Friday, 21 March 2025

1.15 Pacifying, explaining the proximity

  1.15. இடம் அணித்து (என்று) கூறி வற்புறுத்துதல்

வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து
இருங்குன்றவாணர் இளங்கொடியே இடர் எய்தல் எம் ஊர்
பருங்குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங் குழையே

பொருள்:
ரிஷிகள் யாகத்தில் தன்னை நோக்கி வந்த குன்றம் போன்ற யானையின் தோலை உரித்த தில்லையம்பலவனின் மலையில் இருக்கும் குறவர் குலத்து இளம் கொடியே, கனத்த காதணியை உடையவளே! எதற்காக வருந்துகிறாய்? எனது ஊரில் உள்ள பெரிய குன்றம் போன்ற மாளிகையின் நுண்மையான சாந்தின் ஒளி உனது ஊரில் உள்ள கருமையான குன்றின் மீது வெள்ளையான சட்டையைப் போல விழுகின்றது.

தனது இருப்பிடம் தலைவியின் இருப்பிடத்துக்கு அருகில்தான் இருக்கிறது என்று கூறி தனக்கும் அவளுக்கும் இடையே பெரிய இடைவெளி இல்லை என்று தலைவன் அவளை ஆற்றுப்படுத்துகிறான்.

மலைபோல வரும் யானையை தோலுரித்த தில்லை அம்பலவன்- கஜ சம்ஹார மூர்த்தி.

கஞ்சுகம்- மேலாடை, அளவுக்குட்படுத்துவது. தன்னுள் இருக்கும் இறைவனை காண முடியாத வண்ணம் ஆத்மா மூடியுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத இறைவன் கருமையான குன்றம் போல் ஆத்மாவினுள் இருக்கிறார். ஆத்மாவின் அறிவு என்னும் ஒளி அதனுள் இருக்கும் இறைவனை ஆத்மாவிற்குக் காட்டுகிறது. இறைவனின் இருப்பை உணர வைக்கிறது. கருப்பு எல்லையின்மையைக் குறிக்கிறது.

அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய மற்றும் ஆனந்தமய கோசம் என்ற பஞ்ச கோசங்களால் ஜீவன் மூடப்பட்டு அளவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஜீவன் என்பது பஞ்ச கோசங்களால் மூடப்பட்ட சிவனே. இந்த கோசங்களை விலக்குவதே சாதனை, அவ்வாறே எல்லையற்ற நிலை சிவானுபவம் கிட்டுகிறது. மலப்பரிபாகம் அல்லது விலக்கம் பெற்ற ஒரு ஆத்மா ஆனந்தமய கோசத்தின் முடிவுக்கு வெகு அருகில் உள்ளது. இறைவன் கருங்குன்றம், அறிவதற்கு அரியவன். அந்த பரனின் அனுபவத்தை, பரமானந்தத்தின் சுவையை ஒரு துளி தருவது ஆனந்தமய கோசம். ஆனால் ஆத்மா அதையும் கடந்து போக வேண்டும்.

இங்கு ஆத்மாவின் ஒளி கோசத்திலிருந்து வருகிறது, பிரகிருதி கலந்தது. அதனால்தான் இறைவன் இன்னும் இருட்டாகத் தெரிகிறார். அந்த ஒளி விலகி ஞான ஒளி கிட்டினால் இறைவன் தென்படுவார்.


தேவி மகாத்மியத்தில் வெண்ணிறமான கௌசிகி சக்தி, காளியை மூடி இருக்கிறாள் கௌசிகீயின் அழகைக் கண்ட சும்ப நிசும்பர்கள் என்ற அசுரர்கள் அவளை மனைவியாக அடைய விரும்புகின்றனர். கௌசிகீ வெளிப்படையான ஆனந்தத்தைக் குறிக்கிறாள். அந்த ஆனந்தத்தை மனிதர்கள் தேடலாம் ஆனால் பரமானந்தம் என்பது காளி, இன்னதென்று கணிக்க முடியாத கருமை. அதனால் கௌசிகீயைத் தேடி வரும் அசுரர்கள் சந்திப்பது கருமையான காளியை. அந்த இன்பம் என்ன என்று தெரியாததால் பயத்தை அளிப்பதாக, காளியின் பயங்கர உருவமாக அவர்களுக்குத் தெரிகிறது. தெரியாததைக் கண்டு பயப்படுவது ஆத்மாவின் இயல்பு, அதனால்தான் ஆத்மாக்கள் மரணத்தைக் கண்டு பயப்படுகின்றனர்.

சிவனை குன்றத்தை உரித்தவர் என்று கூறுவது கஜ சம்ஹார மூர்த்தி என்று குறிப்பதற்கு என்று கொண்டாலும் அவர் குன்றுகள் போல வலிமை மிக்க கோசங்களைஉரிக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

வரும் குன்றம்- நம்மை நோக்கி நமது கர்மத்தால் வரும் கோசங்கள்.

இரும் குன்ற வாணர் இளம் கொடியே- இறைவன் கொடிபோல ஆத்மாவினுள் அதனைப் பற்றி பரவுகிறார்.

தில்லை அம்பலர்- வீரட்டானத்தில் ஒரு உருவுடன் இருப்பவர் தில்லையில் ஞான வடிவாய், மந்திர வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். அம்பலம்- வெளி.

இடர்- தலைவி அனுபவிக்கும் துன்பம் பிரிவால் வரும் இடர் இல்லை, கருணையால் விளைந்த இரக்கம். தனது அறியாமையால் ஆத்மா தனது ஒளி இறைவனின் மீது விழுகிறது என்று கூறுகிறது. உண்மையாக, அதன் ஒளி இறைவனிடமிருந்துதான் வருகிறது என்பது அதற்குத் தெரியவில்லை, தான் இறைவனை ஒளியூட்டுவதாக நினைக்கிறது. தான் படித்த படிப்பால், பெற்ற ஞானத்தால் இறைவன் புலப்படுகிறார் என்று நினைக்கிறது ஆத்மா. இறைவன் தனது அருளால் தன்னை ஆத்மாவுக்குக் காட்டுகிறார் என்பது அதற்குத் தெரியவில்லை.

1.15 Pacifying, explaining proximity of presence
The young creeper of the gypsy clan in the mountain of the one who stripped
A hill that came towards (him), the Tillai Ambalavan, the one with heavy ear ornament!
Do not worry, the light from the subtle paint of my town’s palace falls on your town’s
Dark hill, covering it like a white blouse.

The hero explains that his residence is close to hers and pacifies the heroine. The episode described here refers to Siva’s form as Gaja samhara murthy, when he stipped an elephant that emerged from a fire ritual performed by rishis against him.

Kanchukam, blouse- covering that limits. The soul surrounds the Divine like a blouse thus concealing its presence even to itself. When the light of knowledge occurs, it illuminates the Lord within. Blackness refers to the unknown.

Soul is covered by the pancha kosha or five sheaths of annamaya, pranamaya, manomaya, vijnanamaya and anandhamaya kosha. They limit the soul. Sadhana is the process of stipping oneself off of these coverings. Gaja samhara murthy stripping the elephant indicates that the Lord strips these coverings over the Jiva that are as strong as an elephant.

A soul that is free of innate impurities is at the frontier of anandhamaya kosha or sheath of bliss which gives a little taste of paramanandha or supreme bliss. However, the soul has to go even beyond the anandhamaya kosha to merge with the Supreme. The soul’s light mentioned here is from the anandhamaya kosha. Hence, the Lord appears dark still. When that light is replaced of the light of bodham or supreme awareness then the Lord will become perceivable.

Devi Mahatmyam explains this beautifully. Devi is present as the white Kaushiki. Her beauty attracts the Asuras, Shumba and Nishumba who encounter the dark, incomprehensible and hence fearsome, Kali when they approach her seeking her hand in marriage. The mind feels fear when it faces something that it cannot comprehend. This is indicated as the dark fearsome form of Kali. People’s fear of death is also due to this unknown nature of death.

The approaching hill- the koshas that come towards us due to our karma.

The young creeper- The Lord surrounds the soul like creeper, holds it and spreads around it.

The Lord, who is present in the eight Veera sthana is present as wisdom, in the mantric form in Tillai.
The sorrow that the heroine faces is not due to despair but due to the Lord’s mercy towards the soul.

The soul, due to its ignorance it telling Siva that its light is falling on Siva without realizing the true source of its light is Siva. It thinks that it can perceive the Divine by the light of knowledge it has gained from texts and practices without realizing that the Lord shows himself, by his will, to the soul due to his grace.

No comments:

Post a Comment