flowers
and Five Elements:
- Lotus
– Ether (Akasha)
- Mullai
– Earth (Prithvi)
- Kaanthal–
Air (Vayu)
- Neelothpalam
– Water (Jala)
- Kongu
– Fire (Agni)
The garland, composed of these flowers, emits a divine
fragrance, signifying the union of spiritual wisdom. A
creeper is fine, hard to perceive. A
guru’s wisdom is refined and hard to perceive. The light of knowledge cannot be
perceived by senses.
Swan-like Gait – The Path of Ajapa
The phrase Anna Nadai (swan-like gait) symbolizes Hamsa Mantra
and Pranayama, that guides the seeker toward self-realization.
The locus of this vision is Isa’s Tillai Citrambalam- the
land of wisdom, the space beyond manifestation.
The Banner of Cupid
The victory banner of Cupid suggests that the poem is
set in a time before Manmatha was incinerated by Shiva’s third eye. In the spiritual
sense, Shiva stirs and nurtures the desire to merge with him like the worldly
desire that keeps growing, unsatisfied with one experience.
The five flowers mentioned here
represent
1.Suddha Jagrat Darshanam
–
2. Bodhadhi Svapna Darshanam
– vision at the terminus of bodham or limited knowledge.
3. Vision of the self ruled
by divine grace, the Sushupti Darshanam
4. Transcendental vision of
absolute unity in suddha turiya, and
5. Parama Shiva Ananda or
supreme bliss in the athitha state.
The Guru alone can bestow these five forms of divine vision.
By integrating these five experiences one realizes the state of Divinity.
Here, both the path and the destination are Shiva
himself.
- Thiru
(Sri) valar thaamarai– the chakras where knowledge about the Divine (Sri
Vidya) grows.
- Kavi
(Saffron) – Symbolizes renunciation.
- Guru
– dispel of darkness, the embodiment of supreme knowledge.
- Thillai
Citrambalam – The realm beyond all worldly dimensions, beyond the
beyond.
- Kongu
(Fourth Flower) – Signifies Turiya, the state pervading all
consciousness which is beyond description.
- Garland
– Represents the unification of spiritual centers (Chakras).
The five flowers represent the Panchabhutas (five
elements), Tanmatras (subtle elements), and Indriyas (senses).
The process of threading them into a garland signifies the path of Srividya,
the Kadi vidya whose Guru is Manmatha.
Traditionally, poetic works begin with auspicious words.
Hence, the first word here is Thiru (Sri)—signifying the divine and
sacred path to enlightenment.
This verse describes Manikkavasakar’s vision of Siva, the
Utthama Guru. It also indicates the nature of the soul.
No comments:
Post a Comment